PDA

View Full Version : ஏந்த்திகெனி ( Antigone ) 1



சொ.ஞானசம்பந்தன்
07-05-2012, 07:08 AM
கிரேக்கத் தொன்மத்தில் இடம் பெற்றுள்ள ஏந்த்திகெனி என்ற பெண்ணின் கதையைக்

கூறுகிறது சொஃபுக்ளீசின் ஒரு நாடகம் .

அதன் கதைச்சுருக்கம் :

தீப்ஸ் நகர மன்னன் ஈடிப்பஸ் இறந்த பின்பு , அவனுடைய புதல்வர்கள் எட்டியக்ளசும்

பொலிநைசிசும் சுழற்சி முறையில் அரசாள ஒப்புகின்றார்கள் . அரியணை ஏறிய மூத்தவன் எட்டியக்ளஸ் உரிய காலம் வந்தபோது

பதவியைத் துறக்க மறுத்துவிட்டான் . பொலிநைசிஸ் வேற்று நாடு சென்று படை

திரட்டிவந்து போரிட்டான் ; இப் படை தோற்றது ; சகோதரர் இருவருமே இறந்தனர் . பட்டத்துக்கு வந்த

அவர்களின் தாய்மாமன் கிரியன் , சொந்த நாட்டைத் தாக்கிய பொலிநைசிசைத் தேசத் துரோகி என அறிவித்து அவனுக்கு யாரும்

ஈமச் சடங்கு செய்யக்கூடாது என்று கட்டளை இட்டான் .

( பழைய கிரேக்கர்களுக்கு ஈமச் சடங்கு இன்றியமையாதது . அது நடக்காவிட்டால் இறந்தவர்க்குப் பேரிழிவு . அடக்கம் செய்யத் தடை விதித்தல் கடும் தண்டனைகளுள் ஒன்று )

ஈடிப்பசின் மகள் ஏந்த்திகெனி , மன்னனின் ஆணையை மீறி , தன் சகோதரனை அடக்கம் செய்தாள் .

அவளைக் கைது செய்த வேந்தன் , தரைக்கடியில் கல்லால் அறை கட்டி , அதனுள் அவளை உயிருடன் தள்ளி மூடிவிடத் தீர்ப்பளித்தான் ; தீர்ப்பு நிறைவேறிற்று. .

அவளுக்கு மணாளனாக உறுதி செய்யப்பட்டிருந்த ஹெமோன் ( அரசனின் மகன் ) தற்கொலை செய்துகொண்டான் .

( இக் கதையின் முடிவு, அனார்கலி - சலீம் கதையை நினைவூட்டுகிறது அல்லவா ?)

நாடகத்தின் சில காட்சிகளைப் பிரெஞ்சு மூலத்திலிருந்து பெயர்த்து , மன்றத்தில் பதிவேன்

கீதம்
08-05-2012, 09:04 AM
மிகவும் விசித்திரமான கதை. ஒருவன் செய்த தவற்றால் அவனும், மற்றொரு சகோதரனும், சகோதரியும், அவளைத் திருமணம் செய்யவிருந்தவனும் இறந்துபோனார்கள்.

முறைப்படி ஆட்சியை விட்டுக்கொடுத்திருந்தால் எல்லாம் சுபமாக முடிந்திருக்கும். பதவி ஆசை யாரைத்தான் விட்டது?

ஈமச்சடங்கின் முக்கியத்துவத்தை நம் நாட்டிலும் காணமுடிகிறது. வேண்டாத ஒருவரை மிகவும் வேதனைப்படுத்த, 'நீ அநாதைப் பிணமாகத்தான் போவாய்' என்று ஏசக்கேட்கிறோம்.

உயிர் போகுமென்று தெரிந்தும் தன் சகோதரனுக்கு ஈமச்சடங்கு செய்த ஏந்த்திகெனியின் துணிவு வியக்கவைக்கிறது.

பகிர்வுக்கு மிகவும் நன்றி. தொடர்ந்து வரும் காட்சிப்பதிவுகளுக்காய்க் காத்திருக்கிறேன்.

சொ.ஞானசம்பந்தன்
08-05-2012, 09:35 AM
பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . ஒருவருடைய தவறு மற்றவர்களையும் , அவர்கள் நிரபராதிகளாய் இருப்பினும் , பாதிப்பதை இன்றும் காண்கிறோம் . குடும்பத் தலைவனின் தவறு குடும்பத்தையே சீரழிக்கிறதே ! ஈமச் சடங்கின் முக்கியத்துவம் நம்மிடையேயும் இருப்பதை எடுத்துக்காட்டியது பொருத்தம் .

சிவா.ஜி
10-05-2012, 10:29 AM
வித்தியாசமான நாடகம். அந்தக்கால கிரேக்க நடைமுறைகள் விசித்திரமாய் இருக்கின்றன. இப்படி வித்தியாசமான கதைகளை அழகாய் மொழிபெயர்த்து எங்களுக்கு வாசிக்க சந்தர்ப்பம் அளிக்கும் ஐயாவுக்கு அன்பான நன்றிகள்.

சொ.ஞானசம்பந்தன்
10-05-2012, 11:47 AM
வித்தியாசமான நாடகம். அந்தக்கால கிரேக்க நடைமுறைகள் விசித்திரமாய் இருக்கின்றன. இப்படி வித்தியாசமான கதைகளை அழகாய் மொழிபெயர்த்து எங்களுக்கு வாசிக்க சந்தர்ப்பம் அளிக்கும் ஐயாவுக்கு அன்பான நன்றிகள்.

பாராட்டுக்கு மிகுந்த நன்றி .

கலையரசி
21-05-2012, 03:07 PM
தண்டனை உறுதி என்று தெரிந்த பிறகும் துணிந்து ஈமக்கடன் செய்த ஏந்திக்கெனியின் துணிவு வியக்க வைக்கிறது. கிரேக்க நாடகத்தைப் பெயர்ந்துப் படிக்கக் கொடுக்கும் உங்களது முயற்சிக்கு மிக்க நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
22-05-2012, 10:18 AM
தண்டனை உறுதி என்று தெரிந்த பிறகும் துணிந்து ஈமக்கடன் செய்த ஏந்திக்கெனியின் துணிவு வியக்க வைக்கிறது. கிரேக்க நாடகத்தைப் பெயர்ந்துப் படிக்கக் கொடுக்கும் உங்களது முயற்சிக்கு மிக்க நன்றி.
ஆமாம் . அரசனை அஞ்சாமல் அவள் எதிர்க்கிறாளே ! பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .