PDA

View Full Version : சிப்பிக்குள் முத்தாக ...



reena
30-04-2012, 03:56 PM
சிப்பிக்குள் முத்தாக ...
என் இதயத்தில் நீ...
முத்தை காக்கும் ..
சிப்பியை போல..
நம் காதலை காக்கும் ..
என் இதயம்...

நீ ....
உன் அன்பு ...
இணையில்லா நேசம்...
இவ்வனைதிற்கும் ...
சான்றாக ...
முத்தான நம் காதல் ...

அத்தனையும் ....
என்றும் பத்திரமாய் ....
என் (நம் )இதயத்தில்..

vasikaran.g
13-05-2012, 11:42 AM
சிப்பிக்குள் முத்து
இதயத்துக்குள்
அவளின்
நினைவு வித்தா ?

நன்று ..

மஞ்சுபாஷிணி
15-05-2012, 08:48 AM
அன்பு முகிழ்ந்து காதலாகி இங்கே வரிகளாகும் அதிசயம் அழகு... அன்பு வாழ்த்துகள் ரீனா...

சிவா.ஜி
15-05-2012, 10:36 AM
பெருமழையின் ஒரு துளி
சிப்பி புகுந்து முத்தாவதைப் போல
விரவிக்கிடக்கும்
காதல் கொடையாளர்களில் ஒருவரது காதல்
இதயச்சிப்பி புகுந்து
காதல் முத்தானதோ...!!!

கவிதை நல்லாருக்கு. வாழ்த்துக்கள் ரீனா.

jayanth
15-05-2012, 10:39 AM
முத்தான கவிதை...!!!

aasaiajiith
19-05-2012, 10:33 AM
சிற்பமாய் செதுக்கி வைத்திருக்கும்
முத்துக்கவிதையினை, வாழ்த்தி வந்திருக்கும்
முத்து முத்தான வாழ்த்துக்களின் வரிசையில்
என் (சொத்தை) வாழ்த்தை வழங்குகிறேன்
தயக்கத்துடன், தயங்கி தயங்கி

சி(ற்)ப்பிக்கு வாழ்த்துகள் !!!!

reena
21-05-2012, 02:36 PM
பெரும் கவிகடலில் ....
சிறு முத்தான ...
என் முத்து கவிதையையும்...
முத்தான வார்த்தைகளால்
அருமையாய் பாராட்டிய ...
பெரும் கவிகள் ..அனைவருக்கும்...
மனம் நிறைந்த ...
முத்தான நன்றிகள்...!!!!