PDA

View Full Version : முல்லைத்தீவு மக்களிடம் வாங்கிக்கட்டிய ஒட்டுக்குழு அமைச்சர் டக்ளஸ்



rajkulan
27-04-2012, 07:17 PM
செருப்பால் அடித்தது போன்று கேள்விகள் கோட்ட முல்லைத்தீவு மக்கள் முன்பாக வலைச் சுறுட்டிக் கொண்ட ஒட்டுக்குழு டக்ளஸ் தான் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வினை இடைநிறுத்திவிட்டு ஓடிமறைந்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்த டக்ளஸ் அங்கு பலதரப்பட்ட அரசியல் நிகழ்வுகளை ஒழுங்கமைத்து தமது பரிவாரங்களுடன் நடத்தி வந்தார்.
இதனடிப்படையில் முல்லைத்தீவு மாட்டத்தில் உள்ள மீனவர்களையும் நேற்று முன்தினம் சந்தித்து கலந்துரையாட ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தது.

மேற்படி ஒழுங்மைப்பின்படி முல்லைத்தீவு நகரப் பகுதியில் அங்குள்ள மீனவர்களை சந்தித்த டக்ளஸ் இந்திய மீனவர்களை தரக்குறைவாக போசியதுடன் இந்திய அரசாங்கத்தின் வழிநடத்தலிலேயே அவர்கள் இவ் அத்துமீறல்களை செய்கின்றார்கள் என்றும் குறிப்பிட்டார்.

இதனால் அவர்களது அத்துமீறல்களை தடுத்து நிறுத்த வேண்டியதன் அவசியத்தினையும் அவர் அங்கு வலியுறுத்தியதுடன், அவர்களை எதிர்த்து போராட தான் துணிந்து விட்டதாகவும் தன்னுடன் போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறும் கோட்டுள்ளார்.

வடமாகாணத்தில் உள்ள 5 ஆயிரம் மீனவர்களை ஒன்று திரட்டி இந்தியாவின் இராமேஸ்வரத்திற்குச் சென்று போராட்டத்தினை முன்னெடுக்க உள்ளேன் இதற்கு துணிந்தவர்கள் முன்வாருங்கள் என அறைகூவியும் உள்ளார்.

இதனைக் கேட்டுக் கொண்டு இருந்த மக்கள் பொறுத்துக் கொள்ள முடியாமல் தமக்குள் முணுமுணுக்கத் தொடங்கிக் கொள்ள, அதில் இருந்த மீனவர் ஒருவர் எழுந்து நாசுக்காக ஒரு கேள்வியை டக்ளஸினைப் பார்த்துக் கேட்டார்.

அதாவது “இந்திய மீனவர்களின் அத்துமீறல்களும் ஒரு முக்கியமான பிரச்சினைதான், ஆனால் இன்று நீங்கள் இங்கு நிற்கின்றீர்கள் தானே நான் நாளை காலை ஒரு ஆயிரம் மீனவர்களை ஒன்று திரட்டிக் கொண்டு வருகின்றேன், நீங்களும் எங்களுடன் சேர்ந்து வாருங்கள், கொக்கிளாய், நந்திக்கடல், நாயாற்றுப்பகுதியில் அத்துமீறி குடியேறிக் கொண்டு அடாத்தாக மீன்பிடியில் ஈடுபடும் சிங்கள மீனவர்களை அடித்துக் கலைப்போம்” என்று கேட்டுக் கொண்டார்.

இவ்வாறு ஒரு கேள்வியினை அங்கு எதிர்பார்த்திருக்காத டக்ளஸ் முகம் வேர்த்து விறுவிறுத்து தலைகுநிந்தபடி மௌனமாக அங்கிருந்து விலகிச் சென்றுள்ளார்.
பாவம் இரண்டு நாள் விஜயம் செய்ய நினைத்த டக்ளசை ஒரு நாளுடனே முல்லைத்தீவு மக்கள் கலைத்து விட்டுள்ளனர்.

மீண்டும் தாம் தான்மானம் உள்ள தமிழர்கள் என்பதை நிறுபித்துள்ளனர்.

நன்றி சங்கதி.