PDA

View Full Version : காதல் - தேவதைகளும், சாத்தான்களும் 2



ஆதி
21-04-2012, 01:42 PM
காதல் - தேவதைகளும், சாத்தான்களும் 1

உன்னுளிருந்து
யோர்தானென
பீறிட்டு வெளிப்பரவிய நதியில்
மூழ்கியெழுந்தேன்
தன் வானத்தை திறந்து
காதல் சொன்னது
"இவளே உன் அன்புக்குரியவள்
இவளை பின் தொடந்து கைகொள்
நித்ய வாழ்வை அடைவாய்!"

ஆதி
21-04-2012, 01:43 PM
காதல் - தேவதைகளும், சாத்தான்களும் 2

ஏதோ ஒரு மிருகத்தின் வாயில் சிக்கி
அரைகுறை உயிரோடு
ஊசலாடிய தருணத்தில்
எங்கிருந்தோ வந்த இன்னும் சில மிருகங்கள்
பீய்த்து பிடுங்கின என் மாமிசத்தை
ஒவ்வொரு சொட்டாய்
மீதமிருந்த உயிரும்
பார்வை மங்கிய விழிவழி வடிகையில்
உன்னை பார்த்தேன்
மிக சாந்தமாய் அமர்ந்து நீ
கலையை ரசிப்பது போல்
நான் கொல்லப்படுவதை
ரசித்துக் கொண்டிருந்தாய்
கருணைப் பொங்கும்
தேவதையின் கண்களுடன்..

கீதம்
22-04-2012, 02:00 AM
காதல் - தேவதைகளும், சாத்தான்களும் 2

ஏதோ ஒரு மிருகத்தின் வாயில் சிக்கி
அரைகுறை உயிரோடு
ஊசலாடிய தருணத்தில்
எங்கிருந்தோ வந்த இன்னும் சில மிருகங்கள்
பீய்த்து பிடுங்கின என் மாமிசத்தை
ஒவ்வொரு சொட்டாய்
மீதமிருந்த உயிரும்
பார்வை மங்கிய விழிவழி வடிகையில்
உன்னை பார்த்தேன்
மிக சாந்தமாய் அமர்ந்து நீ
கலையை ரசிப்பது போல்
நான் கொல்லப்படுவதை
ரசித்துக் கொண்டிருந்தாய்
கருணைப் பொங்கும்
தேவதையின் கண்களுடன்..

அந்த நொடியில் தான்
நான் பூரணமாய் ஆசிர்வதிக்கப்பட்டவனானேன். :)

ஆதி
24-04-2012, 11:50 AM
அந்த நொடியில் தான்
நான் பூரணமாய் ஆசிர்வதிக்கப்பட்டவனானேன். :)

நல்லாதான் இருக்கு அக்கா இந்த முடிவும்

சாத்தானாய் வைத்து வாசித்தால் ஒரு அர்த்தமும்

தேவதையாய் வைத்து வாசித்தால் ஒரு அர்த்தமும் வரும் அக்கா, இரு கவிதைகளிலும்

நன்றிங்க அக்கா