PDA

View Full Version : மன்ற மென்பொருள் மேம்பாடுஅன்புரசிகன்
23-04-2012, 06:16 AM
ஏற்கனவே அமரன் கூறியது போல் விரைவில் மன்ற மென்பொருள் மேம்பாடு நிகழவுள்ளதால் நம் மன்ற செயற்பாடுகளை இன்றிரவு முதல் நாளை இரவு வரை சில மணி நேரம் நிறுத்தவேண்டி வரலாம்.

இதனால் மன்ற உறவுகள் நம் மன்றத்தை பார்வையிடுதல் சில மணி நேரங்கள் தடை வாய்ப்பு உள்ளது.

சரியான நேரத்தை தற்போது குறிப்பிடமுடியாமைக்கு வருந்துகிறோம். ஏறத்தாள அமீரக நேரத்திற்கு (GMT+4.00) இந்த மாற்றங்கள் செய்யப்படும். ஏறத்தாள இந்திய இலங்கை நேரம் இரவு 11 மணி முதல் அதிகாலை 4.00-க்குள் தடை ஏற்படலாம்.

மென்பொருள் மாற்றங்கள் முடியும் வரை தங்களது ஆக்கங்களை பதியும் போது தங்களது கணினியில் பிரதி சேமிப்பு ஒன்றை வைத்துக் கொண்டு பதியுங்கள்.

மன்ற மென்பொருள் மாற்றத்தின் பின் மன்ற பக்கங்கள் தோன்ற சில வினாடிகள் அதிகமா எடுக்கலாம். அவை போகப் போல ஒரு சில நாட்களில் சரியான ழைய வேகத்தைப்பெற்றிடும்.

இதனால் மன்ற உறவுகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருந்துகிறோம்...

மன்ற உறவுகளின் மேலான ஒத்துழைப்புக்கு நன்றிகள்.

நிர்வாகம்

பின் சேர்ப்பு: இன்னும் தளத்தின் மேம்படுத்துதல் வேலை முடிவடையவில்லை. தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 25-ம் தேதி இரவு வரை ஆகும், அதனால் சில வசதிகள் குறைக்கப் பட்டுள்ளன. உங்கள் பதிப்புகளின் நகல் வைத்துக் கொள்ளுங்கள்.

ஆதி
24-04-2012, 01:29 PM
தகவலுக்கு நன்றி ரசிகரே, மென்பொருள் மேம்பாடு வேலைகள் முடிந்துவிட்டனவா ?

அமரன்
24-04-2012, 09:05 PM
தகவலுக்கு நன்றி ரசிகரே, மென்பொருள் மேம்பாடு வேலைகள் முடிந்துவிட்டனவா ?

இன்னும் தளத்தின் மேம்படுத்துதல் வேலை முடிவடையவில்லை. தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 25-ம் தேதி இரவு வரை ஆகும், அதனால் சில வசதிகள் குறைக்கப் பட்டுள்ளன. உங்கள் பதிப்புகளின் நகல் வைத்துக் கொள்ளுங்கள்.

ஆதி
26-04-2012, 04:54 AM
மன்றத்தாய் புது மென்பொருள் மேலாடைக் கட்டி மினுமினுவென ஜொலிக்கிறாள், பிரமாண்டம், பிரமாதம்.

கலைவேந்தன்
26-04-2012, 04:58 AM
புதிய வடிவம் மிக அழகாக இருக்கின்றது. கண்களுக்கு இனிமையாகவும் இருக்கின்றது. ஒரே ஒரு குறைதான். சமீபத்திய பதிவுகள் குறித்தான டாப் 5 ஸ்டேட்ஸ் இல்லாமலிருப்பது கொஞ்சம் குறையாகத் தென்படுகிறது.

பதிவு இடும் பகுதி அகலமாக விசாலமாக தட்டச்சும்போதே தானியக்க சேமிப்பாக அமைந்துள்ளது மிக மிக அருமையான மாற்றம். போர்ட்டல் அழகாக இருக்கின்றது.

இன்னும் சிறப்பம்சங்கள் தோன்றுவதைக் குறித்து கருத்து வழங்குகிறேன்.

வடிவமைப்பாளர்களுக்கு மிக்க நன்றி.

அன்புரசிகன்
26-04-2012, 05:15 AM
ஒரே ஒரு குறைதான். சமீபத்திய பதிவுகள் குறித்தான டாப் 5 ஸ்டேட்ஸ் இல்லாமலிருப்பது கொஞ்சம் குறையாகத் தென்படுகிறது.

இது Home (http://www.tamilmantram.com/vb/content.php) பகுதியில் வலது பக்கத்தில் உள்ளது.

இன்னும் சில குறைபாடுகள் உள்ளன. காலக்கிரமத்தில் அவை தீரும் என நம்புவோம்.

meera
26-04-2012, 05:22 AM
athellaam sari, munpu ingkeeyee thattassu seythu thamizhil mozhi moRRi vetti ottikkoNtirunthoom. athaRkku ippoothu vazhiyillaiyee??????

