PDA

View Full Version : புத்தன் - 17



ஆதி
03-04-2012, 10:54 AM
இடிந்த கட்டடத்தில்
இடியாமல் இருந்தவன்
இடிந்திருந்தான்

*********************

திருத்தப்பட்டது :

இடிந்த கட்டடத்தில்
இடியாமல் இருப்பவன்
இடிந்திருந்தான்

ஆதி
03-04-2012, 10:55 AM
விழுவதிலேயே
கவனமாய் இருக்கிறது அருவி

விழுதலைக் குறித்த*
எவ்வெதிர்ப்புக்களும்
எம்மறுப்புக்களும் இன்றி
சல்லடையில்
சித்தாளொருத்தி லாவகமாக கொட்டும்
வெண்மனலென*
விழுந்து கொண்டே இருக்கிறது அது

விழுதலின் வேகத்தில் ஜனிக்கும்
காற்றின் பயண திசையை பற்றி
எவ்வக்கறையும் கொள்ளாமல்
அது விழுந்து கொண்டே இருக்கிறது

மோதலால் கூர் மழுங்கி
மேனி வளுவளுப்பான* பாறைகளிடம்
விழுதலின் களிப்பின் அலாதியை
சலசலத்தும்
முணுமுணுத்தும்
லயிக்கும்

விழுதல் இறக்கும்
வற்றியத்தருணத்திலும்
வெயில்வள்ளி படர்ந்த
வெம்மை பாறைகளில்
தவங்களிருக்கும்/தவங்கள் நடக்கும்
விழுதல் வேண்டி

vasikaran.g
08-04-2012, 10:49 AM
இரண்டே மே நல்லா இருக்கு ..

ஆதி
10-04-2012, 11:29 AM
தலை தொங்க சிலுவையில்
மரணித்த புத்தன்

சாகும் முன்
"ஏலி ஏலி லெமா சபக்தானி"
என்றானாம்

அதை கேட்டவர்கள் பலரும் சொன்னர்கள்
அவன் புத்தன் தான் என்று

இப்படித்தான்
நீங்களும் நானும் மற்ற பிறரும்
பல புத்தன்களை கொன்றுகுவிக்கிறோம்
நம்மிலும் பிறரிலும் யாவிலும்

தாமரை
11-04-2012, 01:43 AM
இடிந்த கட்டடத்தில்
இடியாமல் இருந்தவன்
இடிந்திருந்தான்

சொல்லும் பொருளும் பொருந்துகின்றன என்றாலும்..
சொல்லும் பொருளும் புரிகின்றன என்றாலும்
சொல்லும் பொருளும் வெளிப்படுகின்றன என்றாலும்
சொல்லும் பொருளும் தோய்த்து உலர்ந்து
சொல்லும் பொருளும் கசங்கிச் சுருங்கி
சொல்லும் பொருளும் இரைந்து கிடக்கின்றன.

தாமரை
11-04-2012, 01:58 AM
விழுவதிலேயே
கவனமாய் இருக்கிறது அருவி

விழுதலைக் குறித்த*
எவ்வெதிர்ப்புக்களும்
எம்மறுப்புக்களும் இன்றி
சல்லடையில்
சித்தாளொருத்தி லாவகமாக கொட்டும்
வெண்மனலென*
விழுந்து கொண்டே இருக்கிறது அது

விழுதலின் வேகத்தில் ஜனிக்கும்
காற்றின் பயண திசையை பற்றி
எவ்வக்கறையும் கொள்ளாமல்
அது விழுந்து கொண்டே இருக்கிறது

மோதலால் கூர் மழுங்கி
மேனி வளுவளுப்பான* பாறைகளிடம்
விழுதலின் களிப்பின் அலாதியை
சலசலத்தும்
முணுமுணுத்தும்
லயிக்கும்

விழுதல் இறக்கும்
வற்றியத்தருணத்திலும்
வெயில்வள்ளி படர்ந்த
வெம்மை பாறைகளில்
தவமிருக்கும்
விழுதல் வேண்டி

விழுதல் உயிர்ப்போடு இருத்தலின் அடையாளம்
விழுதல் மோதிப் பார்க்கும் துணிவின் அடையாளம்
விழுதல் சமத்துவ தத்துவத்தின் உயிர்நாடி
கற்பிள்ளை கர்வமாய் நிற்க
காற்றுக்கணவம் அங்கிங்கு அலைபாய
விழுதலால் பெண்மை தாய்மை

ஆதி
11-04-2012, 08:29 AM
அண்ணா, இரண்டிலும் திருத்தம் செய்திருக்கிறேன் பொருந்துதா என்று பாருங்களேன்

ஆதி
11-04-2012, 08:39 AM
நிச்சலனமாய் இருக்கும்
ஒவ்வொரு தருணத்திலும்
புத்தனாகிறது..
சலனம் கொள்ளும்
ஒவ்வொரு தருணத்திலும்
நிர்வானமிழக்கிறது..
அகம்!

எத்தனை முறை புத்தனை சந்தித்தாலும்
அத்தனை முறையும் அவனை அலட்சியம் செய்துவிட்டு
அவனையே தேடி அலையும் புதிர்த்தான்
புரிதலுக்கு சாத்தியமற்றதாய் இருக்கிறது

மாட்டுத்தொழுவத்தில் பிறந்தவனை போல
அழுக்கான மனதிலும் பிறக்கிறான் புத்தன்
எனினும்
அவனை சிலுவையில் அடிப்பதில்தான்
குறியாக இருக்கிறது அகம்

சில நேரம் யூதாஸாய் இருந்து
என்னையே காட்டிக் கொடுக்கும் அகம்
சில நேரம் முள்முடியாய் இருந்து
என்னையே துன்பப்படுத்துகிறது

எதையும் நிரப்ப முடியாமலும்
எதையும் காலி செய்ய இயலாமலும்
இந்த அகத்துடனான என் போராட்டத்தில்
புத்தனை ரத்தப்பலிக்கு கையளித்துவிட்டு
மூன்றாம்நாள் உயிர்த்தெழுவானென
நம்பிக்கொண்டே இருக்கிறது

ஆதி
12-04-2012, 06:14 AM
புத்தனை தேடிக் கொண்டிருக்கிறேன் நான்

ஓரிடத்தில் அமர்ந்து அமைதியாய்
என்னை கவனித்து கொண்டிருகிறான் அவன்

அவன் அருகே செல்கிறேன்

அவன் கேட்கிறான் "என்ன தேட்கிறாய் ?"

