PDA

View Full Version : ஆத்திசூடி

சொ.ஞானசம்பந்தன்
14-04-2012, 07:21 AM
ஔவையார் , " கேள்வி முயல் " என்றார் .

" பதில் ஆமை " என்றாரா?

ravikrishnan
14-04-2012, 12:16 PM
:mini023:சாமி,ஒளவையார்,என்ன கேள்விகேட்டார்?யார்? பதில் சொன்னார்கள்:confused:

கலைவேந்தன்
14-04-2012, 12:48 PM
பரம மண்டலத்தில் இருக்கும் எங்கள் பரம பிதாவே.. இவர்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள். இவர்களை ரட்சித்து இவர்களது பாவங்களைப் போக்குவீராக..

ஆமென்.

M.Jagadeesan
14-04-2012, 05:41 PM
"கேள்விக்கு" எதிர்ச் சொல்" பதில்" என்று வைத்துக் கொண்டாலும் ,"முயலுக்கு" எதிர்ச் சொல் " ஆமை " இல்லையே!

ravikrishnan
15-04-2012, 02:39 AM
:lachen001:அன்பர்,கலைவேந்தன் எழுதிய வார்த்தைகளை கண்டு எனக்கு சிரிப்புதான் வருகிறது:lachen001::lachen001:

தாமரை
15-04-2012, 03:15 AM
உங்க கேள்வியால் ஆத்திச் சூடியை ஒரு முறை முழுக்கப் படித்தேன்.

1. ஆத்திசூடி
கடவுள் வாழ்த்து

ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.

உயிர் வருக்கம்

1. அறம் செய விரும்பு.
2. ஆறுவது சினம்.
3. இயல்வது கரவேல்.
4. ஈவது விலக்கேல்.
5. உடையது விளம்பேல்.
6. ஊக்கமது கைவிடேல்.
7. எண் எழுத்து இகழேல்.
8. ஏற்பது இகழ்ச்சி.
9. ஐயம் இட்டு உண்.
10. ஒப்புரவு ஒழுகு.
11. ஓதுவது ஒழியேல்.
12. ஔவியம் பேசேல்.
13. அஃகம் சுருக்கேல்.

உயிர்மெய் வருக்கம்

14. கண்டொன்று சொல்லேல்.
15. ஙப் போல் வளை.
16. சனி நீராடு.
17. ஞயம்பட உரை.
18. இடம்பட வீடு எடேல்.
19. இணக்கம் அறிந்து இணங்கு.
20. தந்தை தாய்ப் பேண்.
21. நன்றி மறவேல்.
22. பருவத்தே பயிர் செய்.
23. மண் பறித்து உண்ணேல்.
24. இயல்பு அலாதன செய்யேல்.
25. அரவம் ஆட்டேல்.
26. இலவம் பஞ்சில் துயில்.
27. வஞ்சகம் பேசேல்.
28. அழகு அலாதன செய்யேல்.
29. இளமையில் கல்.
30. அரனை மறவேல்.
31. அனந்தல் ஆடேல்.

ககர வருக்கம்
32. கடிவது மற.
33. காப்பது விரதம்.
34. கிழமைப்பட வாழ்.
35. கீழ்மை அகற்று.
36. குணமது கைவிடேல்.
37. கூடிப் பிரியேல்.
38. கெடுப்பது ஒழி.
39. கேள்வி முயல்.
40. கைவினை கரவேல்.
41. கொள்ளை விரும்பேல்.
42. கோதாட்டு ஒழி.
43. கௌவை அகற்று.

சகர வருக்கம்
44. சக்கர நெறி நில்.
45. சான்றோர் இனத்து இரு.
46. சித்திரம் பேசேல்.
47. சீர்மை மறவேல்.
48. சுளிக்கச் சொல்லேல்.
49. சூது விரும்பேல்.
50. செய்வன திருந்தச் செய்.
51. சேரிடம் அறிந்து சேர்.
52. சையெனத் திரியேல்.
53. சொற் சோர்வு படேல்.
54. சோம்பித் திரியேல்.