ஆதி
26-04-2012, 05:38 AM
athellaam sari, munpu ingkeeyee thattassu seythu thamizhil mozhi moRRi vetti ottikkoNtirunthoom. athaRkku ippoothu vazhiyillaiyee??????

ஆமாங்க* அக்கா, இந்த பிரச்சனையும் தற்போது இருக்கிறது, கவன ஈர்ப்பு செய்யப்பட்டிருக்கிறது அக்கா, விரைவில் சரியாகும்

அமரன்
26-04-2012, 05:41 AM
athellaam sari, munpu ingkeeyee thattassu seythu thamizhil mozhi moRRi vetti ottikkoNtirunthoom. athaRkku ippoothu vazhiyillaiyee??????

மீரா..

இம்முறை மென்பொருள் மேம்படுத்தல் நீண்ட நேரத்தைத் தின்றுவிட்டது. அதனால் பல பழைய விசயங்களையும் புதியன சிலதையும் சேர்க்க இயலவில்லை. விரைவில் ஒவ்வொன்றாக இணையும்.

ravikrishnan
26-04-2012, 07:03 AM
மிக அருமையான வடிவங்கள்,கண்கலுக்கு குளிர்ச்சியாக உள்ளது .வாழ்க தமிழ்மன்றம்!!!

செல்வா
26-04-2012, 08:37 AM
ரொம்ப நல்லாருக்கு...
மேம்பாட்டிற்காய் உழைத்த அனைவருக்கும் நன்றிகள்.

கீதம்
26-04-2012, 08:55 AM
வழக்கமாய்ப் பார்த்து ரசிக்கும் அம்மாவை, பட்டுச்சேலையிலும் ஒப்பனையிலும் பார்த்தால் சட்டென்று பரிச்சயமுணராமல் கொஞ்ச நேரம் மலைத்து நிற்குமே குழந்தை. அப்படித்தான் இருந்தது எனக்கும் முதலில் வந்தபோது. பரிச்சயமுணர்ந்த கணமே மனக்குழந்தை தாவி மன்ற அன்னையின் மடியில் அமர்ந்துகொண்டு கும்மாளம் போட்டுக்கொண்டிருக்கிறது.

மீரா கூறியது போல் யுனிகோட் கன்வெர்ட்டர் இல்லாமலிருந்தது கொஞ்சம் வருத்தமளித்தது. பலரும் இதை நம்பியே இருக்கிறார்கள் என்பதால். அந்தக் குறையும் நிவர்த்தி செய்யப்பட்டுவிட மிகவும் திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.

மென்பொருள் மேம்பாட்டுக்காக உழைத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மகிழ்வான நன்றிகள் பல.

Dr.சுந்தரராஜ் தயாளன்
26-04-2012, 09:24 AM
மூன்று நாட்கள் விடுப்பில் ஊர் சென்றிருந்தேன். இணையத்தில் இணைய முடியவில்லை. திரும்பிவந்தவுடன் பார்த்தால் என்னால் நம்பமுடியவில்லை. கீதம் அவர்கள் சொன்னதுபோல் பட்டுச் சேலையும் ஒப்பனையும் மிகவும் பிரமாதமாக உள்ளது. உழைத்த எல்லோருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக :)

சிவா.ஜி
26-04-2012, 09:28 AM
ஆஹா...புதிய வடிவத்தில் மன்றம் ஜொலிக்கிறது. சிறிது சிறிதாய்...விடுபட்ட வசதிகளையும் சேர்த்துவிட்டால்...அழகோ அழகு. வடிவமைப்பு சீராக்கத்திலும், மேம்படுத்துதலிலும் தங்கள் மதிப்பான நேரத்தை செலவழித்த அன்பு உறவுகளுக்கு வாழ்த்துக்கள்.

jayanth
26-04-2012, 03:23 PM
Arumayo arumai...!!!

கௌதமன்
26-04-2012, 05:49 PM
முற்றிலும் வித்தியாசமாக, இன்னும் இளமையாக, புதுமையாக இருக்கிறது. மன்றம் முன்னணிக்கு வர பின்னணியில் உழைத்த அனைவருக்கும் நன்றிகள். பாராட்டுகள்.

meera
27-04-2012, 12:30 AM
அழகான வடிவமைப்பு. பார்த்தவுடன் பாராட்டலாம் என்று யுனிகொடை பார்த்தால் காணவில்லை. மனம் பதறிப்போனது. இப்போது தான் சந்தோஷம்.

மன்ற மேம்பாட்டில் உழைத்த நல் உள்ளங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியும் பாராட்டுதலும்.

இராஜேஸ்வரன்
27-04-2012, 04:35 AM
புதிய தோற்றம் மிகவும் அழகாக இருக்கிறது. வடிவமைத்தவர்களுக்கும் மேம்பாட்டுக்காக உழைத்தவர்களுக்கும் பாராட்டுக்கள்.

