PDA

View Full Version : ஹைக்கூவல்கள்..



கலைவேந்தன்
04-04-2012, 05:16 AM
நண்பர்களே..

ஹைக்கூக்கள் விடயத்தில் நான் இன்னும் மாணவன். ( எல்லாத்துலயும்தான்னு சொல்றது கேக்குது. )

எனது சிற்றறிவில் உதித்த சில ஹைக்கூக்களை இங்கே பகிர்கிறேன்.

உங்கள் விமரிசனங்களை எதிர்நோக்குகிறேன்.

ஆழ்ந்த விமரிசனங்கள் இட தகுதி இல்லை என்னும் நிலையில்
நல்லா இருக்கு/ நல்லா இல்லை என்ற ஒற்றை வரி பதில் கூட போதும்.

என்னை ஆசிர்வதித்து அனுமதியுங்கள்.

ஐந்து ஐந்து செட் களாகப் பதிகிறேன்.

நன்றி.

கலைவேந்தன்
04-04-2012, 05:17 AM
1. இதிகாசங்கள்

நால்வகை வர்ண
வானவில்லால்
தலைகொய்த பரிகாசங்கள்.

2.ஒரு சீதையின் ஒப்புதல் கடிதம்.

உனக்கான தீக்குளியல்களை மறுதலிக்கவில்லை
ஊருக்கான தீக்குளியல் அவசியமே இல்லை
இப்படிக்கு சீதை.

3. நியூட்டனும் விதியும்.

கீழே விழும் ஆப்பிளில்
நியூட்டனின் விதி தெரியவில்லை.
வயிற்றுப்பசி.

4. பரம்பரைச் சொத்து

பாட்டனின் பாத்திரத்தை
பத்திரமாக்கினான்
தந்தைக்காய் பேரன்.

5. வாக்காளர்

தலையில் தீ
இருந்தும் புன்னகை
மெழுகுவத்தி.

ஆதி
04-04-2012, 05:42 AM
இதையும் வாசியுங்கள்

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9335

கலைவேந்தன்
04-04-2012, 05:54 AM
வாசித்தேன் ஆதன்.

மிக நல்ல விளக்கங்கள். இவை அனைத்தும் ஜப்பானிய கவிதை விளக்கங்கள். தமிழ் ஹைக்கூக்களின் வரலாற்றினையும் அறிய விழைகிறேன்.

நன்றி.

ஆதி
04-04-2012, 06:52 AM
வாசித்தேன் ஆதன்.

மிக நல்ல விளக்கங்கள். இவை அனைத்தும் ஜப்பானிய கவிதை விளக்கங்கள். தமிழ் ஹைக்கூக்களின் வரலாற்றினையும் அறிய விழைகிறேன்.

நன்றி.

ஒரு ஜென்னாய் இரு வாசித்தீங்களா ஐயா ? அதில் சில விடயங்களை பகிர்ந்து கொண்டிருப்பேன், தமிழின் ஹைகூ விளக்கங்கள் பற்றி..

இந்த சுட்டியை கொடுத்ததே, ஹைகூக்கள் பற்றி மேலும் இங்கு விவாதிக்கத்தான் ஐயா

கலைவேந்தன்
05-04-2012, 02:26 PM
நன்றாக இருக்கிறதோ இல்லையோ.. ஹைக்கூவின் இலக்கணத்தைத் தொடுகிறதோ இல்லையோ.. எனக்கு தோன்றிய சிறு குத்தூசிகளைப் படைப்பது தான் இந்த ஹைக்கூவல்களின் நோக்கம்.

நன்றாய் இருந்தால் பாராட்டுங்கள். இல்லையெனில் குறை சொல்லுங்கள். ஹைக்கூ இலக்கணத்துடன் பொருத்திப் பார்த்து ஏமாறாதீர்கள்.. :)

கலைவேந்தன்
05-04-2012, 02:28 PM
6. நிதர்சனங்கள்

உண்மை பொய்
முறையே
தூற்றப்படும் போற்றப்படும்.

7. மூவர்ணம்.

வெண்சிரிப்பு
கருப்பு மனம்
காவியுடை.

8. சீதையின் வாக்குமூலம்

தீக்குளியல்
உனக்காய் மட்டுமே
ஊருக்கல்ல..

9.தற்கொலை

கலையும் மேகங்கள்..
மின்னல் கயிறு..
தூக்கில் தொங்கியது நிலா.

10. நிரந்தரம்.

மேகக்கூட்டத்தில்
யானை உருவம்..
எக்களித்தது குழந்தை.

ஆதவா
05-04-2012, 05:58 PM
1. இதிகாசங்கள்

நால்வகை வர்ண
வானவில்லால்
தலைகொய்த பரிகாசங்கள்.


நால்வர்ண வானவில் எனும்பொழுதே வானவில் தனது தனித்துவத்தை இழந்து காணப்படுவதை சுட்டிக்காண்கிறது. தவிர வில் எப்பொழுதும் காயப்படுத்திய பழக்கமில்லை, அது காயப்படுத்த முனையும் காரணியாக இருக்கிறது. அப்படியான வில் தலைகொய்தல் என்பது வர்ணபேதத்தின் கொடுமையை இன்னும் உரக்கச் சொல்லுவதாகவே இருக்கிறது. தனது குணம் பிரண்ட கருவிகளால் அது சமூகத்தை துன்புருத்துகிறது என்பதை அழகாக சொல்லுவதாக எடுத்துக் கொண்டேன். அதுவரைக்கும் கவிதை சபாஷ்!!! ஆனால் இதிகாசங்கள் எனும் பெயரின் கீழ் முற்றிலும் பொருந்திய கவிதையாக இதனை என்னால் ஒப்புகொள்ள முடியவில்லை,

2.ஒரு சீதையின் ஒப்புதல் கடிதம்.

உனக்கான தீக்குளியல்களை மறுதலிக்கவில்லை
ஊருக்கான தீக்குளியல் அவசியமே இல்லை
இப்படிக்கு சீதை.

நிறைய அர்த்தங்களை எடுத்துக் கொள்ளலாம். சீதை என்பது கற்புள்ள பெண்ணாக நாம் பார்க்கப்படும் பொருள். அதாவது ஒழுக்கம், செயல்பாடு, இன்னல்களிலிருந்து மீண்டமை... தன்னம்பிக்கை உள்ள எவனும் அநாவசியமாக காலில் விழவேண்டாம், வேண்டுமானால் பெண்டாட்டி காலில் விழட்டும் போ.... எப்பூடி? :)

3. நியூட்டனும் விதியும்.

கீழே விழும் ஆப்பிளில்
நியூட்டனின் விதி தெரியவில்லை.
வயிற்றுப்பசி.

”கீழே விழும்” என்பது சற்றே இடைஞ்சலாக இருக்கிறது. ஆப்பிள்கள் பொறிக்கப்படுவதற்காகத்தான் வளர்கின்றன. அது தன்னை மாய்த்துக் கொள்வது மாந்தரால் என்பது அதற்கான விதி.. நியூட்டனுக்கு முன்னே இறைவன் விதித்த விதி. இறைவனுக்கே தெரியாத விதி ”உறுபசி”

4. பரம்பரைச் சொத்து

பாட்டனின் பாத்திரத்தை
பத்திரமாக்கினான்
தந்தைக்காய் பேரன்.

தந்தை என்ன பாவம் செய்தாரோ பாட்டனுக்கு?? !!!

5. வாக்காளர்

தலையில் தீ
இருந்தும் புன்னகை
மெழுகுவத்தி.

கடைசியில் உருகி உருகி வழிந்தேபோகிறான்.. அது புன்னகையா என்று தெரியவில்லை, மெழுகுவர்த்திகள் மோனலிச மர்மத்தைக் கொண்டிருக்கின்றன. தலைத் தீயை வைத்துக் கொண்டு ஊரை எரிக்கமுடியாது என்று முடிந்தே போகின்றனவோ என்னவோ?

நல்ல கவிதைகள் அனைத்தும் மற்ற அனைத்திற்கும் பின்னூட்ட முடியவில்லை, தொடருங்கள்.

---
கலையும் மேகங்கள்..
மின்னல் கயிறு..
தூக்கில் தொங்கியது நிலா.

சபாஷ்!!! கலக்கிறீங்க கலைண்ணே!

சிவா.ஜி
05-04-2012, 08:42 PM
இவை யாவுமே கூவல்கள் மட்டுமல்ல....கூறல்கள் என பறைசாட்டும் வரிகள். சீதையின் கற்பும், மகனின் சொத்தின் மோகமும், வாக்காளனின் கையறு நிலையும்....இங்கு கவிதை வரிகளில் காணக்கிடைக்கின்றன.....

