PDA

View Full Version : தோழி - இறுதி அத்யாயம்Kausalya
07-04-2012, 04:46 AM
சிறிய கட்டிடம் வீடுகளுக்கு நடுவே, பள்ளி என முகப்பில் பெயர் பலகை வைத்திருந்ததால் அடையாளம் சட்டென தெரிந்தது. மறுநாள் அங்கு தயக்கத்துடன் உள்ளே சென்றேன். இருவர் சிறியவயதே இருக்கும் நாற்காலியில் அமர்ந்திருந்தனர்.

“சார், புதுசா ஸ்கூல் ஆரம்பிச்சிருக்கீங்க போலருக்கு. நான் இளநிலை ஆங்கிலம் செய்யறேன். ஹிந்தியும் படித்திருக்கிறேன். உங்க ஸ்கூலில் டீச்சர் வேலை காலியா இருக்கா?” என்றேன்.
இருவரில் சிறிது குள்ளமாக இருந்தவர் பேசினார். சரிங்க மேடம், உங்க பயோடேடா கொண்டு வந்திருக்கீங்களா.?” என்றவுடன் நீட்டினேன். சரி நாளை உங்களுக்கு கால் செய்கிறோம். என்றார்.
சந்தோஷத்துடன் வீடு திரும்பினேன். அடுத்த நாள் அழைப்பு வரவே எனது சர்ட்டிஃபிகேட்டுடன் சென்றேன். எல்லாவற்றையும் பார்த்துவிட்டு ”இது மே மாதம், நீங்க ஜூன் நான்காம் தேதி ஜாய்ன் பண்ணறீங்களா? என கேட்டனர். உடனே ஒப்புக்கொண்டேன். 3ஆம் வகுப்பு ஆசிரியராக நியமனமானேன். மாதம் 4000/- சம்பளம் முதல் சம்பள பணம் நிர்ணயிக்கப்பட்டது. மிக்க சந்தோஷத்துடன் வீடு வந்து சேர்ந்தேன்.

நாட்கள் நகர்ந்தன மெதுவாக ஆனாலும் எனது பரிட்சைகளுக்கு பங்கம் வராமல் மே மாதமே முடிந்து ஜூன் மாதம் தான் ஆசிரியர் பணிக்கு செல்வதால் மிக வசதியான உத்தியோகமாகபட்டது பல விதத்தில். ஜூன் 4ம் தேதி பரபரப்பாக இருந்தது பள்ளி. நான் சென்றது அந்த உயரமான சார் என்னை பார்த்து வாங்க வாங்க என்றார். உடனே அந்த குள்ளமான சார் வாங்க டீச்சர் உள்ள போய் ப்ரேயர் ஆரம்பிக்க போகுது போய் பசங்கள பாருங்க என உரிமையுடன் முதல் பணியை இட்டார்.

ப்ரேயர் செய்யும் இடமும் ஒரு 100 பேர் நிற்கும் இடமாக கச்சிதமாக இருந்தது. நிறைய பிள்ளைகளுடன் அவரவர் பெற்றோரும் நின்று கொண்டு அழும் பிள்ளைகளை சமாதம் செய்து கொண்டிருந்தனர். அதில் ஒருத்தி சுடிதாரில் மாநிறமாக ஒர் குழந்தையை சமாதனப்படுத்த முயற்சித்து தோற்றுக்கொண்டிருந்தாள். யாராக இருக்கும் என யோசித்து பின் சித்தி அத்தை உறவாக இருக்கும் என விட்டு சென்றேன் அவளையும் அவள் நினைவையும்.

