PDA

View Full Version : நிர்வாக உதவியாளர்கள் 13/04/2012



அமரன்
13-04-2012, 09:37 AM
அன்புடையீர்!

வணக்கம்.

அனைவருக்கும் இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்து.

இந்த நந்தன ஆண்டில் நம்மாலான நல்லதை எல்லாருக்கும் செய்வோம்.

இவ்வினிய நாளில் புதிய நிர்வாக உதவியாளர்களை *அறிவிப்பதில் மன்றம் மகிழ்வு கொள்கிறது.

இன்று முதல் கீதம் அவர்களும் மதி அவர்களும் நிர்வாக உதவியாளராகப் பணி புரிவார்கள். (இன்னும் ஒருவர் விரைவில் இணைந்து கொள்வார்)இவர்களின் பணிக்காலம் அடுத்த சித்திரைத் திருநாள் வரை ஆகும். தேவைப்படின் பணிக்காலம் நீட்டிக்கப்படும்.

இவர்களுக்கு வேண்டிய ஆலோசனைகளை நிர்வாக ஆலோசகர்கள் வழங்கி உதவுவார்கள்.

மேலும், இன்னும் ஓரிரு நாட்களில் மன்றத்தின் மென்பொருள் மாற்றம் நிகழ உள்ளது. சோதனை மன்றம் உருவாக்கப்பட்டு மென்பொருள் பரீட்சித்து பார்க்கப்பட்டு விட்டது என்பதையும் தெரியப்படுத்துவதில் மகிழ்வு கொள்கிறது மன்றம்.*

இந்த மாற்றத்தின் மூலம் நாம் புதிய வசதிகள் பெறும் வேளையில் சில பழைய வசதிகளை இழக்கவும் நேரிடலாம்.

இது *தொடர்பான விரிவான அறிவிப்பு தரப்படும்.

மன்றம் மேலும் பல உயர்படிகளைக் கடக்க நிர்வாக உதவியாளர்களுடன் இணைந்த்து அனைவரும் செயல்படுவோம்.

நன்றி

சிவா.ஜி
13-04-2012, 09:45 AM
மிக்க மகிழ்ச்சி. அன்புத் தங்கை கீதத்துக்கும், அன்புத்தம்பி மதிக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.

மன்றம் இன்னும் பல உயரங்களைத் தொட்டு இணைய உலகின் இணையில்லா தளமாய் விளங்க வாழ்த்துக்கள்.

நாஞ்சில் த.க.ஜெய்
13-04-2012, 09:47 AM
சிறந்ததோர் தேர்வு மன்ற உதவியாளர்கள் பணி சிறக்க வாழ்த்துகள்...

govindh
13-04-2012, 09:50 AM
நிர்வாக உதவியாளர்கள்...
கீதம் மற்றும் மதி....
இருவருக்கும்...
இனிய வாழ்த்துக்கள்...!

meera
13-04-2012, 09:56 AM
கீதம் அக்கா மற்றும் மதி இருவருக்கும் வாழ்த்துகள்.

மன்றத்தை புதிய வடிவில் காண ஆவலாக இருக்கிறது. நம் மன்றம் மேலும் மேலும் உயர என் வாழ்த்துகள்.

M.Jagadeesan
13-04-2012, 10:36 AM
கீதம், மதி ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.

ஆதவா
13-04-2012, 11:12 AM
வாழ்த்துக்கள் கீதாக்கா மதியண்ணே...

வாங்க வாங்க... ஒன்றாக செயல்பட்டு மன்றத்தை முன்னேற்றுவோம்!

ஆதி
13-04-2012, 11:22 AM
கீதம் அக்கா மற்றும் மதி இருவருக்ககும் வாழ்த்துக்கள்..

அசத்துங்கள் :)

கலையரசி
13-04-2012, 01:20 PM
ஆஹா! தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் மிகவும் இனிப்பான செய்தி. கீதமுக்கும் அன்புத் தம்பி மதிக்கும் வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.

கலைவேந்தன்
13-04-2012, 01:55 PM
தேர்வாளர்களுக்கும் தேர்ச்சிபெற்றோருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். மன்றம் மேலும் மேலும் சிறக்க என் விழைவுகள்..!

sarcharan
13-04-2012, 03:16 PM
கீதம் மற்றும் மதி இருவருக்கும் எனது பாராட்டுக்கள்.

இராஜேஸ்வரன்
13-04-2012, 03:34 PM
புதிய நிர்வாக உதவியாளர்கள் கீதம் மற்றும் மதி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

shibly591
13-04-2012, 03:55 PM
அருமையான தகவல் ...புதிய மாற்றங்களுக்காக காத்திருக்கிறோம் ..வாழ்த்துக்கள்

jayanth
14-04-2012, 04:25 AM
கீதம் மற்றும் மதி அவர்களுக்கு வாழ்த்துகள்.

arun
14-04-2012, 11:34 AM
மாற்றம் இல்லாதது மாற்றம் மட்டுமே ஆகையால் மாற்றங்களை வரவேற்கிறோம் .. புதிய உதவியாளர்களுக்கு வாழ்த்துக்கள்

உதயா
15-04-2012, 07:17 AM
நிர்வாகத்தில் பங்கு பெரும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

செல்வா
15-04-2012, 08:30 AM
வாழ்த்துக்கள் கீதமக்கா, மதியண்ணா :)

சுகந்தப்ரீதன்
18-04-2012, 09:06 AM
(இன்னும் ஒருவர் விரைவில் இணைந்து கொள்வார்)
ஹலோ.. எல்லோரும் பார்த்துக்குங்க... இனி நானும் ரவுடிதான்... நானும் ரவுடிதான்...!!:medium-smiley-088:

ஆதி
18-04-2012, 10:09 AM
ஹலோ.. எல்லோரும் பார்த்துக்குங்க... இனி நானும் ரவுடிதான்... நானும் ரவுடிதான்...!!:medium-smiley-088:

நலமா சுபி, மீண்டும் மன்றத்த்தில் காண்பதில் மகிழ்ச்சி, அசத்துப்பா..

அமரு சொல்லவே இல்ல!!!!

சுகந்தப்ரீதன்
18-04-2012, 11:15 AM
நலமா சுபி, மீண்டும் மன்றத்த்தில் காண்பதில் மகிழ்ச்சி, அசத்துப்பா..
அமரு சொல்லவே இல்ல!!!!
ஹி..ஹி..என்கிட்ட கூடத்தான்..!!:lachen001: