PDA

View Full Version : வீர்சிங்கின் அரிய கண்டுபிடிப்பு தத்துவங்கள்.lavanya
25-12-2003, 08:01 PM
வீர்சிங்கின் அரிய கண்டுபிடிப்பு தத்துவங்கள்.

1. ஒரு லிட்டர் பால் கொட்டி விட்டால் அதில் 80 சதவீதம் தண்ணீர்தானே என்று மனதை
தேத்திக்கொள்ளும் மனநிலைக்கு பேர்தான் தத்துவம்.

2. சந்தேகம் என்று வந்துவிட்டால் பல்லி கூட டயனோஸராக தோன்றும்.

3. உப்பு விக்க போனா மழை பெய்யுது. மாவு விக்க போனா காத்தடிக்குது என்று
புலம்புவதை விட்டு விட்டு இரண்டையும் கலந்து போண்டா சுட்டு போனால்
எல்லா சீசனுக்கும் விற்கும்....

4. ரேடியோவை கண்டு பிடித்ததால் மார்கோனிக்கு அந்த பெயர் வரவில்லை. அவர்கள்
அம்மா அப்பா மார்கோனி என்று பெயர் வைத்ததே அதற்கு காரணம்.

5. மரத்தை வச்சவன் தண்ணி ஊத்த மாட்டான்.மரக்கன்று வைத்தவன் தான் தண்ணி
ஊத்துவான்.

6. சௌகரியம் போல் வைத்து கொள்ளலாம் என்பதால் தான் தலைமுடி விக்குக்கு
சவுரி என பெயர் வந்தது.

7. குரைக்கும் நாய் கடிக்காது என்பது நமக்கு தெரியும்.ஆனால் நாய்க்கு தெரியாது.
ஏனெனில் நாய்க்கு படிக்க தெரியாது.

8. நாய் நாக்கை பயன்படுத்தாமல் வாலை பயன்படுத்தினால் அதற்கு நிறைய
நண்பர்கள் இருப்பார்கள்.

9. ஜலதோஷம் பிடித்திருக்கும் கழுதைக்கு கற்பூர வாசனை தெரியாது. எல்லாக்
கழுதைகளும் எப்போதும் ஜலதோஷத்துடனே இருக்கின்றன.

முத்து
25-12-2003, 08:23 PM
லாவண்யா அவர்களே ...
இதில் பல நகைச்சுவை அல்ல ...
உண்மையான தத்துவங்கள் ...
மிக நன்றாக இருக்கிறது...

மோகன்
25-12-2003, 11:40 PM
எல்லா தத்துவங்களும் நன்றாக இருக்கின்றன. எல்லாம் அனுபவமோ!!!!!!!!!!!!

mania
26-12-2003, 12:17 AM
அட்டகாசம் லாவ்ஸ் !!!!!சிரிச்சு...சிரிச்சு........
அன்புடன்
மணியா

பாரதி
26-12-2003, 01:46 AM
தத்துவங்களை கொடுத்த வீர்சிங் இதையெல்லாம் பதிவு செய்து காப்பிரைட் உரிமை பெற்று இருக்கிறாரா..? இல்லையா..?
பாராட்டுக்கள் லாவ்.

ரவிஷா
26-12-2003, 03:33 AM
சிறந்த சிந்தனை. அறிய கருத்துக்கள்
வாழ்க

pgk53
26-12-2003, 03:54 AM
அட்டகாசமான நகைச்சுவை கலந்த சிரிப்புகள்
நன்றி லாவண்யா அவர்களே.

aren
26-12-2003, 08:49 AM
லாவண்யா அவர்களே, அருமை. சிரிப்பு தாங்க முடியவில்லை, குறிப்பாக 4, 5 மற்றும் 7.

தொடருங்கள்.

இளசு
26-12-2003, 01:16 PM
அட்டகாசம் லாவ்...
முத்து சொல்வதுபோல் பல உண்மை..
என் அண்ணன் வீர்சிங்கின் பெருமையைக் குறைப்பதற்காய் நீங்கள் செய்த பிரச்சாரம் எதிர்விளைவை ஏற்படுத்திடுச்சி பார்த்தீங்களா?
அவர் அறிவின் சுரப்பை அகிலம் அறியத் தந்தமைக்கு நன்றி..

