PDA

View Full Version : யார் காரணம்? இது காதல் கதைravikrishnan
19-04-2012, 10:11 AM
யார் காரணம்? இது காதல் கதை அல்ல நடக்கின்ற கதை

நான் விடுப்பில் சென்ற சமயத்தில், ஒரு டீக்கடையில் நானும் எனது நண்பரும் தேநீர் குடித்துக்கொண்டிருந்தோம், அப்போது வீதி வழியாக வந்த எங்கள் கிராமத்தைச் சார்ந்த எனக்கு தெரிந்த ஒரு பெண்ணை பார்த்தபோது, ஒரு நிமிடம் எனது சுவாசம் நின்றது.காரணம் அவள் பூவும்,பொட்டும் இன்றி வெள்ளைச்சேலையுடன் வந்ததுதான். அவளுக்கு மூன்று மாதத்திற்கு முன்புதான் திருமணம் ஆனது. இது பற்றி என் நண்பனிடம் துக்கத்துடன் கேட்டபோது அவன் என்னைப்பார்த்துச் சிரித்து விட்டு ”பாவி! அவள் புருசன் ஒண்ணும் சாகவில்லை, அவள் சபைக்குப் போகிறாள்” என்றான். நாங்கள் பேசுவதைக் கேட்டு அந்த பெண் எங்களை நன்றாக ஆசிர்வதித்து (திட்டிவிட்டு) சென்று விட்டாள். பாவம் திட்டியது கூட பரவாயில்லை, ஆனால் இந்த இளம் வயதில் கணவன் இருந்து வாழ்க்கையை கடுமையாக மாற்றி கொண்ட பலர் இருக்கிறார்கள். இதை ஆரம்பித்த ஸ்தாபனத்தில் உள்ளவர்கள் மற்றும் வெளிநாட்டவர்க்கு இந்த வரைமுறை இதெல்லாம் கிடையாது; பாவப்பட்ட எழைமக்களுக்கு ஏன்? ஒரு குறிக்கோளுக்காக பல நன்மை செய்தால் அது நன்மை ஆகாது. அவர்களுடைய அறிவை சலவை செய்த்து யார்? யார் காரணம்?

தாமரை
19-04-2012, 10:26 AM
என் உறவினர்களில் ஒரு பெண் இப்படித்தான் மாறிப்போனாள்.

அவளின் தாய் தந்தையரும் மற்ற உறவினர்களும் அவளை தள்ளியே வைத்திருந்தனர்.

நான் வெளிநாட்டில் இருந்ததால் எனக்கு இந்த விஷயம் ஒன்றுமே தெரியாது. எனது திருமணத்தன்று இரவு விருந்துக்கு வந்த பொழுதுதான் கவனித்தேன்.

தன்னுடைய கணவரில்லாமல் தனியாக வந்திருந்தாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை, எங்கள் குடும்பத்தவரைத் தவிர வேறு யாரும் அவளிடம் முகம் கொடுத்தும் பேசவில்லை.

என்னிடம் பேசியபோது கேட்டேன்

----------------------------------------------------------------------------------------------

என்ன ஆச்சு?

நான் மதம் மாறிட்டேன்?

அப்படி மதம் மாறுகிற மாதிரி என்ன நடந்தது?

அவருக்கு வியாபாரத்தில் பெரிய நஷ்டம். சபையினர்தான் கை கொடுத்தனர். நம்ம ஆளுங்க யாருமே உதவலை.

ம்ம்ம்..

நான் கும்பிட்ட ஒருத்தரும் எங்களைக் காப்பாற்றலை. அதனால எங்களைக் காப்பாத்தறவங்களை கும்பிடறோம். இதில என்ன தப்பு?

அப்பா அம்மா?

அவங்களுக்கு பயங்கரக் கோபம்தான் இவ எங்க பொண்ணே இல்லைன்னு சொல்லிட்டாங்க.

சரி வீட்டுக்காரர் எங்க?

அவர் லைனுக்கு (வியாபாரத்திற்கு ஆர்டர் பிடிக்க பல ஊர் கடைகளுக்குச் செல்லுதல்) போயிருக்கார்.

சரி பரவாயில்லை. வா சாப்பிடலாம்.

