PDA

View Full Version : Are you ready?M.Jagadeesan
28-04-2012, 04:15 PM
சோமுவும், ராமுவும் ஒரே ஊரினர் ; ஒரே வயதினர்; நெருங்கிய நண்பர்கள். நீண்டகாலம் அரசுப் பணியிலிருந்து, தற்போது ஓய்வுபெற்று வீட்டில் இருக்கின்றனர். இருவருக்கும் வயது 65 ஆகிறது. இதுநாள்வரையில் அவர்களுடைய கால்கள் தமிழ்நாட்டைத் தாண்டியதில்லை. வடஇந்தியாவில் உள்ள புண்ணிய நதிகளையும், கோவில்களையும் பார்த்து வரவேண்டும் என்று ஆவல் கொண்டனர். எனவே சுற்றுலா நிறுவனம் ஒன்றில் தங்களுடைய பெயர்களைப் பதிவு செய்துகொண்டனர்.

இன்றிரவு பத்து மணிக்கு சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனிலிருந்து வண்டி புறப்படுகிறது. பக்கத்துத் தெருவிலிருக்கும் தன் நண்பர் ராமுவைப் பார்த்துவர , சோமு புறப்பட்டார். சோமுவைப் பார்த்தவுடன், ராமு

' வா! சோமு! நானே வரலாம்னு நினச்சுகிட்டு இருந்தேன்; நல்லவேளை நீயே வந்துட்டே! இப்படி உட்காரு! காபி சாப்பிடறயா?"

" ஒரு கப் சூடா கொண்டு வரச் சொல்லு!"

" அம்மா! மாலதி! சோமு வந்திருக்கார்! காபி கொண்டு வாம்மா!"

" இதோ கொண்டுவரேன் அப்பா !"

மாலதி , ராமுவின் ஒரே மகள். மாலதி கொண்டுவந்த காபியைப் பருகிக் கொண்டே சோமு பேசத் தொடங்கினார்.

" என்னப்பா! ராமு! மாலதிக்கு வரன் ஏதும் பாக்கலியா? "

" இல்ல சோமு , அவளுக்கு வயசு இருபத்தஞ்சு தானே ஆகுது! இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும்; அவ கல்யாணத்துக்கு முன்னாடி வீட்ட இடிச்சிக் கட்டனும்;வீடு கட்றதுக்காக லோனுக்கு அப்ளை பண்ணியிருந்தேன் ; பத்து லட்சம் சாங்க்ஷன் ஆகியிருக்கு! பத்து வருஷத்துல லோனைக் கட்டி முடிக்கணும். மாலதிக்குக் கல்யாணம் முடிஞ்ச கையோட கார் ஒன்னு வாங்கலாம்னு இருக்கேன்; நாலு இடத்த சுத்திப் பாக்க வசதியா இருக்கும்ல? நீ என்ன சொல்றே?"

" ராமு! நீ சொல்றதப் பாத்தா, நீ புறப்படத் தயாரா இல்ல போலிருக்கே?"


" என்னப்பா சோமு அப்படிச் சொல்லிட்டே? இத பாரு ! இந்த சூட்கேசுல எல்லாம் எடுத்து வச்சிட்டேன்; பத்து நாள் பயணத்துக்குத் தேவையான
துணிமணிகள், ஸ்வெட்டர், சோப்பு, சீப்பு, பவுடர், கண்ணாடி,மருந்து மாத்திரைகள், ATM கார்டு , ரேஷன் கார்டு ஜெராக்ஸ் காபி எல்லாம் எடுத்து
வச்சிட்டேன் ! அது சரி ! நீ எப்படி? Are you ready for the journey ?"

" ராமு! என்னோட ஒரே பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணிட்டேன்;ரெண்டு மகன்களுக்கும் சொத்தைப் பாகம் பிரிச்சு எழுதி ரிஜிஸ்தர் பண்ணிட்டேன்; எனக்கு ஒரு பைசாக் கடன் கிடையாது; என்னோட இறுதிச் சடங்குச் செலவுக்குக் கூட ஐம்பதாயிரம் ரூபாய வீட்ல ரெடியா வச்சி இருக்கேன்;எது எப்படி செய்யனும்னு பசங்களுக்கு சொல்லிக் கொடுத்திட்டேன்."

" என்னப்பா சோமு! நான் ஒன்னு கேட்டா ; நீ ஒன்னு பதில் சொல்றே?"