இதில் பல தத்துவம் 2004- ல் சினிமாவில் இடம்பெறும் சாத்தியம் உள்ளது...
அண்ணே வீர்சிங்.... காப்புரிமை உஷார்..

Mathu
26-12-2003, 01:30 PM
ஆ.. வயிறு வலிக்குது லாவ்சிங்...!
அனைத்தும் அருமை.

இளசு
26-12-2003, 01:36 PM
அங்கே கான்கிரீஷ் சொன்னது லாவ்மணி..
இங்கே மதன் சொன்னது லாவ்சிங்!

ரெண்டுமே சூப்பர்...

poo
26-12-2003, 02:54 PM
யோசிச்சிப் பார்த்தா தப்பே சொல்லம்முடியாதளவு நிஜமான தத்துவங்கள்!!

சிந்திக்கவைக்க அக்காவிற்கு நன்றி!

மன்மதன்
27-12-2003, 11:26 AM
அட்டே. அவ்வளவும் அற்புதமாக நிஜவாழ்க்கை தத்துவங்கள்.
லாவ் பெயரை வீர்சிங் தட்டிகொண்டுபோய்விட்டாரே..

aren
27-12-2003, 11:31 AM
புதுப்புது பட்டங்களை லாவண்யா அவர்களுக்கு வந்து குவிவதுகண்டு சந்தோஷமாக உள்ளது. தொடருங்கள்.

அறிஞர்
02-01-2004, 09:26 AM
வாழ்த்துக்கள்.. வீர்சிங்கோடு. இணைந்து தெளித்த.. முத்தான தத்துவங்கள்..அருமை

Nanban
02-01-2004, 09:37 AM
MAD மெகஸின் படித்த மாதிரி இருக்குது.......

நல்ல கலெக்ஷன்ஸ்..........

poornima
22-01-2009, 06:55 AM
வீர்சிங் தத்துவங்கள் இன்னும் தொடரலாமே...

இளசு
22-01-2009, 07:48 AM
தொடரும் ஒருங்குறி மாற்றப் பணிக்குப் பாராட்டுகள் பூர்ணிமா அவர்களே...

வீர்சிங் தத்துவங்கள் இன்னும் தொடரலாமே...

அதற்கு எங்கள் லாவ்(சிங்) மீண்டும் வரணுமே!

lolluvathiyar
22-01-2009, 02:18 PM
லாவன்யா உங்க கால் எங்க இருக்கு கொஞ்சம் காட்டுங்க, அப்பா எப்படீங்க இப்படி தத்துவமா சொல்லறீங்க. சூப்பர்

arun
22-01-2009, 07:36 PM
அட அட அட என்ன ஒரு அட்டகாசமான தத்துவம் :D

அக்னி
22-01-2009, 08:57 PM
இவுக அப்பவே ரூம் போட்டு யோசிச்சிருக்காங்களே...

loshan
23-01-2009, 08:39 AM
எல்லாம் நல்லாத் தான் இருக்கு.. :lachen001:
அது சரி அந்தக் கடைசித் தத்துவமும் வீர்சிங் சொன்னது தானா? (புதியவன் :icon_rollout: தானே ஒன்னும் புரியல :D)

//இந்த உலகத்தைப் பொறுத்தவரை நீங்கள் யாரோ ஒருவர்தான்...
ஆனால் யாரோ ஒருவருக்கு நீங்கள்தான் உலகமே....// :p

ஓவியன்
23-01-2009, 12:23 PM
எல்லாம் நல்லாத் தான் இருக்கு.. :lachen001:
அது சரி அந்தக் கடைசித் தத்துவமும் வீர்சிங் சொன்னது தானா? (புதியவன் :icon_rollout: தானே ஒன்னும் புரியல :D)

ஆஹா, தொடங்கிட்டீங்களா...?? :D:D:D

2003 ஆண்டு பதிவிட்ட லாவண்யாவுக்கு இன்றுதான் பதில் கிடைச்சிருக்கு..!! :lachen001:

கண்மணி
23-01-2009, 07:45 PM
வீர்சிங்கின் அரிய கண்டுபிடிப்பு தத்துவங்கள்.

1. ஒரு லிட்டர் பால் கொட்டி விட்டால் அதில் 80 சதவீதம் தண்ணீர்தானே என்று மனதை
தேத்திக்கொள்ளும் மனநிலைக்கு பேர்தான் தத்துவம்.

