PDA

View Full Version : தமிழினத்தின் மேல் காதல் கொள்பவரே இதோ கவிஞர் வாலியின் சில வரிகள் உங்களுக்காக



ravikrishnan
15-04-2012, 10:54 AM
தமிழினத்தின் மேல் காதல் கொள்பவரே இதோ கவிஞர் வாலியின் சில வரிகள் உங்களுக்காக?

கொடிகாக்கத் - தன்னை
கொளுத்திக் கொண்ட உயிருண்டு-
உயிர்காக்கத் - தன்னை
கொளுத்திக் கொண்ட கொடியுண்டா?

உண்டு
அதன் பெயர் செங்கொடி:
இனிமேல் -
அதுதான் என் கொடி!

தொன்மை தமிழரெலாம் - ஒரு
தொப்புள் எழுந்த கொடி: இவள்
தொப்புள் எழுந்த கொடிகளை காக்க
வெப்புள் விழுந்த கொடி!
இதுதான் -
எனது -
வணக்கத்திற்குரிய கொடி! இதை -
வணங்காது வேறேதுக்கு முடி?:icon_b:

Dr.சுந்தரராஜ் தயாளன்
15-04-2012, 03:55 PM
தமிழ்ழினத்தை காதல் காதல்கொல்பவரெ இதோ கவிங்கர் வாலியின் சில வரிகள் உங்களூக்காக?

கொடிகாக்கத் - தன்னை
கொளுத்திக் கொண்ட உயிருண்ட-
உயிர்காக்கத் - தன்னை
கொளுத்திக் கொண்ட கொடியுண்டா?

உண்டு
அதன் பெயர் செங்கொடி:
இனிமேல் -
அதுதான் என் கொடி!

தொன்மை தமிழரெலாம் - ஒரு
தொப்புள் எழுந்த கொடி: இவள்
தொப்புள் எழுந்த கொடிகளை காக்க
வெப்புன் விழுந்த கொடி!
இதுதான் -
எனது -
வணக்கத்திற்குரிய கொடி! இதை -
வணங்காது வேறேதுக்கு முடி?:icon_b:
பாராட்டுகிறேன் ரவிகிருஷ்ணன் ....முதலில் எழுத்துப்பிழைகளை சரி செய்யுங்கள் :redface::sprachlos020:

ravikrishnan
15-04-2012, 05:29 PM
நன்றி!!! முயற்சிக்கிறேன், தவறுகளை சுட்டிக்காட்டவும்.

கௌதமன்
15-04-2012, 06:27 PM
வாலி மீது உங்களுக்கு ஏதாவது கோபமா? இப்படிப் போட்டு ' கொல்றீங்க'

கீதம்
15-04-2012, 10:08 PM
செங்கொடிக்கான கவிஞரின் இரங்கற்பாவைப் பதிந்தமைக்கு நன்றி.

தங்கள் வேண்டுகோளுக்கிணங்க, பிழைகளைச் சுட்டியுள்ளேன், திருத்திவிடவும். நன்றி.

தமிழினத்தின் மேல் காதல் கொள்பவரே, இதோ கவிஞர் வாலியின் சில வரிகள் உங்களுக்காக...

உயிருண்ட - உயிருண்டு

வெப்புன் - வெப்புள்

ravikrishnan
16-04-2012, 01:20 AM
நன்றி!கீதம் அவர்களே! என்னுடைய தவற்றை திருத்தி உள்ளேன், ஆனால் கவிதை வரிகளை திருத்த எனக்கு உரிமை உண்டோ??

Dr.சுந்தரராஜ் தயாளன்
16-04-2012, 01:22 AM
தலைப்பையும் சரி செய்யுங்கள் ரவிகிருஷ்ணன் அவர்களே

கீதம்
16-04-2012, 01:26 AM
நன்றி!கீதம் அவர்களே! என்னுடைய தவற்றை திருத்தி உள்ளேன், ஆனால் கவிதை வரிகளை திருத்த எனக்கு உரிமை உண்டோ??

தங்கள் புரிதலுக்கு நன்றி ரவிகிருஷ்ணன்.

கவிதையின் வரிகளை இணையத்தில் பார்த்த பிறகே குறிப்பிட்டுள்ளேன். திருத்தம் தேவையில்லையெனில் விட்டுவிடவும்.