PDA

View Full Version : கிட்னிச்டொன்(Kidney stone) எதனால் வருகிறது



ravikrishnan
07-04-2012, 08:53 AM
ஐயா,கிட்னிச்டொன்(Kidney stone) எதனால் வருகிறது அதை எப்படி நீக்குவது?விளக்கம் தாறுங்கள்

jayanth
08-04-2012, 07:32 AM
சிறுநீரில் பல வேதிப் பொருட்கள் கலந்துள்ளன. அவற்றுள் சில மணிச்சத்துக்கள், சில உயிரியற் பொருட்கள். இவை இரண்டும் தகுந்த விகிதத்தில் இருப்பதால்தான் அவை படிகங்களாகவோ, (crystals) திடப்பொருள்களாகவோ, சிறுநீர்த் தாரைகளில் படியாமல் இருக்கின்றன. சிலருக்கு ஏற்படும் வளர்சிதை மாற்றங்கள் இவற்றின் விகிதங்களை மாற்றி இவற்றைச் சிறு துகள்களாகவோ, கற்களாகவோ படிய வைக்கின்றன. இவையே நாளடைவில் கற்களாக உருவாகின்றன.

ravikrishnan
08-04-2012, 07:41 AM
ஐயா, மிக்க நன்றி!அதைஎவ்வாறு நீக்குவது உங்கலுக்கு தெரிந்தவற்றை சொல்லுங்கள்.

sakthim
11-04-2012, 06:17 AM
சிறிய வாழை மரத்தின் பாதியை வெட்டி அதன் நடுவே இருக்கும் (inner layer)
உட்குருத்தை வெட்டி எடுத்து ஒரு குழி போல் ஆக்க வேண்டும்.இதை சூரியன்
மறைந்ததும் சாயங்காலம் வெட்டி வைத்துவிட்டு அதன் மேல் பனிவிழும்படி
இருக்க வேண்டும். வெட்டிய இடத்தின் மேல் ஒரு சல்லடை(Filter) வைத்துவிட
வேண்டும். அதிகாலை 7 மணிக்குள் வெட்டிய இடத்தை பார்த்தால் அந்த இடம்
முழுவதும் வாழைச்சாற்றால் நிரப்பப்பட்டிருக்கும்.



அப்படியே ஒரு உறிஞ்சு குழல் (straw) கொண்டு வெறும் வயிற்றில் குடிக்க
வேண்டும். அதன் பின் சரியாக 9 மணிக்கு தண்ணீர் குடிக்க வேண்டும் அதன்
பின் காலை உணவு சாப்பிடலாம்