"புத்தனை" என்கிறேன்

"எங்கே தொலைத்தாய் ?"

"இல்லை, தொலைக்கவில்லை!!!"

"எனின், தொலைக்காததை எதற்காக தேடுகிறாய்/எப்படி தேடமுடியும் ?"

"இல்லை, அவந்தான் காணாம*ல் போய்விட்டான்"

"அவனா ?"

"புரியவில்லையே?!!" என்கிறேன்

"அவனா? நீயா ? " என்றவன்
மீண்டும் கேட்ட கேள்வியில்
கண்டு கொண்டேன் புத்தனை

கீதம்
12-04-2012, 06:37 AM
புத்தனை தேடிக் கொண்டிருக்கிறேன் நான்

ஓரிடத்தில் அமர்ந்து அமைதியாய்
என்னை கவனித்து கொண்டிருகிறான் அவன்

அவன் அருகே செல்கிறேன்

அவன் கேட்கிறான் "என்ன தேட்கிறாய் ?"

"புத்தனை" என்கிறேன்

"எங்கே தொலைத்தாய் ?"

"இல்லை, தொலைக்கவில்லை!!!"

"எனின், தொலைக்காததை எதற்காக தேடுகிறாய்/எப்படி தேடமுடியும் ?"

"இல்லை, அவந்தான் காணாம*ல் போய்விட்டான்"

"அவனா ?"

"புரியவில்லையே?!!" என்கிறேன்

"அவனா? நீயா ? " என்றவன்
மீண்டும் கேட்ட கேள்வியில்
கிடைத்துவிட்டான் புத்தன்

திருவிழாவில் தொலைந்த குழந்தை, கண்டெடுத்தவரிடம் என் அப்பா அம்மா காணாமல் போய்விட்டார்கள், என்று சொல்லுமே... அதுபோல. :)

ஆதி
12-04-2012, 06:39 AM
திருவிழாவில் தொலைந்த குழந்தை, கண்டெடுத்தவரிடம் என் அப்பா அம்மா காணாமல் போய்விட்டார்கள், என்று சொல்லுமே... அதுபோல. :)

உண்மைதாங்க அக்கா :)

தாமரை
12-04-2012, 07:25 AM
"இல்லை, அவந்தான் காணாம*ல் போய்விட்டான்"

"அவனா ?"

"புரியவில்லையே?!!" என்கிறேன்

"அவனா? நீயா ? " என்றவன்
மீண்டும் கேட்ட கேள்வியில்
கிடைத்துவிட்டான் புத்தன்

நான் தொலைந்தால்-தானே
புத்தன் வருகிறான்!

ஆதி
12-04-2012, 07:48 AM
நான் தொலைந்தால்-தானே
புத்தன் வருகிறான்!

//அவனா? நீயா ? " என்றவன்
மீண்டும் கேட்ட கேள்வியில்
கண்டெடுத்தேன் என்னை அவனில்//

இப்படி மாற்றினால் சரியாக இருக்குமா அண்ணா இல்லை இன்னும் குழப்புமா ?

இராஜேஸ்வரன்
12-04-2012, 09:45 AM
நான் தொலைந்தால்-தானே
புத்தன் வருகிறான்!

எவ்வளவு பெரிய விஷயத்தை எளிய வார்த்தைகளில் சொல்லி விட்டீர்கள். பிரமாதம்.

தாமரை
12-04-2012, 09:51 AM
//அவனா? நீயா ? " என்றவன்
மீண்டும் கேட்ட கேள்வியில்
கண்டெடுத்தேன் என்னை அவனில்//

இப்படி மாற்றினால் சரியாக இருக்குமா அண்ணா இல்லை இன்னும் குழப்புமா ?


உன்னையே குழப்புதே.. அடுத்தவரைக் குழப்பாதா என்ன?

தாமரை
12-04-2012, 09:57 AM
எவ்வளவு பெரிய விஷயத்தை எளிய வார்த்தைகளில் சொல்லி விட்டீர்கள். பிரமாதம்.

புத்தமே எளிமைதானே! அதைச் சொல்லும் வார்த்தைகள் எப்படி கடினமாக இருக்க முடியும்?

ஆதி
12-04-2012, 11:33 AM
உன்னையே குழப்புதே.. அடுத்தவரைக் குழப்பாதா என்ன?

மாற்றிட்டேங்கண்ணா..

ஆதி
12-04-2012, 12:24 PM
புத்தமே எளிமைதானே! அதைச் சொல்லும் வார்த்தைகள் எப்படி கடினமாக இருக்க முடியும்?

நுட்பமான பதில் அண்ணா, பல நாட்களாக சிந்தித்துக் கொண்டிருக்கும் ஒரு கருத்தை கவிதையாக்கும் முடிச்சு உங்க* பதிலில் தட்டுப்பட்டுவிட்டது..

ஆதி
13-04-2012, 05:05 AM
"கடவுள் இருக்கிறாரா ?"
என கேட்டேன்

"இருக்கிறார்" என்றான் புத்தன்

"பார்த்திருக்கிறாயா ?"

"ஆம்"

"எங்கே ?"

"எனக்குள்"

"அப்படியானால் நீதான் கடவுளா ? "

"இல்லை"

"நீ கடவுள் இல்லையா ?"

