PDA

View Full Version : என்ன செய்வது? வருத்தத்துடன் முடிக்கிறேன்.



ravikrishnan
09-04-2012, 06:35 PM
ஐயா, தாங்கள் பல உண்மைகளை சொன்னாலும் இன்றும் தமிழக மக்களின் இடையே ராஜீவ்காந்தியின் மரணத்தின் பாதிப்பால் நமது இரத்தத்திற்கு உதவ முடியாமல் போராட முடியாமல் வருந்திய நாள்கள் பல தமிழ்மக்களிடம் உண்டு. என்னுடன் பணியாற்றும் ராணுவ நண்பர்களும் இந்தக்கருத்தை சொன்னார்கள். என்ன செய்வது? படும் துன்பத்தை காணும்போது இது பல தமிழ் இளைஞர்களின் ஆவேசமாக இருந்து வருகிறது. என்னசெய்வது? வருத்த்துடன் முடிக்கிறேன்.

அமரன்
09-04-2012, 07:55 PM
ஐயா...

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று விளங்கவில்லை. இருந்தாலும் பழங்கதை பேசுவதில் நாட்டம் காட்டுவதாகத் தெரிகிறது. இந்த நாட்டம்தான் தமிழனுக்கு பல நட்டங்களைக் கணக்கில் சேர்த்தது என்பதை மறவாதீர்கள்.

rajkulan
11-04-2012, 06:05 AM
நாம் தமிழர்கள், ராஜீவ் காந்தி கொலை பிரதிபலிப்பு தான், நம்மை நம்தமிழினத்துக்கு உதவிபுரிய முடியாமல் தடுப்பதாக கருத்துத் தெரிவிக்கிறீர்கள். ஆனால் அன்னை இந்திரா காந்தியை கொலை செய்தவர்கள் சீக்கிய இனத்தைச் சேர்ந்தவர்கள், அவர்களில் ஒருவர் இன்று இந்திய பிரதமராகவில்லையா? ஆனால் தமிழர்கள் விவகாரம் ராஜீவ் காந்தி கொலைப்பழியின் பெயரால் தமிழினத்துக்குக் மறைமுகமாகக் காட்டும் இனவாதம் என்பது எனது மட்டுமல்ல பல அரசியல், சமூக ஆர்வமுள்ள இளைஞர்களின் கருத்து... இக் கருத்து உணர்வைத் தூண்டுவதற்காக அல்ல. சிந்திப்பதற்காக...! தயவு செய்து ராஜீவ் காந்தி மரணம் பற்றிய ஒருதலைப் பட்சமான கருத்துக்களை விடுத்து, ஒட்டுமொத்த தமிழர்களின் வளச்சியைப் பற்றி சிந்தியுங்கள். இப்படிப் பார்க்கப் போனால், ராஜீவ் காந்தி ஆட்சிக் காலத்தில் நமது இந்திய இராணுவம் இலங்கையில் பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது. ஆனால் அதற்காக என்றும் தமிழர்கள் வரிந்து கட்டிக் கொண்டு பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கியதில்லை. எனவே, பழய கதைகளை ஓரங்கட்டிவிட்டு, இன்றைய ஒரே தேவை நமது இரத்த சொந்தங்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக் கொடுக்க நாம்மெல்லாம் பாடுபடுவோம். இனி வரும் நாட்களில் இலங்கையில் தனித் தமிழீழம் தேவைதானா? என் ஐநா வாக்கெடுப்பு நடத்தவிருக்கிறது. அதில் நாம் ஒண்றினைந்து செயல்பட்டு, நமது உறவுகளுக்கு ஒரு தனி நாட்டைப் பெற்றுக் கொடுப்போம். தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்த் நில்லடா....!!!!!!!!!!

நன்றி.

aren
11-04-2012, 06:24 AM
என்ன சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. கொஞ்சம் விளக்கமாக சொன்னால் புரிந்துகொள்ள வசதியாக இருக்கும்.

rajkulan
12-04-2012, 05:19 AM
இதற்கான முழு விளக்கம் “மூன்றாவது உலகப்போருக்கு முன்னுரை! இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என்பது மட்டும் உறுதி” எனும் பதிப்பில் பதிந்திருக்கிறேன்” அதில் படித்துப் பாருங்கள்.

