PDA

View Full Version : சுதேசி பாண்டியன்

M.Jagadeesan
07-05-2012, 03:37 AM
பாண்டிய நெடுஞ்செழியனின் மனைவி காலில் இருந்த சிலம்பில், முத்துப் பரல்களும், வணிகனாகிய கோவலனின் மனைவி கண்ணகியின் காற் சிலம்பில், மாணிக்கப் பரல்களும் இருந்ததென்று சிலப்பதிகாரம் கூறுகிறது. அப்படியானால் கோவலனைவிட பாண்டியன், செல்வச் செழிப்பில் குறைந்தவனா?

அந்தக் காலத்தில் தமிழகத்தில், மாணிக்கமும் , வைரமும் இறக்குமதி பொருட்கள்; அவை அந்நிய நாட்டிலிருந்து வருபவை.அதைக் கோவலனின் மனைவி , விலைகொடுத்து வாங்கி அணியலாம்;ஆனால் நாட்டுப் பற்று கொண்ட பாண்டியன் நெடுஞ்செழியன், தன் நாட்டில் கிடைத்த முத்துக்களையே தன் மனைவியின் சிலம்பில் வைத்தான். நாடாளும் மன்னவன் , சுதேசிப் பொருட்களையே பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இளங்கோ அடிகள் அவ்வாறு காட்டியுள்ளார்.

நன்றி: ம.பொ. சி. அவர்களின் சொற்பொழிவுகள்- தினமலர் வாரமலர்.

அன்புரசிகன்
07-05-2012, 04:00 AM
அப்போ இவை புனையப்பட்ட கற்பனைகளா???

jayanth
07-05-2012, 04:17 AM

இந்த உணர்வு யாருக்கு இருக்கிறது இப்பொழுது...???

M.Jagadeesan
07-05-2012, 04:18 AM
அப்போ இவை புனையப்பட்ட கற்பனைகளா???

இதே ஐயம் எனக்கும் வந்தது. இதற்கு ம.பொ. சி . அவர்கள்தான் விடையளிக்க வேண்டும். ஆனால் அவர் தற்போது உயிரோடு இல்லை. சிலம்பை நன்கு பயின்றவர்கள்தான் இதற்கு விடை சொல்லவேண்டும்.

அன்புரசிகன்
07-05-2012, 04:37 AM
இந்த உணர்வு யாருக்கு இருக்கிறது இப்பொழுது...???

யாருக்கு இருக்க வேண்டுமோ இல்லையோ இல்லாதஒன்றை சொல்லி உயர்த்திவைப்பது வரலாற்றையே மாற்றியமைப்பதாக மாறி வாசகர்களை குழப்புவதாய் தான் அமையும்.

நாஞ்சில் த.க.ஜெய்
07-05-2012, 04:25 PM
இலக்கியத்துக்கோர் புது இலக்கணம் படைத்த அறியாத மா பொ சி கருத்துகளை அறிய தந்தமைக்கு நன்றி பல தோழர்...