தகர வருக்கம்
55. தக்கோன் எனத் திரி.
56. தானமது விரும்பு.
57. திருமாலுக்கு அடிமை செய்.
58. தீவினை அகற்று.
59. துன்பத்திற்கு இடம் கொடேல்.
60. தூக்கி வினை செய்.
61. தெய்வம் இகழேல்.
62. தேசத்தோடு ஒட்டி வாழ்.
63. தையல் சொல் கேளேல்.
64. தொன்மை மறவேல்.
65. தோற்பன தொடரேல்.

நகர வருக்கம்
66. நன்மை கடைப்பிடி.
67. நாடு ஒப்பன செய்.
68. நிலையில் பிரியேல்.
69. நீர் விளையாடேல்.
70. நுண்மை நுகரேல்.
71. நூல் பல கல்.
72. நெற்பயிர் விளைவு செய்.
73. நேர்பட ஒழுகு.
74. நைவினை நணுகேல்.
75. நொய்ய உரையேல்.
76. நோய்க்கு இடம் கொடேல்.

பகர வருக்கம்
77. பழிப்பன பகரேல்.
78. பாம்பொடு பழகேல்.
79. பிழைபடச் சொல்லேல்.
80. பீடு பெற நில்.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்.
82. பூமி திருத்தி உண்.
83. பெரியாரைத் துணைக் கொள்.
84. பேதைமை அகற்று.
85. பையலோடு இணங்கேல்.
86. பொருள்தனைப் போற்றி வாழ்.
87. போர்த் தொழில் புரியேல்.

மகர வருக்கம்
88. மனம் தடுமாறேல்.
89. மாற்றானுக்கு இடம் கொடேல்.
90. மிகைபடச் சொல்லேல்.
91. மீதூண் விரும்பேல்.
92. முனைமுகத்து நில்லேல்.
93. மூர்க்கரோடு இணங்கேல்.
94. மெல்லி நல்லாள் தோள்சேர்.
95. மேன்மக்கள் சொல் கேள்.
96. மை விழியார் மனை அகல்.
97. மொழிவது அற மொழி.
98. மோகத்தை முனி.

வகர வருக்கம்
99. வல்லமை பேசேல்.
100. வாது முற்கூறேல்.
101. வித்தை விரும்பு.
102. வீடு பெற நில்.
103. உத்தமனாய் இரு.
104. ஊருடன் கூடி வாழ்.
105. வெட்டெனப் பேசேல்.
106. வேண்டி வினை செயேல்.
107. வைகறைத் துயில் எழு.
108. ஒன்னாரைத் தேறேல்.
109. ஓரம் சொல்லேல்.

39 வது மொழியாக

கேள்வி முயல் என்கிறார். அதாவது எதையும் கேட்க முயற்சி செய்ய வேண்டும் அல்லவா?

கேட்கறது எப்படின்னு யோசிக்கிறேன்.

வாயால் கேட்டல் - நாம் மற்றவரைப் பார்த்துக் கேட்பது - அவுட்புட்
காதால் கேட்டல் - மற்றவர்கள் சொல்வதை நாம் கேட்பது - இன்புட்

அப்போ பதில்

உடையது விளம்பேல்.

அப்படின்னு ஔவை சொன்னதை நம்பி இது சரியா தவறான்னு யோசிக்காம உடையது விளம்பாக கண்டதை விளம்பி இருக்கிறேன்

ஏற்பது இகழ்ச்சி.

அப்படி ஔவை சொன்னதால நீங்க கேட்டதுக்கு பதில் தெரியாது என்று நான் ஏற்றுக் கொள்ளவில்லை.

கண்டொன்று சொல்லேல்.

