PDA

View Full Version : கையற்ற பொம்மைகள்..

கலைவேந்தன்
07-04-2012, 01:19 PM
http://www.chinasmack.com/wp-content/uploads/2009/10/china-handless-man-fixes-bicycles-with-feet-16.jpg

கையற்ற பொம்மைகள்.

நம்பிக்கை வைக்காத மனிதன்
கையற்ற பொம்மை என்பேன்..

வாழ்க்கை எனும் வழுக்குநிலத்தைக்
கரைசேர வைக்கும் கோல் நம்பிக்கை..

அஃதின்றி

கையற்ற பொம்மைகள்
கைதட்ட முனைவது போல்
கால் நழுவிச்செல்லும் பூமி..
கைகொடுக்க யாரும்வருவாரோ..?

அடுத்தவேளைக்காய்
நம்பிக்கை வைத்ததால்
அசந்து உறங்குகிறது தெருநாயும்..

அடுத்த பயணம் பயனுறும் என்பதால்
காலிடுக்குகளில் கூட
லாவகமாய் ஊர்கின்றன எறும்புகள்..

இன்றைய பூச்சி வாய் நழுவிய போதும்
நம்பிக்கையுடன் முன்னேறும் பல்லிகள்..

புறக்கையை எண்ணி
இறுமாந்தவனைப்பார்த்து
இல்லாத கைகொட்டிச் சிரிக்கின்றான்
நம்பிக்கை மட்டுமே கொண்ட*
கால் மனிதன்....

நம்பிக்கை..
ஓர் ஊன்றுகோலல்ல..
நம்மை உயர்த்தும்
சான்றுகோல்..

அவற்றை இழந்தவனைப்பார்த்து
கெக்கலித்துச் சிரிக்கிறது
கையற்ற பூமிப்பந்து..!

சிவா.ஜி
07-04-2012, 01:28 PM
உண்மைதான் கலை. நம்பிக்’கை’ அதுதானே நம்மை விடியலில் விழிக்க வைக்கிறது. அடுத்த நாளை எதிர்நோக்க வைக்கிறது....

அழகான கருத்து சொன்னக் கவிதைக்கு வாழ்த்துக்கள் கலை.

Dr.சுந்தரராஜ் தயாளன்
07-04-2012, 01:55 PM
நம்பிக் கை வைப்பதால் நம்பிக்கை என்றாரோ
தும்பிக்கை யானைத் தொழுது?

நன்று கலைவேந்தன் :)

தீபா
07-04-2012, 03:16 PM
கையற்ற பொம்மைகள் என்றதும் எனக்கு நினைவுக்கு வருவது சுதந்திரம்தான். கண் கண்டும் எதையும் செய்யமுடியாத விஷயம். நம்பிக்கை இருந்தால் காலே கைதானே.
கவிதை நம்பிக்கையோடு இருக்கிரது திரு.கலைவேந்தன்.
தொடர்ந்து எழுதுங்கள்

பறவைகளின் இறக்கைகள் மனிதனின் கை என்ற கவிதை நினைவுக்கு வருகிறது. ஏனோ...

- தீபா

அமரன்
07-04-2012, 09:35 PM
சுத்தும் பூமியின் அச்சு நம்பிக்கை.. இழந்தவன் பூமியில் வாழத்தகுதியற்றவன்..

நல்ல கவிதை..

நம்பிக்கை வைத்துக் கல்லைப் பார்த்தால் கடவுள் என்றார் கவிஞர்.
அதையே மூடநம்பிக்கை என்று உடைக்க முனைந்தார்கள் பகுத்தறிவாளர்கள்..இப்படித்தான் நம்பிக்கை மெல்ல மெல்ல உடைந்திருக்குமோ..

கலைவேந்தன்
08-04-2012, 05:11 AM
உண்மைதான் கலை. நம்பிக்’கை’ அதுதானே நம்மை விடியலில் விழிக்க வைக்கிறது. அடுத்த நாளை எதிர்நோக்க வைக்கிறது....

அழகான கருத்து சொன்னக் கவிதைக்கு வாழ்த்துக்கள் கலை.

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி நண்பனே..!

கலைவேந்தன்
08-04-2012, 05:12 AM
நம்பிக் கை வைப்பதால் நம்பிக்கை என்றாரோ
தும்பிக்கை யானைத் தொழுது?

நன்று கலைவேந்தன் :)

அழகான குறள்பின்னூட்டத்திற்கு மகிழ்ந்தேன் தயாளன்..!

கலைவேந்தன்
08-04-2012, 05:14 AM
கையற்ற பொம்மைகள் என்றதும் எனக்கு நினைவுக்கு வருவது சுதந்திரம்தான். கண் கண்டும் எதையும் செய்யமுடியாத விஷயம். நம்பிக்கை இருந்தால் காலே கைதானே.
கவிதை நம்பிக்கையோடு இருக்கிரது திரு.கலைவேந்தன்.
தொடர்ந்து எழுதுங்கள்

பறவைகளின் இறக்கைகள் மனிதனின் கை என்ற கவிதை நினைவுக்கு வருகிறது. ஏனோ...

- தீபா

நீங்கள் சொல்லும் சுதந்திரம் மிகவும் பொருந்துகிறது தீபா.. கைபெற்றும் காற்றில் ஓவியம் வரையும் கையற்ற பொம்மைகள் இந்தியர்தாம்..

நீங்கள் குறிப்பிட்ட பறவைகளின் இறக்கைகள் மனிதனின் கைகள் என்பதும் எனக்கு எழுதும்போது வந்து போனதென்பதோ உண்மைதான்.

மிக்க நன்றி தீபா..

கலைவேந்தன்
08-04-2012, 05:16 AM
சுத்தும் பூமியின் அச்சு நம்பிக்கை.. இழந்தவன் பூமியில் வாழத்தகுதியற்றவன்..

நல்ல கவிதை..

நம்பிக்கை வைத்துக் கல்லைப் பார்த்தால் கடவுள் என்றார் கவிஞர்.
அதையே மூடநம்பிக்கை என்று உடைக்க முனைந்தார்கள் பகுத்தறிவாளர்கள்..இப்படித்தான் நம்பிக்கை மெல்ல மெல்ல உடைந்திருக்குமோ..

ஒரு நம்பிக்கையிஅ இன்னொரு நம்பிக்கை உடைப்பதும் அதை இன்னுமொரு நம்பிக்கை உடைப்பதும் ஆக கை உடைப்பது மனித வாழ்வில் நாடோறும் நடப்பதே தான் அமரன்.

அழகான பின்னூட்டத்திற்கு நன்றி அமரன்..!

vasikaran.g
08-04-2012, 10:30 AM
உண்மை யை உரைத்த விதம் அருமை ..

கலைவேந்தன்
08-04-2012, 03:19 PM
உங்கள் பாராட்டுக்கு நன்றி வசிகரன்..!