PDA

View Full Version : க’ண்’அவன்....!!!!



சிவா.ஜி
11-04-2012, 08:38 PM
அவனை எனக்கு சில மாதங்களாய்தான் தெரியும்
என் பேருந்து நிறுத்தத்தில் பார்த்திருக்கிறேன்
என் கல்லூரி வாசலில் கண்டிருக்கிறேன்
என் வீட்டருகே வாசல்தாண்டி நிற்பதை கவனித்திருக்கிறேன்...
காமமில்லாக் காதலைத் தரவல்லவனென்ற நினைப்பை
எனக்குள் ஊன்றியவனை நிதானித்துப் பார்த்திருக்கிறேன்...
அந்த பார்த்தலும், கவனித்தலும் பிழையானதல்ல என்பதை
அவனைக் காதலித்துப் பின்....
என் கணவனாக்கிய பிறகு தெரிந்துகொண்டேன்.......!!!
என்னை தன் தோழியாய் ஏற்றுக்கொண்டவனின்
உயருள்ளத்தை என் பார்வையில் அறிந்துகொண்ட
என்னைப் பற்றிய பெருமிதத்தில் இன்பமாய் இருக்கிறேன்...!!
நான் நானாய் இருக்க அனுமதிக்கிறான்....
என் குழந்தையோடொரு குழந்தையாய் அடம் பிடிக்கிறான்
எங்கள் வாழ்க்கைத் தேர் ஓட தனியனாய் வடம் பிடிக்கிறான்...
இதையெதையுமே உணராமல் எங்களை
வதை செய்யும் பிரிவை தந்த
என் பெற்றோரும் எங்களைப் புரிந்துகொள்ள
மேலும் சமயம் கொடுக்கிறான்.....!!!
என் முடிவு தவறல்ல...இளமை துணிவல்ல
என நாளும் உணர்த்தி சிரிக்கிறான்......!!!

கீதம்
11-04-2012, 10:34 PM
இத்தனையும் செய்ய இயலும் அவனால் இறுகிய மனங்களை இளக்கவும் இயலும்.

கணவனே க'ண்' அவனாய் இருக்கும்போது, காதல் மனைவிக்கு மனக்கவலையேது?

அழகான காதல் சொல்லும் கவிதைக்குப் பாராட்டுகள் அண்ணா.

சிவா.ஜி
11-04-2012, 10:52 PM
ரொம்ப நன்றிம்மா தங்கையே......எதையும் உணராத இக்காலக் காதலின் விபரீதம் அறிந்த தகப்பனாய்....இவ்வரிகள் உதித்தன... உணர்வுகள்தானே....உண்மைக்காதலை வெளிப்படுத்தும்....

ஆதவா
12-04-2012, 04:02 AM
இப்போதெல்லாம் பிள்ளைகள் சரியாக முடிவெடுக்கிறார்கள். இதை பெற்றோர்களும் புரிந்து கொள்ளவேண்டும்.
ஒரு சிறுகதை நெஞ்சில் ஓடுகிறது படிக்கையில்....

வாழ்த்துகள் அண்ணா.

தாமரை
12-04-2012, 05:11 AM
வாழ்க்கையில் எது முக்கியம்? எது அதி முக்கியம்?
வாழ்க்கையில் எது தேவை? எது அத்தியாவசியத் தேவை?

இதையெல்லாம் கணக்கு போட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு
காதல் புரிவதில்லை. கவலைகள்தான் வருகிறது.

அவன் அவளிடத்தில் என்ன கண்டான் - யாருக்கும் கவலையில்லை
அவள் அவனிடத்தில் என்ன கண்டாள் - யாருக்கும் கவலையில்லை

பெற்றோர்களுக்கு
மகன் எதிர்காலம்
மகள் கௌரவம்

வாழ்ந்து காட்டுவதே வழி!!!

மிச்சமிருக்கும் ஒரே வலி
யார் யாருக்காக!!!

ஆதவா
12-04-2012, 05:44 AM
வாழ்க்கையில் எது முக்கியம்? எது அதி முக்கியம்?
வாழ்க்கையில் எது தேவை? எது அத்தியாவசியத் தேவை?

இதையெல்லாம் கணக்கு போட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு
காதல் புரிவதில்லை. கவலைகள்தான் வருகிறது.


அண்ணா, அப்படியென்றால் இதையெல்லாம் கணக்கு செய்யக்கூடாது என்கிறீர்களா?
எது முக்கியம் என்று முடிவெடுப்பது கவலையைத் தருமா? :eek:

சிவா.ஜி
03-06-2012, 07:28 PM
எனக்கும் அதே யோசனைதான் ஆதவா....இந்த கணக்கெல்லாம் தேவையில்லையா...!!....காதலில் கணக்குத் தேவையில்லையா....அல்லது கணக்கில் காதலில்லையா???

தாமரைக் கேள்விகளில் இதுவுமொன்று...!!!!!

aasaiajiith
09-06-2012, 06:54 AM
நல்ல வரிகள் !


வரிகளுக்கு வாழ்த்துக்கள் !

மதி
09-06-2012, 07:31 AM
நல்லதொரு சிந்தனை... பிள்ளைகள் பிறந்தபிறகுமா பெற்றவர் மனம் மாறவில்லை.. வரட்டுகௌரவங்களுக்குள் புதையுண்ட மனிதர்..!

எல்லா பெண்களுக்கும் இப்படி ஒரு கணவன் கிடைக்கமாட்டானா என ஏங்க வைக்கும் கவிதை போலிருக்கு.. :)

சிவா.ஜி
09-06-2012, 08:01 AM
ஆமாம் மதி இப்படியும் புரிந்துகொள்ளாத பெற்றோர் இருக்கத்தான் செய்கிறார்கள், அவர்களும் புரிந்துகொள்வார்கள், நன்றி மதி.