கலைவேந்தன்
12-04-2012, 05:26 AM
தலையும் புரியல. காலும் புரியல. வாலோ புரியவே இல்லை.

rajkulan
12-04-2012, 06:11 AM
ஐயா, தாங்கள் பல உண்மைகளை சொன்னாலும் இன்றும் தமிழ்கமக்களின்இடையே ராஜீவ்காந்தின் மரணத்தின் பாதிப்பால் நமது இரத்ததிக்கு உதவமுடியாமல் போராடமுடியமல் வருந் தியநாள்கள் பல தமிழ்மக்களிடம் உண்டு, என்னுடன் பணியாற்றும் ராணூவநண்பர்கலும்எந்தகருத்தை சொன்னார்கள்.என்னசெய்வது படும்துன்பத்தை காண்னும்போது இது பலதமிழ் இளைங்கர்களின் ஆவேசமாக இருந்தது வருகிறது.என்னசெய்வது? வருத்த்துடன் முடிக்கிறேன்.


இதற்காக தான் - நாம் தமிழர்கள், ராஜீவ் காந்தி கொலை பிரதிபலிப்பு தான், நம்மை நம்தமிழினத்துக்கு உதவிபுரிய முடியாமல் தடுப்பதாக கருத்துத் தெரிவிக்கிறீர்கள். ஆனால் அன்னை இந்திரா காந்தியை கொலை செய்தவர்கள் சீக்கிய இனத்தைச் சேர்ந்தவர்கள், அவர்களில் ஒருவர் இன்று இந்திய பிரதமராகவில்லையா? ஆனால் தமிழர்கள் விவகாரம் ராஜீவ் காந்தி கொலைப்பழியின் பெயரால் தமிழினத்துக்குக் மறைமுகமாகக் காட்டும் இனவாதம் என்பது எனது மட்டுமல்ல பல அரசியல், சமூக ஆர்வமுள்ள இளைஞர்களின் கருத்து... இக் கருத்து உணர்வைத் தூண்டுவதற்காக அல்ல. சிந்திப்பதற்காக...! தயவு செய்து ராஜீவ் காந்தி மரணம் பற்றிய ஒருதலைப் பட்சமான கருத்துக்களை விடுத்து, ஒட்டுமொத்த தமிழர்களின் வளச்சியைப் பற்றி சிந்தியுங்கள். இப்படிப் பார்க்கப் போனால், ராஜீவ் காந்தி ஆட்சிக் காலத்தில் நமது இந்திய இராணுவம் இலங்கையில் பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது. ஆனால் அதற்காக என்றும் தமிழர்கள் வரிந்து கட்டிக் கொண்டு பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கியதில்லை. எனவே, பழய கதைகளை ஓரங்கட்டிவிட்டு, இன்றைய ஒரே தேவை நமது இரத்த சொந்தங்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக் கொடுக்க நாம்மெல்லாம் பாடுபடுவோம். இனி வரும் நாட்களில் இலங்கையில் தனித் தமிழீழம் தேவைதானா? என் ஐநா வாக்கெடுப்பு நடத்தவிருக்கிறது. அதில் நாம் ஒண்றினைந்து செயல்பட்டு, நமது உறவுகளுக்கு ஒரு தனி நாட்டைப் பெற்றுக் கொடுப்போம். தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்த் நில்லடா....!!!!!!!!!!


- என எழுதினேன். தயவு செய்து குழம்பாதீர்கள்.
இந்த இடத்தில் பதித்தது தவறெனில் மன்னிக்கவும்.

சிவா.ஜி
12-04-2012, 10:01 PM
ராஜ்குலன்....குழப்பம் உங்கள் பதிவைப் பற்றியல்ல....முதற்பதிவைப் பற்றியதுதான். உங்கள் கருத்தை மதிக்கிறேன்.