PDA

View Full Version : இன்றைய ஆட்சியாளர்கள் என்ன செய்கிறார்கள்



ravikrishnan
18-04-2012, 04:32 PM
http://m.ak.fbcdn.net/a3.sphotos.ak/hphotos-ak-snc7/p480x480/395579_243864472358440_183649545046600_549404_505880831_n.jpg
இன்றைய ஆட்சியாளர்கள் என்ன செய்கிறார்கள்

நான்குமாத்திற்குமுன் தானே புயல் கடலூர் மாவட்டத்தை நிர்முலமாக்கியிருக்கிறதே, அதுபோல தியாகச்சுடர் காமராசர் ஆட்சி காலத்திலும் தமிழ்நாட்டில் புயல் வந்தது. ராமநாதபுரம் மாவட்டம் முற்றிலும் சிதைந்து போனது. சிதைந்து போன ராமநாதபுரத்தில் நிவாரண பணிகளை பார்வையிட முதல்வர் காமராசர் ராமநாதபுரத்தின் பிரதான சாலையில் காரில் சென்று கொண்டு இருந்தார். சாலையின் இருபுறமும் எங்கும் வெள்ளக் காடுகளாக இருக்கும் காட்சியை காமராசர் பார்த்துக்கொண்டே வருகிறார். அப்போது பிரதான சாலையில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு சிறு கிராமம் வெள்ளத்தில் மூழ்கி இருப்பதை காண்கிறார் காமராசர். அந்த கிராமத்தை பற்றி விசாரித்து, என்னென்ன மீட்பு பணிகளை செய்திருக்கிறீர்கள் என்று அதிகாரிகளிடத்தில் கேட்கும் போது, அதிகாரிகளிடம் இருந்து திருப்திகரமான பதில் வரவில்லை. உடனே காரை நிறுத்தி, வேட்டியை மடித்துக்கட்டி கொண்டு வெள்ளத்தில் நடக்க ஆரம்பித்து விட்டார். அதிகாரிகள் காமராசர் பின்னால் ஓடுகிறார்கள். அது ஒரு சின்ன கிராமம், அந்த கிராமத்தின் மக்கள் மேடான பகுதிகளில் உட்கார்ந்து இருக்கிறார்கள். முதல்வர் காமராசர் அவர்களை கண்டதும் அந்த கிராம மக்கள் உற்சாகம் அடைந்தனர். காமராசருக்கு அதற்கு பிறகுதான் தெரிகிறது, அங்கே அதிகாரிகள் நிவாரணப்பணிகளை மேற்கொள்ளவே இல்லை. அதிகாரிகளை கடிந்து கொண்ட காமராசர், உடனே அந்த கிராம மக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறி, குழந்தைகளுக்கு தேவையான பால் பவுடர் போன்றவற்றை வரவழைத்து, அங்கேயே சமைத்து அந்த கிராம மக்களோடு சேர்ந்து ஒரு வேளை உணவருந்தி விட்டு, எல்லா உதவிகளையும் செய்வதாக கூறி அந்த கிராமத்தை கடந்து சென்றார் பெருந்தலைவர் காமராசர். இன்றைய ஆட்சியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் அன்பர்களே!!:redface:

meera
19-04-2012, 03:07 AM
இவைகளை கேள்வியுறும் போது நாம் இழந்துவிட்ட அறிய தலைவர்களை மீண்டும் பெறமாட்டோமா என மனம் ஏங்குகிறது.
ஏங்குவதை தவிர வேறென்ன செய்ய முடியும்?????

ravikrishnan
19-04-2012, 03:21 AM
நீங்கள் சொல்வது உண்மைதான் மீரா அவர்களே! என்ன செய்வது ? நன்றி!!

arun
22-04-2012, 05:10 PM
இன்றைய ஆட்சியாளர்கள் எலிகாப்டரில் ஏறி ஒரு ரவுண்டு அடித்து விட்டு மக்களுக்காக 24 மணிநேரமும் உழைக்கிறேன் என தம்பட்டம் அடித்து கொள்கிறார்கள் ..

இன்னொரு காமராஜர் வருவாரா ? .. கனவு தான் காண முடியும்

M.Jagadeesan
22-04-2012, 05:20 PM
தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆண்ட காலம் பொற்காலம்.
கழகங்கள் ஆண்ட காலம் கற்காலம்.

ravikrishnan
22-04-2012, 06:16 PM
இப்போது மத்தில் ஆண்டுகொண்டுஇருக்கிற காங்கிரஸ் பொற்காலமா?தமிழர்க்கு எதிரான தனிஈழம்கிடைக்ககூடாது என்கின்ற ராஜ்பக்ச்யின் நண்பர் அல்லவா? இன்றைய நிலைக்கு தமிழர்களை கொண்டுவத்ததிற்க்கு காரணம் காங்கிரஸ் அல்லவா,தற்போது தாங்கள் ஈழமக்கலுக்கு உதவுகிறொம். பல வீடுகள் கட்டிதறிகிறோம் அதன் அருகில் புத்தர்க்கு கோவிலை வைத்து நாளை இந்த இடம் தமிழர்களே இல்லை என்கிற சுஜகமானமுடிவிர்க்கு,ராஜ்பக்ச்யின் துணைவுடன் செல்கிறது காங்கிரஸ் இனி தமிழ் நாட்டில் மெல்ல அழியும்....

ஸ்ரீசரண்
23-04-2012, 03:28 AM
காமராஜர் ஆட்சி பொற்காலம் தான்!

ஆனால் காங்கிரஸ் ஆட்சி பொற்காலம் அல்ல!!


இன்னுமொரு காமராஜரை எதிர்பார்க்கும்................

கலைவேந்தன்
23-04-2012, 05:41 AM
பசித்தவன் பழங்கணக்கு பார்ப்பது போலிருக்கிறது.. காமராஜர் போன்ற தலைவர்கள் இனி கிடைப்பார்கள் என்ற நம்பிக்கையும் இற்றுவிட்டது..

M.Jagadeesan
23-04-2012, 08:29 AM
நான் சொல்வது இப்போது இருக்கும் காங்கிரஸ் ஆட்சியை அல்ல. தமிழ்நாட்டில் காமராஜர், பக்தவச்சலம் ஆண்டபோது இருந்த காங்கிரஸ் ஆட்சியைச் சொல்கிறேன்.

சுகந்தப்ரீதன்
23-04-2012, 09:39 AM
[media] இன்றைய ஆட்சியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் அன்பர்களே!!:redface: அதுக்கு முன்னாடி நாம என்ன செய்யுறோம்ன்னு யோசிச்சு பார்க்கலாமே..!!:confused:

கதை சொல்லாதிங்க களத்துல இறங்குங்கன்னு காமராசர் சொன்னாரு... அதை செஞ்சும் காட்டியிருக்காரு...!! ஆனா நாம...?!:icon_ush:

தலைப்புக்கும் தந்த தகவலுக்கும் முரண்பாடு இருப்பதாக தோன்றுகிறது..!!:icon_rollout::traurig001:

அமரன்
23-04-2012, 10:23 PM
மாற்றம் மட்டுமே மாறாதது.