ப்ரேயர் முடியவும் ஒவ்வொரு பெற்றோராக அழும் குழந்தைக்கு டாடா காட்டிவிட்டு மறைந்தனர். எனகான க்ளாஸ் ரூம் எது என கேட்க மாடியில் உள்ளது என உயர ஆசாமி சார் ரூமிக்கே உடன் வந்து விட்டுசென்றார். எல்லா பசங்களும் வரிசையில் மேலேயேறி வர, எனது மூன்றாம் வகுப்பு மாணாக்கர்களும் அவர்தம் இருக்கையில் தேர்ந்தெடுத்து அமர்ந்து கொண்டனர்.
ஒர் மதில் சுவர் போல் தடுப்பு மட்டுமே உள்ள பக்கத்து க்ளாஸ் ரூமிலிருந்து ஒர் இளம்பெண் மாணவர்களை சத்தம் போடமல் இருக்கச் சொல்லி இரச்சும் குரல் கேட்க எனக்கு ஆர்வம் மேலிட்டது யாராக இருக்கும் ஃப்ரண்ட் ஆகிக்கலாம் என எண்ணி எட்டி பார்த்தேன். எனக்கு ஆச்சர்யமாக போய்விட்டது அந்த சுடிதார் பெண். ஆ..இவளா? இவ டீச்சரா? இப்படி இருந்தா எப்படி பசங்க பயப்படும் மரியாதை கொடுக்கும் என எண்ணினேன். அதற்கேற்றார் போல் அங்குள்ள பிள்ளைகள் ஒவ்வொருவராக அக்கா எனக்கு தண்ணி வேணும், அக்கா எனக்கு பாத்ரூம் போகனும் என கேட்க கடுப்பாகி போனாள் அவள். நானோ சிரித்துவிட்டேன் என் சிரிபொலி கேட்டவுடன் யாரது என்பது போல் என் பக்கம் திரும்பிப்பார்த்தாள்.

தொடரும்....

jayanth
07-04-2012, 05:22 AM
சுவாரசியமாக இருக்கிறது...!!! தொடருங்கள்...!!!

Dr.சுந்தரராஜ் தயாளன்
07-04-2012, 05:45 AM
ஆஹா...துவக்கமே அருமையாக இருக்கிறதே...அந்தக்கால டூரிங் கொட்டகையில் எம்.ஜி.ஆர் படம் பார்க்கும்போது நல்ல விறுவிறுப்பாக ஓடும்போது ரீல் கட்டாகிவிடுமே அதைப்போல் சட்டென நிறுத்திவிட்டீர்கள்....தொடருங்கள் கௌசல்யா அவர்களே:)

அமரன்
07-04-2012, 06:14 AM
நீளக் கொட்டிலில் தடுப்பே இல்லாமல் பிரிக்கப்பட்ட வகுப்பறையில் கல்வி கற்ற தாயக நினைவுகளும், சம்மந்தமே இல்லாத சூழலில் தாய்மொழியைக் கற்பிக்கும் புகழிட அனுபவமும் கலந்து கதைக்குள் நுழைத்து விடுகின்றன.*

தொடருங்கள் கௌசல்யா..

அடுத்த பாகம் படித்ததும் கதையில் கரைந்து சுவை காட்டக் கூடியதாக இருக்கும்.

Kausalya
07-04-2012, 09:36 AM
சுவாரசியமாக இருக்கிறது...!!! தொடருங்கள்...!!!

தங்களது முதல் பாராட்டிற்கு நன்றி திரு.ஜயந்த! தொடர்கிறேன் விரைவில்...

Kausalya
07-04-2012, 09:56 AM
ஆஹா...துவக்கமே அருமையாக இருக்கிறதே...அந்தக்கால டூரிங் கொட்டகையில் எம்.ஜி.ஆர் படம் பார்க்கும்போது நல்ல விறுவிறுப்பாக ஓடும்போது ரீல் கட்டாகிவிடுமே அதைப்போல் சட்டென நிறுத்திவிட்டீர்கள்....தொடருங்கள் கௌசல்யா அவர்களே:)

ஊக்கம் தரும் தங்களின் வார்த்தைகள் என்னை மேலும் நன்றாக எழுத வைக்கும் நன்றி திரு.சுந்தரராஜ்தயாளன் அவர்களே!

Kausalya
07-04-2012, 09:58 AM
நீளக் கொட்டிலில் தடுப்பே இல்லாமல் பிரிக்கப்பட்ட வகுப்பறையில் கல்வி கற்ற தாயக நினைவுகளும், சம்மந்தமே இல்லாத சூழலில் தாய்மொழியைக் கற்பிக்கும் புகழிட அனுபவமும் கலந்து கதைக்குள் நுழைத்து விடுகின்றன.*

தொடருங்கள் கௌசல்யா..

அடுத்த பாகம் படித்ததும் கதையில் கரைந்து சுவை காட்டக் கூடியதாக இருக்கும்.

தங்களின் ரசிப்பிற்கும் கருத்திற்கும் நன்றி திரு.அமரன் அவர்களே!

கலைவேந்தன்
07-04-2012, 12:44 PM
தற்சமயம் கதைப்போக்கைப்பற்றிய நிர்ணயம் எதுவும் செய்ய இயலவில்லை. தொடருங்கள். சில பகுதிகளை வாசித்தபின் தான் தக்க கருத்துரை வழங்க இயலும்.

