PDA

View Full Version : ரியல் ஹீரோக்களில்’ ஒருவராக சி.என்.என்., வெப்சைட் தேர்வு செய்துள்ளது.



ravikrishnan
05-05-2012, 08:43 AM
http://www.thehindu.com/multimedia/dynamic/00281/03TH_masam3_Akshaya_281263e.jpg

உலகின் தலைசிறந்த 10 பேரில் மதுரை இளைஞர் : 1.20 கோடி பேருக்கு உணவு தந்ததற்கு கவுரவம்:


ஆதரவற்ற, மனநலம் பாதித்தவர்களுக்கு 2002 முதல் இதுவரை தினமும் மூன்று வேளை உணவு அளித்து வரும் மதுரை டோக் நகரைச் சேர்ந்த நாராயணன் கிருஷ்ணனை(29), உலகின் தலைசிறந்த 10 “ரியல் ஹீரோக்களில்’ ஒருவராக சி.என்.என்., வெப்சைட் தேர்வு செய்துள்ளது.

நட்சத்திர ஓட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலைஞரான இவர், 2002ல் சுவிட்சர்லாந்து ஓட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அங்கு செல்வதற்காக மதுரை ரயில்வே ஸ்டேஷன் வந்தார். அங்கே முதியவர் ஒருவர் உணவுக்கு போராடும் அவலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி, வீட்டில் சமைத்து, இது போன்ற மனிதர்களை தேடிச் சென்று உணவு கொடுக்க ஆரம்பித்தார். இதுவரை 1.20 கோடி பேருக்கு தினமும் காலை, மதியம், இரவு என உணவு வழங்கி வருகிறார். இதற்காக “அக்ஷயா டிரஸ்ட்’ என்ற அமைப்பையும் “ஸ்பான்சர்கள்’ உதவியுடன் நடத்தி வருகிறார். மதுரையை சுற்றி கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிப்பிடித்து உணவு தருகிறார். இதற்காக தனது வாழ்கையை முழுமையாக அர்ப்பணித்துள்ள இவர், சி.என்.என். வெப்சைட்டால், உலகின் தலை சிறந்த 10 ரியல் ஹீரோக்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஏழை எளிய மக்களை தேடிசென்று உணவு கொடுப்பதென்பது அரிய மகத்தான பணி .. கோவில் உண்டியலில் பணத்தை கொட்டுபவர்கள இவரின் கைகளின் குடுங்கள் உங்களுக்கு கடவுள் குடுப்பதை விட இது பெரிய புண்ணியம் ..வளரட்டும் இவரின் சேவை.. வாழ்த்துக்கள் :icon_b::icon_b:

கீதம்
05-05-2012, 10:06 AM
இத்தகு அரிய மனிதரைப் பற்றிய செய்தி முன்பே மன்றத்தில் உள்ளதே.

-ஓட்டு-போடுங்க-உன்னத-மனிதருக்கு-உலக-அங்கீகாரம்! (http://www.tamilmantram.com/vb/showthread.php/24896)

ந.க
30-10-2012, 10:47 AM
௨௦௦௧ மதுரைக்கு இவர் அழைப்பின் பேரில் சென்றேன், இவரோடு அன்று பல தெருக்களையும் கடந்தேன், இவர் அந்த மன நோயாளிகளை மிக நெருக்கமாய் சென்று அன்பாய் 'தாய்' போல் உறவாடிக் கொண்டது மிக நெகிழ்வாய் இருந்தது, அன்று தான் என் வாழ்நாளில் முதல்தடவையாய் ஒரு முழுமையான இளைஞனை சந்தித்த அனுபவம் உண்டானது. அவர் வீட்டுக்குச் சென்றேன். அங்கு மேலும் அவரின் தொண்டுகள் பற்றி அறிய முடிந்தது.

நல்லாரைக் காண்பதும் நன்று -
பேசிக்கொண்டிருக்காமல், போதித்துக்கொண்டிருக்காமல் -
'போசித்துக் கொண்டிருப்பது' இவரின் தொண்டு.

மும்பை நாதன்
22-08-2013, 04:46 PM
வள்ளலார் பாதையில் வாழும் மனிதருக்கு பாராட்டுகள்.