2. சந்தேகம் என்று வந்துவிட்டால் பல்லி கூட டயனோஸராக தோன்றும்.

3. உப்பு விக்க போனா மழை பெய்யுது. மாவு விக்க போனா காத்தடிக்குது என்று
புலம்புவதை விட்டு விட்டு இரண்டையும் கலந்து போண்டா சுட்டு போனால்
எல்லா சீசனுக்கும் விற்கும்....

4. ரேடியோவை கண்டு பிடித்ததால் மார்கோனிக்கு அந்த பெயர் வரவில்லை. அவர்கள்
அம்மா அப்பா மார்கோனி என்று பெயர் வைத்ததே அதற்கு காரணம்.

5. மரத்தை வச்சவன் தண்ணி ஊத்த மாட்டான்.மரக்கன்று வைத்தவன் தான் தண்ணி
ஊத்துவான்.

6. சௌகரியம் போல் வைத்து கொள்ளலாம் என்பதால் தான் தலைமுடி விக்குக்கு
சவுரி என பெயர் வந்தது.

7. குரைக்கும் நாய் கடிக்காது என்பது நமக்கு தெரியும்.ஆனால் நாய்க்கு தெரியாது.
ஏனெனில் நாய்க்கு படிக்க தெரியாது.

8. நாய் நாக்கை பயன்படுத்தாமல் வாலை பயன்படுத்தினால் அதற்கு நிறைய
நண்பர்கள் இருப்பார்கள்.

9. ஜலதோஷம் பிடித்திருக்கும் கழுதைக்கு கற்பூர வாசனை தெரியாது. எல்லாக்
கழுதைகளும் எப்போதும் ஜலதோஷத்துடனே இருக்கின்றன.

"மோர்"சிங்கின் கண்டு கடிப்பு!!!

1. அதை பூமாதேவிக்கு அபிஷேக செலவு என எதாவது ஒரு அக்கவுண்டில் எழுதி வரவு பார்ப்பவன் புத்திசாலி.

2. டயனோசார் நிஜமாவே அவ்வளவு பெரிசு இல்லை அதெல்லாம் டூப்பு என சந்தேகம் வந்தாக் கூடவா? :D :D :D

3. போண்டா சுட உப்பு வாங்கப் போனா மழை பெய்யும். மாவு வாங்கப் போனா காத்தடிக்கும். பரவாயில்லையா?:aetsch013::aetsch013::aetsch0134. ஆமாம் சுடறதுக்கு எதுக்கு மாவும் உப்பும் அப்படீங்கறீங்களா?

4. மார்க்கோணி யோட முழு பேரு Marchese Guglielmo Marconi அப்பா பேரு Giuseppe Marconi, முடியும். மார்க்கோணி அப்படிங்கறது அவங்க பரம்பரை பேரு, அதனால மார்க்கோணின்னு பேர் வர யாரோ கோணிப்பை மாதிரி நெஞ்சு கொண்ட அவரோட முன்னோர்தான் காரணம்.

5. ஓ தண்ணி லாரி டிரைவர் ஆக மரக்கன்று நடணுமா?
அவரும் வழியெல்லாம் தண்ணி ஊத்திகிட்டேதானே போறாரு?

6. அப்போ ரஜினி சௌரி வச்சிகிட்டுதான் நடிக்கிறாரா? சொல்லவே இல்ல

7. அப்ப படிக்கத் தெரிஞ்சா நாய் கடிக்குமா குரைக்குமா? நாய்க்கு எப்படி படிக்கச் சொல்லிக் கொடுக்கறது? அது புத்திசாலியா இருந்து குரைச்சிட்டு அப்புறம் கடிக்கலாம். இல்லைன்னா கடிச்சிட்டு அப்புறம் குரைக்கலாம்.. இப்போ குரைக்கலாம் போல தோணுதா இல்லை கடிக்கலாம் போல தோணுதா?

8. வாலால எப்படிங்க சாப்பாட்டை நக்கிச் சாப்பிடறது? எப்படி தண்ணி குடிக்கிறது? எப்படி ஜொள்ளு விடறது?:eek::eek::eek:

9. கழுதைக்கு ஜலதோஷம் பிடிக்காதுன்னு நினைக்கிறேன்.. ஏன்னா ஜலதோஷம் உள்ளவங்க பின்னால எந்தக் கழுதையும் சுத்தறதில்லை.:D:D:D