PDA

View Full Version : கடிகாரம் - கடலலைகள்



Dr.சுந்தரராஜ் தயாளன்
06-04-2012, 04:49 PM
கடிகாரம் - கடலலைகள்

இன்னிசை வெண்பா
முன்னாலே போகுமாம் முன்போய் முடிந்ததும்
பின்னாலும் போகும் பிடித்தடைக்க லாகா
படிகாரத் தாலே பயனடைவோர் மக்கள்
கடிகாரம் நல்அலையும் காண்

கடிகாரம்:
முன்னாலே போகுமாம் முன்போய் முடிந்ததும் பின்னாலும் போகும் - கடிகாரத்தின் முள்ளை நோக்கும் போது 12 மணிமுதல் 6 மணிவரை முன்னோக்கிச் செல்வதைப்போல் தோன்றும். 6 மணி முதல் 12 மணிவரை முட்கள் பின்னோக்கிப் போவதைபோன்று தோன்றும். பழைய கால சுவர்க கடிகாரமாய் இருந்தால் அதன் பெண்டுலம் முன்னோக்கி சென்று பின்பு மீண்டும் பின்னோக்கித் திரும்பி வரும்.
பிடித்தடைக்க லாகா - காலத்தை பிடித்து அடைக்க முடியாது. அதை கட்டுப்படுத்துவது நம் கையில் இல்லை.
படிகாரத் தாலே பயனடைவோர் மக்கள் - படிகாரத்தால் ஆகிய கடிகாரத்தால் (Quartz, Crystal) உலக மக்கள் யாவரும் பயனடைகின்றனர்.
கடிகாரம் நல்அலையும் காண் - கடிகாரத்தை கட்டிக்கொண்டுள்ள ஆண்களும் பெண்களும் எங்கும் நன்றாக அலைவதைக் காணுங்கள்!

கடலலைகள்:
முன்னாலே போகுமாம் முன்போய் முடிந்ததும் பின்னாலும் போகும் - கடலலைகள் கரையை முன்நோக்கி வரும். கரையைத் தொட்டவுடன் மீண்டும் பின்னோக்கிச் செல்லும்.
பிடித்தடைக்க லாகா - கடல் அலைகளை கட்டுப்படுத்த முடியாது. பிடித்து அடித்தல் சாத்தியமில்லை.
படிகாரத் தாலே பயனடைவோர் மக்கள் - கடலில் உருவாகும் பல விதமான படிகாரங்களால், அதாவது உப்புக்களால் இந்த உலகத்தில் உள்ள எல்லா மக்களும் பயனடைகின்றனர்
கடிகாரம் நல்அலையும் காண் - கடிகாரத்தை கையில் கட்டியுள்ள தம்பதிகள் நல்ல அலைகளுடைய கடற்க்கரை மணலில் எங்கும் அலைவதைக் காணுங்கள்!
:):):)

கீதம்
07-04-2012, 02:38 AM
கடிகாரமும் கடலலைகளும் ஒத்த சிலேடையைக் கண்டு ரசித்தேன்.

படிகாரத்தை இரண்டுக்கும் பதமாக்கியவிதம் தெளிந்து வியந்தேன்.

பாராட்டுகள் ஐயா.

M.Jagadeesan
07-04-2012, 03:04 AM
சிலேடை பாடுவது கடினம் என்று சொல்வார்கள். காளமேகப் புலவரின் சிலேடைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். தங்களுடைய முயற்சி பாராட்டத்தக்கது. தொடருங்கள்!

jayanth
07-04-2012, 05:27 AM
சிலேடை புரிவதே கடினம். அதில் இயற்றுவதென்பது...!!! அருமை...!!!தொடருங்கள்.

தீபா
07-04-2012, 03:23 PM
மிக அருமையாக இருக்கிறது.
விளக்கம் சொல்லியிருக்கவேண்டியதில்லை, மிகத் தெளிவாகவே விளங்குகிறது.
தொடர்ந்து எழுதுங்கள்.

-தீபா

Dr.சுந்தரராஜ் தயாளன்
08-04-2012, 06:41 AM
கடிகாரமும் கடலலைகளும் ஒத்த சிலேடையைக் கண்டு ரசித்தேன்.
படிகாரத்தை இரண்டுக்கும் பதமாக்கியவிதம் தெளிந்து வியந்தேன்.
பாராட்டுகள் ஐயா.

மிகவும் நன்றி கீதம் அவர்களே...உங்களின் பின்னுட்டங்கள் என்னை மென்மேலும் கவி இயற்றத் தூண்டுகிறது..வணக்கம்.:):)

கலைவேந்தன்
08-04-2012, 06:49 AM
சிலேடை வெண்பா அருமை தயாளன். கடலுக்கு கடிகாரம் மிக அழகாக பொருந்திவருகிறது. கடைசி வரியான கடிகாரம் கட்டி மக்கள் அலைவார்கள் என்பது சற்று வலியக் கொணர்ந்தது போல் தோன்றினாலும் மொத்தத்தில் சிலேடை அருமை.