அக்னி
27-04-2012, 11:32 AM
எனது கணினி, செல்லிடப்பேசி உலாவிகளில் முதலாவதாகச் சேமிக்கப்பட்டுள்ள இணையமுகவரி என்றால் தமிழ்மன்றம்தான்.
வேலை முடிந்து, வீடு வந்து, கணினியை உயிர்ப்பித்து, உலாவியில் தமிழ்மன்றத்தைத் தட்டிவிட்டால்.., அற்புதம்... அதிசயம்...
(ஒரு நிமிடம் வேறு இணையம் வந்துவிட்டேனோ என்று முகவரியை உறுதிப்படுத்திக்கொண்டேன்.)

தம் ஓய்வு நேரங்களில் இந்த மெருகுக்காக உழைத்த அனைத்து உறவுகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்...

எப்படித்தான் கொடுத்தாலும், இது இப்படியிருந்தால் இன்னும் நன்றாயிருக்குமே என்ற ஒரு சராசரி எதிர்பார்ப்பொன்றைப் பதிவுசெய்கின்றேன்.
மன்ற லோகோவில் ‘தமிழ்மன்றம்’ உம், இணைய முகவரிக்கு முன் வரும் ‘த’ வும், கடும் நீலமாக நிறப்படுத்தப்பட்டிருப்பின் இன்னும் அழகுற இருக்குமென்பது எனது மொழிவு.
தமிழ்மன்றம் என்பதை நீலத்திலேயே பார்த்துப் பார்த்துப் பழகிய கண்களுக்கு இந்த மாற்றம் சட்டென்று திருப்தியாயில்லை.

இது என் கருத்து மட்டுமே.
மற்றைய உறவுகளின் கருத்தும் அவ்வாறே அமைவின், பரிசீலிக்கப் பரிந்துரைக்கின்றேன்.

அடுத்து,
ஒவ்வொரு பதிவிலும் நமது விபரங்களோடு Downloads, Uploads வரத்தான் வேண்டுமா... பயன் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. (நாம எதையுமே தரவேற்றவில்லை என்பதை வேறு காட்டிக்கொண்டிருக்கின்றது...)
அதை நீக்கிவிட்டு, போட்டிகளில் வென்ற பதக்கவிபரங்களை இணைப்பது சிறப்பாயிருக்கும் என நினைக்கின்றேன். (ஒரு பதக்கம் நாமளும் வச்சிருக்கமில்ல. அது தெரியவேணாமா...)

அடுத்தது:
தணிக்கை செய்தபின்னரும், மேலதிக வசதிப் பதிவுப் பக்கத்திலிருந்தும் Ctrl+s கொடுக்க முடியவில்லை.

மேலிணைப்பு:
இப்பதிவை நான் முன்னர் Quick Post இல் தட்டச்சிப் பதிவேற்றியிருந்தேன். மேலே எப்படிப் பதிவாகியுள்ளதோ அந்த அமைப்பிலேயே இடைவெளிகள் வரிகளை அமைத்திருந்தேன். சேமித்ததும் பார்க்க, ஒரே பத்தியாகப் பதியப்பட்டிருந்தது. மீண்டும் தணிக்கைக்குட்படுத்திப் பதிய சரியாக வருகின்றது. நான் உலாவுவது குரோமில்.

இரண்டாவது மேலிணைப்பு:
இதற்கடுத்த எனது பதிவு, நான் அமைத்த வடிவிலேயே Quick Post பதியப்பெற்றது. காரணம் புரியவில்லை மக்களே...

அமரன்
27-04-2012, 12:42 PM
அக்னி..!

மன்றத் தோலுக்குப் பொருத்தமாக நீ வடிவமைத்து தரும் லோகோவை மாற்ற எனக்கும் விருப்பம்தான்..

பத்தாவது ஆண்டில் காலடி வைத்த மன்றத்தில் என்னென்ன போட்டிகளை நடாத்தலாம் என்று ஆதன் மூளையைக் கசக்கிக் கொண்டே இருக்கிறார். அப்ப பதக்கம்?

govindh
27-04-2012, 10:24 PM
புதுப் பொலிவுடன்...
நம் மன்றம்...

அருமை...அருமை...
அழகு..அழகு...
அமைப்பாளர்களுக்கு
வாழ்த்துக்கள்..!

M.Jagadeesan
28-04-2012, 08:49 AM
மன்றத்தின் புதிய தோற்றம் கண்ணுக்குக் குளுமையாகவும்,மனதிற்கு நிறைவாகவும் உள்ளது. நீண்ட கதைகளையும், கவிதைகளையும் எழுதுவோருக்கு SAVE DRAFT மிகவும் வசதியாக இருந்தது. தற்போது அந்த வசதி நீக்கப் பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதை மீண்டும் கொண்டு வந்தால் என்னைப்போல யோசித்து,யோசித்து எழுதுவோருக்கு நலமாக இருக்கும்.

arun
28-04-2012, 10:37 AM
திடீரென நுழைந்ததும் இன்ப அதிர்ச்சி ..

