PDA

View Full Version : வெளிச்சமும் தெரிவதும்.



அல்லிராணி
14-04-2012, 04:04 AM
வெளிச்சமும் தெரிவதும்.
--------------------------


ஆல்வா எடிசன் வடித்த
பிரத்யேகச் சூரியன்
பிரகாசித்துக் கொண்டிருந்தது

வெளிச்சம் இல்லா விட்டால்
எதுவும் தெரியாது
கதை சொல்லிக் கொண்டிருந்தேன்
கண்மணிக்கு

பவர் கட்!!!
கும்மிருட்டு
அம்மா நட்சத்திரம்
கூவினாள் கண்மணி..

வெளிச்சம் காட்டியது
இருட்டை மட்டுமே
கண்சிமிட்டின
நட்சத்திரங்கள்.

மின்சாரம் வந்தது
அப்படித்தான் என்றது
தொலைகாட்சியும்.!!!!

Dr.சுந்தரராஜ் தயாளன்
14-04-2012, 04:59 AM
:aktion033::aktion033:நன்று...vaazththukkal:aktion033::aktion033:

தாமரை
15-04-2012, 02:03 AM
வெளிச்சங்கள்
வெளிச்சம் போட்டுக் காட்டுவது
இருட்டை மட்டுமே

இருட்டில் தான்
வெளிச்சங்கள் தெரிகின்றன.

இரவு பகல்
படைக்கப்பட்ட நியதி
இரண்டும் பார்க்கப்பட வேண்டும்
என்பதாலும் இருக்கலாம்

ஊடக விஷயம் வேறு
ஊடகம் தன் இருப்பை
வெளிப்படுத்திக் கொள்ள
சமூக இருட்டையும்

சமூகம்
தன் இருளை மறக்க
ஊடக வெளிச்சத்தையும்
பயன் "படுத்திக்" கொள்(ல்)கின்றன!!!

ஒரு வெளிச்சமானது தன்னை விடக் குறைந்த ஒளி உள்ள ஒன்றை காண விடுவதில்லை. தன் பிரகாசத்தை ஒளி விட இயலாத இருட்டுப் பொருள்களின் மீது வீசி அவற்றை வெளிப்படுத்துவதால் தான்-தான் பேரோளி என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறது.

அதே போல் ஊடகங்கள் அங்கிங்கு ஒளி விடும் பல சிறு சிறு நல்ல விஷயங்களை சமூகத்திற்குக் காட்டாமல் இருண்ட, தீய விஷயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டி தன் இருப்பை நிலை நாட்டிக் கொள்கிறது.

சன் டிவி தான் தயாரித்த சினிமாக்களை ஓட வைக்கிற மாதிரி..

எந்த மேட்டர்ல டி.ஆர்.பி எகிறும் என்று சீரியல்கள் பார்க்கிற மாதிரி

மக்களை தங்கள் சேனலை டியூன் செய்யற மாதிரி டியூன் செய்ய வைக்கிற பரபரப்புச் செய்திச் சேனல்கள் போல

இது பேரொளி, இது மட்டுமே எல்லாவற்றையும் காட்டும் என விளக்கு வெளிச்சங்கள் நம்மை நம்ப வைப்பது போல ஊடகங்கள் நடந்து கொள்கின்றன.

ஒரு பவர்கட் -ல் இவ்வளவு பவர்ஃபுல்லா யோசிச்சி இருக்கீங்க..

உங்க கவிதை இருட்டா? வெளிச்சமா?:smilie_abcfra::smilie_abcfra::smilie_abcfra:

அதை விளக்கிக் காட்டுவதால் இந்த விமர்சனம் அதற்கு எதிர்மறை. :eek::eek::eek:

ஹைய்யோ! ஹைய்யோ!!!

ravikrishnan
15-04-2012, 02:21 AM
சன் டிவி தான் தயாரித்த சினிமாக்களை ஓட வைக்கிற மாதிரி..

எந்த மேட்டர்ல டி.ஆர்.பி எகிறும் என்று சீரியல்கள் பார்க்கிற மாதிரி

மக்களை தங்கள் சேனலை டியூன் செய்யற மாதிரி டியூன் செய்ய வைக்கிற பரபரப்புச் செய்திச் சேனல்கள் போல

இது பேரொளி, இது மட்டுமே எல்லாவற்றையும் காட்டும் என விளக்கு வெளிச்சங்கள் நம்மை நம்ப வைப்பது போல ஊடகங்கள் நடந்து கொள்கின்றன.
ஆகா, என்ன அருமையான தங்களின் வாசகங்கள்!! நன்றி!!

செல்வா
15-04-2012, 07:38 AM
முடியல....! :confused:

நாஞ்சில் த.க.ஜெய்
15-04-2012, 10:18 AM
இருட்டில் தெரிந்த வெளிச்சத்தில் உதித்த கவிதை அருமை ....

vasikaran.g
21-04-2012, 10:13 AM
கவிதை அருமை

கீதம்
22-04-2012, 01:56 AM
வெளிச்சம் போக்கும் இருட்டையும்
வெளிச்சம் காட்டும் இருட்டையும்
வெளிச்சம் போட்டுக் காட்டும் இருட்டையும்
வெளிச்சம்போட்டுக் காட்டும் கவிதை பிரமாதம். பாராட்டுகள்.

jayanth
22-04-2012, 02:43 AM
வெளிச்சம் போக்கும் இருட்டையும்
வெளிச்சம் காட்டும் இருட்டையும்
வெளிச்சம் போட்டுக் காட்டும் இருட்டையும்
வெளிச்சம்போட்டுக் காட்டும் கவிதை பிரமாதம். பாராட்டுகள்.

அருமையான கவிதைக்கு அதைவிட அருமையான பின்னூட்டம்...!!!

கலைவேந்தன்
22-04-2012, 03:34 AM
வெளிச்சம் பற்றிய கவிதை மிக நன்று..!!

kulakkottan
04-08-2012, 02:04 AM
இருட்டில் இருந்து வெளிச்சத்துக்கு வந்திருகிறது ஒரு கவி!
நட்சத்திரத்தை அடையாளம் காட்டிய இருட்டுக்கு ஒரு நன்றி சொல்லி இருக்கலாம் உங்கள் கவியில் !

சுகந்தப்ரீதன்
09-08-2012, 04:24 PM
அருமையான் கவிதந்த அல்லிராணியம்மாவுக்கு எமது வாழ்த்துக்கள்...:icon_b:

கல்யாண்ஜியின் கவிவரிகள் நினைவில்...

கார்த்திகை ராத்திரி
ஏற்றின கடைசி விளக்கை
வைத்து விட்டு திரும்பும்முன்
அணைந்து விடுகிறது
முதல் விளக்கினுள் ஒன்று
எரிகிற போது பார்க்காமல்
எப்போதுமே
அணைந்த பிறகு தான்
அதை சற்று
அதிகம் பார்க்கிறோம்
எரிந்த பொழுதில்
இருந்த வெளிச்சத்தை விட
அணைந்த பொழுதில்
தொலைந்த வெளிச்சம்
பரவுகிறது
மனதில் பிரகாசமாய்.