------------------------------------------------------------------------------------------

மக்கள் மாறுகிறார்கள், அவர்கள் மாற்றுகிறார்கள் எனக் கூக்குரலிடுவதில் ஒரு பயனும் இல்லை. நம் சொந்தங்களை, நம் மக்களை எப்படி நாம் நடத்துகிறோம் என்பதிலேயே பயன் இருக்கிறது.

ஒவ்வொருவரும் நிம்மதியான வாழ்க்கையை வாழ விரும்புகிறார்கள். பேராசைகளுக்குக் கைகொடுக்க வேண்டாம். நம்மைச் சுற்றி உள்ளவர்களின் துன்பத்தைச் சற்றேனும் உதவிக் களைவோம்.

எல்லாத்துக்கும் காரணம் நம்முடைய சுயநலம்தான்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
19-04-2012, 02:06 PM
சுயநலத்துக்காக மாறுகின்றவர்கள் நிறையப் பேர் உள்ளனர். பிள்ளைகளுக்கு மிட்டாய் கொடுப்பதுபோல் ஆசை காட்டி மோட்சத்திற்கு போவோம் வாருங்கள் என்று அழைப்பவர்கள் அதிகமாகி விட்டார்கள். :sprachlos020:

ravikrishnan
20-04-2012, 01:32 AM
சுயநலத்துக்காக மாறுகின்றவர்கள் நிறையப் பேர் உள்ளனர். பிள்ளைகளுக்கு மிட்டாய் கொடுப்பதுபோல் ஆசை காட்டி மோட்சத்திற்கு போவோம் வாருங்கள் என்று அழைப்பவர்கள் அதிகமாகி விட்டார்கள். :sprachlos020:

சரியாக கருத்துகள்,அருமை. தாமரை அவர்களின் வரிகளிலும் உண்மையை காண்கிறேன். என்னசெய்வது....

jayanth
20-04-2012, 03:45 AM
சபை/சபை நடத்துபவர்கள் பற்றி எழுத வேண்டுமானால் இந்தத்திரி போதாது...!!!

கலைவேந்தன்
20-04-2012, 04:52 AM
சில காலம்மட்டுமே வாழப்போகும் மனிதன் எம்மதத்தில் வாழ்ந்தால் என்ன..?

மதம் மாறுவதை கொலைக்குற்றம் போல் பார்க்கும் இந்துத்வ வாதிகள் இந்துமதத்தை வைத்திருக்கும் நிலைமை என்ன..?

இன்றும் கடவுள்தொழும் ஆலயத்துக்குள் குறிப்பிட்ட இனத்தினரை அனுமதிக்காத இந்துமதம் இருந்தால் என்ன செத்தால் என்ன..?

நாலுவகை வர்ணம். வர்ணத்துக்குள் ஒரு நூறுவகை வர்க்கம். வர்க்கத்துக்குள் ஆயிரம் பேதங்கள்.. இவைகொண்ட ஒருமதம் அழிந்தால் என்ன போகும்..?

தன் உறவினனே நசித்திருக்க தான் மட்டும் நன்கு புசிக்கும் சுயநலமனிதர்கள் இருக்கும் நிலையில் ரத்த வகை கூட சேராத மத்தவங்களுக்கு உதவும் கருணையுள்ள மதத்துக்கு அனைவரும் செல்வது என்ன குற்றம்..?

- கேள்விகள் முடியவில்லை. விடைகளோ தெரியவில்லை.

ஆதி
20-04-2012, 05:13 AM
சுயநலத்துக்காக மாறுகின்றவர்கள் நிறையப் பேர் உள்ளனர். பிள்ளைகளுக்கு மிட்டாய் கொடுப்பதுபோல் ஆசை காட்டி மோட்சத்திற்கு போவோம் வாருங்கள் என்று அழைப்பவர்கள் அதிகமாகி விட்டார்கள். :sprachlos020:

இது எல்லா இடத்திலும் உண்டு

பிரச்சாதத்தில் போதை மருந்து கலந்து கொடுக்கும் மடங்களும் இருக்கு இல்லையா ?

ஒரு விடயம் தெரிந்து கொள்ளுங்கள், காசியில போய் ஏதாவது விட்டுவரனும் (கெட்ட பழக்கத்த) என்பதால், பனியன், சட்டை, உள்ளாடைகளை விட்டு வரும் கில்லாடிகள் நாம், கடவுளையே ஏமாத்துற*வங்க நாம, அப்படி இருக்க மனுஸன ஏமாத்த தெரியாத என்ன ?