"இல்லை"

நான் விழிப்பதைப் பார்த்து
அவனே தொடர்ந்தான்

"உன் எதிர்ப்பார்ப்பை
பூர்த்தி செய்கிற கடவுள் என்னிடமில்லை
தேடிப்பார்
உனக்குள் இருக்கலாம்"

ஆதி
13-04-2012, 11:23 AM
எந்த தந்தியில்
உன் லயமிருக்கிறதென அறிய
சித்தாரின் ஒவ்வொரு தந்தியும் மீடுகிறேன்
இருபத்தி மூன்றிலும்
உன் லயமே கேட்கிறது

ஆதி
13-04-2012, 12:13 PM
ஒரு வனந்தரமென
செறிந்திருக்கும் எனக்குள்
சொட்டு சொட்டாய் சிந்தும் மழையென
விழுகிறாய்

என் மரங்களின் வேர்களையும்
முட்செடிகளையும்
புதர்களையும்
புற்பரப்பையும்
நீரோடைகளையும்
பறவைகளையும்
விலங்குகளையும்
பூக்களையும்
கொடிகளையும்
மட்டுமல்லாது
என் இருளையும் மெல்ல நனைத்து
கரைய வைக்கிறாய்

உன் துளிகள்
என் செறிவை குறைத்து குறைத்து
இளைக்கவைக்கிறது
நீ நிரம்ப நிரம்ப
நான் காலியாகி கொண்டே இருக்கின்றேன்

ஆதி
17-04-2012, 07:59 AM
உடைப்பை திறந்து
உனது வெள்ளம் பாய்கையில்
இழப்பே நிவாரணமாகிறது..

புல்லாங்குழலுக்கு எழுதியதில் புத்தனும் இருக்கிறான்

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=18059

ஆதி
29-04-2012, 10:14 AM
யாருடையதென
சரியாக நினைவில் இல்லை
ஒரு மரண நாளில் அவனை சந்தித்தேன்

"எப்படி இருக்கிறாய் ? " என்று கேட்டான்

"இருக்கிறேன் " என்றேன்

"ஏன் இப்படி சொல்கிறாய்
ஏதாவது பிரச்சனையா ?" என்று பதறினான்

இந்த வாழ்வில் இருக்கிறேன் என்று சொல்வதே பிரச்சனையா என்ன!!

ஆதி
07-05-2012, 06:40 AM
புத்த(க)ம் வாசித்துக் கொண்டிருந்தேன்

என்ன செய்து கொண்டிருக்கிறாய் ?
என கேட்டான் புத்தன்

"புத்தனை வாசித்துக் கொண்டிருக்கிறேன்" என்றேன்

"உன்னை வாசித்து விட்டாயா ?"

நாகரா
07-05-2012, 07:22 AM
நிச்சலனமாய் இருக்கும்
ஒவ்வொரு தருணத்திலும்
புத்தனாகிறது..
சலனம் கொள்ளும்
ஒவ்வொரு தருணத்திலும்
நிர்வானமிழக்கிறது..
அகம்!

எத்தனை முறை புத்தனை சந்தித்தாலும்
அத்தனை முறையும் அவனை அலட்சியம் செய்துவிட்டு
அவனையே தேடி அலையும் புதிர்த்தான்
புரிதலுக்கு சாத்தியமற்றதாய் இருக்கிறது

மாட்டுத்தொழுவத்தில் பிறந்தவனை போல
அழுக்கான மனதிலும் பிறக்கிறான் புத்தன்
எனினும்
அவனை சிலுவையில் அடிப்பதில்தான்
குறியாக இருக்கிறது அகம்

சில நேரம் யூதாஸாய் இருந்து
என்னையே காட்டிக் கொடுக்கும் அகம்
சில நேரம் முள்முடியாய் இருந்து
என்னையே துன்பப்படுத்துகிறது

எதையும் நிரப்ப முடியாமலும்
எதையும் காலி செய்ய இயலாமலும்
இந்த அகத்துடனான என் போராட்டத்தில்
புத்தனை ரத்தப்பலிக்கு கையளித்துவிட்டு
மூன்றாம்நாள் உயிர்த்தெழுவானென
நம்பிக்கொண்டே இருக்கிறது
மனச் சலனம்
அகச் சமனம்
இரண்டுக்கிடையே கவனம்
ஊசலாடும் வரை
மாரனுடனான போராட்டங்கள்
தொடர் கதையாய்

அகத்தில் என்றும் உள்ளதாம்
இறவாப் பிறவாப் புத்தத்தில்
கவனம் பூரணமாய் நிலை கொள்ளும் வரை
மாரனின் மாயா ஜாலத்தில்
ஏமாறும் மனமே கதி

அகத்தூடே அனகமாய் அகண்டுள
அன்பு புத்தம்
தன் அலட்சியப் படுத்தலையும்
பூரணமாய் அனுமதித்து
ஒவ்வொன்றின் மனந் திரும்பலுக்கும்
மெய் வழியாய்ப்
பூரணமாய்த் திறந்திருக்கிறது.

தாழின் கனவுகள் கலையும்
பூரண விழிப்பில்
புத்த நிதர்சனம்
வெட்ட வெளியில்
பட்டப் பகல் வெளிச்சமாய்ப்
பூரணமாய் வெளிப்படும்

அது வரை
கனவுகளின் நிரம்பலில்
உறங்கும் மனத்துக்கு
காலியான புத்த திடம்
மெய்யான உண்மை
புரியாத புதிராய்
இறப்பும் பிறப்பும் பிழைப்பும்
சுழலும் விதியாய்

கரும சக்கரப் பிரமையில்
தரும சக்கரப் பிரேமை
மறைக்கப்பட்டும்
மறுக்கப்பட்டும்
மறக்கப்பட்டும்
இருந்தாலும்
அகத்தே அனக வேகத்தில்
சதா சுழன்று கொண்டு தான் இருக்கிறது

நாகரா
07-05-2012, 07:26 AM
"கடவுள் இருக்கிறாரா ?"
என கேட்டேன்

"இருக்கிறார்" என்றான் புத்தன்

"பார்த்திருக்கிறாயா ?"

"ஆம்"

"எங்கே ?"

"எனக்குள்"

"அப்படியானால் நீதான் கடவுளா ? "

"இல்லை"

"நீ கடவுள் இல்லையா ?"

