PDA

View Full Version : கற்றுக்கொள்ளுங்கள் கழுகுகளிடம் இருந்து ...

Ravee
06-05-2012, 07:55 AM
http://media.trevorstravels.com/wp-content/uploads/2011/01/IMG_0043-500x354.jpg

கட்டாந்தரையாய் பிளந்து கிடக்கும்

இந்த பாலை நிலத்தை கடக்கும் போது

வானத்தில் வட்டமிட்ட கழுகுகள்

விந்தையாய் தெரிந்தது அவனுக்கு

உயர எழும்பி

சீராய் சிறகுகள் பரப்பி

காற்றில் சறுக்கிக்கொண்டு

சடலங்களை தேடுகிறது

எழும்பிச் செல்லும் வரை எதுவும் உறுதி இல்லை

கிடைக்கும் ..... கிடைக்காது

இருக்கும் ...... இருக்காது

எத்தனைதான் எழும்பிச் சென்றாலும்

இரை கிடைப்பது என்னவோ தரையில்தான்

உச்சத்தில் பறக்க பறக்க

பார்வைக்கு பரப்பு அதிகம்

கல்வியும் அறிவும் காலத்தில் உயர்ந்து இருந்தால்

கணக்கில்லாத வாய்ப்புக்கள் இவ்வுலகில் ....

இருப்பது போதும் என்று நினைத்ததாலோ

காலம் முழுதும் இந்த கட்டாந்தரை பாதையை

கால் நடையாய் கடக்க வேண்டி வந்தது ....

காலம் கடந்து அவன் எண்ணத்தில்

முன்னும் பின்னும் நகர்ந்து கொண்டு இருக்க ....

கழுகின் மனதில் ஒரே எண்ணம்

"வெயிலின் வெப்பம் தாளாமல் எப்போது விழுவான் இவன் " என்று.

கீதம்
06-05-2012, 10:46 AM
கழுகுப் பார்வையில் விரியும் கவிதையின் பரப்பும் விசாலம்.

மனந்தின்னி மனிதர்களைவிடவும் பிணந்தின்னிக் கழுகுகள் மேலெனத் தோன்றும் பல சமயம்.

கல்வியும் அறிவும் கைகொடுக்காவிடினும் மனம் கொண்ட துணிவும் நம்பிக்கையும் காலமெல்லாம் கைகொடுக்கும்.

கழுகின் எண்ணம் முறித்து கட்டாந்தரை கடந்திடவும் இயலும்.

வெகுநாட்களுக்குப் பின்னரான தங்கள் கவிதையின் கருத்துப் பின்னலை மிகவும் ரசித்தேன். பாராட்டுகள் ரவீ.

M.Jagadeesan
06-05-2012, 11:33 AM
வித்தியாசமான சிந்தனை! பாராட்டுக்கள் இரவி.

ஜானகி
06-05-2012, 04:04 PM
கழுகுப் பார்வைதான் உங்களுக்கு...கழுகின் மனதைப் படம் பிடித்துவிட்டிர்களே ?

ravikrishnan
06-05-2012, 04:54 PM
எத்தனைதான் எழும்பிச் சென்றாலும்

இரை கிடைப்பது என்னவோ தரையில்தான்

உச்சத்தில் பறக்க பறக்க

பார்வைக்கு பரப்பு அதிகம்

கல்வியும் அறிவும் காலத்தில் உயர்ந்து இருந்தால்

கணக்கில்லாத வாய்ப்புக்கள்:icon_b::icon_b:

Ravee
06-05-2012, 11:38 PM
கழுகுப் பார்வையில் விரியும் கவிதையின் பரப்பும் விசாலம்.

மனந்தின்னி மனிதர்களைவிடவும் பிணந்தின்னிக் கழுகுகள் மேலெனத் தோன்றும் பல சமயம்.

கல்வியும் அறிவும் கைகொடுக்காவிடினும் மனம் கொண்ட துணிவும் நம்பிக்கையும் காலமெல்லாம் கைகொடுக்கும்.

கழுகின் எண்ணம் முறித்து கட்டாந்தரை கடந்திடவும் இயலும்.

வெகுநாட்களுக்குப் பின்னரான தங்கள் கவிதையின் கருத்துப் பின்னலை மிகவும் ரசித்தேன். பாராட்டுகள் ரவீ.

படைப்பாளிகளின் மனம் அறியும் கழுகு நீங்கள் அக்கா. உங்கள் பதில் மனதுக்கு ஆறுதலாக இருந்தது .

Ravee
06-05-2012, 11:40 PM
பெரியவர்களின் பாராட்டுக்கு நன்றி

jayanth
07-05-2012, 03:28 AM
பாரட்டுக்கள் இரவீந்திரன்...!!!

rajkulan
07-05-2012, 10:47 AM
நிச்சயமாக இது உண்மையான தகவல், அமெரிக்கா கழுகை இலட்சினையாக கொண்டிருப்பதற்கு இதுவே காரணம்.

தேடல்....!!!

நாஞ்சில் த.க.ஜெய்
07-05-2012, 04:34 PM
.தினம் காணும் மனிதர்களின் தேடலில் ரவியின் இந்த கழுகு பார்வை....