PDA

View Full Version : அமெரிக்க அழுத்தங்களுக்கு அடிபணிந்தது சிறிலங்கா...!!!!!!!!!!!!



rajkulan
26-04-2012, 06:53 PM
அமெரிக்காவின் அழுத்தத்துக்கு அடிபணிந்து, ஈரானுடன் செய்து கொண்ட உடன்பாட்டை சிறிலங்கா அரசாங்கம் முறித்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

ஈரான் மீது எண்ணெய் ஏற்றுமதித் தடையை விதித்துள்ள அமெரிக்கா, சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளை ஈரானிடம் இருந்து, அடுத்த ஆறு மாதங்களுக்குள் எண்ணெய் இறக்குமதியை நிறுத்தமாறு கேட்டிருந்தது.

இல்லையேல், அமெரிக்காவின் தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரிக்கப்பட்டது.

ஈரானுடன் நெருக்கமான உறவைப் பேணிவரும் சிறிலங்கா அரசாங்கம் அமெரிக்காவின் இந்த எச்சரிக்கையை முன்னதாக நிராகரித்திருந்தது.

ஆனால், தற்போது அந்த முடிவை மாற்றிக் கொண்டு அமெரிக்க அழுத்தங்களுக்கு அடிபணிந்து ஈரானின் எண்ணெய் இறக்குமதியை நிறுத்தத் தீர்மானித்துள்ளது.

ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் மற்றும், அடுத்த மாதம் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனைச் சந்திக்க சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் வொசிங்டன் செல்லவுள்ளது ஆகிய காரணங்களினாலேயே சிறிலங்கா இந்த முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஈரானின் தேசிய எண்ணெய் நிறுவனத்துடன் சிறிலங்கா செய்து கொண்டுள்ள உடன்பாடு வரும் செப்ரெம்பரில் முடிவடையவுள்ள நிலையில் இந்த உடன்பாட்டுக்கமைய இறக்குமதி செய்ய வேண்டிய 3 கப்பல் எண்ணெயை நிறுத்தி விட சிறிலங்கா தீர்மானித்துள்ளது.

இந்தக் கப்பல்கள் ஒவ்வொன்றினவும் கொள்ளளவு 135,000 மெட்றிக்தொன் ஆகும்.

சபுகஸ்கந்தவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு ஆண்டுதோறும் 14 கப்பல்களில் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.

இவற்றில் 13 கப்பல்கள் ஈரானிடம் இருந்தும் ஒன்று சவூதி அரேபியாவில் இருந்தும் இறக்குமதி செய்யப்பட்டு வந்தன.

இந்தஆண்டு ஏற்கனவே ஈரானிடம் இருந்த 6 கப்பல்களில் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு நிலையில், எஞ்சியுள்ள 6 கப்பல்களில் மூன்றின் இறக்குமதியை சிறிலங்கா நிறுத்தவுள்ளது.

அமெரிக்கத் தடைகளை அடுத்தே சிறிலங்கா அரசாங்கம் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக சிறிலங்காவின் பெற்றோலியத்துறை அமைச்சர் சுசில் பிறேம்ஜெயந்த் ஒப்புக்கொண்டுள்ளார்.

நன்றி,
ஈழதேசம்.

அன்புரசிகன்
26-04-2012, 07:57 PM
இதனால் பிரச்சனை யாருக்கு? ராஜபக்ஷவுக்கா???

rajkulan
27-04-2012, 07:04 PM
ஒட்டுமொத்த இலங்கையர்களுக்குமே...!
ஏனெனில் பங்குச்சந்தையில் இலங்கையின் வீழ்ச்சி... இன்னும் ஓர் 6 மாத காலத்துக்கு தாக்குப் பிடிக்குமா தெரியவில்லை.