என்று ஔவை சொன்னதால் நான் கண்ட ஒன்றை மட்டும் சொல்லாம, கண்டது காணாதது, இருக்கறது இல்லாதது எல்லாத்தையும் சொல்லி இருக்கேன்

வஞ்சகம் பேசேல்

அப்படின்னு சொன்னார்.. நான் குழந்தைங்க. வஞ்சகம்னா என்னன்னே தெரியலை..

சித்திரம் பேசேல்

அப்படின்னாரு. அதான் பாருங்க ஸ்மைலி கூட உபயோகிக்கல.

சுளிக்கச் சொல்லேல்

அப்படின்னாரு.. பாருங்க முகஞ் சுளிக்கக் கூடாது... சிரிங்க பார்க்கலாம்.. ஆங் அப்படித்தான்.

மிகைபடச் சொல்லேல்.

என்றார் ஒண்ணும் புரியலை. உடையது விளம்பேல் அப்படின்னார். சரி கொஞ்சம் ஏத்தி விட்டுப் பேசலாம்னா இப்படிச் சொல்லிட்டாரே...

பழிப்பன பகரேல்

இது முடியாத காரியமா தோணுது. ஒண்ணு நாம மத்தவங்களை பழிக்கறோம். அல்லது நாம எழுதினது மத்தவங்க பழிக்கிறாங்களேன்னு நிக்கிறேன்

வல்லமை பேசேல்

வல்லமை என்பது சுயபுகழ்ச்சி இல்லையா, தற்பெருமை அடிச்சுகாட்டி எனக்கு ஜீரணமே ஆகாதேன்னு ஜூரமே வருது

வெட்டெனப் பேசேல்

அதாங்க வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு கட் அண்ட் ரைட்டா பேசாதீங்க என்கிறார். நாம வள வள கொழ கொழ தானே..

ஓரம் சொல்லேல்.

ஓரம் னா, இல்லீங்க எல்லாத்துக்கும் நடுவிலதானே சொல்றேன்.. ஓ ஒரு பக்கமா பேசாதீங்கன்னு சொல்றாங்களோ? இல்லை இல்லை ஓரம் கூறுதல் என்றால் புறங்கூறுதல், கோள்மூட்டுதல் தானே. நமக்குச் சிண்டு முடிதல் தவிர வேற சிக்கல் இல்லையே!!!

சொற் சோர்வு படேல்.

ஒரு சின்ன கேள்விக்கு இவ்வலவு பெரிசா பதில் சொல்றமே.. நமக்கா சொற்சோர்வு..(இருக்கலாமோ? என்ன பதில் என்ற வார்த்தை கிடைக்காம இப்படி சொற்களைத் தேடிக் களைச்சுப் போறமே)

தையல் சொல் கேளேல்.

பார்த்தீங்களா பார்த்தீங்களா? பாட்டின்னா பாட்டிதான். எப்படி என்னைக் காப்பாத்தி விட்டுட்டாங்க பாருங்க.

ஔவையும் தையல்தானே. அவங்க பேச்சைக் கேட்கக் கூடாதுன்னு அவங்களே சொல்லும் பொழுது நான் கேட்கலாமா?

அப்ப இந்த பேச்சை மட்டும் நான் ஏன் கேட்கணும்

ஐயோ என்னை பிச்சிக்க வச்சுட்டுப் போயிட்டாங்களே ஔவை.

சரி விஷயத்துக்கு வருவோம்..

கேள்வி - முயல்.
காரணம் - அறி "ஆமை"
பதில் - அரி(றி)

jayanth
15-04-2012, 03:24 AM
அருமை...!!!அருமை...!!!

கலையரசி
15-04-2012, 05:24 AM
கேள்வி முயல் என்பதை நகைச்சுவை துணுக்காகக் கொடுத்து ஆத்திச்சூடியை அலசி ஆராய வைத்து விட்டதற்குப் பாராட்டுக்கள்!

கலைவேந்தன்
15-04-2012, 06:14 AM
தாமரையின் அலசல் அருமை. எனினும் ஒரு வார்த்தை.

