PDA

View Full Version : நந்தன ஆண்டு....!



govindh
12-04-2012, 11:22 PM
நல்லன எல்லாம் தருவாய்...
நந்தன ஆண்டே...!

அல்லன எல்லாம் அழிப்பாய்...
அற்புத ஆண்டே....!

இல்லென எல்லாம் ஒழிப்பாய்...
இன்முக ஆண்டே....!

உள்ளன எல்லாம் உறுதியாக்குவாய்...
உன்னத ஆண்டே...!

நில்லென நின்று...
நிம்மதி செய்வாய்....
நித்திய ஆண்டே...!

சிவா.ஜி
12-04-2012, 11:38 PM
கவிதை மிக அருமை....நல்லதை செய்யும் ஆண்டாய் இந்த நந்தன ஆண்டு இருக்கட்டும். வாழ்த்துக்கள் கோவிந்த்.

(நல்லாருக்கீங்களா...ரொம்ப நாளாச்சு பாத்து)

கீதம்
13-04-2012, 06:30 AM
நந்தன ஆண்டின் வரவேற்போடு மன்றவருகை புரிந்திருக்கும் கோவிந்துக்கு இனிய வரவேற்பு.

இந்த ஆண்டு அனைவருக்கும் நலன் நல்குவதாகவே அமையும் என்று நம்புவோம்.

மன்ற நண்பர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.

govindh
13-04-2012, 08:34 AM
கவிதை மிக அருமை....நல்லதை செய்யும் ஆண்டாய் இந்த நந்தன ஆண்டு இருக்கட்டும். வாழ்த்துக்கள் கோவிந்த்.

(நல்லாருக்கீங்களா...ரொம்ப நாளாச்சு பாத்து)
மிக்க நன்றி அண்ணா.
வணக்கம்...வாழ்த்துக்கள்...

(இனி தொடர்ந்து வர இயலுமென நம்புகிறேன்...)

govindh
13-04-2012, 08:35 AM
நந்தன ஆண்டின் வரவேற்போடு மன்றவருகை புரிந்திருக்கும் கோவிந்துக்கு இனிய வரவேற்பு.

இந்த ஆண்டு அனைவருக்கும் நலன் நல்குவதாகவே அமையும் என்று நம்புவோம்.

மன்ற நண்பர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி அக்கா...
வணக்கம்...வாழ்த்துக்கள்...

நாஞ்சில் த.க.ஜெய்
13-04-2012, 08:49 AM
மன்ற தோழர் தோழியர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

vasikaran.g
21-04-2012, 10:05 AM
ஜெய் அவர்களே ..கவிதை அருமை ..

நந்தன நிந்தனை போக்கி
வந்தணை செய்யட்டும் ..

Dr.சுந்தரராஜ் தயாளன்
21-04-2012, 12:49 PM
எல்லா ஆண்டுகளுக்கும் இந்தக்கவிதை அருமையாகப் பொருந்துகிறது. வாழ்த்துகள் கோவிந்த் அவர்களே:)

bharindra
22-04-2012, 10:28 AM
எல்லா ஆண்டுகளுக்கும் இந்தக்கவிதை அருமையாகப் பொருந்துகிறது. வாழ்த்துகள்.

இந்த ஆண்டு அனைவருக்கும் நலன் நல்குவதாகவே அமையும் என்று நம்புவோம்.

ஆதி
24-04-2012, 01:09 PM
நல்லன எல்லாம் தருவாய்...
நந்தன ஆண்டே...!

அல்லன எல்லாம் அழிப்பாய்...
அற்புத ஆண்டே....!

இல்லென எல்லாம் ஒழிப்பாய்...
இன்முக ஆண்டே....!

உள்ளன எல்லாம் உறுதியாக்குவாய்...
உன்னத ஆண்டே...!

நில்லென நின்று...
நிம்மதி செய்வாய்....
நித்திய ஆண்டே...!

அழகிய வரவேற்புக் கவிதை கோவிந்

நந்தன ஆண்டு, நன் தன ஆண்டாய் எல்லோருக்கும் அமையட்டும்

வாழ்த்துக்கள்

நலமா கோவிந்த் ? ரொம்ப நாளா ஆளைக்கானாமே ???