PDA

View Full Version : ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடித்த ' கேசவன்' (?) ......கௌதமன்
28-04-2012, 06:42 AM
பள்ளியில் படிக்கும் போது என்னுடன் படித்த நண்பன் ஒருவன் அநியாயத்துக்கு கதை விடுவான். அதாவது ஒரு புதுப்படத்தோட போஸ்டர்களை பார்த்தே படம் பார்த்ததா கதை சொல்வான். பல சமயம் அந்த கதை ஒரிஜினல் கதையை விட ஜோரா இருந்தது வேற விஷயம். அந்த சமயத்தில் வந்த ஒரு அர்ஜுன் பட (பேரை கடைசியில சொல்றேன் அதுலத்தான் விஷயமே இருக்கு) போஸ்டரை பார்த்து வழக்கம் போல வகுப்பறையில் கதையை சொல்லி முடிச்சிட்டான். படத்தோட பேரை கேட்டா கேசவன்னு சொன்னான். ஆனா அப்படி ஒரு படம் வரவேயில்லை. என்னடா இப்படி சொல்றானேனுன்னு குழம்பிப் போய் வகுப்பு முடிந்து திரும்பும் போது படப் போஸ்டரைப் பார்த்தா படம் பேரு சேவகன். பயபுள்ள பஸ்ஸுல வரும் போது தவறுதலா சேவகனை கேசவனா படிச்சிட்டான்.

கீதம்
28-04-2012, 11:19 AM
எனக்கும் இதுபோல் சில சமயம் வாசிப்பில் தடுமாற்றம் நிகழ்வதுண்டு.

பாவம் அந்த நண்பர். நல்ல திறமைசாலியாக மட்டுமல்ல, துணிச்சலுடையவராகவும் இருந்திருக்கவேண்டும்.

இல்லையானால் படம் பார்த்தபின்னர் கிடைக்கும் உதைகளை சமாளிக்கவேண்டுமே. :)

Hega
29-04-2012, 11:00 PM
எனக்கும் இம்மாதிரி தடுமாற்றங்கள் வருவதுண்டு..

சுள்ளென சுட்டுகொண்டிருந்த சூரிய பகவானை நம்பி சாக்கு விரித்து புளி காய வைத்திருந்தார் என் அத்தை. தீடீரென வானம் இருண்டு மழை தூறல் விழுவதை கண்டு முன்னறையிலிருந்த அவர் வெளியே சென்று காய வைத்த புளிகளை எடுக்கவென புளி புளியென கூச்சலோடு ஓடி வர ஊருக்கு புதிதாய் வந்து அங்கே ஏதோ வேலையாய் இருந்த நான் புளியை , புலியாக புரிந்து வெளியே செல்லும் கதவை அவர் எட்டமுன் நான் எட்டி புளி, புளி என அவர் போடும் கூச்சலை கண்டு புலிக்கு பயந்து கதவை போட்டோ பூட்டென பூட்டிகொணடதுமல்லாமல் அருகிலிருந்த உலக்கை, உரல், மேசை என இழுத்து போட்டு அணைகொடுத்து விட்டு புலியை விரட்டிய மறச்சி யான் தலை நிமிர்ந்தால் அத்தை தைதைதையென கோபத்தோடு கடு கடுவென்று நிற்பதை கண்டு அதிர்ந்து :icon_rollout:

ஏனென்று கேட்டு வெளியே இருப்பது புலி அல்ல புளி என புரிந்து வைத்த அணையை மீண்டும் அகற்றி போவதற்குள் காய்ந்த புளி மேல் வெள்ளம் பெருகெடுத்து ஓட அத்தையின் கோபம் என் மேல் திரும்ப ... சேவகனை கேசவனாக்கிய நண்பராவது பரவாயில்லை என தோன்றுகிறதா..

jayanth
30-04-2012, 08:20 AM
சேவகன் கேசவன் ஆனதும் புளி புலி ஆனதும் சுவராசியம்.

sarcharan
30-04-2012, 11:59 AM
இது போல ஒரு புருடா ராஜா எங்கள் வகுப்பிலும் இருந்தான்.

சேவகன் அர்ஜீன், குஷ்பு நடித்த ஒரு சப்பை படம்.

கீதம்
02-05-2012, 02:12 AM
எனக்கும் இம்மாதிரி தடுமாற்றங்கள் வருவதுண்டு..

சுள்ளென சுட்டுகொண்டிருந்த சூரிய பகவானை நம்பி சாக்கு விரித்து புளி காய வைத்திருந்தார் என் அத்தை. தீடீரென வானம் இருண்டு மழை தூறல் விழுவதை கண்டு முன்னறையிலிருந்த அவர் வெளியே சென்று காய வைத்த புளிகளை எடுக்கவென புளி புளியென கூச்சலோடு ஓடி வர ஊருக்கு புதிதாய் வந்து அங்கே ஏதோ வேலையாய் இருந்த நான் புளியை , புலியாக புரிந்து வெளியே செல்லும் கதவை அவர் எட்டமுன் நான் எட்டி புளி, புளி என அவர் போடும் கூச்சலை கண்டு புலிக்கு பயந்து கதவை போட்டோ பூட்டென பூட்டிகொணடதுமல்லாமல் அருகிலிருந்த உலக்கை, உரல், மேசை என இழுத்து போட்டு அணைகொடுத்து விட்டு புலியை விரட்டிய மறச்சி யான் தலை நிமிர்ந்தால் அத்தை தைதைதையென கோபத்தோடு கடு கடுவென்று நிற்பதை கண்டு அதிர்ந்து :icon_rollout:

ஏனென்று கேட்டு வெளியே இருப்பது புலி அல்ல புளி என புரிந்து வைத்த அணையை மீண்டும் அகற்றி போவதற்குள் காய்ந்த புளி மேல் வெள்ளம் பெருகெடுத்து ஓட அத்தையின் கோபம் என் மேல் திரும்ப ... சேவகனை கேசவனாக்கிய நண்பராவது பரவாயில்லை என தோன்றுகிறதா..

ஐயோ பாவம் ஹேகா நீங்க. அன்று புலியால் உங்களுக்கும், உங்களால் புளிக்கும், புளியால் அத்தைக்கும், அத்தையால் உங்களுக்கும் நேர்ந்த கொடுமையை நினைத்தால் சிரிப்பதா? பரிதாபப்படுவதா? என்று புரியவில்லை. நல்ல அனுபவம்தான். :icon_b:

அமரன்
02-05-2012, 05:37 AM
உங்கள் நண்பனின் இன்னொரு பக்கம் தீர்க்க தரிசனம்.. அண்மையில் வந்த கேசவன் படத்தின் கதையை முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லிவிட்டாரே..

அமரன்
02-05-2012, 05:39 AM
புளி கரைச்சிட்டீங்கன்னு சொல்லுங்க..

எனக்கும் இம்மாதிரி தடுமாற்றங்கள் வருவதுண்டு..

சுள்ளென சுட்டுகொண்டிருந்த சூரிய பகவானை நம்பி சாக்கு விரித்து புளி காய வைத்திருந்தார் என் அத்தை. தீடீரென வானம் இருண்டு மழை தூறல் விழுவதை கண்டு முன்னறையிலிருந்த அவர் வெளியே சென்று காய வைத்த புளிகளை எடுக்கவென புளி புளியென கூச்சலோடு ஓடி வர ஊருக்கு புதிதாய் வந்து அங்கே ஏதோ வேலையாய் இருந்த நான் புளியை , புலியாக புரிந்து வெளியே செல்லும் கதவை அவர் எட்டமுன் நான் எட்டி புளி, புளி என அவர் போடும் கூச்சலை கண்டு புலிக்கு பயந்து கதவை போட்டோ பூட்டென பூட்டிகொணடதுமல்லாமல் அருகிலிருந்த உலக்கை, உரல், மேசை என இழுத்து போட்டு அணைகொடுத்து விட்டு புலியை விரட்டிய மறச்சி யான் தலை நிமிர்ந்தால் அத்தை தைதைதையென கோபத்தோடு கடு கடுவென்று நிற்பதை கண்டு அதிர்ந்து :icon_rollout:

ஏனென்று கேட்டு வெளியே இருப்பது புலி அல்ல புளி என புரிந்து வைத்த அணையை மீண்டும் அகற்றி போவதற்குள் காய்ந்த புளி மேல் வெள்ளம் பெருகெடுத்து ஓட அத்தையின் கோபம் என் மேல் திரும்ப ... சேவகனை கேசவனாக்கிய நண்பராவது பரவாயில்லை என தோன்றுகிறதா..

கௌதமன்
02-05-2012, 02:20 PM
உங்கள் நண்பனின் இன்னொரு பக்கம் தீர்க்க தரிசனம்.. அண்மையில் வந்த கேசவன் படத்தின் கதையை முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லிவிட்டாரே..
முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் என்றால் என்னைப் பற்றி என்னை என்ன நினைக்கிறீர்கள்? அப்புறம் சேவகன் படம் வந்து முப்பது ஆண்டுகள் ஆகி விட்டதா? 1992 அல்லது 1993 -ல் வந்திருக்கலாம். அந்த சமயத்தில் பள்ளியில் படித்தவன் என்றால் எனக்கு என்ன வயது ஐயா இருக்கும்? உங்களை விட ஒரு 5 வயது அதிகம் என்றால் இப்படியா சொல்வது ?

நாஞ்சில் த.க.ஜெய்
07-05-2012, 04:45 PM
புளி புலியான கதையும் சேவகன் கேசவன் ஆன கதையும் அருமை ..

அன்புரசிகன்
08-05-2012, 02:26 AM
புலிக்கு பயந்து கதவை போட்டோ பூட்டென பூட்டிகொணடதுமல்லாமல் அருகிலிருந்த உலக்கை, உரல், மேசை என இழுத்து போட்டு அணைகொடுத்து விட்டு .

இதப்படிச்சதும் எனக்கு tom and jerry இன் ஒரு பாகம் ஞாபம் வந்ததை தவிர்க்க முடியவில்லை.http://www.youtube.com/watch?v=haa_2xv1luc
இதில் 1.40 இற்கு பிறகான காட்சியை சொன்னேன்.