" இல்ல ராமு! நான் எந்தப் பயணத்துக்கும் ரெடின்னு சொல்ல வந்தேன்."

ravikrishnan
28-04-2012, 05:04 PM
வாழ்கையின் தத்துவத்தை சரியாக உணர்த்தும் கதை, வந்த வேலை எதுவொ அதை முடிப்பதுதான் நமது கடமை, சிறிய கதையில் பெரிய தத்துவம்,நன்றி!! ஜெகதீசன் அவர்களே!!!!:icon_b::icon_b:

தாமரை
29-04-2012, 02:55 AM
மிகச் சிறந்த நீதி கொண்ட கதை என்று சொல்லலாம். பயணத்துக்குத் தயாராதல் என்பது நம் பண்பாட்டின் ஒரு பகுதியாகவே இருந்து வந்திருக்கிறது. முதல் திருமணத்தில் வாழ்க்கையைத் தொடங்கும் நாம் அறுபதாம் கல்யாணத்தில் பயணத்திற்குத் தயாராக வேண்டும் என்பது நமது பண்பாடு.

ஒவ்வொரு மனிதனும் ஓய்வு பெரும் பொழுது எப்படி இருக்க வேண்டும் என்பதை வைத்துதான் நவீன நாரதர் பார்ட் டூ எழுத எண்ணினேன். அது நேரமின்மையால் அப்படியே நிற்கிறது. நான் இன்னும் தயாராகலை. :-)

சரியான கேள்வியைத் தான் கேட்க வைத்திருக்கிறீர்கள். தயாராயிடுவோம்.

கீதம்
29-04-2012, 06:59 AM
ஒரு சிறிய பயணத்துக்கே அத்தனை முன்னேற்பாடுகள் செய்யவேண்டியுள்ளது என்றால் நிரந்தரப் பயணத்துக்கு முன் எத்தனை முன்னேற்பாடுகள் தேவை.

நிரந்தரப் பயணத்துக்குத் தேவையானவற்றை முன்கூட்டி செய்வதால் நம்மை நம்பியிருப்பவர்களுக்கு தொல்லையில்லாமல் போகும். நாமும் மன நிம்மதியுடன் விடைபெறலாம்.

காலங்கடத்தாது செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து முடிக்க வலியுறுத்தும் அல்லது நினைவுறுத்தும் அருமையான கதை. பாராட்டுகள் ஐயா.

தலைப்பு தமிழில் இல்லாமலிருப்பது மட்டும் மெல்லிய உறுத்தல். மற்றபடி கதை வாழ்க்கைக்கு மிகவும் தேவையானக் கருவைக் கொண்டிருப்பது சிறப்பு.

இராஜேஸ்வரன்
29-04-2012, 07:54 AM
அவளுக்கு வயசு இருபத்தஞ்சு தானே ஆகுது! இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும்; அவ கல்யாணத்துக்கு முன்னாடி வீட்ட இடிச்சிக் கட்டனும்;வீடு கட்றதுக்காக லோனுக்கு அப்ளை பண்ணியிருந்தேன் ; பத்து லட்சம் சாங்க்ஷன் ஆகியிருக்கு! பத்து வருஷத்துல லோனைக் கட்டி முடிக்கணும். மாலதிக்குக் கல்யாணம் முடிஞ்ச கையோட கார் ஒன்னு வாங்கலாம்னு இருக்கேன்; நாலு இடத்த சுத்திப் பாக்க வசதியா இருக்கும்ல? நீ என்ன சொல்றே?"

65 வயது ஆன ராமு இன்னும் பத்தாண்டு திட்டம் போடுகிறார்! ஆனால்


என்னோட ஒரே பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணிட்டேன்;ரெண்டு மகன்களுக்கும் சொத்தைப் பாகம் பிரிச்சு எழுதி ரிஜிஸ்தர் பண்ணிட்டேன்; எனக்கு ஒரு பைசாக் கடன் கிடையாது; என்னோட இறுதிச் சடங்குச் செலவுக்குக் கூட ஐம்பதாயிரம் ரூபாய வீட்ல ரெடியா வச்சி இருக்கேன்;எது எப்படி செய்யனும்னு பசங்களுக்கு சொல்லிக் கொடுத்திட்டேன்."

சோமு எல்லா கடமைகளையும் முடித்து விட்டு வாழ்க்கையின் அடுத்த பயணத்துக்கு தயாராகி விட்டார்.

கருத்துள்ள கதையை கொடுத்த நண்பருக்கு பாராட்டுக்கள்.

M.Jagadeesan
29-04-2012, 11:00 AM
மிகச் சிறந்த நீதி கொண்ட கதை என்று சொல்லலாம். பயணத்துக்குத் தயாராதல் என்பது நம் பண்பாட்டின் ஒரு பகுதியாகவே இருந்து வந்திருக்கிறது. முதல் திருமணத்தில் வாழ்க்கையைத் தொடங்கும் நாம் அறுபதாம் கல்யாணத்தில் பயணத்திற்குத் தயாராக வேண்டும் என்பது நமது பண்பாடு.

