PDA

View Full Version : பார்த்ததில், பிடித்தவை



ravikrishnan
17-04-2012, 01:23 PM
http://m.ak.fbcdn.net/a4.sphotos.ak/hphotos-ak-ash3/p480x480/562742_274134269343403_184875021602662_580329_427031505_n.jpg

மரத்த வெட்டினா , இப்படி தான் நாளைக்கு அவனுங்களும் கெடக்கனுன்னு ,மனசாட்சி இல்லாத மடையர்கள்

Dr.சுந்தரராஜ் தயாளன்
17-04-2012, 01:30 PM
அடப்பாவிகளா...என்ன கொடுமை...இது ஏதோ வெளிநாட்டுப் பறவைகள் வந்து தங்கிச் செல்லும் இடமா? நம்ம ஊர் பறவைகள் போல் தெரியவில்லையே :eek::frown:

இராஜேஸ்வரன்
17-04-2012, 01:56 PM
என்ன அநியாய்ம இது? பார்ப்பதற்கே மனசு துடிக்கிறதே! இவர்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா?

கலைவேந்தன்
17-04-2012, 04:04 PM
மரத்தைக் கொன்று உயிர்பிழைப்பார் தம்
மதத்தைக் கொண்டு வயிறு நிறைப்பார்..! இவர்
சிரத்தை அறுத்து வதம்புரிவோம் நம்
சந்ததி பிழைத்திட வழிதெரிவோம்..!

- கலைவேந்தன். :(

ravikrishnan
17-04-2012, 04:23 PM
அருமை, என்ன அற்புதமான சிந்தனை! நாலு வரினாலும் நச் இருக்கு (க்யா பாத்)

கீதம்
17-04-2012, 10:26 PM
தானே புயலின்போது பல மரங்கள் வேரோடு வீழ்ந்ததாலும், சுழன்றடித்தக் காற்றின் வேகத்தால் வீசியடிக்கப்பட்டதாலும் உயிரிழந்த பறவைகள் அநேகம். புயலுக்குப் பின் வீழ்ந்துகிடக்கும் மரங்களை அரத்தால் அறுத்து அப்புறப்படுத்தும் வேலை பல இடங்களிலும் நடைபெற்றது. அப்போது இணையத்திலும், செய்திகளிலும் பார்த்தப் படம்போல் தோன்றுகிறது..

மரங்கள் அழிந்தால் நாளை நமக்கும் இந்த கதிதான் என்னும் கருத்தினை இப்படத்தின் மூலம் சுட்டியமைக்கு நன்றி.

ravikrishnan
18-04-2012, 01:10 AM
நன்றி!!கீதம் அவர்களே உங்கள் கருத்து உண்மையாகதான் இருக்கும்,படத்தை உற்றுநோக்கினால் அப்படிதான் தெரிகிறது.