PDA

View Full Version : அணு உலை போராட்டத்தில் அண்ணன் சீமான் ஆற்றிய சிறப்பு உரை



rajkulan
05-05-2012, 09:44 AM
செந்தமிழன் சீமான் அவர்கள் 03-05-12 இடிந்தகரை வந்து போராட்ட பந்தலில் அணுஉலை மூடும் வரை ஓயமாட்டேன் என கூறினார் மற்றும் 04-05-12-அன்று 500 மேற்பட்ட பெண்கள் தொடங்கும் சாகும் வரை உண்ணாவிரத போராட்டதிலும் கலந்து கொள்வேன் என கூறினார்.


http://www.youtube.com/watch?feature=player_embedded&v=ZL3ebbPt7uk


நன்றி
ஈழதேசம்.

நாஞ்சில் த.க.ஜெய்
07-05-2012, 04:31 PM
அடடே இன்னும் பத்து தினங்களில் திறக்க இருக்கும் அணு மின் நிலையத்தினை எவ்வாறு திறக்காமல் தடுக்க இயலும் ...நாமும் காத்திருப்போம் ...விளைவுகளை அறியாமல் துவங்கும் போது காட்டவேண்டிய எதிர்ப்பினை முடிவுறும் சமயம் காட்டினால் எவ்வாறு தீர்வு கிட்டும் என்று எனக்கு தெரியவில்லை ...

ஆதி
08-05-2012, 09:55 AM
தம் இருப்பை வெளிக்காட்ட செய்யும் ஆர்ப்பாட்டங்கள் இவை, இதனால் ஏதாவது நன்மை விளையுமா என்றால் மக்களுக்குமில்லை சீமானுக்குமில்லை

அமரன்
08-05-2012, 12:06 PM
வாய்ச்சொல் வீரர்களில் ஒருவர் சீமான் என்று நான் நேரடியாக உணர்ந்தேன்..

rajkulan
09-05-2012, 03:54 PM
சீமான் போன்ற உணர்வாளர்களுக்கு முழுச் சுதந்திரத்தினை இந்தச் சமூகமோ அரசோ வழங்குவதில்லை. பல சமயங்களில் இவர் போன்ற உணர்வாளர்கள் ஒடுக்கப் படுவதால் இவரும் வாய்ச்சொல் வீரர் பட்டியலில் இணைக்கப் பட்டுள்ளார். இவர்களுக்கு இளைய சமுதாயத்தினரின் ஆதரவு இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை. என் தனிப்பட்ட கருத்து : வயசானவர்களின் பின் ஒடும் போது ஓட்டப் பந்தய வீரனும் தோற்றுப் போவான்., இளைஞர்களின் பின் ஓடினால் வயசானவரும் ஓட்டப் பந்தய வீரர் ஆவார். இது தான் நடைமுறைக்குச் சாத்தியமானது. நன்றி.

ஆதி
09-05-2012, 04:42 PM
ராஜ்குலன், கடைசி கட்ட போரின் சமயத்தில், மேடைகளில் முழங்கி சிறை சென்று நிபந்தனை ஜாமின் பெற்று மதுரையில் தங்கியிருந்த சீமான் அதே ஓட்டலில் ஒரு நடிகையையும் தங்கவைத்திருந்தார், ஏன் நு சொல்ல தேவையில்லை என நினைக்கிறேன்

அப்புறம் அதே பொண்ணை ஏமாற்றி ஏக மேனிக்கு வசை வாங்கி கொண்டிருந்த போது, ஈழ விடயத்தில் குரல் கொடுப்பதால் தமிழக அரசு பழிவாங்குகிறது, ஈழ பிரச்சனையை அசிங்க செய்த ஆள் இவர், இவரை எல்லாம் நம்பாதீர்கள்

எனக்கு தெரிந்து வைகோ, நெடுமாறன் தவிர அத்தனை பேரும் சுயநலவாதிகளும், அரசியல்வாதிகளும், சந்தர்ப்பவாதிகளும் தான்

அணு உலை பிரச்சனையில் ஈழ போரை இழுக்க அவசியமே இல்லை, ஈழத்தில் நிகழ்ந்த/நிகழும் கொடுமைகள் இங்கு இருப்பவர்கள் கனவில் கூட கண்டிருக்க மாட்டார்கள், எல்லோரும் நிம்மதியாக, அவர் அவர் வீட்டில் பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள், ஈழத்தை ஏன் இங்கு இழுக்க வேண்டும்

அப்படி பேசுவது கூட சுயநல அரசியல் தான்

உணர்வோடு குரல் தருவது வேறு, அதை வைத்து உண்டியல் குலுக்கி ஆதாயம் தேடுவது வேறு

சிவா.ஜி
09-05-2012, 07:16 PM
மிகச் சரியாய் சொன்னீர்கள் ஆதன். வெற்றுக் கூக்குரல்கள் எதையும் சாதிக்காது.

அமரன்
10-05-2012, 05:11 PM
ஈழ விடுதலைப் பணிக்காக சீமானை நெருங்கிப் பார்த்தீர்களேயானால், உண்மை உங்களுக்கும் வெளிக்கும். ஆனால் அவரால் உசுப்பப்பட்டவர்கள் பெரிதும் உதவிகரமாக இருப்பதால் சீமானை எனக்கும் பிடிக்கும். ஈழ நிலமையை வெளிக்கொணர்வதில் பங்காளர் என்பதாலும்..




சீமான் போன்ற உணர்வாளர்களுக்கு முழுச் சுதந்திரத்தினை இந்தச் சமூகமோ அரசோ வழங்குவதில்லை. பல சமயங்களில் இவர் போன்ற உணர்வாளர்கள் ஒடுக்கப் படுவதால் இவரும் வாய்ச்சொல் வீரர் பட்டியலில் இணைக்கப் பட்டுள்ளார். இவர்களுக்கு இளைய சமுதாயத்தினரின் ஆதரவு இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை. என் தனிப்பட்ட கருத்து : வயசானவர்களின் பின் ஒடும் போது ஓட்டப் பந்தய வீரனும் தோற்றுப் போவான்., இளைஞர்களின் பின் ஓடினால் வயசானவரும் ஓட்டப் பந்தய வீரர் ஆவார். இது தான் நடைமுறைக்குச் சாத்தியமானது. நன்றி.