மன்றம் ஜொலிப்பதை பார்க்கும்போது மகிழ்சியாக இருக்கிறது அதே போல பழைய வசதிகளை ஒவ்வொன்றாக இணைத்து மேலும் மெருகேறட்டும்

சுகந்தப்ரீதன்
29-04-2012, 03:43 AM
மிகவும் அருமையாக வடிவமைக்க பட்டிருக்கிறது... இதற்காக உழைத்த உள்ளங்களுக்கும் எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும்...!!

title பகுதிக்கு அதிக இடம் ஒதுக்கி last post பகுதிக்கு குறைவான இடம் ஒதுக்கியிருப்பதால் அது ஏதோ ஒரு பக்கமாய் ஒதுங்கியிருப்பதை போன்று தோற்றமளிக்கிறது..!!

title பகுதியில் தலைப்புகளுக்கு பின்னே கிடக்கும் வெற்றிடத்தை கொஞ்சம் சரிசெய்தால் பார்வைக்கு இன்னும் மெருகூட்டலும் தோன்றும் நம் மன்றம்..!!

Hega
29-04-2012, 04:28 PM
மன்றமாற்றம் கண்ணுக்கும், மனதுக்கும் குளிர்ச்சி.
அழகாக, அருமையாக இருக்கிறது.
இதற்காக பணிசெய்தோருக்கு நன்றிகள் என்றென்றும்,..

மன்றத்தின் முகப்பில் முன்னர் இறுதியாய் கடந்த மாதம் பதிவில் முன்னனியில் இருக்கும் டாப் ஐந்து பேரின் விபரம் .. பல புதிய உறுப்பினர்கள் ஆர்வத்தோடு பதிவுகள் பதிய ஊந்து சக்தியாய் இருந்தது. அட ஆரம்பத்தில் எனக்கும் அப்படிதான் இருந்தது.

தற்பொழுது டாப் பத்து போஸ்டில் தெரிபவர்கள் பெரும்பாலோனோர் பல்லாண்டு மன்ற உறவுகளாயும், மன்ற நிர்வாகத்திலும் இருப்பவர்களே. டாப் பத்தில் இருப்பவர்கள் மாற்றமென்பது ஆறுமாதம் ஒருவருடத்துக்கு பதிவிட்டாலே சாத்தியமாககூடியது.

டாப் ஐந்தில் அபப்டி அல்ல நிமிடத்துக்கு நிமிடம் மேலும் கீழுமாய் புதிய உறவுகளின் பதிவுகள் மேலேறுவதும் கீழிறங்கிவதும் அவர்களுக்கு பதிவிடுவதில் உற்சாகத்தை கொடுத்துகொண்டிருக்கும். பழைய படி இறுதி நிமிட டாப் ஐந்து போஸ்ட்கள் மன்ற முகப்பில் இருந்தால் நலமாயிருக்கும்..

டாப் பத்தும் மன்ற முகப்பில் கீழ்ப்பகுதியிலேயே தொடரட்டுமே... கருத்து தப்பென்றால் மன்னித்து விடுங்கள்..

Hega
29-04-2012, 04:36 PM
ஈகேஷ் மீண்டு வந்ததில் மகிழ்ச்சி....

அமரன் சார் உங்க ஈகேஷ் குறைந்த மர்மம் தானென்னெ:fragend005:யாருக்கும் கொடுக்காமல் சேர்த்துகிட்டே வந்தீர்களே.. இப்ப எப்படி 3300 சொச்சமாச்சு.

அல்லது இது வேற கணக்கா என்பதும் புரியவில்லைய:icon_rollout:

ஆதி
29-04-2012, 04:42 PM

நிறைய பேருக்கு மாறிருக்கு அக்கா, அது என்னமோ என்கக்கு அப்படியே இருக்கு :)

Hega
29-04-2012, 04:47 PM
மன்றத்தில் தற்பொழுது உலாவுவோர் பயனர் பெயர் மட்டும் தான் தெரிகின்றதே...

கடந்த 24 மணி நேரத்தில் மன்றம் வந்தோர், பதிடுகள் இட்டோர் என தனியாக மன்ற முன்பக்கம் கீழ்ப்பகுதியில் தெரிவது தற்பொழுது மிஸ்சிங்..

Total members that have visited the forum today: 48
Total members that have posted on the forum today: 17 என பயனர் பெயரின்றி மொத்த கணக்கு மட்டுமே தெரிகிறது.

ஒவ்வொரு திரிகளின் கீழும் திரியை பார்வையிட்டோர் வசதியும் மிஸ்சிங். இவை தெரிந்தே செய்யபட்டிருக்கும் மாற்றமா. அல்லது மென்பொருள் மாற்றத்தால் வந்த தோற்றமா :cool::confused:

Hega
29-04-2012, 04:54 PM
நிறைய பேருக்கு மாறிருக்கு அக்கா, அது என்னமோ என்கக்கு அப்படியே இருக்கு :)

ஹேஹே...ஹேகா.. நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லா கேட்டுக்கோ.... ஆதன் தம்பி ஈகேஷ் மட்டும் அப்படியே இருக்காம்து எப்படீன்னு கேட்டுக்கோ..

யாருக்கும் கொடுக்காமல் அட நான் கேட்டப்போ கூட தரமாட்டேன்னு அடம்பிடிச்சு தரவே மாட்டேன் போன்னு சொல்லி பத்திரமாக இரும்பு பெட்டியில் சேர்த்துகிட்டு வந்த ஈகேஷ் ப்பா அது.பாவம்பா அமரன் சார்.பாடுபட்டு சேர்த்ததுப்பா..:aetsch013: யாராச்சும் கண்டு பிடிச்சு கொடுத்திருங்க...:icon_rollout:

அட, என் ஈகேஷும் கம்மியாச்ச்ச்ச்ச்ச்ச்....:cool:

அமீனுதீன்
29-04-2012, 06:14 PM
தமிழ் மன்றம் மேலும் வளர வாழ்துக்கள்

அமரன்
29-04-2012, 08:25 PM
கொடுக்கக் கொடுக்க ஊறிய தொகை அது.. ஒரு சந்தர்ப்பத்தில் தொழில்நுடபம் எல்லாத்தையும் கொள்ளை அடிச்சுச்சுது.. ம்ம்ம்ம்ம்ம்ம்ம் பார்ப்போம்.. யாரிடமாவது நான் கொள்ளை அடிக்க வேணும்.

ஈகேஷ் மீண்டு வந்ததில் மகிழ்ச்சி....

அமரன் சார் உங்க ஈகேஷ் குறைந்த மர்மம் தானென்னெ:fragend005:யாருக்கும் கொடுக்காமல் சேர்த்துகிட்டே வந்தீர்களே.. இப்ப எப்படி 3300 சொச்சமாச்சு.

அல்லது இது வேற கணக்கா என்பதும் புரியவில்லைய:icon_rollout:

அமரன்
29-04-2012, 08:28 PM
மன்றத்தில் தற்பொழுது உலாவுவோர் பயனர் பெயர் மட்டும் தான் தெரிகின்றதே...

கடந்த 24 மணி நேரத்தில் மன்றம் வந்தோர், பதிடுகள் இட்டோர் என தனியாக மன்ற முன்பக்கம் கீழ்ப்பகுதியில் தெரிவது தற்பொழுது மிஸ்சிங்..

Total members that have visited the forum today: 48
Total members that have posted on the forum today: 17 என பயனர் பெயரின்றி மொத்த கணக்கு மட்டுமே தெரிகிறது.

ஒவ்வொரு திரிகளின் கீழும் திரியை பார்வையிட்டோர் வசதியும் மிஸ்சிங். இவை தெரிந்தே செய்யபட்டிருக்கும் மாற்றமா. அல்லது மென்பொருள் மாற்றத்தால் வந்த தோற்றமா :cool::confused:

இன்று வந்தோர் தொகைக்குப் பக்கத்தில் இருக்கும் அம்புக்குறியை கிளிக்கினால், வந்தோர் பட்டியல் விரியும். அதே போன்றே பதிவிட்டோர் தொகையும்..

திரியைப் படித்தோர் விபரத்தைத் திரியின் சொந்தக்காரர் கண்டு கொள்ளலாம்..

Hega
29-04-2012, 08:29 PM
அடடா..

ஆஹா சட் சட்டென மாற்றங்கள்.. ஆச்சரியமாக இருக்கிறது.. முன்னாடி பின்னாடி என ஒவ்வொரு நொடியும் பதிவுகளை கண்ணுற்று மாற்றங்களை செய்யும் மன்ற நிர்வாகத்தாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றிகாளும்..:music-smiley-009::music-smiley-008:

Hega
29-04-2012, 08:32 PM
விளக்கங்களுக்கு நன்றி அமரன் சார்..

அக்னி
30-04-2012, 05:02 PM
எனது இணைய பணம் வெறும் 1,613 தானோ...
நோ நோ... இதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஐ.நா. வரைக்கும் போவேன். எனது பணம் எனக்கு வேண்டும்.
இப்போ இப்போ இப்போ...

த.ஜார்ஜ்
30-04-2012, 06:13 PM
வழி தவறி இங்கே நுழைந்து விட்டேனா? என்றுதான் முதலில் தோன்றியது. திக்கு தெரியாமல் கொஞ்சம் நேரம் தடுமாற்றம். பிறகு பார்க்கையில் தெரிந்த முகங்கள் ஒன்றிரண்டாய் தட்டுபட.. அட சரியான முகவரிக்குதான் வந்திருக்கிறேன்.