"இல்லை"

நான் விழிப்பதைப் பார்த்து
அவனே தொடர்ந்தான்

"உன் எதிர்ப்பார்ப்பை
பூர்த்தி செய்கிற கடவுள் என்னிடமில்லை
தேடிப்பார்
உனக்குள் இருக்கலாம்"
கடவுள் எங்கே என்ற கேள்விக்குக்
கட!உள் என்று மந்திர ஆணையைப் பதிலாய்க்
கடவுளே சொல்லும்

மெய்க் கடத்தின் உள்ளடக்க உயிர்மையே கடவுள் என்றும்
மெய்க்கடத்தின் உட்பாகக் காலியே கடவுள் என்றும்
மெய்ப்பொருளுஞ் சொல்லுங் கடவுள்

சிந்திக்க வைக்க புத்தனுக்கு நன்றி ஆதன்

நாகரா
07-05-2012, 07:32 AM
எந்த தந்தியில்
உன் லயமிருக்கிறதென அறிய
சித்தாரின் ஒவ்வொரு தந்தியும் மீடுகிறேன்
இருபத்தி மூன்றிலும்
உன் லயமே கேட்கிறது
உன் சுரம் என்னுள் மீண்ட*தால்
என் சுரம் சட்டெனத் தீர்ந்தது

உன் சுரத்தில் என்மெய் உருகுகிறது
என் சுரமாம் பொய்நோய் கருகுகிறது

புத்தன் மீட்டுஞ் சுரம் இனிமை, வாழ்த்துக்கள் ஆதன்

ஆதி
07-05-2012, 07:44 AM
மேலும் சிந்திக்க தூண்டிய பின்னூட்ட பாடல்களுக்கு நன்றிகள் ஐயா

ஆதி
07-05-2012, 08:03 AM
மணற்சிலை செய்து கொண்டிருந்தேன்

"என்ன செய்கிறாய் ?" என்று கேட்டான் புத்தன்

"புத்தனை செய்கிறேன்" என்றேன்

"ஒட்டு மொத்தத்திலும் இருப்பவனை
ஒரு பிடி மணலில் அடக்கிவிட முடியுமா உன்னால் ?"

"புரியவில்லையே!!!"

"இந்த மணற்பரப்பின்
ஒவ்வொரு துகளிலும் இருக்கிறான் அவன்
இந்த சிலை
பிறர்க்கு அவனை நினைவூட்ட*
நீ செய்யும்
ஒரு பிரதி
ஒரு வடிவம்
ஒரு படிமம்
ஒரு மாதிரி
ஒரு குறி
தவிர புத்தனே அல்ல"

என விவரித்துவிட்டு மீண்டும் கேட்டான்
"என்ன செய்கிறாய் ?"

"புத்தனை புத்தனால் செய்ய முயல்கிறேன்"என்று
சொன்ன*தை கேட்ட*வ*ன்
ஆழ*மான* ஒரு மோன* புன்ன*கை பூத்தான்

ஆதி
07-05-2012, 10:06 AM
ஒரு குழந்தையென
அலைகளில் விடையாடி கொண்டிருந்தான் அவன்

சாந்தமான தன் விழிகளை என் புறம் திரிப்பி
என்னையும் "வா" வென்று அழைத்தான்

அவன் அருகே சென்று நின்றேன்
அமைதியாய்

ஆன*ந்த*மாய் விளையாடிக் கொண்டே இருந்தவ*னிட*ம் கேட்டேன்
ஏன் இவ்வ*ள*வு ஆன*ந்த*மென*


"இந்த முழு கடற்பரப்பும் ஒரு புத்தன்
இதன் மையம் நிச்சலன ஆழம் கொண்டது
எனினும் இதன் எல்லை பரப்புக்கள்
ஆனந்தமும் துள்ளலும் கொண்டவை*

இவ்வானந்தமும் துள்ளலும்
கரைக்கு தாவும் முயற்சியல்ல*
நிச்சலன ஆழத்துக்குள் பாய புரியும் பயிற்சி"

ஆதி
07-05-2012, 10:22 AM
கண்களை மூடி அலைகளில் நின்றிருந்தான் புத்தன்

ஆர்வத்தின் மிகுதியால்
"என்ன செய்கிறாய் ?" என்று
அவன் அமைதியை கலைத்தேன்

"என்னில் என்னை கரைத்துக் கொண்டிருக்கிறேன்

நீயும் உன்னை உன்னில் கரைக்க இயலுமா பார்"
என கூறிவிட்டு
ஆழமாய் கடலை உற்று பார்க்க துவங்கினான்

கடல் அவன் கால்களை நனைத்துக் கொண்டே இருந்தது

நாகரா
07-05-2012, 12:47 PM
ஆ! தன் மெய் புரிகிறான்
ஆதன்

புத்தம் புதிதென உடுத்த எல்லாம்
மொத்தமாய்க் களைந்து
புத்தம் என
ஆ! தன் தன்மை உணர்கிறான்
ஆதன்

ஆதி நிர்வாணத்தில்
தன் சம்சாரப் பாதி ஆதியொடு
பேதமறக் கூடி
ஞானக் கூத்தாடுகிறான்
ஆதன்

ஆதி புத்தம்
ஜோதி மிகு நவ கவிதையில்
புத்தம் புதிதாய் மிளிர வைக்கும்
உம் வித்தைக்கு வாழ்த்துக்கள் ஆதன்

ஆதி
09-05-2012, 08:54 AM
சலம்பி கொண்டிருந்த மனம்
புத்தனின் போதனைகளை
கவனிப்பதிலிருந்து என்னை
தடுத்துக் கொண்டிருந்தது

ஓசை எழுப்பாத குளம்படிகளோடு
பாய்ந்து வந்த எண்ணக்குதிரைகள்
அள்ளிக் கொண்டு போய்
எங்கோ வீசியெறிந்தன என்னை

பாதையெறியாத திசைநதியொன்றின்
முரட்டு சுழலில் அகப்பட்டு
அடித்து செல்லப்படுவதை உணர்ந்து
திடுக்கிட்டு மீண்ட தருணத்தில்
புத்தன் என்னையே உற்று பார்த்துக் கொண்டிருந்தான்

"பெரிய குழப்பத்தில் இருக்கிறேன்
மனம் சலனித்து பாரமாகி கொண்டே இருக்கிறது
உன் போதனைகளை கவனிக்க முடியவில்லை" என சொன்னேன் அவனிடம்