நானும் சில சிலேடைப்பாக்கள் புனைந்துள்ளேன். தேடித்தருகிறேன்.

பாராட்டுகள் தயா..!

vasikaran.g
08-04-2012, 10:29 AM
உங்கள் சிலேடை கவிதை வெண்பா அருமை ..நிறைய எழுதுங்கள் ..வாழ்த்துகளுடன் ..

Dr.சுந்தரராஜ் தயாளன்
10-04-2012, 04:19 AM
சிலேடை பாடுவது கடினம் என்று சொல்வார்கள். காளமேகப் புலவரின் சிலேடைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். தங்களுடைய முயற்சி பாராட்டத்தக்கது. தொடருங்கள்!

மிகவும் நன்றி ஐயா :)

Dr.சுந்தரராஜ் தயாளன்
26-04-2012, 01:15 PM
சிலேடை புரிவதே கடினம். அதில் இயற்றுவதென்பது...!!! அருமை...!!!தொடருங்கள்.

மிகவும் நன்றி ஜெயந்த் அவர்களே :aktion033::aktion033:

ravikrishnan
26-04-2012, 01:30 PM
சிலேடையினா என்னக, முன்னடி படித்தஞாபகம் இருகுது இப்பஎன்னா எள்லடை போல் தெரியுது ,தவறாக நினைக்கவேண்டாம்,நன்றாக உள்ளது நன்றி

Dr.சுந்தரராஜ் தயாளன்
10-05-2012, 11:53 AM
மிக அருமையாக இருக்கிறது.
விளக்கம் சொல்லியிருக்கவேண்டியதில்லை, மிகத் தெளிவாகவே விளங்குகிறது.
தொடர்ந்து எழுதுங்கள்.

-தீபா
மிகவும் நன்றி தீபா அவர்களே...ஏதோ தெரியாமல் விளக்கம் சொல்லிவிட்டேன்...இனிமேல் அப்படிச் செய்யமாட்டேன் :)

சிவா.ஜி
10-05-2012, 01:41 PM
மிக அருமை டாக்டர். வாழ்த்துக்கள்.

ஆதி
10-05-2012, 01:54 PM
மிக நன்றாக இருந்க்கிறது ஐயா, சிலேடை பைத்தியம் பிடித்து திரிந்த நாட்கள் நினைவுக்கு வந்துவிட்டன ஐயா

ஷீ-நிசி
11-05-2012, 01:19 AM
மிக நன்று. கடைசி வரியைத் தவிர....

l23k10s1975
27-08-2012, 06:04 AM
சிலேடை புரிவதே கடினம்.
அதில் இயற்றுவதென்பது...!!! அருமை...!!!
தொடருங்கள்.

aasaiajiith
27-08-2012, 06:09 AM
திக்கி திக்கி படித்தாலும், எங்கும் சிக்காத பொருள் விளக்கம் அருமை !!

செல்வா
27-08-2012, 08:52 AM
நல்ல சிலேடை
நான் எழுத முயற்சித்து அல்லி மாமியிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட திரி நினைவிற்கு வருகிறது.

தொடர்ந்து எழுதுங்கள் ஐயா.

A Thainis
09-09-2012, 07:01 PM
கடிகாரம்- கடலைகள் இன்னிசை வெண்பா இனித்தது, வாழ்த்துக்கள் ஐயா.

Dr.சுந்தரராஜ் தயாளன்
07-10-2012, 03:28 PM
சிலேடை வெண்பா அருமை தயாளன். கடலுக்கு கடிகாரம் மிக அழகாக பொருந்திவருகிறது. கடைசி வரியான கடிகாரம் கட்டி மக்கள் அலைவார்கள் என்பது சற்று வலியக் கொணர்ந்தது போல் தோன்றினாலும் மொத்தத்தில் சிலேடை அருமை.

நானும் சில சிலேடைப்பாக்கள் புனைந்துள்ளேன். தேடித்தருகிறேன்.

பாராட்டுகள் தயா..!
மிகவும் நன்றி கலைவேந்தன்...கடைசி வரி வலியக் கொணர்ந்தது என்பதில் ஐயமில்லை. கடிகாரமும் கடல் அலைகளையும் காணுங்கள் என்றால் சரியான விளக்கமாக இருக்கும்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
07-12-2012, 04:02 PM
உங்கள் சிலேடை கவிதை வெண்பா அருமை ..நிறைய எழுதுங்கள் ..வாழ்த்துகளுடன் ..

மிகவும் நன்றி வசிகரன்.