PDA

View Full Version : என்னதான் முடிவு ?

சொ.ஞானசம்பந்தன்
06-05-2012, 06:07 AM
அறிமுகம் ஆகிச் சில நாளிலேயே அவர் என்னைத் தேடிவந்தார் .

--- உங்க்களிடம் ஒரு யோசனை கேட்கவேண்டும் .

--- எதைப் பற்றி ?

--- என் பையனைக் கல்லூரியில் சேர்ப்பது குறித்து ..

--- அதில் என்ன பிரச்சினை ?

--- பொறியியலில் சேர்ப்பதா , மருத்துவத்தில் சேர்ப்பதா ?

--- மகனின் விருப்பத்தைக் கேட்டீர்களா ?

--- அது அப்புறம் ; முதலில் நான் ஒரு முடிவுக்கு வரவேண்டும் .

--- பொறியியலைத் தான் நிறைய பேர் விரும்புகிறார்கள் : அமெரிக்கா போகலாம் , அதிகம் சம்பாதிக்கலாம் .

--- ஊகூம் , அவனைப் பிரிந்திருக்க என்னால் முடியாது .

--- உள்நாட்டிலேயே வேலை கிடைக்கும்.

--- ஆனால் சமுதாயத்தில் மதிப்பு இல்லையே ! டாக்டர் என்றால் தெய்வம் போல .

--- அது மெய்தான் ; மகனைத் தெய்வ நிலைக்கு உயர்த்துங்கள் .

--- அதிலே பாருங்கள் , நோய் முற்றி இறந்தாலும் தவறான சிகிச்சை என்று குற்றம் சுமத்தி நிம்மதியைக் கெடுப்பார்கள் .

--- சாதக பாதகம் எதிலும் உண்டு . முடிவுக்கு வருவது கடினம்தான் . மகனைக் கேளுங்கள் .

--- பதில் சொல்லக்கூடிய நிலையில் அவன் இப்போது இல்லை .

--- ஏன் ? அவனுக்கு என்ன ?

--- ஒன்றுமில்லை , நன்றாய்த்தான் இருக்கிறான் .

--- பின்னே ?

--- மூன்று வயதுதான் ஆகிறது . மழலையர் வகுப்பு முடித்திருக்கிறான்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ravikrishnan
06-05-2012, 06:24 AM
--- மூன்று வயதுதான் ஆகிறது . மழலையர் வகுப்பு முடித்திருக்கிறான்.

:lachen001::lachen001::lachen001:

கீதம்
06-05-2012, 10:53 AM
நல்லவேளை, மகனிடமே யோசனை கேட்கிறேன் என்று அக்குழந்தையைப் பாடாய்ப்படுத்தாமல் போனாரே...

முன்னெச்சரிக்கையும் முன்னேற்பாடும் இருக்கவேண்டியதுதான். அதற்காக இப்படியா?

நிகழ்வாழ்விலும் நாம் சந்திக்கும் இவரைப் போன்ற குணாதிசயங்கள் நினைவுக்கு வருகிறார்கள்.

நகைச்சுவை மிளிரும் சிறுகதைக்குப் பாராட்டுகள்.

Ravee
06-05-2012, 11:04 AM
நல்ல நகை சுவை ..... திருமணம் முடித்து , பிள்ளை பெற்ற பின்பு இந்த கவலை பட்டாரே சந்தோசம் .... ஒருவேளை அவர் ஆயுள் காப்பிட்டு நிறுவனத்தில் பணிபுரிகிராரோ என்னவோ ?

அன்புரசிகன்
06-05-2012, 11:53 AM
ஸ்....ஸ்..... ஸப்பா...... இப்பவே கண்ணக்கட்டுதே...

Why this கொலவெறி?:D

சொ.ஞானசம்பந்தன்
07-05-2012, 07:10 AM
:lachen001::lachen001::lachen001:
பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .

ஆதி
07-05-2012, 07:37 AM
கதையின் முடிவு ஒரு நகைச்சுவையை உண்டக்கினாலும், இதில் ஒளிந்துக்கும் குழந்தைகளின் மீதான வதை அவர்களுக்கு பெற்றோர்களும், சமூகமும், கல்விமுறையும் தர காத்திருக்கும் மனவாதையையும் இந்த கதை தன்னுள் ஆழமாய் பதித்து வைத்திருக்கிறது

எதிர்க்காலதில் என் பிள்ளை என்னவாக போகிறான் என்று முடிவெடுத்து பெற்றவர்கள் அவனு/ளுக்கு கொடுக்கும் அழுத்தால் அவர்களின் எதிர்க்காலம் என்னவாககிறது என்பதை இன்றைய சமூகப்பிரச்ச்னைகள் சொல்லும்

நம்மிடம் எந்த அளவுக்கு மருத்துவர்களுக்கும் பொறியாளர்களும் உள்ளார்களோ அந்த அளவுக்கு அவர்களிடம் புகை, போதை பழக்கமும் உள்ளது

தன்னுடைய மன அழுத்தத்தை போக்கி கொள்ள அவன் தேடும் வழி போதை வஸ்து, இது அவனை மட்டுமல்ல அவன் சந்ததியையும் பாதிக்க காத்திருக்கிறது, எது எல்லாம் யாரால் ?

குழ*ந்தைக*ள் என்ன*வாக*வும் ஆக*ட்டும், நாம் அவ*ர்க*ளை ஒருவ*ழியாக்காம*ல் இருந்தால் அதுவே அவ*ர்க*ளுக்கு ந*ல்ல*து

பாராட்டுக்க*ள் ஐயா

aren
07-05-2012, 08:50 AM
ஐயாவும் இந்த குழுவில் சேர்ந்து விட்டாரா?

மதி
07-05-2012, 10:58 AM
நல்ல கதை... நல்ல கருத்து. மூன்று வயதிற்கே இவ்வளவு முன்னேற்பாடா..? :(

சொ.ஞானசம்பந்தன்
08-05-2012, 09:38 AM
பாராட்டுக்கு மிகுந்த நன்றி .

சொ.ஞானசம்பந்தன்
08-05-2012, 09:59 AM
பாராட்டியதற்கு மிக்க நன்றி .

KAMAKSHE
08-05-2012, 11:02 AM
அறிமுகம் ஆகிச் சில நாளிலேயே அவர் என்னைத் தேடிவந்தார் .

--- உங்க்களிடம் ஒரு யோசனை கேட்கவேண்டும் .

--- எதைப் பற்றி ?

--- என் பையனைக் கல்லூரியில் சேர்ப்பது குறித்து ..

--- அதில் என்ன பிரச்சினை ?

--- பொறியியலில் சேர்ப்பதா , மருத்துவத்தில் சேர்ப்பதா ?

--- மகனின் விருப்பத்தைக் கேட்டீர்களா ?

--- அது அப்புறம் ; முதலில் நான் ஒரு முடிவுக்கு வரவேண்டும் .

--- பொறியியலைத் தான் நிறைய பேர் விரும்புகிறார்கள் : அமெரிக்கா போகலாம் , அதிகம் சம்பாதிக்கலாம் .

--- ஊகூம் , அவனைப் பிரிந்திருக்க என்னால் முடியாது .

--- உள்நாட்டிலேயே வேலை கிடைக்கும்.

--- ஆனால் சமுதாயத்தில் மதிப்பு இல்லையே ! டாக்டர் என்றால் தெய்வம் போல .

--- அது மெய்தான் ; மகனைத் தெய்வ நிலைக்கு உயர்த்துங்கள் .

--- அதிலே பாருங்கள் , நோய் முற்றி இறந்தாலும் தவறான சிகிச்சை என்று குற்றம் சுமத்தி நிம்மதியைக் கெடுப்பார்கள் .

--- சாதக பாதகம் எதிலும் உண்டு . முடிவுக்கு வருவது கடினம்தான் . மகனைக் கேளுங்கள் .

--- பதில் சொல்லக்கூடிய நிலையில் அவன் இப்போது இல்லை .

--- ஏன் ? அவனுக்கு என்ன ?

--- ஒன்றுமில்லை , நன்றாய்த்தான் இருக்கிறான் .

--- பின்னே ?

--- மூன்று வயதுதான் ஆகிறது . மழலையர் வகுப்பு முடித்திருக்கிறான்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

மிகவும் ரசிக்கும்படி இருந்தது....

