PDA

View Full Version : முரண் !

rema
04-04-2012, 06:41 AM
முரண் !

வறட்டு வெறுப்பு

எள்ளல் எக்களிப்பு

பார்த்தால் புறக்கணிப்பு

ரகசிய கண்காணிப்பு

பிறக்கும் ரசிப்பு

வளரும் ஈர்ப்பு

இறுதியில்

முரணுணர்வு இறப்பு !

Dr.சுந்தரராஜ் தயாளன்
04-04-2012, 07:23 AM
முரனுணர்வு....என்றால் என்ன மின்மினி அவர்களே

rema
05-04-2012, 01:45 AM
உங்களின் குணாதிசயங்களுக்கு நேர்மாறான குணம் தான் முரண் !அதை ஏற்று கொள்ளாமல் வெறுப்பதே முரணுணர்வு !

jayanth
05-04-2012, 04:30 AM
இணையவலைதளத்தில் தேடினேன். முரணுணர்வு என்ற சொல்லுக்கு அர்த்தமோ/விளக்கமோ கிடைக்கவில்லை. கிடைத்தது இதுதான்...!!!

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி
(Chennai Univercity Tamil Lexicon Dictionary)

நீங்கள் தேடிய முரணுணர்வு- வார்த்தைக்கான மொத்த எண்ணிக்கை : 0

நீங்கள் தேடிய வார்த்தை கிடைக்கவில்லை!

ந.கதிர்வேலு பிள்ளை தமிழ் மொழி அகராதி
(Na.Kadirvelu Pillai Tamil Language Dictionary)

நீங்கள் தேடிய முரணுணர்வு- வார்த்தைக்கான மொத்த எண்ணிக்கை : 0

நீங்கள் தேடிய வார்த்தை கிடைக்கவில்லை!

M.Jagadeesan
05-04-2012, 09:46 AM
முரண் , உணர்வு ஆகிய இரு வார்த்தைகளின் சேர்க்கைதான் முரணுணர்வு. அகராதியில் முரணுணர்வு என்று தேடினால் கிடைக்காது.

ஆதி
05-04-2012, 01:08 PM
இணையவலைதளத்தில் தேடினேன். முரணுணர்வு என்ற சொல்லுக்கு அர்த்தமோ/விளக்கமோ கிடைக்கவில்லை. கிடைத்தது இதுதான்...!!!

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி
(Chennai Univercity Tamil Lexicon Dictionary)

நீங்கள் தேடிய முரணுணர்வு- வார்த்தைக்கான மொத்த எண்ணிக்கை : 0

நீங்கள் தேடிய வார்த்தை கிடைக்கவில்லை!

ந.கதிர்வேலு பிள்ளை தமிழ் மொழி அகராதி
(Na.Kadirvelu Pillai Tamil Language Dictionary)

நீங்கள் தேடிய முரணுணர்வு- வார்த்தைக்கான மொத்த எண்ணிக்கை : 0

நீங்கள் தேடிய வார்த்தை கிடைக்கவில்லை!

ஜெயந்த், ஜெகதீஸன் ஐயா சொன்னது போல் அது இரு வார்த்தை

மின்மினி அவர்கள் சொன்னப் பொருள் சரி தான் மீண்டும் மீண்டும் கவிதையை வாசியுங்கள்

Dr.சுந்தரராஜ் தயாளன்
05-04-2012, 01:09 PM
முரனுணர்வு இறப்பு! ,,,,,,என்று உங்கள் கவிதையின் கடைசி வரி இருந்தது. ஆகவே முரனுணர்வு என்றால் என்ன என்று கேட்டேன். அதன் பின்பு நீங்கள் அதை எடிட் செய்து எழுத்துப்பிழையை சரிசெய்துள்ளீர்கள். சரி அதைவிடுங்க....ஜெகதீசன் ஐயா சொன்னதுதான் சரியாகும். இது இரு சொற்களின் கூட்டுச்சொல்லாகும்.:)

vasikaran.g
08-04-2012, 10:46 AM
நன்று ..முரண்,உணர்வு பற்றி அறிந்துகொள்ள முடிந்தது ..

rema
08-04-2012, 04:52 PM
பின்னூட்டமிட்ட அனைவர்க்கும் என் நன்றிகள் !