ஆத்திச்சூடியின் அனைத்தையும் ஒருங்கே வைத்து யோசிப்பதால் இச்சிறு குழப்பம். அவை ஒவ்வொன்றும் வாழ்வின் வெவ்வேறு கட்டங்களுக்கு ஏற்ப பொருள்கொள்வது ஆகும். எனவே அதில் குழப்பமில்லை.

தையல் சொல் கேளேல் என்னும் ஆத்திசூடி தையல் என்பதற்கு பெண் என்னும் பொருளில் வரவில்லை என்பது என்வாதம்.

தையல் = தைத்தல் புனைதல்

புனைக்கப்பட்ட அல்லது பல்வேறு கூறுகளைச் சேர்த்துக் கோர்த்து தைக்கப்பட்ட புறங்கூற்றுகளைக் கேளேல் எனப்பொருள் கொள்ளல் வேண்டும்.

அதாவது வதந்திகளைக் கேளாதீர்கள் என்பது பொருள்.

ravikrishnan
15-04-2012, 07:07 AM
சாமி,நான் இத்த பாடபிரிவில் இருந்து கட் அடித்துவிட்டு சினிமாவிற்க்கு போகிறென்,மன்றத்தில் சொல்லிடாதிங்கள்:icon_ush::icon_ush:

சொ.ஞானசம்பந்தன்
15-04-2012, 07:11 AM
:mini023:சாமி,ஒளவையார்,என்ன கேள்விகேட்டார்?யார்? பதில் சொன்னார்கள்:confused:

பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . ஔவையார் ஒரு கேள்வியும் கேட்கவில்லை , அறிவுரை சொன்னார் .யாரும் பதில் சொல்லவில்லை , எவரோ ஒருவர் கேள்வி கேட்டார் .

சொ.ஞானசம்பந்தன்
15-04-2012, 07:14 AM
"கேள்விக்கு" எதிர்ச் சொல்" பதில்" என்று வைத்துக் கொண்டாலும் ,"முயலுக்கு" எதிர்ச் சொல் " ஆமை " இல்லையே!

பின்னூட்டத்திற்கு மிகுந்த நன்றி . முயலுக்கு எதிர்ச் சொல் ஆமையல்லதான் ; முயல் விரைவாய் ஒடுவது , முயல் மெதுவாய் நகர்வது என்பதால் முயலை நினைக்கும்போது ஆமை நினைவு வரும் . உபயம் : ஆமையும் முயலும் கதை .

சொ.ஞானசம்பந்தன்
15-04-2012, 07:20 AM
உங்க கேள்வியால் ஆத்திச் சூடியை ஒரு முறை முழுக்கப் படித்தேன்.

1. ஆத்திசூடி
கடவுள் வாழ்த்து

ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.

உயிர் வருக்கம்

1. அறம் செய விரும்பு.
2. ஆறுவது சினம்.
3. இயல்வது கரவேல்.
4. ஈவது விலக்கேல்.
5. உடையது விளம்பேல்.
6. ஊக்கமது கைவிடேல்.
7. எண் எழுத்து இகழேல்.
8. ஏற்பது இகழ்ச்சி.
9. ஐயம் இட்டு உண்.
10. ஒப்புரவு ஒழுகு.
11. ஓதுவது ஒழியேல்.
12. ஔவியம் பேசேல்.
13. அஃகம் சுருக்கேல்.

உயிர்மெய் வருக்கம்

14. கண்டொன்று சொல்லேல்.
15. ஙப் போல் வளை.
16. சனி நீராடு.
17. ஞயம்பட உரை.
18. இடம்பட வீடு எடேல்.
19. இணக்கம் அறிந்து இணங்கு.
20. தந்தை தாய்ப் பேண்.
21. நன்றி மறவேல்.
22. பருவத்தே பயிர் செய்.
23. மண் பறித்து உண்ணேல்.
24. இயல்பு அலாதன செய்யேல்.
25. அரவம் ஆட்டேல்.
26. இலவம் பஞ்சில் துயில்.
27. வஞ்சகம் பேசேல்.
28. அழகு அலாதன செய்யேல்.
29. இளமையில் கல்.
30. அரனை மறவேல்.
31. அனந்தல் ஆடேல்.