"அப்படியானால்,
உன் மனதை கவனி!!"
என்றான் புத்தான்

நாகரா
09-05-2012, 11:20 AM
சலனித்து மனம் தான் எழுவதும்
தன் ஆதி இருதயத்தில் விழுவதும்
சயனத்தை விட்டு கவனி

யுத்த களத்தில் நிராயுதபாணியாய்
புத்த சமனத்தை வெல்ல
சுத்த இ(ரு)தயத்தைக் கவனி

இருதய நடுவினின்றெழுந்து
சிரமதைக் கழுவி
பெருமிதமோடு விழுந்து
பதமதைத் தழுவி
புவிமிசை படரும்
அருட்(ந்)தய அன்பைக் கவனி

ஆதி
09-05-2012, 11:53 AM
சலனித்து மனம் தான் எழுவதும்
தன் ஆதி இருதயத்தில் விழுவதும்
சயனத்தை விட்டு கவனி

யுத்த களத்தில் நிராயுதபாணியாய்
புத்த சமனத்தை வெல்ல
சுத்த இ(ரு)தயத்தைக் கவனி

இருதய நடுவினின்றெழுந்து
சிரமதைக் கழுவி
பெருமிதமோடு விழுந்து
பதமதைத் தழுவி
புவிமிசை படரும்
அருட்(ந்)தய அன்பைக் கவனி


ஆஹா ஆஹா
அற்புதமான பின்னூட்ட கவிதை ஐயா
மிக அழகாக திறந்து வைத்துவிட்டீர்கள் கடைசி வரியில் இருக்கும் அர்த்தங்களை, நன்றிங்க ஐயா

நாகரா
10-05-2012, 03:56 AM
நான் தொலைந்தால்-தானே
புத்தன் வருகிறான்!
தாமரையுட் செல்வனைத் தாமரைதான் அறியார்
தாமரையுட் செல்வனைத் தாமரைதான் அறிய
தாமரையார் செல்வனே தாமரையுந் தொலைந்தார்
தாமரையுஞ் செல்வனுமாய் தாரணியில் மீண்டார்

தாமரை = மனிதத்தின் படிமம்
செல்வன் = இறைமை புத்தத்தின் படிமம்
தாமரை செல்வன் = மனித இறைமை புத்த ஒருமையுணர்வு

தாமரை = தாம் அரை = ஒரு பாதி
செல்வன் = மறு பாதி
தாமரை செல்வன் = ஒரு பாதியை மறு பாதியிலிருந்து பிரிக்க முடியாப் பூரணம், நாணயத்தின் இரு பக்கங்களைப் போல்!

நாகரா
10-05-2012, 06:52 AM
இடிந்த கட்டடத்தில்
இடியாமல் இருந்தவன்
இடிந்திருந்தான்

*********************

திருத்தப்பட்டது :

இடிந்த கட்டடத்தில்
இடியாமல் இருப்பவன்
இடிந்திருந்தான்
இடிந்த கட்டடத்தின் உள்ளடக்கமாம்
இடியாத மெய்ம்மை உணர்ந்து
இடியாதிருக்கிறான்

இடியாப் பிரேமையின் உருவானவன்
இடியும் பிரமையில் உருக்குலைவானா?
இடிக்கும் கேள்வியில்
இடிந்து போனது பிரமை
(பிரேமை = அன்பு)

நாகரா
10-05-2012, 07:09 AM
சொல்லும் பொருளும் பொருந்துகின்றன என்றாலும்..
சொல்லும் பொருளும் புரிகின்றன என்றாலும்
சொல்லும் பொருளும் வெளிப்படுகின்றன என்றாலும்
சொல்லும் பொருளும் தோய்த்து உலர்ந்து
சொல்லும் பொருளும் கசங்கிச் சுருங்கி
சொல்லும் பொருளும் இரைந்து கிடக்கின்றன.
தாமரைச் சொல்லின் பொருளாய் உள்ளான்
தாமரை உள்ளே செல்வன்

தாமரை = மனிதன்
செல்வன் = புத்தன்
தாமரை செல்வன் = மனித புத்த ஒருமை

தாமரைச் சொல்லின் பொருளாய் உள்ளான்
தாமரை யோடே செல்வன்

நாகரா
10-05-2012, 07:21 AM
தலை தொங்க சிலுவையில்
மரணித்த புத்தன்

சாகும் முன்
"ஏலி ஏலி லெமா சபக்தானி"
என்றானாம்

அதை கேட்டவர்கள் பலரும் சொன்னர்கள்
அவன் புத்தன் தான் என்று

இப்படித்தான்
நீங்களும் நானும் மற்ற பிறரும்
பல புத்தன்களை கொன்றுகுவிக்கிறோம்
நம்மிலும் பிறரிலும் யாவிலும்
அழியா இருப்பாம் புத்தனை
அழிப்பதாய் உருமும் வன்மமே
அழியாதிருப்பதோ
கருமக் களத்தில்
தரும வளத்தைப்
பிழிந்து கொண்டே இருக்கும்
உருமும் வன்மமோ அதைப்
பழித்துக் கொண்டே இருக்கும்

நாகரா
10-05-2012, 07:43 AM
விழுவதிலேயே
கவனமாய் இருக்கிறது அருவி

விழுதலைக் குறித்த*
எவ்வெதிர்ப்புக்களும்
எம்மறுப்புக்களும் இன்றி
சல்லடையில்
சித்தாளொருத்தி லாவகமாக கொட்டும்
வெண்மனலென*
விழுந்து கொண்டே இருக்கிறது அது

விழுதலின் வேகத்தில் ஜனிக்கும்
காற்றின் பயண திசையை பற்றி
எவ்வக்கறையும் கொள்ளாமல்
அது விழுந்து கொண்டே இருக்கிறது

மோதலால் கூர் மழுங்கி
மேனி வளுவளுப்பான* பாறைகளிடம்
விழுதலின் களிப்பின் அலாதியை
சலசலத்தும்
முணுமுணுத்தும்
லயிக்கும்

விழுதல் இறக்கும்
வற்றியத்தருணத்திலும்
வெயில்வள்ளி படர்ந்த
வெம்மை பாறைகளில்
தவங்களிருக்கும்/தவங்கள் நடக்கும்
விழுதல் வேண்டி
விழுவதிலேயே
கவனமாய் இருக்கிறது அருள்

