PDA

View Full Version : நீ எங்கே?

இராஜிசங்கர்
09-05-2012, 11:54 AM
பாசம் கொட்டி வளத்த புள்ள பட்டணம் தான் போயிருச்சு
பரிவாய்ப் பேசுவதும் படிப்படியா கொறஞ்சு போச்சு
வருஷம் பல ஆக ஆக வருகை எல்லாம் நின்னு போச்சு
இருந்தும் உந்தன் நெனப்பு மட்டும் இருதயத்தில் இறங்கிப் போச்சு
ஒத்த மழை பெய்வதற்குள் ஓடி வந்தேன் குடையைத் தூக்கி
இங்கு நீ இல்லை என்பது வழக்கம் போல மறந்து போச்சு..

ஆதி
09-05-2012, 12:01 PM
தாய்மையையும், தாயின் அன்பையும், கருணையையும், பரிவையும், அவளின் மன வலியையும் சொல்லும் கவிதை
பெத்த மனம் பித்து பிள்ள மனம் கல்லு எனும் பழமொழியே நினைவுக்கு வருகிறது
அழகிய கவிதை நடை இராஜிசங்கர் அவர்களே, வெகு இயல்பான கிராமத்து மொழி, வாழ்த்துக்கள்

இராஜிசங்கர்
09-05-2012, 12:13 PM

மிக்க நன்றி ஆதன்

கீதம்
09-05-2012, 12:21 PM
எந்நேரமும் மனம் மகனின் நினைவுகளைச் சுமந்துகொண்டேயிருக்க,

அவன் அருகில் இல்லையென்பதும் மறந்துபோயிற்றாம் அந்தத் தாய்க்கு.

வழக்கம்போலவே குடை கொண்டு ஓடுகிறாளாம் மழை கண்டதும்.

அப்படியெனில் எத்தனை முறை எத்தனை மழையில் நனைந்திருப்பாள்.

நனைந்தும் கரையா நினைவுகள் எரியூட்டும் நாள் வரை இம்சித்துக்கொண்டேதான் இருக்கும்.

தாய்மை சுமக்கும் வரிகளில் மனம் சொக்கித்தான் போகிறது. பாராட்டுகள் இராஜி.

ravikrishnan
09-05-2012, 12:52 PM
தாயின் பாசத்தை கிராம்த்துபாணியில் அழகாய்,அற்புதமாய் கவிதை வடித்த அன்பர்க்கு வாழ்த்துகள்!!!:icon_b::icon_b:

இராஜிசங்கர்
09-05-2012, 01:21 PM
நன்றி கீதம்

இராஜிசங்கர்
09-05-2012, 01:22 PM
நன்றி ravikrishnan