PDA

View Full Version : புகைப்பட போட்டி - 2



ஆதி
08-05-2012, 07:30 AM
அன்பிற்கினிய உறவுகள் அனைவருக்கும் வணக்கம்,

பத்தாவது ஆண்டில் நம் மன்றத்தாய் தன் பொற்பாதங்களை எடுத்து வைத்திருக்கும் இத்தருணத்தில், பத்தாவது ஆண்டை மேலும் சிறப்பிப்பது நம் ஒவ்வொருவரின் கடமை என கருத்துகிறோம்

இப்பத்தாவது ஆண்டை ஒவ்வொருவரின் மனத்திலும் நன்னிகழ்வுகளால் நிரப்பி, மன்றத்தை விழாக்கோலம் பூண செய்ய மாதந்தோறும் சிறப்பு போட்டிகள் நடக்கும் என்பதை பேருவகையோடு கூறிக்கொள்கிறோம்

அந்த வரிசையில் முதலாவது நிகழ்வாக இம்மாதம் புகைப்பட போட்டி நடக்கவிருக்கிறது

போட்டிக்கான தலைப்பு "நேசம்"

போட்டிக்கான விதிமுறைகள்:

ஒருவர் இரு புகைப்படத்தை மட்டுமே அனுப்பலாம்

நீங்கள் அனுப்பும் படம் நீங்கள் க்ளிக்கியதாக இருக்க வேண்டும்

ஆபாசமில்லாததாக இருக்க வேண்டும்

படம் உங்களதில்லை என்பது உறுதியாகும் பட்சத்தில் உங்கள் படம் போட்டியில் இருந்து நீக்கப்படும்

புகைப்படங்களை "tmantrampottigal@gmail.com" எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், மின்னஞ்சலில் தங்களின் மன்ற உறுப்பினர் பெயரையும் குறிப்பிடவும்

படங்களை அனுப்ப வேண்டிய இறுதிநாள் ஜூன் 7ஆம் தேதி

ஜூன் 8 தேதியிலிருந்து பத்துநாட்களுக்கு உறவுகளின் முன்னிலையில் புகைப்படங்கள் வாக்குப்பதிவிற்காக வைக்கப்பட்டு, ஜூன் 18ஆம் தேதி போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்படும்

நம் உறவுகளால் தேர்வு செய்யப்பட்டு, முதல் மூன்று இடத்தை பிடிக்கும் புகைப்படங்களுக்கு, பத்தாவது ஆண்டு நிறைவு விழாவில், பரிசு, தொகையாகவோ அதற்கிணையான புத்தகங்களாகவோ வழங்கப்படும்.

முதல் பரிசு = 5000 ரூபாய்

இரண்டாம் பரிசு = 3000 ரூபாய்

மூன்றாம் பரிசு = 2000 ரூபாய்

உறவுகளின் மேலான ஆதரவையும், உற்சாகமான பங்களிப்பையும் எதிர்ப்பர்க்கும் தமிழ்மன்ற நிர்வாகம் சார்பாக
ஆதன்

Hega
08-05-2012, 12:38 PM
நேசம் அருமையான தலைப்பு.

கலைஞர்களின் கற்பனைக்கு அருமையான விருந்து தரக்கூடிய தலைப்பு.

அனைவரும் கலந்து சிறப்பிக்க வாழ்த்துகள்.

நாஞ்சில் த.க.ஜெய்
08-05-2012, 02:34 PM
நேசத்துடன் கூடிய கவித்துவமான தலைப்பு ....போட்டிகள் இன்னுமோர் மகுடம் சூட்டும்....

கீதம்
09-05-2012, 03:22 AM
போட்டிகளில் பங்கேற்று கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளிக்கும் புகைப்படம் அனுப்பவிருக்கும் கலைக்கண்களுக்கு என் வாழ்த்துக்கள்.

அமரன்
09-05-2012, 05:32 AM
நேசம் அருமையான தலைப்பு.

கலைஞர்களின் கற்பனைக்கு அருமையான விருந்து தரக்கூடிய தலைப்பு.

அனைவரும் கலந்து சிறப்பிக்க வாழ்த்துகள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்



போட்டிக்கென அனுப்பப்படும் படங்கள் உணர்வுகளை உசுப்பிவிடும் வண்ணம் இருக்கும் என்பதை எவ்வளவு நாசுக்காக சொல்லி உள்ளீர்கள்.

ஆதி
09-05-2012, 11:55 AM
முதல் பரிசுக்கு 3000 இ பணமும்

இரண்டாம் பரிசுக்கு 2000 இ பணமும்

முன்றாம் பரிசுக்கு 1000 இ பணமும்

போட்டியில் பங்கு கொள்ளும் அனைவருக்கு ஆறுதல் பரிசாக 200 இ பணமும்

என் சார்பாக வழங்கப்படும்

கௌதமன்
09-05-2012, 06:41 PM
களத்தில இறங்கிட்டோமுல்ல....