பாராட்டுகள் கௌசல்யா..!

arun
07-04-2012, 01:08 PM
நிதானமான ஆரம்பம் கதை சுவாரஸ்யமாக செல்கையில் தொடரும் போட்டு விட்டீர்கள் சீக்கிரம் அடுத்த பதிப்பை பதியுங்கள்

Kausalya
09-04-2012, 07:55 AM
தற்சமயம் கதைப்போக்கைப்பற்றிய நிர்ணயம் எதுவும் செய்ய இயலவில்லை. தொடருங்கள். சில பகுதிகளை வாசித்தபின் தான் தக்க கருத்துரை வழங்க இயலும்.

பாராட்டுகள் கௌசல்யா..!

சில பகுதிகள் எல்லாம் இல்லை கலைவேந்தன் அவர்களே நேரமின்னை காரணமாக நான் சீக்கிரமே முடித்து விட போகிறேன்.

பாராட்டுக்கு நன்றி!

Kausalya
09-04-2012, 07:59 AM
நிதானமான ஆரம்பம் கதை சுவாரஸ்யமாக செல்கையில் தொடரும் போட்டு விட்டீர்கள் சீக்கிரம் அடுத்த பதிப்பை பதியுங்கள்

தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

Kausalya
09-04-2012, 08:03 AM
5 மாதங்கள் ஓடிவிட்டன நானும் சுகன்யாவும்(சுடிதார் டீச்சர்) சிநேகமாகி அவள் மூலமே அனைத்தையும் அறிந்தேன். அவளுக்கு மட்டும் எப்படி அனைத்தும் தெரியும் என்றால் அந்த சின்ன சார் இவளது குடும்பத்தாருக்கு குடும்ப நண்பர். இவர்தான் ஸ்கூல் கரஸ்பாண்டண்ட் அப்பறம் அந்த நெட்டை பெரிய சார் பிரின்சிபல். கேட்டவுடன் சிரிப்புத்தான் வந்தது பிறகு அவர்களது முயற்சியும் நிர்வாகத்திறனும் கண்டு அசந்து போனேன். இந்த 5 மாதங்களின் மிகவும் கவர்ந்தவர் பெரிய சார் அவருக்கு நாங்க பெரிய தம்பி எனவும் இவரைவிட குள்ளமாக இருந்ததனால் சின்ன தம்பி எனவும் கோட்வேட் வைத்து கூப்பிட்டோம் எங்களுக்குள். பி.டி (பெரிய தம்பி) மனதில் குடிகொள்ள ஆரம்பித்தார் சிறிது சிறிதாக.

மாதங்கள் ஓடின அடுத்த மே மாதம் வரவும் எங்கள் வீட்டில் எல்லோரும் டூர் போவோம் என கேரளாவிற்கு சென்றோம். மிக ஆனந்தமான நாட்களாக கழிந்தன. எல்லா படங்களுடன் ஆசையாக எனது ஸ்கூல் மிஸ்களுக்கு காட்ட முக்கியமாக பி.டிக்கு காட்ட அவற்றை எப்படி எல்லாம் கமண்ட் அடித்து ரசிப்பார் என ஆவலாக ஊர் திரும்பும் நாளை எதிர்பார்த்திருந்தேன்.
நாளும் வந்தது.எனது க்ளாஸுக்கான விடைத்தாள் திருத்தும் பணி இருப்பதால் புகைப்பட ஆல்பமுடன் சென்றேன். எல்லா மிஸ்ஸுக்கும் காண்பித்தாயிற்று பி.டியிடமும் காண்பித்து ஒவ்வோன்றாக ரசிக்கும் அழகையும் பார்த்தாயிற்று ஆனால் சுகன்யாவை மட்டும் காணவில்லை. சரி இன்று முடியாவிட்டால் வீட்டிலேயே உட்கார்ந்து திருத்திக்கொண்டிருப்பாள் போலிருக்கிறதென்னி வீட்டிற்கு வந்தவுடன் அவளின் கைபேசிக்கு தொடர்பு கொள்ள முயன்றேன். யாரும் எடுக்கவில்லை. உடல் நிலை சரியில்லையோ என எண்ணி மீண்டும் அடித்து பின் அதற்கும் பதிலில்லாததால் தொந்தரவு செய்ய வேண்டாம் எனவிட்டுவிட்டென்.