இதைதானே எதிர்பார்த்தோம் என்று சொல்லுகிற வைக்கிற மாதிரியான மாற்றம். புதிய வடிவம்.. பழக சில நாளாகலாம்.. வசதிகள் சில குறைபாடுகள் நேரலாம்.. எனினும் மாற்றங்கள் இதமானவை. மனதுக்கு மகிழ்சியையும், உற்சாகத்தையும் தர வல்லவை.

புதிய வீட்டை ஒருமுறை சுற்றி பார்த்துவிட்டு வருகிறேன்.

மெனக்கெட்டவர்கள் வணக்கத்துக்குரியவர்கள்.

ஆதவா
30-04-2012, 06:18 PM
எனது இணைய பணம் வெறும் 1,613 தானோ...நோ நோ... இதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஐ.நா. வரைக்கும் போவேன். எனது பணம் எனக்கு வேண்டும்.இப்போ இப்போ இப்போ...சர்வீஸ் சார்ஜ் எடுத்திருப்பாங்க.... அக்கவுண்ட்டு மைனஸ்ல இல்லைன்னு சந்தோசப்படுவீங்களா.....

அக்னி
30-04-2012, 07:47 PM
யோவ் ஆதவா.... நாமளே சர்வீஸ்... நமக்கே சர்வீஸ் சார்ஜ்ஜா... முதல்ல நீங்க போயி ரீசார்ஜ் பண்ணுங்க எனர்ஜிய...

கலையரசி
01-05-2012, 06:23 AM
நம் பெயருக்குக் கீழே Post Thanks/Like என்பதைக் கிளிக்கினால் Likes given/Likes Received என்று வருகிறது. இது என்ன என்று எனக்குப் புரியவில்லை. தெரிந்தவர்கள் விளக்கினால் நல்லது.

அன்புரசிகன்
01-05-2012, 06:30 AM
நம் பெயருக்குக் கீழே Post Thanks/Like என்பதைக் கிளிக்கினால் Likes given/Likes Received என்று வருகிறது. இது என்ன என்று எனக்குப் புரியவில்லை. தெரிந்தவர்கள் விளக்கினால் நல்லது.

உங்களுக்கு பிடித்த பதிவுகளுக்கு நீங்கள் வாக்களிப்பது பொன்றது. முகப்புத்தகத்தில் இருப்பது போல்...

மற்றவர்களின் பதிவுகளுக்கு கீழ் காணப்படும் http://www.tamilmantram.com/vb/dbtech/thanks/images/likes.png என்பதை அழுத்துவதை வைத்து இது கணிக்கப்படும். நீங்கள் எத்தனை பேருக்கு விருப்பு வாக்கு அளித்துள்ளீர்கள் என்பதையும் உங்களுக்கு எத்தனை பேர் வழங்கியுள்ளனர் என்பதையும் அது காட்டும்.

jayanth
01-05-2012, 07:37 AM
திரிகளைப் பார்த்தவர்களை பார்க்கமுடியவில்லையே...!!!
இப்படியல்லவா தெரிகின்றது.

Members who have read this thread : 17

You do not have permission to view the list of names.

அன்புரசிகன்
01-05-2012, 08:50 AM
திரிகளைப் பார்த்தவர்களை பார்க்கமுடியவில்லையே...!!!
இப்படியல்லவா தெரிகின்றது.

Members who have read this thread : 17

You do not have permission to view the list of names.
திரிகளின் சொந்தக்காரர்கள் மட்டுமே பார்வையிடும் அனுமதி உள்ளது.

கலையரசி
03-05-2012, 12:42 PM
உங்களுக்கு பிடித்த பதிவுகளுக்கு நீங்கள் வாக்களிப்பது பொன்றது. முகப்புத்தகத்தில் இருப்பது போல்...

மற்றவர்களின் பதிவுகளுக்கு கீழ் காணப்படும் http://www.tamilmantram.com/vb/dbtech/thanks/images/likes.png என்பதை அழுத்துவதை வைத்து இது கணிக்கப்படும். நீங்கள் எத்தனை பேருக்கு விருப்பு வாக்கு அளித்துள்ளீர்கள் என்பதையும் உங்களுக்கு எத்தனை பேர் வழங்கியுள்ளனர் என்பதையும் அது காட்டும்.

தங்களது விளக்கத்துக்கு மிக்க நன்றி.

கலையரசி
03-05-2012, 12:49 PM
மேலேயே Title/Thread starter என்றிருப்பதால் ஒவ்வொரு திரிக்கு அடியிலும் Started by என்பது தேவையில்லை, திரியின் சொந்தக்காரர் பெயர் இருந்தாலே விளங்கும் என்பது என் கருத்து.

தலைப்பில் இரண்டாவது வரிசையில் New Posts, Private messages, FAQ என எல்லாம் ஆங்கிலத்தில் இருக்க கேலரி மட்டும் தமிழில் உள்ள்து. அது ஆங்கிலத்தில் தான் இருக்க வேண்டும்.

jayanth
03-05-2012, 02:28 PM
திரிகளின் சொந்தக்காரர்கள் மட்டுமே பார்வையிடும் அனுமதி உள்ளது.