சிவா.ஜி
10-05-2012, 09:28 AM
பங்குபெறும் அனைவருக்கும் என் முன் வாழ்த்துக்கள். நானிருக்கும் நாட்டில் நேசமில்லையே என்ன செய்ய?

மஞ்சுபாஷிணி
11-05-2012, 12:29 PM
பங்கு பெறும் அனைவருக்கும் என் அன்பு வாழ்த்துகள் !!!

ஆதி
11-05-2012, 12:32 PM
பங்கு பெறும் அனைவருக்கும் என் அன்பு வாழ்த்துகள் !!!

அப்படி சொல்லிட்டு நீங்க எஸ்கேப் ஆக முடியாது அக்கா நீங்களும் பங்கு கொள்ளனும் - அன்புடன் ஆதி

மஞ்சுபாஷிணி
11-05-2012, 12:39 PM
அப்படி சொல்லிட்டு நீங்க எஸ்கேப் ஆக முடியாது அக்கா நீங்களும் பங்கு கொள்ளனும் - அன்புடன் ஆதி
போட்டோவே எடுக்க தெரியாதே எனக்கு :) போட்டோ எடுக்க கத்துக்கொடுத்தா கத்துக்கிட்டு அப்புறம் அடுத்த வருட போட்டில கலந்துக்கவா ஆதி? :sprachlos020:

சிவா.ஜி
13-05-2012, 07:34 PM
போட்டொ எடுக்கத் தெரியாட்டாலும் பரவாயில்ல...நேசத்தை படம் பிடிக்க நிச்சயமா தெரிஞ்சிருக்கும்.. போட்டோ எடுங்க.....மன்ற மக்கள்தான் நீதிபதிகள்...போட்டோவில் தொழில்முறை நேர்த்தியை பார்க்க மாட்டார்கள் அது சொல்லும் செய்தியைத்தான் பார்ப்பார்கள். தைரியமா கலந்துக்குங்க ‘அக்கா’

(இந்த நேரம் பார்த்து இந்த நேசத்தை மன்றத்துல பாக்கவே முடியலையே...அவரோட போட்டோவைப் போட்டு பரிசு வாங்கிடலான்னு பாத்தா...முடி...............................................ல)

Ravee
15-05-2012, 04:16 PM
ஆஹா , பெரிய பெரிய வல்லுனர்கள் இருக்கும் மன்றத்தில் என் சோப்பு டப்பா எடுபடுமா என்று தெரியவில்லை . தலைப்புக்கு ஏற்ற காட்சி கண்ணில் பட்டால் கண்டிப்பாக கிளிக்கி விடுகிறேன் :062802photo_prv:.

Ravee
15-05-2012, 04:20 PM
சிவா அண்ணா , இங்கே மட்டும் என்ன வாழுதாம் ..... அண்ணா அடுத்த பிளேனுக்கு டிக்கெட் போடுங்க .... பாசம் , நேசத்தோட கிளம்பி வந்துடுறேன் ..... :traurig001:

அமரன்
15-05-2012, 07:46 PM
(இந்த நேரம் பார்த்து இந்த நேசத்தை மன்றத்துல பாக்கவே முடியலையே...அவரோட போட்டோவைப் போட்டு பரிசு வாங்கிடலான்னு பாத்தா...முடி...............................................ல)

முடி.....ல பாஸ்...

நேசம் சிக்கினா சீரளிப்புத்தான்..

சிவா.ஜி
15-05-2012, 08:19 PM
சிக்க மாட்டேங்குறாரே.............................!!!

சிவா.ஜி
15-05-2012, 08:22 PM
சிவா அண்ணா , இங்கே மட்டும் என்ன வாழுதாம் ..... அண்ணா அடுத்த பிளேனுக்கு டிக்கெட் போடுங்க .... பாசம் , நேசத்தோட கிளம்பி வந்துடுறேன் ..... :traurig001:
பிளேனுல பாசமும் நேசமும் கிடைக்குதுன்னா...............................இந்நேரம் நான் அந்த பாச நேசத்துல பெரும் பணக்காரனாகியிருப்பேன் ரவீ. மதுரையில இல்லாத பாசக்காரப் பயலுவலா....இல்ல நேசமில்லாத மனுஷங்களா? க்ளிக்குங்க.......பரிசு உங்களுக்குதான்.

மஞ்சுபாஷிணி
19-05-2012, 05:09 AM
போட்டொ எடுக்கத் தெரியாட்டாலும் பரவாயில்ல...நேசத்தை படம் பிடிக்க நிச்சயமா தெரிஞ்சிருக்கும்.. போட்டோ எடுங்க.....மன்ற மக்கள்தான் நீதிபதிகள்...போட்டோவில் தொழில்முறை நேர்த்தியை பார்க்க மாட்டார்கள் அது சொல்லும் செய்தியைத்தான் பார்ப்பார்கள். தைரியமா கலந்துக்குங்க ‘அக்கா’

(இந்த நேரம் பார்த்து இந்த நேசத்தை மன்றத்துல பாக்கவே முடியலையே...அவரோட போட்டோவைப் போட்டு பரிசு வாங்கிடலான்னு பாத்தா...முடி...............................................ல)

ஓக்கே தம்பி :sport-smiley-018::icon_dance:

ஆதி
24-05-2012, 05:06 AM
என்ன மக்கா, யாருமே இத கண்டுக மாட்டேங்கறீங்க

சீக்கிரம் படங்களை அனுப்பி வைங்க

ஒருவர் இரு படங்களை அனுப்பலாம் என்று விதி தளர்த்தப்படுகிறது

மஞ்சுபாஷிணி
24-05-2012, 09:21 AM
ஊருக்கு போய் வந்து போடவா ஆதி?

Ravee
24-05-2012, 05:06 PM
:aetsch013:படங்கள் தயாராக இருக்கிறது ...... இன்னும் நாள் இருப்பதால் இதைவிட சிறந்த காட்சிகள் கிடைக்குமே என்ற ஒரு நப்பாசையில் காத்திருக்கிறேன் ஆதன் ............ :icon_ush:

கீதம்
24-05-2012, 10:40 PM
:aetsch013:படங்கள் தயாராக இருக்கிறது ...... இன்னும் நாள் இருப்பதால் இதைவிட சிறந்த காட்சிகள் கிடைக்குமே என்ற ஒரு நப்பாசையில் காத்திருக்கிறேன் ஆதன் ............ :icon_ush:

ஒரு படத்தை இப்போ அனுப்பிடுங்க ரவீ. இன்னொன்றை பிறகு அனுப்பிவையுங்க. :icon_b:

சிவா.ஜி
28-05-2012, 10:00 PM
நேசத்தை நேசத்தோடு படம் பிடியுங்கள்.....பரிசை வெல்லுங்கள்.....இன்னும் சில நாட்களே இருக்கின்றன.....சீக்கிரம் சுடுங்கள் படங்களை....பின் படங்களால் மக்களின் மனங்களை....வாழ்த்துக்கள்.!!!

கீதம்
04-06-2012, 12:29 AM
புகைப்படப் போட்டிக்கு புகைப்படங்களை அனுப்ப இன்னும் மூன்று நாட்களே உள்ளன.

இன்னுமா தயாராகவில்லை நேசக்காட்சிகள்! விரைந்தனுப்புங்கள் உறவுகளே....

போட்டியை சிறப்புற நடத்த ஒத்துழைப்புத் தாருங்கள். பரிசுகளை அள்ளுங்கள்.

பங்குகொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

ஆதி
06-06-2012, 10:42 AM
போட்டிக்கும் படங்கள் அனுப்ப நாளையே இறுதிநாள், வேகமாக அனுப்புங்க மக்கா

கருணை
06-06-2012, 09:58 PM
நாங்கள் அனுப்பிய படங்கள் உங்களுக்கு கிடைத்ததா என்பதை போட்டியில் இது வரை பங்கு பெற்றவர்கள் என்று பெயர் மட்டுமாவது வெளி இடுங்கள். உங்களுக்கு கிடைத்தது என்று எண்ணி நிம்மதி அடைவோம் நாங்கள் .

கீதம்
07-06-2012, 01:20 AM
நாங்கள் அனுப்பிய படங்கள் உங்களுக்கு கிடைத்ததா என்பதை போட்டியில் இது வரை பங்கு பெற்றவர்கள் என்று பெயர் மட்டுமாவது வெளி இடுங்கள். உங்களுக்கு கிடைத்தது என்று எண்ணி நிம்மதி அடைவோம் நாங்கள் .

புகைப்படங்கள் அனுப்பியவர்களுக்கு அந்த மெயிலில் இருந்தே புகைப்படங்கள் பெற்ற விவரம் தெரிவிக்கப்பட்டுவிட்டது. கவனத்தில் ஈர்த்தமைக்கு நன்றி கருணை.

Ravee
08-06-2012, 08:09 AM
படங்களை பார்க்க ஆவலாக உள்ளோம் ... அக்கா அணிவரிசை எப்போது ?

அமரன்
08-06-2012, 10:22 AM
விரைவில்..

ஆதி
10-06-2012, 04:41 AM
வாக்கெடுப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது, இன்றிற்குள் மீண்டும் வாக்கெடுப்பு திரி நிர்வாக போட்டி பகுதிக்குள் மீண்டும் நகர்த்தப்படும்