குழந்தை பிறந்தவுடனே ஆயில்யமா? மூலமா? அய்யோ! எப்படி மாப்பிள்ளை பார்ப்பேன்? என்று குழந்தையின் நட்ஷத்திரத்தைப் பார்த்து பதறும் பெற்றோர்களைப் பார்க்கும்போது, மூன்று வயது வரை பொறுமையாய் இருந்து கவலைப்படும் இந்த தந்தை தேவலாம் போலிருக்கு!

சொ.ஞானசம்பந்தன்
09-05-2012, 06:54 AM
கதையின் முடிவு ஒரு நகைச்சுவையை உண்டக்கினாலும், இதில் ஒளிந்துக்கும் குழந்தைகளின் மீதான வதை அவர்களுக்கு பெற்றோர்களும், சமூகமும், கல்விமுறையும் தர காத்திருக்கும் மனவாதையையும் இந்த கதை தன்னுள் ஆழமாய் பதித்து வைத்திருக்கிறது

எதிர்க்காலதில் என் பிள்ளை என்னவாக போகிறான் என்று முடிவெடுத்து பெற்றவர்கள் அவனு/ளுக்கு கொடுக்கும் அழுத்தால் அவர்களின் எதிர்க்காலம் என்னவாககிறது என்பதை இன்றைய சமூகப்பிரச்ச்னைகள் சொல்லும்

நம்மிடம் எந்த அளவுக்கு மருத்துவர்களுக்கும் பொறியாளர்களும் உள்ளார்களோ அந்த அளவுக்கு அவர்களிடம் புகை, போதை பழக்கமும் உள்ளது

தன்னுடைய மன அழுத்தத்தை போக்கி கொள்ள அவன் தேடும் வழி போதை வஸ்து, இது அவனை மட்டுமல்ல அவன் சந்ததியையும் பாதிக்க காத்திருக்கிறது, எது எல்லாம் யாரால் ?

குழ*ந்தைக*ள் என்ன*வாக*வும் ஆக*ட்டும், நாம் அவ*ர்க*ளை ஒருவ*ழியாக்காம*ல் இருந்தால் அதுவே அவ*ர்க*ளுக்கு ந*ல்ல*து

பாராட்டுக்க*ள் ஐயா
பாராட்டுக்கு மிக்க நன்றி . நீங்கள் சொல்வதுபோலத்தான் கல்வியாளர்கள் சொல்கிறார்கள் . பெற்றோர்கள் கேட்பதில்லை ; பாவம் , மாணவர்கள் !

சொ.ஞானசம்பந்தன்
09-05-2012, 06:58 AM
நல்லவேளை, மகனிடமே யோசனை கேட்கிறேன் என்று அக்குழந்தையைப் பாடாய்ப்படுத்தாமல் போனாரே...

முன்னெச்சரிக்கையும் முன்னேற்பாடும் இருக்கவேண்டியதுதான். அதற்காக இப்படியா?

நிகழ்வாழ்விலும் நாம் சந்திக்கும் இவரைப் போன்ற குணாதிசயங்கள் நினைவுக்கு வருகிறார்கள்.

நகைச்சுவை மிளிரும் சிறுகதைக்குப் பாராட்டுகள்.
பாராட்டியதற்கு மிக்க நன்றி .

சொ.ஞானசம்பந்தன்
09-05-2012, 07:01 AM
நல்ல நகை சுவை ..... திருமணம் முடித்து , பிள்ளை பெற்ற பின்பு இந்த கவலை பட்டாரே சந்தோசம் .... ஒருவேளை அவர் ஆயுள் காப்பிட்டு நிறுவனத்தில் பணிபுரிகிராரோ என்னவோ ?
சுவைத்துப் பின்னூட்டமிட்டதற்கு மிக்க நன்றி .

சொ.ஞானசம்பந்தன்
09-05-2012, 07:05 AM
ஸ்....ஸ்..... ஸப்பா...... இப்பவே கண்ணக்கட்டுதே...

Why this கொலவெறி?:D
என்ன செய்வது ? கொலவெறி தான் எங்கும் பரவுகிறது . பின்னூட்டத்துக்கு மிகுந்த நன்றி .

சொ.ஞானசம்பந்தன்
09-05-2012, 07:07 AM
ஐயாவும் இந்த குழுவில் சேர்ந்து விட்டாரா?

வேறு வழி இல்லாமல் சேர்ந்துவிட்டேன் . பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .

சொ.ஞானசம்பந்தன்
09-05-2012, 07:08 AM
நல்ல கதை... நல்ல கருத்து. மூன்று வயதிற்கே இவ்வளவு முன்னேற்பாடா..? :(

பாராட்டுக்கு மிகுந்த நன்றி .

சொ.ஞானசம்பந்தன்
09-05-2012, 07:11 AM
மிகவும் ரசிக்கும்படி இருந்தது....

குழந்தை பிறந்தவுடனே ஆயில்யமா? மூலமா? அய்யோ! எப்படி மாப்பிள்ளை பார்ப்பேன்? என்று குழந்தையின் நட்ஷத்திரத்தைப் பார்த்து பதறும் பெற்றோர்களைப் பார்க்கும்போது, மூன்று வயது வரை பொறுமையாய் இருந்து கவலைப்படும் இந்த தந்தை தேவலாம் போலிருக்கு!
பாராட்டுக்கு மிக்க நன்றி . நீங்கள் சொல்வதுபோல் இவர் கொஞ்சம் தேவலாம் .

சிவா.ஜி
10-05-2012, 10:08 AM
ஹா...ஹா...நகைச்சுவையுடன் நல்ல பாடம் புகட்டும் கதைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா. கல்வி என்பது இப்போதெல்லாம் பணம் சம்பாதிக்க மட்டுமே என ஆகிவிட்டதுதான் கொடுமை. ஞானம் பெற உதவிய கல்வி...பணம் பெற மட்டுமே கற்கப்படுவது காலத்தின் கொடுமை.

சொ.ஞானசம்பந்தன்
10-05-2012, 11:50 AM

வாழ்த்துக்கு மிகுந்த நன்றி .

த.ஜார்ஜ்
10-05-2012, 04:26 PM
நல்ல கதை. கடைசி வரியில் ஒளிந்து கொண்டிருப்பது நகைச்சுவையாகத் தோன்றினாலும் அது நிஜத்தின் வேதனை.
[ஆமா சார். எனக்கும் கொஞ்ச நாளாய் இந்த குழப்பம் இருக்கிறது. பயலை என்ன சார் படிக்க வைக்கலாம்.]

அமரன்
10-05-2012, 05:00 PM
பிள்ளை என்ன ஆவானோ என்ற கவலையில் பிள்ளையை என்ன ஆக்குவது என்று எண்ணி எண்ணி தானும் என்னவோ ஆகி பிள்ளையையும் என்னவோ ஆக்கும் தாய் தந்தையரை நினைத்தால் கோபம்தான் வருகிறது. எதிர்காலம் பற்றிய பயம் அவர்களை இப்படி ஆட்டி வைக்கிறது. அந்தப் பயத்தில் நெஞ்சம் இப்படித் தாறுமாறாய்த் துடித்து சாகடிக்குது..

கொஞ்சம் நிதானித்தால், ஆசுவாசப்பட்டால் சுமுகமாக எல்லாம் முடியும். அந்தப்பக்குவம் வர நிறைய அனுபவப்பட வேண்டும். அனுபவப்பட்டு பக்குவம் அடைந்த பிறகு தாத்தா நிலையில் பேரன் பேத்தியை இந்தப் பூதத்திடமிருந்து காக்க நினைத்தால் குடும்பத்தில் கும்மி..

விடுங்க.. எக்கேடு கெட்டேனும் போகட்டும். பக்கத்து வீட்டுக்காரனைப் பார்த்துத் திருந்துற என் தரவழி என்றாலும் திருந்தட்டும்.

சொ.ஞானசம்பந்தன்
11-05-2012, 07:21 AM
நல்ல கதை. கடைசி வரியில் ஒளிந்து கொண்டிருப்பது நகைச்சுவையாகத் தோன்றினாலும் அது நிஜத்தின் வேதனை.
[ஆமா சார். எனக்கும் கொஞ்ச நாளாய் இந்த குழப்பம் இருக்கிறது. பயலை என்ன சார் படிக்க வைக்கலாம்.]
நிஜத்தின் வேதனை என்ற உங்கள் கருத்து மிகச் சரி . பயலைப் படிக்க வைப்பது பற்றிப் பேச என்னிடம் வாருங்கள் . எனக்கு இப்போது அது குறித்து அனுபவம் இருக்கிறது .