PDA

View Full Version : (ஆங்கில மூலத்திலிருந்து ) சொஃபுக்ளீசின் எலெக்த்ரா` --1

சொ.ஞானசம்பந்தன்
22-04-2012, 06:40 AM
( கன்னி எலெக்த்ரா தன்னைத் துன்புறுத்தும் தாயிடம் )

தாயா ! சிறைக் காவலர் என்பது பொருந்தும்,

என்மீது நீதிணிக்கும் அடிமைத் தனத்தையும்

உன்னிட மிருந்தும் உன்துணைவ ரிடமிருந்தும்

நான்கேட்க வேண்டியுள்ள வசவுகளையும் நினைத்தால் .

ஏசலாம் என்னை எண்ணப் படியெலாம் .

இழிந்தவள் , கொடூரி , நாண மில்லாள் ,

இவ்வா றெல்லாம் இருக்கிறேன் என்றால்

இதுவே சான்று உன்மகள் எனற்கு .

( என்ற்கு - எனல் + கு = என்பதற்கு )

கீதம்
22-04-2012, 10:33 AM
தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும், தாயைப் போலப் பிள்ளை, நூலைப் போல சேலை என்பன போன்ற பழமொழிகளை நினைவுபடுத்தும் வகையில் தாயுடனான உரையாடலில் தன்னிலை விளக்கும் மகளின் அழுத்தமானப் பேச்சு. வழக்கத்துக்கு மாறான தாய்மையைக் காட்டும் காவியச் சித்திரம். எளிமையான மொழிபெயர்ப்பு. பாராட்டு. தொடருங்கள்.

சொ.ஞானசம்பந்தன்
23-04-2012, 06:35 AM

பாராட்டி ஊக்கியதற்கு மிகுந்த நன்றி .

அன்புரசிகன்
23-04-2012, 07:02 AM
கருத்துப்பிசகாத மொழிமாற்றம். கீதமக்கா சொன்னது போல் தாய்க்கு சளைக்காத சேய்...
வாழ்த்துக்கள் ஐயா...

கலையரசி
23-04-2012, 05:37 PM
கீதம் சொன்னதைப் போல் நம்மூரில் தாயைப் போல் பிள்ளை என்பார்கள். இவளும் இதே மாதிரி சொல்லும் போது வியப்பாயிருக்கிறது. மொழியாக்கம் நன்றாயிருக்கிறது. தொடருங்கள்.

சொ.ஞானசம்பந்தன்
25-04-2012, 05:45 AM
கருத்துப்பிசகாத மொழிமாற்றம். கீதமக்கா சொன்னது போல் தாய்க்கு சளைக்காத சேய்...
வாழ்த்துக்கள் ஐயா...

உங்கள் வாழ்த்துக்கு என் அகமார்ந்த நன்றி

சொ.ஞானசம்பந்தன்
25-04-2012, 05:47 AM
கீதம் சொன்னதைப் போல் நம்மூரில் தாயைப் போல் பிள்ளை என்பார்கள். இவளும் இதே மாதிரி சொல்லும் போது வியப்பாயிருக்கிறது. மொழியாக்கம் நன்றாயிருக்கிறது. தொடருங்கள்.

ஊக்கமூட்டும் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி .

தாமரை
25-04-2012, 07:50 AM
http://www.readbookonline.net/readOnLine/40301/

ஐயா, இந்த மூலத்திலிருப்பது முழு நாடகமா?

சொ.ஞானசம்பந்தன்
27-04-2012, 07:18 AM
ஆமாம் , மூலத்தில் முழு நாடகம் உள்ளது ; ஆனால் நான் மொழிபெயர்க்கப்போவது கொஞ்சம் தான் .