இலக்கணம் மீறினும் குற்றமில்லை....தொடர்ந்து படைத்திடுங்கள் மூன்றுவரி....அய்கூவல்களை(ஹைக்கூ என்றால்தானே பிரச்சனை...அதை அய்கூ....ஆக்கிவிடுங்கள்...)

வாழ்த்துக்கள் கலை.

கலைவேந்தன்
06-04-2012, 06:22 AM
விரிவான விமர்சனங்களுக்கு ஆதவாவுக்கும் சிவாவுக்கும் நன்றி. விமர்சனங்களில் காணும் நிறைகளை கண்கள் ஏற்றன. குறைகளை மூளை ஏற்றது.

மிக்க நன்றி நண்பர்களே..

vasikaran.g
08-04-2012, 10:44 AM
எல்லா கவிதைகளுமே அருமை ..

கலைவேந்தன்
08-04-2012, 03:13 PM
நன்றி வசிகரன்.

கலைவேந்தன்
08-04-2012, 03:15 PM
11.வரவேற்பு

ஒளிக்கம்பளம் விரித்து
விட்டிலை வரவேற்றது
தீப்பந்தம்.

12. பெண்கள்

ஆண்கள் ஆச்சரியக்குறி ஆக*
கேள்விக்குறியாய்
ஆனவர்கள்.

13. பத்தினி

கெடுக்க நினைக்கும்
கணவனுக்கும்
கொடுக்க மறுக்காதவள்

14. விதவை

நாக்கில் நீர்சொட்டும்
குரங்குகளுக்கு
எட்டாத தேனடை.

15. மனைவி

அடக்கிய கணவனை
முடக்க விடாமல்
தாங்குபவள்.

naankarthikeyan
09-04-2012, 08:04 AM
அனைத்து கவிதைகளும் அருமை. நன்றிகளும் வாழ்த்துக்களும்.....

ஆர்.ஈஸ்வரன்
09-04-2012, 10:03 AM
தலையில் தீ
இருந்தும் புன்னகை
மெழுகுவத்தி.

நல்ல ஹைக்கூ வாழ்த்துக்கள்

கலைவேந்தன்
14-04-2012, 06:23 AM
மிக்க நன்றி கார்த்திகேயன் மற்றும் ஈஸ்வரன்..!

கலைவேந்தன்
14-04-2012, 06:24 AM
16.ஞானம்..

காதல் ‘கத்திரி’க்காய்
பிரிவு ‘புண்’ணாக்கு
போங்கடா

கலைவேந்தன்
14-04-2012, 06:25 AM
17.புதிய பாரதம்:1

துச்சாதனன்கள் திருந்திவிட்டனர்
பாஞ்சாலிகளின்
மறு பரிசீலனை.

கலைவேந்தன்
14-04-2012, 06:26 AM
18. புதிய பாரதம்:2

கண்ணன்தந்த சேலை
வேண்டாத வேலை
திரவுபதி ஆவேசம்.

ஆதி
24-04-2012, 09:39 AM
17.புதிய பாரதம்:1

துச்சாதனன்கள் திருந்திவிட்டனர்
பாஞ்சாலிகளின்
மறு பரிசீலனை.

துச்சாதனர்கள் திருந்திவிட்டார்கள்
பாண்டவர்களை கொல்ல*
பாஞ்சாலிகள் ஆயத்தம்!

vasikaran.g
13-05-2012, 11:54 AM
ஹைக்கூ
உமக்கு
தேயாமல்
இருக்கலாம் !
ஆனால்
உன் பேனாவுக்கு
தெரிந்திருக்கிறது !

கவிதைகள் அருமை ..

கலைவேந்தன்
15-07-2012, 08:24 AM
துச்சாதனர்கள் திருந்திவிட்டார்கள்
பாண்டவர்களை கொல்ல*
பாஞ்சாலிகள் ஆயத்தம்!

அருமையான பின்னூட்ட ஹைக்கூ ஆதன்..!!

கலைவேந்தன்
15-07-2012, 08:25 AM
ஹைக்கூ
உமக்கு
தேயாமல்
இருக்கலாம் !
ஆனால்
உன் பேனாவுக்கு
தெரிந்திருக்கிறது !

கவிதைகள் அருமை ..

மிக்க நன்றி வசி..!

கலைவேந்தன்
15-07-2012, 08:32 AM
19. புதிய பாரதம்:3

நல்லவேளை ..
குந்திக்கு
ஐந்தே மகன்கள்..

கலைவேந்தன்
15-07-2012, 08:33 AM
20. புதிய பாரதம்: 4

மாது சிரித்ததால்
சூது சிரித்தது
மானம் போனது..

கலைவேந்தன்
15-07-2012, 08:37 AM
21. புதிய பாரதம்: 5

சுதர்சன சக்கரம் போல்
எங்கள் பாட்டி
முறுக்கு சுடுவாள்.

M.Jagadeesan
15-07-2012, 09:38 AM
தங்களின் நறுக்குக் கவிதைகள் அனைத்துமே அபாரம்! மரபுக் கவிதைகள் TEST MATCH போல . படிப்பதற்கு பொறுமை வேண்டும்; ஆனால் நறுக்குக் கவிதைகள் TWENTY OVER MATCH போல. படிப்பதற்கு சுவையாகவும் கருத்தாழம் மிக்கதாகவும் இருக்கும்.

கலைவேந்தன்
05-08-2012, 08:21 AM
மிக்க நன்றி ஜகதீசன் ஐயா...தாங்கள் அளிக்கும் ஊக்கத்தின்காரணம் பெற்ற ’தைரியத்தால்’ இன்னும் சில பதிகின்றேன்.

கலைவேந்தன்
05-08-2012, 08:24 AM
22. சும்மாச் சும்மா : 1

வளைந்து நெளியும்போதே
கண்டுபிடித்துவிடுகிறேன்
உன் பொய்களை.

கலைவேந்தன்
05-08-2012, 08:24 AM
23. சும்மாச் சும்மா : 2

அவிழ்ந்த கருங்கூந்தலில்
சில நரைமுடிகள்
மின்னல்..

கலைவேந்தன்
05-08-2012, 08:25 AM
24. சும்மாச் சும்மா : 3

அழகான ஓவியம்
குழந்தையின் கையில்
கரிக்குச்சி.

கலைவேந்தன்
05-08-2012, 08:26 AM
25. சும்மாச் சும்மா : 4

நேரம்..
கத்தியால் குத்தியது
அவனது நிழல்.

கலைவேந்தன்
05-08-2012, 08:27 AM
26. சும்மாச் சும்மா : 5

சுற்றிலும் பல ஈட்டிகள்
பின்னால்
உன் கண்ணசைவு..!

கீதம்
05-08-2012, 08:47 AM
24. சும்மாச் சும்மா : 3

அழகான ஓவியம்
குழந்தையின் கையில்
கரிக்குச்சி.

குழந்தையிலேயே அடையாளங்கண்டு கொள்கிறான் ஓவியன் தன் தூரிகையை!

அவனை ஓவியனென்று அடையாளங்காண்பதில் நாம் தவறிழைத்துவிட...

சுவரின் கிறுக்கல்களுக்கு இணையாய் முதுகு வரிக்கோடுகள் குழந்தைக்கு!

மூன்றே வரிகளில் நச்சென்று பதியும் கருத்துக்கள் சுலபமாய் மனம் சென்று சேர்ந்துவிடுகின்றன. பாராட்டுகள் கலைவேந்தன்.

கீதம்
05-08-2012, 08:48 AM
26. சும்மாச் சும்மா : 5

சுற்றிலும் பல ஈட்டிகள்
பின்னால்
உன் கண்ணசைவு..!

இது சும்மா இல்லை, செம்மையாய் இருக்கு. பாராட்டுகள்.

jayanth
05-08-2012, 11:14 AM
"o" போட்டுட்டேனுங்க கலை...

கலைவேந்தன்
06-08-2012, 01:35 AM
எனது ஹைக்கூவல்களையும் பாராட்டும் பரந்த மனத்துக்கு மிக்க நன்றி கீதம்..

கலைவேந்தன்
06-08-2012, 01:37 AM
"o" போட்டுட்டேனுங்க கலை...

ஐயா பெரியவரே.... நீங்க ஓ போட்டீங்களா... பூஜ்ஜியம் போட்டீங்களான்னு குழப்பமா கீது கண்ணா.. எத்தையும் தெளிவாச்சொல்லத்தல..?

எனிவே எதுவா இருந்தாலும் ரெம்ப நன்றிங்ணா.. :)

கீதம்
06-08-2012, 02:32 AM
எனது ஹைக்கூவல்களையும் பாராட்டும் பரந்த மனத்துக்கு மிக்க நன்றி கீதம்..

சின்னச் சின்ன வரிகளில் அசத்தும் கவிக்கூவல்கள் உங்களுடையவை. உண்மையிலேயே அனைத்தையும் ரசித்தேன்.

jayanth
07-08-2012, 09:52 PM
ஐயா பெரியவரே.... நீங்க ஓ போட்டீங்களா... பூஜ்ஜியம் போட்டீங்களான்னு குழப்பமா கீது கண்ணா.. எத்தையும் தெளிவாச்சொல்லத்தல..?

எனிவே எதுவா இருந்தாலும் ரெம்ப நன்றிங்ணா.. :)

"ஓ" தான் போடிருக்கேனுங்க கலை. இத்துக்குப் போயி கொயம்பிடிங்கலாங்க.
ஹீ...ஹீ...தமிழ் கொஞ்சம் "வீக்"ங்க...அதனாலேதான் அப்படி போட்டேனுங்க...மற்றப்படி அண்ணே
எல்லாம் வேண்டாமுங்க... நீங்கதானுங்க எனக்கு அண்ணனாக இருக்க வாய்ப்புக்கள் அதிகமுங்க...!!!

கலைவேந்தன்
09-08-2012, 03:51 PM


அப்படிங்களா... நல்லது ஜெயந்த்... நான் 1962 நவம்பர் 20 . ஆக நான் தம்பியாக இருக்கத்தான் வாய்ப்புகள் இருக்குங்கோ.. :)

சுகந்தப்ரீதன்
09-08-2012, 04:02 PM
24. சும்மாச் சும்மா : 3
அழகான ஓவியம்
குழந்தையின் கையில்
கரிக்குச்சி. அழகான அர்த்தம் பொதிந்த ரசனையான வரிகள்..!!:)

ஆதவனின் குழந்தை ஓவியம் நினைவில்..!! கலக்ஸ் கலையண்ணா...:icon_b:

ஷீ-நிசி
09-08-2012, 05:09 PM
///5. வாக்காளர்

தலையில் தீ
இருந்தும் புன்னகை
மெழுகுவத்தி. ///

புன்னகை பொருத்தமாக தெரியவில்லை வேந்தரே.....

தலையில் தீ...
அதனால்தான் அழுகிறதோ?!
மெழுகுவர்த்தி.....


ஹைக்கூ முயற்சிகளை விட்டுவிடாதீர்கள்.... தொடருங்கள்... வாழ்த்துக்கள்

HEMA BALAJI
10-08-2012, 07:06 AM
சும்மா சும்மா மண்டையிலே உங்க சும்மா சும்மாவே ஓடுது கலை அண்ணா... எல்லாமே நன்று. அதிலும் குழந்தையின் ஓவியம் மற்றும் கண் ஈட்டி வரிகளை மிக ரசித்தேன். வாழ்த்துக்கள் அண்ணா..

கலைவேந்தன்
10-08-2012, 08:42 AM
சுகந்த ப்ரீதனுக்கும் ஷீநிசிக்கும் ஹேமாவுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.. உங்களின் ஊக்கம் கண்டு இன்னும் சில தொடர்கிறேன்..!

கலைவேந்தன்
10-08-2012, 08:49 AM
27. புதிய பாரதம்:6

ஆறாவதாய்
பாஞ்சாலி விரும்பியதால்
கர்ணனின் அகால மரணம்.

கலைவேந்தன்
10-08-2012, 08:50 AM
28. புதிய சிலம்பு :1

ஒற்றை எறிவில் மதுரை
மற்றையது
எவ்வூருக்காய்..?

கலைவேந்தன்
10-08-2012, 08:51 AM
29. புதிய சிலம்பு : 2

இன்று
மாதவிக்கும் கேவலமாய்
கோவலன் மனைவி.

கலைவேந்தன்
10-08-2012, 08:52 AM
30.காமம்.

இழுத்த இழுப்புக்கு
வளைந்து கொடுக்கும்
தேய் பிறை

jayanth
11-08-2012, 03:17 AM


அப்படிங்களா... நல்லது ஜெயந்த்... நான் 1962 நவம்பர் 20 . ஆக நான் தம்பியாக இருக்கத்தான் வாய்ப்புகள் இருக்குங்கோ.. :)

இல்லீங்கண்ணா...நான் 1962 டிசம்பர் 13 ங்கண்ணா...(.) அண்ணந்தாங்கண்ணா... ஆனாலும் "கலை" ன்னே கூப்பிடுறேணுங்கண்ணா...

kulakkottan
11-08-2012, 04:45 AM
28. புதிய சிலம்பு :1

ஒற்றை எறிவில் மதுரை
மற்றையது
எவ்வூருக்காய்..?
தினம் தினம் ஏழை வயிற்றில் எரிகிறதே மற்றயது!

kulakkottan
11-08-2012, 04:49 AM
30.காமம்.

இழுத்த இழுப்புக்கு
வளைந்து கொடுக்கும்
தேய் பிறை

நயமாய் இருக்கிறது !கருத்தை தான் ஏற்க முடிய வில்லை கலை அண்ணா!
காமம்
நிமிரா வாலையும்
நிமிர்த்தும்
கொடும் பிழை !

kulakkottan
11-08-2012, 04:52 AM
26. சும்மாச் சும்மா : 5

சுற்றிலும் பல ஈட்டிகள்
பின்னால்
உன் கண்ணசைவு..!
அருமையோ அருமை


காதல் பார்வை !
வரும் ஈட்டியையும்
தட்ட கற்றுத்தருகிறது
உன் காதல் பார்வை !

kulakkottan
11-08-2012, 04:55 AM
16.ஞானம்..

காதல் ‘கத்திரி’க்காய்
பிரிவு ‘புண்’ணாக்கு
போங்கடா

கத்திரிக்காயும் பூவாகும்
காதல் அனுபவத்தில்
அனுபவிங்க !

kulakkottan
11-08-2012, 04:59 AM
18. புதிய பாரதம்:2

கண்ணன்தந்த சேலை
வேண்டாத வேலை
திரவுபதி ஆவேசம்.
என்ன செய்வது நிலைமை அப்பிடி?



இன்றைய கண்ணன்களுக்கு
போதும் கைக்குட்டை ஒன்றே !

aasaiajiith
11-08-2012, 07:07 AM
உயர்வான ஹைக்கூவை,இன்னும் ஹைக்கூவாக்கி உயரக்கூவ
(ஹை(உயரம்)கூ(கூவ))வைக்கும் பதில் ஹைக்கூக்கள் !

வாழ்த்துக்கள் !!!

அமரன்
11-08-2012, 09:16 PM
இதிகாசமும் காப்பியமும்
சமகாலக் கண் கொண்டு படிக்கையில்
என்ன வரும்..?
கலையின் ஹைக்கூவல் கிடைக்கும்.

வீதிகளில் வீசிச் செல்லும் விழிகள்
விழுந்து முளைக்கும் அற்புதக் கவிகள்..

தொடருங்கள் கலை.

நாஞ்சில் த.க.ஜெய்
31-08-2012, 06:17 AM
4. பரம்பரைச் சொத்து

பாட்டனின் பாத்திரத்தை
பத்திரமாக்கினான்
தந்தைக்காய் பேரன்.

மதிக்க தெரியாத ஒருவனின் நிலை


புதிய பாரதம்
கண்ணன்தந்த சேலை
வேண்டாத வேலை
திரவுபதி ஆவேசம்.

இன்றைய மாந்தர்களின் ஆடை நிலை உரைக்கும் கவிதை அருமை ...


15. மனைவி

அடக்கிய கணவனை
முடக்க விடாமல்
தாங்குபவள்.

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் ..அன்பால் அடங்கும் மனைவியின் நிலையினை அதிகாரத்தினால் என்று கூறுவதை ..


14. விதவை

நாக்கில் நீர்சொட்டும்
குரங்குகளுக்கு
எட்டாத தேனடை.

தீஎரியும் தேகத்தின் வலியினை அறிந்தவர்களிடம் கேளுங்கள் ...


24. சும்மாச் சும்மா : 3
அழகான ஓவியம்
குழந்தையின் கையில்
கரிக்குச்சி.
நினைவலைகளில் நான்..


29. புதிய சிலம்பு : 2

இன்று
மாதவிக்கும் கேவலமாய்
கோவலன் மனைவி.
புழுக்கள் விழுந்த உணவின் சுவை அறிந்தவர்கள் கூறும் உண்மை ...