தங்களது விளக்கத்துக்கு மிக்க நன்றி அன்பு.

அன்புரசிகன்
04-05-2012, 12:05 AM
மேலேயே Title/Thread starter என்றிருப்பதால் ஒவ்வொரு திரிக்கு அடியிலும் Started by என்பது தேவையில்லை, திரியின் சொந்தக்காரர் பெயர் இருந்தாலே விளங்கும் என்பது என் கருத்து.

தலைப்பில் இரண்டாவது வரிசையில் New Posts, Private messages, FAQ என எல்லாம் ஆங்கிலத்தில் இருக்க கேலரி மட்டும் தமிழில் உள்ள்து. அது ஆங்கிலத்தில் தான் இருக்க வேண்டும்.

அதை நீக்குவதால் பக்கத்தின் தோற்றப்பாட்டில் சில சிக்கல் வருவதால் அப்படியே விடப்பட்டது.
-----
மற்றயது மேலே உள்ளவற்றை தமிழாக்கம் செய்யப்போய் கீழே உள்ளதில் ஒன்று தமிழாக்கப்பட்டுவிட்டது. மன்ற மேம்பாடு முழுமையாக முற்றுப்பெறவில்லை. சில சிறு சிறு விடையங்கள் தொக்கு நிற்கின்றன. அவை விரைவில் சீர்செய்யப்படும்.

தங்களின் கவனயீர்ப்புக்கு நன்றி அக்கா...

பாலகன்
04-05-2012, 05:19 AM
தமிழ்மன்றம் இப்போது மிகவும் அழகாக இருக்கிறது..... 10 வருட நட்பு, தள மேம்பாட்டு உழைப்பு அனைத்திற்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

ஆதி
04-05-2012, 06:55 AM
தமிழ்மன்றம் இப்போது மிகவும் அழகாக இருக்கிறது..... 10 வருட நட்பு, தள மேம்பாட்டு உழைப்பு அனைத்திற்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

வாங்க மகா பிரபு, பல நாட்களுக்கு பிறகு மன்றத்தில் தங்களை காண்பதில் மகிழ்ச்சி

வெற்றி
04-05-2012, 07:33 AM
அட .... நல்லா இருக்கே.....

ஆதி
04-05-2012, 07:38 AM
அட .... நல்லா இருக்கே.....

அண்ணேன் சொல்லாம கொள்ளாம பெயர மாற்றி இப்படியா குழப்புறது

வெற்றி
04-05-2012, 07:47 AM
அண்ணேன் சொல்லாம கொள்ளாம பெயர மாற்றி இப்படியா குழப்புறது

மாற்றம் தேவைப்பட்டது ..அதனால் தான் ... வேறென்றும் இல்லை

நாஞ்சில் த.க.ஜெய்
04-05-2012, 02:28 PM
எனது எண்ணங்களின் உருவினை கொண்டு திகழும் நம் மன்றத்தின் முகப்பு என்னை மயக்குகிறது...தோழர் கூறுவது போல் மன்றத்தின் தலைப்பு முதலெழுத்து நீலமாகவிருந்தால் இன்றும் முகப்பு அழகுற மிளிரும் ...

jayanth
04-05-2012, 04:22 PM
திரிகளின் சொந்தக்காரர்கள் மட்டுமே பார்வையிடும் அனுமதி உள்ளது.

சொந்தத் திரிகளைப் பார்வையிட்டவர்களைப் பார்க்கமுடியவில்லையே.

கலையரசி
05-05-2012, 01:07 PM
அதை நீக்குவதால் பக்கத்தின் தோற்றப்பாட்டில் சில சிக்கல் வருவதால் அப்படியே விடப்பட்டது.
-----
மற்றயது மேலே உள்ளவற்றை தமிழாக்கம் செய்யப்போய் கீழே உள்ளதில் ஒன்று தமிழாக்கப்பட்டுவிட்டது. மன்ற மேம்பாடு முழுமையாக முற்றுப்பெறவில்லை. சில சிறு சிறு விடையங்கள் தொக்கு நிற்கின்றன. அவை விரைவில் சீர்செய்யப்படும்.

தங்களின் கவனயீர்ப்புக்கு நன்றி அக்கா...

அன்புத்தம்பியின் விளக்கம் கண்டு மகிழ்ச்சி. முற்றுப்பெறுவதற்குள் நான் குறுக்கிட்டு விட்டேனா?
இப்போது மன்றம் புதுப் பொலிவு பெற்று வெகு அழகாகத் திகழ்கின்றது. இதற்காகப் பாடுபடும் அனைவருக்கும் என் வாழ்த்தும் பாராட்டுக்களும்.

அக்னி
05-05-2012, 07:27 PM
அன்புத்தம்பியின் விளக்கம் கண்டு மகிழ்ச்சி.
அவருக்கே தம்பி என்றால், எனக்கு கலையரசி ஆன்டியா...