சாமியார் ஆகுரேனும் போய் சபை மூலமா நல்லா படிச்சிட்டு, கடைசில எனக்கு சாமியார் ஆகுற*து பிடிக்கல என்று சொல்லி வெளியே வந்தவங்க எத்தனையோ பேரை எனக்கு தெரியும்

சிலர் உண்மையிலேயே சில மன வருத்தங்களால் வெளியேறுகிறார்கள், சிலர் தம் சுயநலத்துக்காக போய் படித்துவிட்டு வெளியே வருகிறார்கள்

ஜனாதிபதியை நிக்க வைத்துவிட்டு, முதல்வரை உட்கார வைத்த மடமும் தமிழ் நாட்டில் இருக்கு, காரணம் சாதி

இந்த சாதி என்ன செய்துச்சு, மனிதனை கோவிலுக்குள் வருவதை தடுத்துச்சு, கடவுளுக்கே தீட்டு வந்திடும் நு சொல்லுச்சு

சபைக்காரங்க, கடவுள் பொறந்ததே உனக்காகத்தான்னு சொன்னாங்க, இப்போ நான் என்ன செய்றதுங்க, பக்கத்துல வா நு சொல்ற கடவுள் கிட்ட போறதா ? வராதேனு சொல்ற கடவுள் கிட்ட போறதா ?

இவங்க மாறாத வர. மாறுறாங்க மாறுறாங்கனு சொல்றதும் மாறாது, மாறுறதும் மாறாது.

தமிழ் சினிமால கூட அனாதையான பையன, பொண்ண சபைக்காரங்க எடுத்து வளக்குறதாத்தான் காட்டுறாங்க, ஏன் மடக்காரங்க வளர்க்கிறதா கட்டுறது இல்ல ?

அந்த படத்த கூட நாமதான ஓட விடுறோம்!!!!

சில விடயங்கள் நம்மலை அறியாமலே நமக்குள் புகுந்துவிட்டன, மாற்ற நினைப்பதைவிட நம்மை சார்ந்தவங்களை நல்லா பார்த்துக் கொண்டு, நல்லதை செய்தா எதுவும் மாறாது, யாரும் மாற*ப் போறதும் இல்லை

கடைசியா ஒண்ணே ஒண்ணு, எல்லாம் ஒன்று என்று நம்புபவனுக்கு யாரும் வேறை என்று தோன்றாது

கலைவேந்தன்
20-04-2012, 05:20 AM
உணர்ச்சி வசத்தில் எழுத்துப்பிழைகள் அதிகரிக்கின்றன ஆதன். ஈசி.. ஈசி..!!

ஆதி
20-04-2012, 05:27 AM
உணர்ச்சி வசத்தில் எழுத்துப்பிழைகள் அதிகரிக்கின்றன ஆதன். ஈசி.. ஈசி..!!

உணர்சி வசம் இல்லைங்க ஐயா, என்னிடம் யூனிகோட் கிடையாது, தட்டாசும் வராது, வேகமா தட்டாச்சு செய்து பதியும் போது, நடக்கும் கொடுமை ஏகம், திருத்தி திருத்தி பதியும் போது நடுவில் வரும் * குறிகள் ஏகம்

உங்க பதிலும் என் பதிலும் கிட்ட தட்ட ஒரு மாதிரியே இருக்கு ஐயா..

கலைவேந்தன்
20-04-2012, 05:42 AM
உண்மைகள் எப்போதும் ஒத்தே இருக்கும் ஆதன்.. வியப்பில்லை இதில்..!!

அன்புரசிகன்
20-04-2012, 06:25 AM
சபைக்காரங்க, கடவுள் பொறந்ததே உனக்காகத்தான்னு சொன்னாங்க, இப்போ நான் என்ன செய்றதுங்க, பக்கத்துல வா நு சொல்ற கடவுள் கிட்ட போறதா ? வராதேனு சொல்ற கடவுள் கிட்ட போறதா ?


1000000000000000000000000000000000% உண்மை.

arun
22-04-2012, 05:25 PM
தங்களின் சுய லாபத்துக்காக அடுத்தவர்களை மதம் மாற செய்வது மிக பெரிய தவறு ..