அடுத்த நாள் அரக்க பரக்க சுகன்யாவே ஓடிவந்தாள் என் வீட்டிற்கு. அழுது கொண்டே நின்றாள். என்ன ஏதேன்றே தெரியாமல் குழம்பி போயிருக்கும் நேரத்தில் அவளது அப்பாவும் இவளை தேடிக்கொண்டு வந்திருக்க, விஷயம் ஒரளவிற்கு புரிய ஆரம்பித்தது. இவளுக்கு அவசர கல்யாணம் செய்ய முடிவெடுத்ததும் மண்டபத்திலிருந்து போவதறியாது என்னிடம் வந்துவிட்டாள். நடந்த விஷயங்களை அவள் கூறும் முன் அவள் அப்பாவே கூற ஆரம்பித்தார்.

நான் உல்லாச பயணம் சென்ற அன்று இவள் தனது காதலை சொல்ல சென்றாளாம் காதலனிடம். அதை அவர் ஒத்துக்கொள்ளாததால் தற்கொலை செய்து கொள்ள போய் பக்க்த்துவீட்டு அக்காவால் காப்பற்றப்பட்டு வீட்டிற்கு அந்த விஷயம் தெரியவர அவர்களும் இவளுக்கு வேறு வரன் தேடி சொந்தத்திலேயே மாப்பிள்ளையை முடியும் செய்துவிட்டனர். இன்று திருமண நாள். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவளது அப்பாவிடம் நானும் சேர்ந்து கெஞ்ச ஆரம்பித்தேன் அவளது விருப்பபடியே மணவாழ்க்கையை அமைத்துதர. ஆனால் பிடிவாதமாக மறுத்தார். இவளும் இந்த கல்யாணம் வேண்டாம் என்னால் அவரை சமாதானம் செய்து திருமணம் செய்ய இயலுமென பிடிவாதம் பிடித்துக்கொண்டிருந்தாள்.

ஆதி
18-04-2012, 06:27 AM
இரண்டு அத்யாயங்களையும் ஒரு சேர வாசித்தேன், பக்கத்தில் அமர்ந்து கதை சொல்வது போலொரு அனுபவம், தொடருங்கள் தொடர்ந்து வருகிறேமோ.

தலைப்பை நான் தேன் மாற்றினேன், அப்படியே இருக்கட்டும், அப்போதுதான் மற்றவர்களுக்கு நீங்கள் இரண்டாம் அத்யாயம் போட்டிருப்பது தெரியும்.

இராஜேஸ்வரன்
18-04-2012, 08:23 AM
கதை மிகவும் அழகாகவும் சுவாரஸ்யமாகவும் தொடர்கிறது. பாராட்டுக்கள்.

அடுத்து என்ன என்று அறிய ஆவலாக இருக்கிறது. தொடருங்க்ள்.

கலைவேந்தன்
18-04-2012, 03:13 PM
இப்போது கதையில் ஒரு திருப்பம் வந்துள்ளது. ஆதன் சொன்னதுபோல பக்கத்தில் அமர்ந்து கதை சொல்லுவதுபோல எளிய நடையில் அழகுறச்செல்கிறது கதை.

தொடருங்கள்.

Kausalya
02-07-2012, 01:24 PM
கருத்திட்ட அனைவருக்கும் நன்றி மற்றும் நீண்ட காலதாமதத்திற்கு மன்னிக்கவும். கதையை ஒரு வழியாக முடித்துவிடலாம் என எண்ணியே... முடித்தும்விட்டேன். (நேரமின்மையே காரணம், மீண்டும் மன்னிக்கவும்)

Kausalya
02-07-2012, 01:29 PM
அப்போதுதான் எனக்கு ஆத்திரம் தாங்காமல் யாருடி அவ்ளோ பெரிய ஆளு? நான் பேசறேன். ஒத்துக்கொண்டால் சரி இல்லை என்றால் அப்பாவின் மானத்தை காப்பாத்த மண்டபத்திற்கு போ என சொன்னதும் அவள் என்னடி இப்படி கேட்கற உனக்கு தெரியாதா நான் பி.டியை விரும்புவது என்றாள்.

எனக்கு தரை நழுவியது. பூகம்பம் வந்தது போலவே தோன்றியது. என்னால் நம்ப முடியவில்லை என் தோழி இவள் நான் விரும்புபவனையா காதலிக்கிறாள் அவனுக்காகவா இவ்வளவு பாடுபடுகிறாள் என்றதும் மனதில் இருந்த ஏதோ ஒன்று கழன்று விழ உணர்ந்தேன்.