ககர வருக்கம்
32. கடிவது மற.
33. காப்பது விரதம்.
34. கிழமைப்பட வாழ்.
35. கீழ்மை அகற்று.
36. குணமது கைவிடேல்.
37. கூடிப் பிரியேல்.
38. கெடுப்பது ஒழி.
39. கேள்வி முயல்.
40. கைவினை கரவேல்.
41. கொள்ளை விரும்பேல்.
42. கோதாட்டு ஒழி.
43. கௌவை அகற்று.

சகர வருக்கம்
44. சக்கர நெறி நில்.
45. சான்றோர் இனத்து இரு.
46. சித்திரம் பேசேல்.
47. சீர்மை மறவேல்.
48. சுளிக்கச் சொல்லேல்.
49. சூது விரும்பேல்.
50. செய்வன திருந்தச் செய்.
51. சேரிடம் அறிந்து சேர்.
52. சையெனத் திரியேல்.
53. சொற் சோர்வு படேல்.
54. சோம்பித் திரியேல்.

தகர வருக்கம்
55. தக்கோன் எனத் திரி.
56. தானமது விரும்பு.
57. திருமாலுக்கு அடிமை செய்.
58. தீவினை அகற்று.
59. துன்பத்திற்கு இடம் கொடேல்.
60. தூக்கி வினை செய்.
61. தெய்வம் இகழேல்.
62. தேசத்தோடு ஒட்டி வாழ்.
63. தையல் சொல் கேளேல்.
64. தொன்மை மறவேல்.
65. தோற்பன தொடரேல்.

நகர வருக்கம்
66. நன்மை கடைப்பிடி.
67. நாடு ஒப்பன செய்.
68. நிலையில் பிரியேல்.
69. நீர் விளையாடேல்.
70. நுண்மை நுகரேல்.
71. நூல் பல கல்.
72. நெற்பயிர் விளைவு செய்.
73. நேர்பட ஒழுகு.
74. நைவினை நணுகேல்.
75. நொய்ய உரையேல்.
76. நோய்க்கு இடம் கொடேல்.

பகர வருக்கம்
77. பழிப்பன பகரேல்.
78. பாம்பொடு பழகேல்.
79. பிழைபடச் சொல்லேல்.
80. பீடு பெற நில்.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்.
82. பூமி திருத்தி உண்.
83. பெரியாரைத் துணைக் கொள்.
84. பேதைமை அகற்று.
85. பையலோடு இணங்கேல்.
86. பொருள்தனைப் போற்றி வாழ்.
87. போர்த் தொழில் புரியேல்.

மகர வருக்கம்
88. மனம் தடுமாறேல்.
89. மாற்றானுக்கு இடம் கொடேல்.
90. மிகைபடச் சொல்லேல்.
91. மீதூண் விரும்பேல்.
92. முனைமுகத்து நில்லேல்.
93. மூர்க்கரோடு இணங்கேல்.
94. மெல்லி நல்லாள் தோள்சேர்.
95. மேன்மக்கள் சொல் கேள்.
96. மை விழியார் மனை அகல்.
97. மொழிவது அற மொழி.
98. மோகத்தை முனி.

வகர வருக்கம்
99. வல்லமை பேசேல்.
100. வாது முற்கூறேல்.
101. வித்தை விரும்பு.
102. வீடு பெற நில்.
103. உத்தமனாய் இரு.
104. ஊருடன் கூடி வாழ்.
105. வெட்டெனப் பேசேல்.
106. வேண்டி வினை செயேல்.
107. வைகறைத் துயில் எழு.
108. ஒன்னாரைத் தேறேல்.
109. ஓரம் சொல்லேல்.