விழுதலைக் குறித்த
எவ்வெதிர்ப்புக்களும்
எம்மறுப்புக்களும் இன்றி
சல்லடையில்
சித்தாளொருத்தி லாவகமாக கொட்டும்
வெண்மனலென
விழுந்து கொண்டே இருக்கிறது அது

விழுதலின் வேகத்தில் எழும்
பொருளையெல்லாம்
அக்கறையோடு தழுவிக் கொண்டே
அது விழுந்து கொண்டே இருக்கிறது

விழுதலின் விசையில்
இளகிய மனத்திடம்
விழுதலின் களிப்பின் அலாதியை
சலசலத்தும்
முணுமுணுத்தும்
லயிக்கும்

விழுதல் இறக்கா
வற்றா ஜீவாமிழ்தமாய்
இறுகிய மனத்தை
இளக்கும் லாவா அமிலமாய்
விழுந்து கொண்டே இருக்கிறது அது

நாகரா
10-05-2012, 10:39 AM
விழுதல் உயிர்ப்போடு இருத்தலின் அடையாளம்
விழுதல் மோதிப் பார்க்கும் துணிவின் அடையாளம்
விழுதல் சமத்துவ தத்துவத்தின் உயிர்நாடி
கற்பிள்ளை கர்வமாய் நிற்க
காற்றுக்கணவம் அங்கிங்கு அலைபாய
விழுதலால் பெண்மை தாய்மை
விழுதல் இறைமை இயற்கை
பரம விழுப்பொருளாய்
அதன் விழுதல் இன்றி
எழுவதில்லை எப்பொருளும்

நாகரா
10-05-2012, 10:42 AM
கண்களை மூடி அலைகளில் நின்றிருந்தான் புத்தன்

ஆர்வத்தின் மிகுதியால்
"என்ன செய்கிறாய் ?" என்று
அவன் அமைதியை கலைத்தேன்

"என்னில் என்னை கரைத்துக் கொண்டிருக்கிறேன்

நீயும் உன்னை உன்னில் கரைக்க இயலுமா பார்"
என கூறிவிட்டு
ஆழமாய் கடலை உற்று பார்க்க துவங்கினான்

கடல் அவன் கால்களை நனைத்துக் கொண்டே இருந்தது
சம்சாரக் கடல் மீது
நிர்வாணமாய் நடக்கிறான்
நம் சாரம் புத்தன்

நாகரா
10-05-2012, 11:09 AM
"கடவுள் இருக்கிறாரா ?"
என கேட்டேன்

"இருக்கிறார்" என்றான் புத்தன்

"பார்த்திருக்கிறாயா ?"

"ஆம்"

"எங்கே ?"

"எனக்குள்"

"அப்படியானால் நீதான் கடவுளா ? "

"இல்லை"

"நீ கடவுள் இல்லையா ?"

"இல்லை"

நான் விழிப்பதைப் பார்த்து
அவனே தொடர்ந்தான்

"உன் எதிர்ப்பார்ப்பை
பூர்த்தி செய்கிற கடவுள் என்னிடமில்லை
தேடிப்பார்
உனக்குள் இருக்கலாம்"
நீ இருக்கிறாயா?

ஆம், இருக்கிறேன்.

நீ இருப்பதை அறிகிறாயா?

ஆம், அறிகிறேன்.

இவ்விரண்டு வினாக்களுக்கும் விடையிறுக்கப் புறத்திலிருந்து ஏதேனும் சாதனம் உனக்குத் தேவைப்பட்டதா?

இல்லை.

அப்படியானால் நீ இருப்பதும் இருப்பதை அறிவதும் சஹஜமாக எவ்வித முயற்சியுமின்றி உணரப்படுகின்றன, அல்லவா?

ஆம்.

இருக்கும் நீ இல்லாமல் போக முடியாது.
இருப்பதை அறியும் ஞானத்தை நீ மறந்து போக முடியாது.
இந்த நிதர்சனம் உன் உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் பூரணமாய் வெளிப்பட
நீ பூரணமாய் அனுமதிக்கும் போது, அது மெய்யாய் உயிர்க்கும் இரசவாதம் நிகழும்.

ஆதி
23-09-2012, 08:41 AM
உன்னை பற்றியே
வியந்து வியந்து யோசிக்கிறேன்
உன்னை யோசிக்க துவங்கினாலே
வந்து நிரம்பிவிடுகிறது
நிச்சலனம்

உன் சூன்யத்தின் நிலத்தில்
சூன்யமாய் மாறி
தவளையல்ல*
பெரும்யானை குதித்தாலும்
சலனிக்காத குளமாய் மாற*
மெனக்கெடுகிறேன்

காதலியின் மென்பார்வை போல*
விழுந்தது ஒரு இறகு
மிக மகிழும் காதலனுள்ளமாய்
பெருமதிர்வுற்று
அமைதி இழந்தது குளம்

நீ மட்டும் அப்படியே அமைதியாய்

ஆதவா
23-09-2012, 09:36 AM
கடைசி வரியில் “சிரிக்கிறாய்” என்ற சொல்லோடு நான் படித்து முடித்துக் கொண்டேன் ஆதி.

அவெஞ்சர்ஸ் படத்தில் மார்க் ரஃபலோதான் ஹல்காக வருவார்.. உங்க்ளுக்கு ஹல்க் பற்றி தெரியும் என்று நினைக்கிறேன். கோபத்தில் மிருகமாகவும், சாந்தத்தில் மனிதனாகவும் இருப்பார். படத்தில் மனிதரை என்னதான் செய்தாலும் கோவமடையமாட்டார். ஆனால் ஒரு கட்டத்தில் தேவையான நேரத்தில் ஹல்காக மாறுவார்..
எப்படி?
அவர் கோவத்தை தனக்குள்ளே கட்டுப்படுத்தும் மாயத்தைக் கண்டுபிடித்திருப்பார். (இந்தியாவில்!?) தனக்குள்ளே எது கட்டுப்படுகிறதோ அது தான் நினைக்கும்பொழுதெல்லாம் வெளியேறும்.

