PDA

View Full Version : நாங்கள்



ஆதி
04-04-2012, 09:25 AM
இருவர் பிரிந்து போனார்கள்

நாங்கள் பேசத்துவ*ங்கினோம்
பேசினோம் பேசினோம்
நேரம் கிடைக்கும்போதெல்லாம்
அவர்களை குறித்தே
பேசினோம் பேசினோம்

அவர்களைவிட நாங்கள் சண்டையிட்டுக் கொண்டோம்

அவர்களைவிட நாங்கள் விவாதம் நடத்தினோம்

அவர்களைவிட நாங்கள் நியாயம் பேசினோம்

அவர்களைவிட நாங்கள் கோவம் கொண்டோம்

அவர்களைவிட நாங்கள் காரணங்கள் அதிகம் சொன்னோம்

அவர்களைவிட நாங்கள் நிகழ்வுகளை ஆராய்ந்தோம்

அவர்களைவிட நாங்கள் தூரோகத்தை பேசினோம்

அவர்களைவிட நாங்கள் கேள்விகள் கேட்டோம்

அவர்களைவிட நாங்கள் வழக்கை விசாரித்தோம்

அவர்களைவிட நாங்கள் தீர்ப்பை ஏற்றினோம்

அவர்களைவிட நாங்கள் அவர்களை பிந்தொடர்ந்தோம்

அவர்களைவிட நாங்கள் ஆனந்தம் கொண்டோம்

அவர்களைவிட நாங்கள் தூரம் பிரிந்தோம்

அவர்களைவிட நாங்கள் தீர்மானமாய் தீர்க்கமாய் திண்ணமாய் இருந்தோம்

அவர்களை விட நாங்கள் தாயாரகவே இருக்கவில்லை

ஒருநாள் அவர்கள் இணைந்துவிட்டார்கள்

நாங்கள் அவர்களை இணைந்தது குறித்து பேச துவங்கிவிட்டோம்

Dr.சுந்தரராஜ் தயாளன்
04-04-2012, 10:13 AM
ஊர் இரண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாடாம் என்று எங்களூரில் ஒரு பழமொழி உண்டு. அதுபோல் அல்லவா இருக்கிறது உங்களின் "நங்கள்" :):lachen001:

தாமரை
04-04-2012, 11:32 AM
ஹைய்யோ.. ஹைய்யோ..

இருவர் அல்ல ஆதி.. ஒருத்தர் பிரிந்தாலும் அப்படித்தான். :icon_ush::icon_ush::icon_ush:

கீதம்
07-04-2012, 02:42 AM
அவர்களைப் பற்றிப் பேசுவதைத் தவிர நமக்கு வேறு வேலை இல்லை.

அவர்களைப் பற்றி நம்மைப் பேசவைப்பதைத் தவிர அவர்களுக்கும் வேறு வேலை இல்லை.

vasikaran.g
08-04-2012, 10:34 AM
அட! இதுவும்கூட நல்லா இருக்கே ..