PDA

View Full Version : ஆல் இன் ஆல் ஆலிவ் ஆயில்!



kolanchiyappan
03-04-2012, 07:09 AM
ஆல் இன் ஆல் ஆலிவ் ஆயில்!

'நீண்ட ஆயுளுக்கு உத்தரவாதம். சருமத்தைப் பொலிவாக்கி, இளமையைக் காக்கும் மகிமை ஆலிவ் எண்ணெய்க்கு உண்டு. புற்றுநோயைத் தடுக்கும் வல்லமைகொண்டது என்பதால், ஐரோப்பியர்கள் அன்றாட உணவில் அதிக அளவு ஆலிவ் எண்ணெயைச் சேர்த்துக்கொள்கிறார்கள். நம் ஊர் அளவுக்கு அவர்களுக்கு இதய நோய் பரவலாக இல்லாமல் இருப்பதற்கும் ஆலிவ் ஆயிலே காரணம்'' - ஆலிவ் எண்ணெயின் பெருமையை விரிவாகப் பேசுகிறார் இதய சிகிச்சை நிபுணரான டாக்டர் கீதா சுப்ரமணியன்.
''பச்சை நிற ஆலிவ் காய்களில் இருந்து பச்சை நிற எண்ணெயும் சற்றுப் பழுத்தப் பழங்களில் இருந்து மஞ்சள் நிற எண்ணெயும் எடுக்கப்படுகிறது. ஆலிவ் எண்ணெயின் தனித்தன்மையே அதன் நறுமணமும், வித்தியாசமான சுவையும்தான். நல்ல கொழுப்பு அடங்கிய இந்த எண்ணெயானது நீண்ட நாட்கள் கெட்டுப்போகாது என்பது கூடுதல் சிறப்பு. 'ஒமேகா 3’ மற்றும் 'ஒமேகா 6’ ஆகிய நல்ல கொழுப்புகள் ஆலிவ் எண்ணெயில் 8:1 என்ற விகிதத்தில் இருப்பதால், இதயத்தைப் பாதுகாக்கிறது. இதனால்தான் உலகிலேயே மிகவும் ஆரோக்கியம் தரும் எண்ணெயாக ஆலிவ் எண்ணெய் கருதப்படுகிறது.
பொதுவாக ஆலிவ் எண்ணெய் அடர்த்தி குறைந்த கெட்டக் கொழுப்பைக் (எல்.டி.எல்) குறைத்து, அடர்த்தி அதிகம் உள்ள நல்லக் கொழுப்பை (ஹெச்.டி.எல்) அதிகரிக்கச் செய்வதால், பக்கவாதம், இதய நோய் வரும் வாய்ப்புகளைத் தடுக்கிறது. இதில் உள்ள வைட்டமின் ஈ, கரோட்டின், ஆலியுரோபியன், ஆலியோகேந்தல் போன்ற காரணிகள்... புற்றுநோய், கிருமித் தொற்று, சர்க்கரை நோய் மற்றும் இதய நோயைத் தடுக்கும் ஆற்றல்கொண்டவை!
சூடு செய்யப்படாத ஆலிவ் எண்ணெயில் உடற்பருமனை ஏற்படுத்தும் 'டிரான்ஸ் ஃபேட்’ என்ற கெட்டக் கொழுப்பு கிடையாது. ஆனால், எண்ணெயை அடுப்பில் வைத்துக் காய்ச்சும்போது அதில் இருந்து 'டிரான்ஸ் ஃபேட்’ உருவாகிவிடும். இந்தப் புகையை சுவாசித்தால், உடலுக்குத் தீங்கு ஏற்படும். அதனால் சமைக்கும்போது கவனம் தேவை. ஆகையால், கூடுமான வரை காய்ச்சாமல், அப்படியே சாலட்டில் சேர்த்து சாப்பிட்டால் அதிகப் பலன் கிடைக்கும்'' என்கிறார் கீதா சுப்ரமணியன்..thanks Dr Vikadan

jayanth
03-04-2012, 11:28 AM
உபயோகப்படுத்தலாம். ஆனா.....ம்.....நம்மூரில் விலைதான் சிறிது(???) அதிகம்..!!!

Dr.சுந்தரராஜ் தயாளன்
03-04-2012, 11:31 AM
மற்ற எண்ணையோடு நோக்கும் போது இது மிக அதிக விலை இங்கு. பதிவுக்கு நன்றி.:)

அமீனுதீன்
07-04-2012, 10:49 AM
தகவலுக்கு நன்றி

arun
07-04-2012, 01:25 PM
ஆலிவ் ஆயில் உபயோகப்படுத்தினால் நன்றாக தான் இருக்கும் ஆனால் விலை ? ..