மனம் ஒரு கடல் போன்றது. எந்நேரமும் சலனத்தோடே இருக்கக் கூடியது. தியானம் பனிக்கடல் போன்றது. மனதை உறைய வைத்துவிடுகிறது. ஒரு சிறு கல் எறிதலில் உண்டாகும் சலனம் நாம் கடலாகவோ அல்லது பனிக்கடலாகவோ இருக்கும்பொழுது நிலையை மாற்றிவிடுகிறது இல்லையா?

என்னைப் பொறுத்தவரையில் புத்தன் என்பதே அமைதியான ஆர்ப்பாட்டம்.. அல்லது ஆர்ப்பாட்டமான அமைதி. இரண்டின் நிலை அவரவர் சிந்தை பொறுத்து பொருந்தலாம்.

பிகு: இது கவிதைக்கான விமர்சனமல்ல.

ஆதி
26-12-2012, 10:41 AM
தோல்வியின் கணங்களிலிருந்து
தப்பிக் கொள்ளவே
ஒளிந்து கொள்றேன் புத்தனிடம்
அவன் என்னை
தோற்றுவிட்டு வாயென*
உதறி துறக்கிறான்

தாமரை
26-12-2012, 10:52 AM
தோல்வியின் கணங்களிலிருந்து
தப்பிக் கொள்ளவே
ஒளிந்து கொள்றேன் புத்தனிடம்
அவன் என்னை
தோற்றுவிட்டு வாயென*
உதறி துறக்கிறான்


நல்லது.. புத்தன் இன்னும் துறந்து முடிக்கலை போல...

தாமரை
26-12-2012, 10:59 AM
:eek:
உன்னை பற்றியே
வியந்து வியந்து யோசிக்கிறேன்
உன்னை யோசிக்க துவங்கினாலே
வந்து நிரம்பிவிடுகிறது
நிச்சலனம்

உன் சூன்யத்தின் நிலத்தில்
சூன்யமாய் மாறி
தவளையல்ல*
பெரும்யானை குதித்தாலும்
சலனிக்காத குளமாய் மாற*
மெனக்கெடுகிறேன்

காதலியின் மென்பார்வை போல*
விழுந்தது ஒரு இறகு
மிக மகிழும் காதலனுள்ளமாய்
பெருமதிர்வுற்று
அமைதி இழந்தது குளம்

நீ மட்டும் அப்படியே அமைதியாய்

ஓடும் ரயிலில்
ஓடவில்லை
ஓடுகிறேன்...

பறக்கும் விமானத்தில்
பறக்கவில்லை
பறக்கிறேன்

மிதக்கும் கப்பலில்
மிதக்கவில்லை
மிதக்கிறேன்

ஒன்றும் செய்யாமல்
எல்லாம் செய்கிறேன்,

நான் அமைதியாக இல்லை
குளத்துடன் ஆடிக் கொண்டிருக்கிறேன்
குளம் ஆடாமல் இருக்கிறது!!!

தாமரை
26-12-2012, 11:02 AM
சலம்பி கொண்டிருந்த மனம்
புத்தனின் போதனைகளை
கவனிப்பதிலிருந்து என்னை
தடுத்துக் கொண்டிருந்தது

ஓசை எழுப்பாத குளம்படிகளோடு
பாய்ந்து வந்த எண்ணக்குதிரைகள்
அள்ளிக் கொண்டு போய்
எங்கோ வீசியெறிந்தன என்னை

பாதையெறியாத திசைநதியொன்றின்
முரட்டு சுழலில் அகப்பட்டு
அடித்து செல்லப்படுவதை உணர்ந்து
திடுக்கிட்டு மீண்ட தருணத்தில்
புத்தன் என்னையே உற்று பார்த்துக் கொண்டிருந்தான்

"பெரிய குழப்பத்தில் இருக்கிறேன்
மனம் சலனித்து பாரமாகி கொண்டே இருக்கிறது
உன் போதனைகளை கவனிக்க முடியவில்லை" என சொன்னேன் அவனிடம்

"அப்படியானால்,
உன் மனதை கவனி!!"
என்றான் புத்தான்


http://www.tamilmantram.com/vb/showthread.php/30918-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?p=570023&viewfull=1#post570023

தாமரை
26-12-2012, 11:23 AM
ஒரு வனந்தரமென
செறிந்திருக்கும் எனக்குள்
சொட்டு சொட்டாய் சிந்தும் மழையென
விழுகிறாய்

என் மரங்களின் வேர்களையும்
முட்செடிகளையும்
புதர்களையும்
புற்பரப்பையும்
நீரோடைகளையும்
பறவைகளையும்
விலங்குகளையும்
பூக்களையும்
கொடிகளையும்
மட்டுமல்லாது
என் இருளையும் மெல்ல நனைத்து
கரைய வைக்கிறாய்

உன் துளிகள்
என் செறிவை குறைத்து குறைத்து
இளைக்கவைக்கிறது
நீ நிரம்ப நிரம்ப
நான் காலியாகி கொண்டே இருக்கின்றேன்

முகப்புத்தகத்தில் நடந்த சுவாரஸ்யமான உரையாடலை இங்கே இணைக்கிறேன்...


தாமரை : அடடே உள்ளுக்குள் வந்த அந்த பெண் யாரப்பா? (ஒரு பெண் உள்ளத்தில் நிரம்பினால் ஒரு ஆண் காலிதானே)

ஆதி : பொண்ணு இல்லைங்க அண்ணா புத்தன்

தாமரை : கரைதல் என்பதற்கு அழுதல் என்ற அர்த்த்ம் இருக்கில்லையா.. அதைப் போட்டுப் பாரு. எல்லாரையும் கரைய (அழ) வைக்கும் திறமை பெண்ணுக்கு மட்டுமே உண்டல்லவா?

ஆதி : ஹா ஹா ஹா, , ஆனால் கரைஞ்சு போற அளவுக்கு எல்லாம் சூழலும் இல்லை மனசுமில்லைங்க அண்ணா

தாமரை :நான் கூட அதைத்தானே சொன்னேன்.. உன் மனசு உன்கிட்ட இல்லைன்னு..