39 வது மொழியாக

கேள்வி முயல் என்கிறார். அதாவது எதையும் கேட்க முயற்சி செய்ய வேண்டும் அல்லவா?

கேட்கறது எப்படின்னு யோசிக்கிறேன்.

வாயால் கேட்டல் - நாம் மற்றவரைப் பார்த்துக் கேட்பது - அவுட்புட்
காதால் கேட்டல் - மற்றவர்கள் சொல்வதை நாம் கேட்பது - இன்புட்

அப்போ பதில்

உடையது விளம்பேல்.

அப்படின்னு ஔவை சொன்னதை நம்பி இது சரியா தவறான்னு யோசிக்காம உடையது விளம்பாக கண்டதை விளம்பி இருக்கிறேன்

ஏற்பது இகழ்ச்சி.

அப்படி ஔவை சொன்னதால நீங்க கேட்டதுக்கு பதில் தெரியாது என்று நான் ஏற்றுக் கொள்ளவில்லை.

கண்டொன்று சொல்லேல்.

என்று ஔவை சொன்னதால் நான் கண்ட ஒன்றை மட்டும் சொல்லாம, கண்டது காணாதது, இருக்கறது இல்லாதது எல்லாத்தையும் சொல்லி இருக்கேன்

வஞ்சகம் பேசேல்

அப்படின்னு சொன்னார்.. நான் குழந்தைங்க. வஞ்சகம்னா என்னன்னே தெரியலை..

சித்திரம் பேசேல்

அப்படின்னாரு. அதான் பாருங்க ஸ்மைலி கூட உபயோகிக்கல.

சுளிக்கச் சொல்லேல்

அப்படின்னாரு.. பாருங்க முகஞ் சுளிக்கக் கூடாது... சிரிங்க பார்க்கலாம்.. ஆங் அப்படித்தான்.

மிகைபடச் சொல்லேல்.

என்றார் ஒண்ணும் புரியலை. உடையது விளம்பேல் அப்படின்னார். சரி கொஞ்சம் ஏத்தி விட்டுப் பேசலாம்னா இப்படிச் சொல்லிட்டாரே...

பழிப்பன பகரேல்

இது முடியாத காரியமா தோணுது. ஒண்ணு நாம மத்தவங்களை பழிக்கறோம். அல்லது நாம எழுதினது மத்தவங்க பழிக்கிறாங்களேன்னு நிக்கிறேன்

வல்லமை பேசேல்

வல்லமை என்பது சுயபுகழ்ச்சி இல்லையா, தற்பெருமை அடிச்சுகாட்டி எனக்கு ஜீரணமே ஆகாதேன்னு ஜூரமே வருது

வெட்டெனப் பேசேல்

அதாங்க வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு கட் அண்ட் ரைட்டா பேசாதீங்க என்கிறார். நாம வள வள கொழ கொழ தானே..

ஓரம் சொல்லேல்.

ஓரம் னா, இல்லீங்க எல்லாத்துக்கும் நடுவிலதானே சொல்றேன்.. ஓ ஒரு பக்கமா பேசாதீங்கன்னு சொல்றாங்களோ? இல்லை இல்லை ஓரம் கூறுதல் என்றால் புறங்கூறுதல், கோள்மூட்டுதல் தானே. நமக்குச் சிண்டு முடிதல் தவிர வேற சிக்கல் இல்லையே!!!

சொற் சோர்வு படேல்.

ஒரு சின்ன கேள்விக்கு இவ்வலவு பெரிசா பதில் சொல்றமே.. நமக்கா சொற்சோர்வு..(இருக்கலாமோ? என்ன பதில் என்ற வார்த்தை கிடைக்காம இப்படி சொற்களைத் தேடிக் களைச்சுப் போறமே)

தையல் சொல் கேளேல்.

பார்த்தீங்களா பார்த்தீங்களா? பாட்டின்னா பாட்டிதான். எப்படி என்னைக் காப்பாத்தி விட்டுட்டாங்க பாருங்க.