இப்பவும் ஒர் வாய்ப்பு இவள் அப்பாவுடன் சமாதானம் செய்து மண்டபத்திற்கு செல்ல சொன்னால் இவளால் ஒன்றும் செய்ய இயலாது அடுத்து அவள் அப்பாவின் பிடிவாதத்தால் திருமணம் நடந்துவிடும். பின் நமக்கான பாதை வெளிச்சத்துடன் காணப்படும் என்று எண்ணத்திற்கூடே மனசாட்சி மனதிலிருந்து எட்டிபார்க்க, நானே பி.டிக்கு ஃபோன் செய்தேன். இவளுக்காக வார்த்தை வராமல் பேசினேன். பேச பேச என்னையறியாமல் என் தோழிக்காக பரிந்து பேச ஆரம்பித்தேன். கடைசியில் நேரில் சென்று பேச அவர் சம்மதித்தார். அதே திருமண்டபத்தில் அவள் கழுத்தில் இவர் கட்டிய தாலியுடன் சிரித்த முகத்துடன் என்னை பார்த்தாள்.

மண்டபத்திலிருந்து விடைபெற்று பழய நினைவுகளிலிருந்து விடுதலை பெற்று மன நிறைவுடன், தெளிந்த வானத்தை பார்த்தேன். மனதின் பிரதி பிம்பமாய் தோன்றியது. இவள் என்றும் என் தோழி. மாற்றமில்லாமல் என்றும் தோழமையுடன் நானும்.

முற்றும்.

Kausalya
02-07-2012, 01:43 PM
தங்களின் அனைவரின் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி!

சிவா.ஜி
02-07-2012, 03:07 PM
தயவுசெய்து யாராவது பொறுப்பாளர்கள் இந்த அத்தியாயத்தை பழுது பார்க்கவும்...மகா...மெகா பதிவாய் நூறுமுறை ரிப்பீட்டிருக்கிறது.

Kausalya
02-07-2012, 05:06 PM
அவசரத்தில் நான் செய்த பிழையை உடனே சரி செய்த திரு.ஆதன் அவர்களுக்கு மிக்க நன்றி.

மன்றத்தார் மன்னிக்கவும். பல முறை எடிட் செய்ய முயற்சித்தும் என்னால் இயலாத காரணத்தினால் பொறுப்பாளர்களின் கவனத்தை ஈர்க்கும் அளவிற்கு சென்றுவிட்டது.

கீதம்
03-07-2012, 12:40 AM
தோழிக்காக காதலை விட்டுக்கொடுத்த பெண்ணின் நிலையிலிருந்து சொல்லப்படுவதால் கதையின் கனம் கூடுகிறது. மனதிலும்.

காதலும் நட்பும் ஒருசேர அறிமுகமானாலும் இனி நட்புடன் மட்டுமே கைகோர்த்து நடக்கும் நிலை. மனசாட்சியின் குறுக்கீடற்ற வாழ்க்கை என்ன வாழ்க்கை! அதையும் அழகாய் உணர்த்திய கதை அருமை. முக்கியமாய் இக்கதையின் நேர்த்தியான எழுத்தோட்டமும், பிழையற்றத் தமிழும் என்னை வெகுவாய் ஈர்த்தன. மனம் நிறைந்த பாராட்டுகள் கௌசல்யா. தொடர்ந்து நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுதி வாருங்கள். உங்களிடம் நல்ல எழுத்தாற்றல் உள்ளது.

குறையென்று சொல்லப்பார்த்தால், கதையை வேகமாக முடித்ததால் சில இடங்களில் தெளிவின்மை புலப்படுகிறது. காதலின் அழுத்தம் எங்குமே வெளிப்படவில்லை. பி.டி.சார் உண்மையில் யாரைத்தான் காதலித்தார்? கதை நாயகியையா? அவளது தோழியையா? அல்லது இருவரையுமே இல்லையா? வற்புறுத்தலால் திருமணத்துக்கு ஒத்துக்கொண்டாரா? தோழிகள் தங்களிடையே தங்கள் காதலைப் பற்றிப் பேசிக்கொள்ளவே இல்லையா? பின் ஏன் தோழி இவளிடம் 'என்னடி இப்படி கேட்கற உனக்கு தெரியாதா நான் பி.டியை விரும்புவது?' என்று கேட்கிறாள்?

ஒருவேளை நீங்கள் விரும்பியபடி சற்று விரிவாக எழுதியிருந்தால் இக்கேள்விகளுக்கான விளக்கம் கிடைத்திருக்கலாம். ஆனாலும் அழகான மனந்தொட்ட இக்கதைக்காக உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள்.