ஆதி : ஹி.. ஹி.. புத்தன் கிட்ட மனச விட்டதை தானே நான் சொல்லிவிட்டு இருக்கேன். காதலுக்காக மட்டுமில்லைங்களே அண்ணா, கடவுளுக்காகவு கசிந்துருகிய கதைகள் நம்ம கிட்ட இருக்கே

தாமரை : கடவுளுக்காக அழுதல் என்பது மடத்தின் பாற்பட்டது. புத்தன் என்பது ஞானத்தின் பாற்பட்டது அதெப்படியப்பா ஒத்தவரும். ஆனால் ஒண்ணு.. ஒண்ணுமே தேவைப்படாத புத்தனுக்கு மன்சை ஏன் கொடுக்கற?

ஆதி : கட உள் என்று சொல்லி கொடுத்தவன் ஆச்சே அண்ணா அதுதான் கொடுத்தேன்

தாமரை : கட உள் தானே.. கொடு உள் இல்லையே...

ஆதி : முதலில் உள் கொடுத்தேன் அப்பறம் உள் கடந்தேன்

தாமரை : அதாவது அவரை உள்ளே தள்ளிட்ட... நீ வெளிய போய் பூட்டிட்ட...

ஆதி : ஹா ஹா ஹா நெனச்சேன், உள் கடந்தேன்னு சொல்லும் போதே. கடந்து போறதும் புத்தன் தான் இல்லையா

தாமரை : ஒரு சின்ன நுணுக்கமான வித்தியாசம் இருக்கிறது காதலுக்கும் கடவுளுக்கும்,அது இந்தக் கவிதையில் தெரியுது... முடிஞ்சா கண்டுபிடி

ஆதி : காதல் கொடுத்ததை எதிர்ப்பார்ப்பது, கடவுள் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் கொடுப்பது

தாமரை : கடவுள் ஏனப்பா கொடுக்கணும்? கடவுள் யாருக்கப்பா கொடுக்கணும்?

ஆதி : நான் மனசை கொடுப்பதை சொன்னேங்கண்ணா

தாமரை :
கடவுள் யாருக்கு கொடுப்பார்?
ஏன் கொடுப்பார்?
மனம் புதர்மண்டி இருண்டு கிடக்கும் போது அங்கு கடவுள் இல்லையா என்ன?
புதுசாத்தான் வந்து நிரம்பணுமா?

ஆதி : நாம கடவுளுக்கு மனசை கொடுப்பதை சொன்னேங்கண்ணா

தாமரை : நம்மளுதுன்னு ஒண்ணுமே இல்லை என்பதுதானே கரைதலின் பொருள்.. அப்படி இருக்க நம்மால் எப்படிக் கொடுக்க முடியும்?
முதலில் நம்முடையது என்பது கரைய அப்புறம் நான் என்பதும் கரைகிறது... அதானே சொல்லி இருக்க...அப்புறம் எப்படி மனதைக் கொடுக்க முடியும்.

ஆதி : ஆமா ஆமா, நானே கரைந்தப்பின் மனம் எங்கே இருக்கும்

தாமரை : ஒரு பெண் மனதில் நுழைந்தால் கரையும் வரிசை வேறு.. கடவுள் நுழைந்தால் கரையும் வரிசை வேறு வரிசையைக் கவனி..
நமக்குத் தெரியும் இது காதலையும் குறிக்கும் கடவுளையும் குறிக்கும் என.. நாம் எதைச் சொல்கிறோம் என்பதைச் சுட்ட ஒரு சின்ன விஷயத்தை வித்தியாசப்படுத்தி விட வேண்டும். நீ அதை வரிசையில் கோட்டை விட்டிருக்கிறாய். ஒவ்வொன்றிற்கும் ஒரு படிமம் இருக்கும். வேர் என்பது உன்னைத் தாங்குபவர்கள். இப்படி,,, அதைப் போட்டுப் பார்.. கடவுள் நுழைவதும் காதல் நுழைவதும் வித்தியாசப்படும்

ஜான் : நீ நிரப்ப நிரப்ப நான் காலியாகிக் கொண்டே இருக்கிறேன் என்றும் வா(யோ)சித்துப் பார்த்தேன் ...ரம்மியமாக இருந்தது

தாமரை : ஆதி சொன்னது..

நீ நிரம்ப நிரம்ப
நான் காலியாகிக் கொண்டே இருக்கிறேன்..

இப்ப என்னிடம் சொல்ல நினைப்பதுதான்

நீ நிரப்ப நிரப்ப நான் காலியாகிக் கொண்டே இருக்கிறேன்

ஆதி
26-12-2012, 11:35 AM
நல்லது.. புத்தன் இன்னும் துறந்து முடிக்கலை போல...

அவன் தோற்றுவிட்டு வாவென*
சொல்லி தன்போக்குக்கு நடக்கிறான்

இப்படித்தான் எழுதினேன் அண்ணா

அப்புறம் தோணுச்சு புத்தன் என்பவன் முழுசா எல்லாத்தை துறந்தவனா மட்டும் தான் இருக்க வேண்டுமா ? அப்பப்போ அது அதை துறப்பவன் புத்தனா இருக்க கூடாதானு அதனால் அப்படி எழுதினேன் அண்ணா

துறக்கிறான் என்று போடும் போதே யோசிச்சேன் இப்படி ஒரு பதில் வரும்னு

தாமரை
26-12-2012, 11:45 AM
அவன் தோற்றுவிட்டு வாவென*
சொல்லி தன்போக்குக்கு நடக்கிறான்

இப்படித்தான் எழுதினேன் அண்ணா

அப்புறம் தோணுச்சு புத்தன் என்பவன் முழுசா எல்லாத்தை துறந்தவனா மட்டும் தான் இருக்க வேண்டுமா ? அப்பப்போ அது அதை துறப்பவன் புத்தனா இருக்க கூடாதானு அதனால் அப்படி எழுதினேன் அண்ணா

துறக்கிறான் என்று போடும் போதே யோசிச்சேன் இப்படி ஒரு பதில் வரும்னு

அவ்வப்போது துறக்க அவர் என்ன சிகரெட்டையா விடறார்? கொண்டால்தானே துறக்க?