ஔவையும் தையல்தானே. அவங்க பேச்சைக் கேட்கக் கூடாதுன்னு அவங்களே சொல்லும் பொழுது நான் கேட்கலாமா?

அப்ப இந்த பேச்சை மட்டும் நான் ஏன் கேட்கணும்

ஐயோ என்னை பிச்சிக்க வச்சுட்டுப் போயிட்டாங்களே ஔவை.

சரி விஷயத்துக்கு வருவோம்..

கேள்வி - முயல்.
காரணம் - அறி "ஆமை"
பதில் - அரி(றி)

எக்கச் சக்கமான விளக்கம் . மிக்க நன்றி .

ravikrishnan
15-04-2012, 07:21 AM
:lachen001:அந்த கேள்வி கேட்ட ஒருவர் யார்????:lachen001: மன்னித்துகொள்ளுங்கள் எப்பொழுது புரிகிறது,நன்றி!!!!

சொ.ஞானசம்பந்தன்
15-04-2012, 07:22 AM
கேள்வி முயல் என்பதை நகைச்சுவை துணுக்காகக் கொடுத்து ஆத்திச்சூடியை அலசி ஆராய வைத்து விட்டதற்குப் பாராட்டுக்கள்!

பாராட்டுக்கு மிகுந்த நன்றி .

சொ.ஞானசம்பந்தன்
15-04-2012, 07:25 AM
:lachen001:அந்த கேள்வி கேட்ட ஒருவர் யார்????:lachen001: மன்னித்துகொள்ளுங்கள் எப்பொழுது புரிகிறது,நன்றி!!!!

அவர் யார் என்பதுதான் தெரியவில்லை நீங்கள் எதற்கு மன்னிப்பு கோரவேண்டும் ?.

சொ.ஞானசம்பந்தன்
15-04-2012, 07:27 AM
பரம மண்டலத்தில் இருக்கும் எங்கள் பரம பிதாவே.. இவர்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள். இவர்களை ரட்சித்து இவர்களது பாவங்களைப் போக்குவீராக..

ஆமென்.

பரம மண்டலம் என்பது புரியவில்லை .

ravikrishnan
15-04-2012, 07:56 AM
:lachen001:நமது திருசபையின் தந்தை திரு.கலைவேந்தனிடமன்றாடி இந்த கேள்வியைகேட்டுகொள்வொம்,ஆமென்
நாம் செய்த பாவங்கள் தீர் ஆசிர்வதிக்கட்டும்:lachen001:

தாமரை
15-04-2012, 09:58 AM
தாமரையின் அலசல் அருமை. எனினும் ஒரு வார்த்தை.

தையல் சொல் கேளேல் என்னும் ஆத்திசூடி தையல் என்பதற்கு பெண் என்னும் பொருளில் வரவில்லை என்பது என்வாதம்.

தையல் = தைத்தல் புனைதல்

புனைக்கப்பட்ட அல்லது பல்வேறு கூறுகளைச் சேர்த்துக் கோர்த்து தைக்கப்பட்ட புறங்கூற்றுகளைக் கேளேல் எனப்பொருள் கொள்ளல் வேண்டும்.

அதாவது வதந்திகளைக் கேளாதீர்கள் என்பது பொருள்.

கதையும் கவிதையும் செய்யுளும்
புனையப்படுபவை அல்லவா கலை?

http://www.tamilmantram.com/vb/showthread.php?p=347888&highlight=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87#post347888

பெண் = பொய் என அங்கே ஒரு நிரூபணம் இருக்கும் ஹிஹி..அதனால எதைச் சொன்னாலும் பெண்ணைக் குறிக்கிறது எனலாம் நான்,

உண்மையில் ஔவை சொன்னது இதுதான். இந்த மாதிரி சம்மந்தமில்லா எதை யெதையோ இணக்கும் பேச்சுகளைக் கேட்காதே என்று..