இவரு, ஓவியரு, விராட் @ விகட் எல்லாருமே வயசைக் குறைச்சுச் சொல்லிட்டுத் திரிவாங்க... கவனம்...

அன்புரசிகன்
05-05-2012, 11:30 PM
அவருக்கே தம்பி என்றால், எனக்கு கலையரசி ஆன்டியா...

இவரு, ஓவியரு, விராட் @ விகட் எல்லாருமே வயசைக் குறைச்சுச் சொல்லிட்டுத் திரிவாங்க... கவனம்...
என்ன செய்யுறது அக்னி அண்ணா.... அவுங்க அப்பா என்னை பார்த்தவர். உங்க ஊரில ஒரே வயசுக்காரர அன்ரி என்று தான் கூப்புடுவீங்களோ?

Ravee
06-05-2012, 04:32 AM
மன்ற உறவுகளுக்கு ஒரு வந்தனம் . கோடை வெயிலுக்கு குளுமை சேர்க்கிறது புதுப்பொலிவு. இடையில் ஏற்ப்பட்ட இடைவெளிக்குப் பின் வந்தவனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி. மீரா நான் கொடுத்துள்ள இணைப்பில் சென்று நீங்கள் தமிழில் பதிவிடலாம்

http://www.google.com/transliterate/Tamil

ஆதி
06-05-2012, 05:11 AM
வாங்க ரவி அண்ணா, நலமா ?

மயூ
08-05-2012, 12:23 PM
நீண்ட நாட்களின் பின்னர் வந்து பார்த்தேன். மிக்க அருமையாக உள்ளது இடைமுகப்பு. தகவல் பரிமாற்ற வேகமும் குறிப்பிடத்தக்க அளவு வேகமடைந்துள்ளது.

Hega
08-05-2012, 12:35 PM
முன்பெல்லாம் அதாவது மென்பொருள் மாற்றத்துக்கு முன்பெல்லாம் ஒரு திரியை புதிய பதிவுகள் பகுதியில் திறந்தால் நாம் இறுதியாக பின்னூட்டம் இட்ட பதிவிலிருந்தோ அல்லது அதன் கடைசி பதிவிலிருந்தோதான் பார்க்கலாம்.

மன்ற முகப்பின் மூலம் அல்லது அந்தந்த மன்றங்களின் மூலம் திறந்தால் திரியின் முதல் பக்கஆரம்பமே காட்டும்.

இப்போது எங்கே தி்றந்தாலும் திரியின் முன்பக்கம் முதல் பதிவே காட்டுகிறதே. .. நாம் எங்கே கடைசியாய் பின்னூட்டம் இட்டோம், கடைசிப்பதிவை எங்கே பதிந்தோம் என்பதை தேடிகண்டு பிடிக்க வேண்டி இருக்கிறதே.

எனக்கு மட்டும தான் அப்படி தெரிகிறதா..

கீதம்
08-05-2012, 01:34 PM

எனக்கும் இப்படியொரு சந்தேகம் வந்தபோது ஆதன் விளக்கியபடி... கடைசிப் பதிவிட்டவரின் பெயருக்குப் பக்கத்தில் இருக்கும் சிறு முக்கோணத்தைச் சொடுக்கினால் கடைசிப்பதிவுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது.

ஜானகி
08-05-2012, 02:38 PM
முதல் தடவையாக பியூட்டிபார்லர் போய் வந்த பெண்மணி போலிருக்கிறாள்....மன்றத் தாய் !

கொஞ்சம் சங்கோசமாகத்தான் இருக்கிறது.....போகப் போகப் பழகிவிடும்...என் போன்றவர்களுக்கு....!

கீதம் அவர்களின் விமர்சனம் மிகவும் பொருத்தமாக இருக்கிறது..

சூரியன்
09-05-2012, 08:57 AM
மன்றத்தின் புதிய மாற்றங்கள் மிகவும் அற்புதமாக உள்ளது..

என்னுடைய பழைய I-Cash ல் உள்ள இருப்புகள் காணவில்லயே?

அமரன்
14-05-2012, 07:52 PM
உம்ம இகாசு 12126 தந்தாச்சு...

கணக்குச் சரியான்னு பாத்துக்கோ..

எனது இணைய பணம் வெறும் 1,613 தானோ...
நோ நோ... இதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஐ.நா. வரைக்கும் போவேன். எனது பணம் எனக்கு வேண்டும்.
இப்போ இப்போ இப்போ...

Hega
19-06-2012, 01:53 PM
எனக்கும் இப்படியொரு சந்தேகம் வந்தபோது ஆதன் விளக்கியபடி... கடைசிப் பதிவிட்டவரின் பெயருக்குப் பக்கத்தில் இருக்கும் சிறு முக்கோணத்தைச் சொடுக்கினால் கடைசிப்பதிவுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது.

புரிந்தது அக்கா, விளக்கத்திற்கு நன்றிகள்.