PDA

View Full Version : சென்னை, பெங்களூர், கல்கத்தா, குவஹாத்தியில் நிலநடுக்கம்

ஆதி
11-04-2012, 09:08 AM
இன்று சென்னை, பெங்களூர், கல்கத்தா, குவஹாத்தியில் நிலநடுக்கம் சுமார் மதியம் 2 மணி அளவில் உணரப்பட்டாத சொல்லப்படுகிறது

நண்பர் ஒரு சுழல்நாற்காலி சுழன்றதாக கூறினார்

aren
11-04-2012, 09:36 AM
சேதம் ஏதாவது ஏற்பட்டதா?

ஆதி
11-04-2012, 09:45 AM
தெரியலை அண்ணா
இந்தோநேஸியா, ஜப்பானிலும் பதிவாகி இருகிறது
சிங்கபூரிலும் கூடவாம்

8.7 சுமத்ராவில்

செல்வா
11-04-2012, 10:25 AM
சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தாமரை
11-04-2012, 11:51 AM
சுனாமி வராது என்று தகவல். இந்த புவி அதிர்ச்சி கிடைமட்டமாக இருந்தது. கிடைமட்டமான நகர்வில் சுனாமி உண்டாக வாய்ப்புக் குறைவாம். செங்குத்தான நகர்விலேயே சுனாமி உண்டாக அதிக வாய்ப்பு உண்டாம்.

அதிர்வு உண்டாகி இரண்டு மணி நேரமாகியும் சுனாமி உண்டாகவில்லை. எனவே இன்னும் சிறிது நேரத்தில் எச்சரிக்கை நீக்கப்படும்.

கொசுறு தகவல் : 4:21 க்கு சென்னையில் மீண்டும் நிலாதிர்வு உண்டானதாக தகவல்.

பூமகள்
11-04-2012, 12:15 PM
வெளி நாட்டு வாழ் நம் மக்கள் நலம் அறிய அவரவர் இங்கு பதிவிட்டு உறுதிப்படுத்துங்களேன்..

இருக்கும் ஒரே தொடர்பு மன்றம் மட்டுமே.. மத்ததுல அனுப்பினாலும் பார்க்க மாட்டீங்கிறாய்ங்க.... ஹூம்... :(

ஆதி
11-04-2012, 12:54 PM
சுனாமி வராது என்று தகவல். இந்த புவி அதிர்ச்சி கிடைமட்டமாக இருந்தது. கிடைமட்டமான நகர்வில் சுனாமி உண்டாக வாய்ப்புக் குறைவாம். செங்குத்தான நகர்விலேயே சுனாமி உண்டாக அதிக வாய்ப்பு உண்டாம்.

அதிர்வு உண்டாகி இரண்டு மணி நேரமாகியும் சுனாமி உண்டாகவில்லை. எனவே இன்னும் சிறிது நேரத்தில் எச்சரிக்கை நீக்கப்படும்.

கொசுறு தகவல் : 4:21 க்கு சென்னையில் மீண்டும் நிலாதிர்வு உண்டானதாக தகவல்.

4:21 க்கு முன் சுமத்ராவில் மீண்டும் 8.2 அளவில் பதிவானது, இதை அடுத்தே மீண்டும் அதிர்வுகள் சென்னையிலும் மற்ற* பிற பகுதியிலும் உண்ரப்பட்டன

மதுரை, ஊட்டி என்று தமிழகத்தில் பலப்பகுதியிலும், மும்மையில் இருந்து 155 ககிமி தூரத்தில் அரபிக்கடலில் 3.4 ரிக்டரிலும் பதிவனாது, டெல்லியிலும் உண*ரப்பட்டதாக* தகவல்கள் சொல்கிறது

தகடுகள் பழைய நிலைக்கு திரும்பும் வரை மீண்டும் மீண்டும் அதிர்வுகள் உணரப்படும் இல்லையாண்ணா ?