ஒவ்வொரு மனிதனும் ஓய்வு பெரும் பொழுது எப்படி இருக்க வேண்டும் என்பதை வைத்துதான் நவீன நாரதர் பார்ட் டூ எழுத எண்ணினேன். அது நேரமின்மையால் அப்படியே நிற்கிறது. நான் இன்னும் தயாராகலை. :-)

சரியான கேள்வியைத் தான் கேட்க வைத்திருக்கிறீர்கள். தயாராயிடுவோம்.


தங்களுடைய பாராட்டுக்கு நன்றி! தங்களுடைய " நவீன நாரதர் " கதையைத் தொடரவும்.

M.Jagadeesan
29-04-2012, 11:08 AM
ஒரு சிறிய பயணத்துக்கே அத்தனை முன்னேற்பாடுகள் செய்யவேண்டியுள்ளது என்றால் நிரந்தரப் பயணத்துக்கு முன் எத்தனை முன்னேற்பாடுகள் தேவை.

நிரந்தரப் பயணத்துக்குத் தேவையானவற்றை முன்கூட்டி செய்வதால் நம்மை நம்பியிருப்பவர்களுக்கு தொல்லையில்லாமல் போகும். நாமும் மன நிம்மதியுடன் விடைபெறலாம்.

காலங்கடத்தாது செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து முடிக்க வலியுறுத்தும் அல்லது நினைவுறுத்தும் அருமையான கதை. பாராட்டுகள் ஐயா.

தலைப்பு தமிழில் இல்லாமலிருப்பது மட்டும் மெல்லிய உறுத்தல். மற்றபடி கதை வாழ்க்கைக்கு மிகவும் தேவையானக் கருவைக் கொண்டிருப்பது சிறப்பு.


தங்களுடைய உறுத்தல் நியாமானதுதான் . சன் தொலைக்காட்சியில் தற்போது " Are you ready " என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி நடந்து வருகிறது. அதன் தாக்கமே என்னை இவ்வாறு தலைப்பிடத் தூண்டியது. தங்களின் பாராட்டுக்கு நன்றி.

M.Jagadeesan
29-04-2012, 11:10 AM
தங்களுடைய பாராட்டுக்கு நன்றி இராஜேஸ்வரன்.

அக்னி
29-04-2012, 01:38 PM
நானும் இன்னும் ரெடியாகல என்று கதை சொல்லுதே...
சீக்கிரம் ரெடியாகணும்... ஏன் என்றால் பயணம் எப்போ ஆரம்பிக்கும் என்று சொல்ல முடியாதே... ரெடியா இருந்தால் போயிட்டே இருக்கலாம்...

கடமைகளை விரைந்து செய்ய (முடிக்க) வலியுறுத்தும் கதை.

பாராட்டுக்கள் ஐயா...

M.Jagadeesan
29-04-2012, 02:51 PM
தங்களுடைய பாராட்டுக்கு நன்றி அக்னி.

Hega
29-04-2012, 04:13 PM
நானும் சீக்கிரம் ரெடியாகிரணும்னு தான் இருக்கேன். இன்னும் கொஞ்சம் இன்றும் கொஞ்சம்னு கடமைகள் தினம் தினம் கூடிக்கொண்டே போகின்றது. ஆனாலும் எப்போ கூப்பிட்டாலும் அப்போ வர மாட்டேன்னு சொல்லவா முடியும்.

ரயில் பயணம் மட்டுமல்ல, வாழ்க்கைபயணமும் போய் சேரும் வரை போகுமிடமும் சேருமிடமும் நம்மிடம் இல்லையே..

எது எப்படியோ கதையினை படித்ததும் மனம் சற்று திடுக்கிட்டு அசையத்தான் செய்தது..சிந்திக்க செய்த கதைப்பகிர்வுக்காக நன்றி ஐயா..

அமரன்
29-04-2012, 08:47 PM
நான் எங்கே நிற்கிறேன் என்று பார்க்க வைத்த கதை..

தாமரை அய்யா போன்ற வயோதிபர்களுக்கு உடனடி முடிவு எடுக்க வேண்டிய அவசியத்தையும், என்னைப் போன்ற இளையோருக்கு திட்டமிடலின் அவசியத்தையும் உணர்த்தும் கருத்தூன்றிய கதை.

அலட்டலே இல்லாமல், நூல் த்மிழில் நூற்க்கப்பட்ட கதை.

பாராட்டுகள் ஜெகதீசன் அய்யா.

M.Jagadeesan
30-04-2012, 09:03 AM
ஹேகா, அமரன் ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி!

அன்புரசிகன்
01-05-2012, 04:31 AM
தயாராகுவதற்கு உந்துகோலாக அமையத்தூண்டும் கதையின் கரு. ஆற அமர வாழ்க்கையில் இடம் இல்லை போல...

வாழ்த்துக்கள் ஐயா...

jayanth
01-05-2012, 06:44 AM
சிந்திக்க வைத்த கதை...!!!

M.Jagadeesan
02-05-2012, 09:38 AM
அன்புரசிகன், ஜெயந்த் ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி.