PDA

View Full Version : எத்தனுக்கு எத்தன் - மீண்டும் வீர்சிங்



lavanya
24-12-2003, 11:50 PM
ஏற்கனவே வந்திருந்தால் நீக்கி விடவும்



<span style='color:#ff00ec'>வீர்சிங் ஒரு நாள் தன் நண்பனிடம் கவலையாக பேசி கொண்டிருந்தான். "என் வீட்டில்
நம் அரசாங்கம் சி.ஐ.டி களை வைத்து என்னை உளவு பார்க்குதோன்னு
சந்தேகமாக இருக்கு".வீர்சிங் நண்பன் "எப்படி அவ்வளவு உறுதியா சொல்றே...?" என்று
கேட்டான். அதற்கு வீர்சிங் சொன்னான் 'நான் டிவியில் எந்த சேனல் பார்த்தாலும்
"நீங்கள் பார்த்து கொண்டிருப்பது" என்று நான் பார்க்கிற சேனல் பேரை கரெக்டா
சொல்றாங்களே....'</span>




--------------------------

வாழ்க்கையில் வேலை கிடைக்காமல் வெறுத்துப் போன வீர்சிங் கள்ள நோட்டு அடிக்க
முடிவு செய்தான்... ஆனால் எத்தனை ரூபாய் அடிப்பது என்று துல்லியமாக தெரியாததால்
ஒரு பதினைந்து ரூபாய் அடிக்கலாம் என்று யோசித்து பதினைந்து ரூபாய் கள்ள நோட்டு
தயாரித்து அதை மாற்ற கடைக்கு போனான்.

அங்கு கடை வைத்திருந்தது பாண்டாசிங். அவனிடம் போய் வீர்சிங் 'ஒரு 15 ரூபாய்க்கு
சில்லறை கிடைக்குமா...? ' என்றான். பாண்டா சிங் உடனே 'ஒரு ரூபாய் குறையுமே
பரவாயில்லையா...?' என்றான். வீர்சிங் மனதுக்குள் 'ஆஹா 14 ரூபா கெடைக்குமே'என
மகிழ்ந்து 'சரி கொடுங்க..'என்று சொல்லி 15 ரூபாய் நோட்டை கொடுத்தான். பாண்டாசிங்
அதை வாங்கி கொண்டு தந்தது இரண்டு 7 ரூபாய் நோட்டுகள்.

இளசு
24-12-2003, 11:59 PM
வாங்க வாங்க பிஜிகே

வீர்சிங்கைக் காணோம்னு தேடினீங்கல்ல...
இங்க பாருங்க அவர் பண்ற கோலத்தை...


(லாவ், வீர் 14 ரூபாய் நோட்டு அடிக்கிறது இருக்கட்டும்.
நீங்க எப்படி ஒரு நாளில் இவ்ளோ (அதுவும் வேகம் கம்மி.???!!!!.) டைப்
அடிக்கிறீங்க... ) :D

அலை...
25-12-2003, 12:27 AM
அருமை லாவண்யா,

இதோ என் பங்குக்கு...(ஏற்கனவே வந்திருந்தால் பொருத்து கொள்ளவும்).

<span style='color:#0000ff'>வீர் சிங்கிடம் அவர் நண்பர் பாண்டாசிங் ஒரு கேள்வி கேட்டார்.

"வீர் சிங் வீர் சிங் வெறும் வயித்துல உன்னால் எத்தனை சப்பாத்தி சாப்பிட முடியும்?"

"5 சப்பாத்தி" பெருமையுடன் சொன்னார் வீர்சிங். "ஒரு சப்பாத்தி சாப்பிட்டாலே வெறும் வயிறு சப்பாத்தி வயிறாகி விடுமே" என்று மடக்கினார் பாண்டாசிங்.

ஹா ஹா நல்ல ஜோக் என்று சிரித்த வீர்சிங் இதையே தன் நண்பர் பீர்சிங்கிடம் சொல்லல முடிவு செய்தார்.

வீர்சிங்: "பீர் சிங் பீர் சிங் வெறும் வயித்துல உன்னால் எத்தனை சப்பாத்தி சாப்பிட முடியும்?"

பீர்சிங்: 6 சப்பாத்தி...

வீர்சிங்: சே...5 சப்பாத்தி என்று பதில் சொல்லியிருக்கலாம்ல...ஒரு நல்ல ஜோக் சொல்லியிருப்பேனே?</span>

அன்புடன்

அலை...

முத்து
25-12-2003, 12:50 AM
லாவண்யா , அலை ...
அருமையான நகைச்சுவை ...
பாராட்டுக்கள் ...

aren
25-12-2003, 01:34 AM
லாவண்யா அருமையாக உள்ளது. பதினைந்து ரூபாய்க்கு இரண்டு ஏழு ரூபாய்களா? கொன்னுப்புட்டூங்க.

கூடுதல் சிரிப்புக்கு அலை அவர்களின் சிரிப்பும் அருமை.

இருவரும் தொடருங்கள். பிகேஜி அவர்களே உங்களுக்கு தோள் கொடுக்க இங்கே இரண்டு பேர் இருக்கிறார்கள்.

நம் உறுப்பினர்களுக்கு இனிமேல் சிரிப்பு மழைதான்.

அறிஞர்
25-12-2003, 06:12 AM
வாழ்த்துக்கள்.. லாவ் மற்றும் அலை...

ரசிக்கும்படி இருந்தது

இளசு
25-12-2003, 06:41 AM
பாராட்டுகள் அலை

மன்மதன்
25-12-2003, 08:48 AM
சபாஷ் சரியான போட்டி,,
லாவ் கொடுத்தது கடி..
அலை அடித்தது மரண கடி...
அலை அசத்திடுச்சு..

அலை...
25-12-2003, 03:51 PM
பாராட்டிய அனைவருக்கும் நன்றி..
ஆரம்பித்த லாவன்யாவுக்கு நன்றி..

pgk53
25-12-2003, 03:56 PM
லாவண்யா...அலை இருவருக்கும் எனது பாராட்டுகள்.
மிக நல்ல தொகுப்பு...நல்ல சிரிப்பு.நன்றிகள் பல

poornima
27-01-2009, 02:15 PM
வீர்சிங் வீர்சிங்தான் :-)