உங்களுக்கு எந்த கடவுள் பிடிக்கிறதோ அந்த கடவுளை வணங்குங்கள் அது உங்களின் உரிமை

ஆனால் அதற்காக காசு கொடுத்து ஏன் மதம் மாற செய்ய வேண்டும்

சுய லாபங்களுக்காக அப்பாவிகள் மாற்றப்படுகிறார்கள் என்பது வேதனையான விஷயம்

தாமரை சொன்ன கருத்தோடு நானும் ஒத்து போகிறேன் .

ravikrishnan
22-04-2012, 06:22 PM
தங்களின் சுய லாபத்துக்காக அடுத்தவர்களை மதம் மாற செய்வது மிக பெரிய தவறு ..

உங்களுக்கு எந்த கடவுள் பிடிக்கிறதோ அந்த கடவுளை வணங்குங்கள் அது உங்களின் உரிமை

ஆனால் அதற்காக காசு கொடுத்து ஏன் மதம் மாற செய்ய வேண்டும்

சுய லாபங்களுக்காக அப்பாவிகள் மாற்றப்படுகிறார்கள் என்பது வேதனையான விஷயம்

தாமரை சொன்ன கருத்தோடு நானும் ஒத்து போகிறேன் .

சரியான வாசகம்,நன்றி அருண்

ஆதி
23-04-2012, 07:32 AM
தங்களின் சுய லாபத்துக்காக அடுத்தவர்களை மதம் மாற செய்வது மிக பெரிய தவறு ..

உங்களுக்கு எந்த கடவுள் பிடிக்கிறதோ அந்த கடவுளை வணங்குங்கள் அது உங்களின் உரிமை

ஆனால் அதற்காக காசு கொடுத்து ஏன் மதம் மாற செய்ய வேண்டும்

சுய லாபங்களுக்காக அப்பாவிகள் மாற்றப்படுகிறார்கள் என்பது வேதனையான விஷயம்

தாமரை சொன்ன கருத்தோடு நானும் ஒத்து போகிறேன் .

பிரச்சனை அவங்கிட்டயா நம்ம கிட்டயா அருண்..

சுயலாபம் இல்லாமல் நிகழும் ஒரு பணியை குறிப்பிட்டு காட்டுங்கள் பார்ப்போம்!!!

கலைவேந்தன்
23-04-2012, 02:11 PM
ஏன் இங்கேயே ஓர் அழகான காரணத்தைச் சுண்டிக்காட்டலாமே..?

இத்தலைப்பை கவனியுங்கள். யார் காரணம்? இது காதல்கதை என்று தலைப்பிட்டு உள்ளே இழுத்து சொல்ல வந்த செய்தியைக் கவனியுங்கள்..

ஆக நம் கருத்தை வலியுறுத்த குட்டி குட்டி தகிடுதத்தம் நாமே செய்யத்தானே செய்கிறோம்..?

மதம் மாற்றுகிறார்கள் என்று குற்றம் சாட்டப்படுபவர்கள் உங்களிடம் இருந்து எதைப் பறிக்கிறார்கள்..?

ஏழை எளியவர்களுக்கு எட்டாத கல்வியையும் மருத்துவத்தையும் வாக்கு வங்கிகளில் வராத காரணத்தால் ஒதுக்கப்பட்ட மலைவாழ் இனத்தினருக்கு அடிப்படை வசதிகளையும் சாதி மதம் உயர்ந்தவர் தாழ்ந்தவர் அந்தஸ்து மிக்கவர் இல்லாதவர் என்றெல்லாம் ஆலயங்களில் நுழையக்கூட அருகதையற்றவர்கள் என்று ஒதுக்கப்பட்ட மக்களை இறைவனிடம் அழைத்துச்செல்வது குற்றம் என்றால் அந்த குற்றத்தை நான் ஆதரிக்கிறேன்.

இன்னும் என்னிடம் பல பாயிண்ட்கள் இருக்கின்றன. பொதுவாக விவாதம் என்பதைத் தவிர்த்தே வர நினைப்பதால் இதிலும் தீவிரமாக விவாதத்தில் ஈடுபட நாட்டமில்லை.

மேலே சிலருடைய கருத்துகளில் வலிவின்மையும் பொலிவின்மையும் மதஞ்சார்ந்தே இச்சேவைகள் யோசிக்கப்படுவதாலும் இந்த மேற்கண்ட கருத்துகளை முன்வைக்க முன்வந்தேன்..!!

நன்றி..!