PDA

View Full Version : பிரபலமான வாசகங்கள்:lavanya
24-12-2003, 11:45 PM
பிரபலமான ஆட்டோ வாசகங்கள்:

இன்றைகு தமிழகமெங்கும் ஓடுகிற ஆட்டோக்களிடம் லைசென்ஸ் இருக்கிறதோ என்னவோ கண்டிப்பாக அதன் பின்னால் நல்ல வாசகங்கள் இருக்கும். கொஞ்சம்
சுவாரஸ்யமாக இருக்கும்.கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். நீங்கள் பார்த்த
கேட்ட வாசகங்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.

நான் பார்த்த சில வாசகங்கள்:

1. கடவுள் காதலித்தால் புராணம்
மனிதன் காதலித்தால் மயானம்

2. திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.
வாழ்க்கை நரகத்தில் பயணப்படுகிறது.

3. பிச்சை புகினும் கல்வி தவறேல்
நஞ்சை பருகினும் காதல் தவிர்.

4. அட நம்ம சந்திரன் !

5. சுமக்க நானிருக்க நடை பயணம் ஏன்...?

6. சோர்ந்து போனாலும் ஊர்ந்து போக மாட்டேன்.

இளசு
24-12-2003, 11:54 PM
நம்ம மன்மதன் ஆட்டோவில் என்ன வாசகம்னு தெரியலியே...

இன்னொரு அலம்பல் பதிவு லாவ்...
பாராட்டுகள்.

இப்பல்லாம் நீங்க பதிச்சா அடுத்த நாள்தான் பதில் எழுத முடியுது..


ஆட்டோவுக்கு அட்வான்ஸ் மட்டும் இப்போ..

சாதல் சாதாரணம்
காதல் சதா ரணம்..


சவாரி பிறகு.. சரீங்களா?

அலை...
25-12-2003, 12:45 AM
மிகப் பிரபலமான ஆட்டோ வாசகம்..

சீறும் பாம்பை நம்பு...
சிரிக்கும் பென்னை நம்பாதே...


அலை...

aren
25-12-2003, 01:40 AM
மிகப் பிரபலமான ஆட்டோ வாசகம்..

சீறும் பாம்பை நம்பு...
சிரிக்கும் பென்னை நம்பாதே...


அலை...

இப்படி எழுதி இருக்கும் ஆட்டோக்களில் அதிகம் பயணம் செய்வது பெண்கள்தான் அதுவும் இந்த வாசகத்தைப் படித்துவிட்டு சிரித்துக்கொண்டே பயணம் செய்கிறார்கள்.

எனக்குத் தெரிந்த இன்னும் ஒன்று:

பிரசவத்திற்கு இலவசம்.
(ஆட்டோவில் பயணம் செய்தால் குழந்தை ஆட்டோவிலேயே பிறந்துவிடும் என்பதை சிம்பாலிக்காக சொல்கிறார்கள்)

aren
25-12-2003, 01:40 AM
லாவண்யா அவர்களே, உங்களுடைய ஒவ்வொரு பதிவும் அருமையாக உள்ளது. பாராட்டுக்கள்.

இக்பால்
25-12-2003, 09:35 AM
டிஎன்.-37
3547

திட்டாதீங்கப்பா... நான் என்ன செய்யட்டும்? எனக்கு தெரிந்த ஒன்றே
ஒன்று "பிரசவத்திற்கு இலவசம்" . அதையும் ஆரேன் தம்பி கொடுத்து விட்டார்.

ஆனால் ஆம்னி பஸ்ஸில் 'லாவண்யா' என எழுதி இருப்பது கண்ட ஞாபகம்
இன்னும் உள்ளது.

லாவண்யா தங்கை...என்ன ஆச்சு உங்களுக்கு? இப்படி தூள் கிளப்பறீங்க!!!

-அன்புடன் அண்ணா.

gankrish
26-12-2003, 10:34 AM
லாவ் மறுபடியும் அழகான தலைப்பு...

ஏதோ என் சிற்றரிவுக்கு தெரிந்தது...

வீட்டிற்க்கு ஒரு மரம் வளர்ப்போம்..

நாம் இருவர்.. நமக்கு ஒருவர்..

பெண்ணின் திருமண வயது 18
ஆணுக்கு 21

அங்காளம்மன் துணை...

lavanya
26-12-2003, 10:41 AM
மேலும் சில வாசகங்கள்

1. எப்போதும் நினைத்திரு...அப்போதும் வருவேன்

2. நான் ஞாயமான ஆட்டோக்காரன்

இளசு
26-12-2003, 12:08 PM
சவாரியைத் தொடரும் அலம்பல் அலை, இளவல் இக்பால்,
அன்பின் ஆரென், கானா கான்கிரீஷ், மீண்டும் மின்னல்

சூடு மீட்டரா மக்களே....இந்த ஸ்பீடு...

குலுக்கும் ஆட்டோவை வைத்து ஆரென் சொல்லிய குறும்பு சூப்பர்..

aren
26-12-2003, 03:04 PM
சூடு மீட்டர்தான் போலிருக்கிறது இளசு அவர்களே. இவ்வளவு வேகமாகப் போகிறது.

poornima
27-01-2009, 02:28 PM
மறுபடி இதை தொடருங்களேன்

சிவா.ஜி
27-01-2009, 04:08 PM
ஆமா மக்களே தொடருங்க. நான் இப்ப தமிழ்நாட்டுல இல்ல...இருந்திருந்தா..ஒவ்வொரு ஆட்டோவுலயும் போயி கொண்டு வந்திருப்பேன்.

அக்னி
27-01-2009, 04:20 PM
போயி கொண்டு வந்திருப்பேன்.
போய்க்கொண்டு வருவீங்களா... :icon_hmm:
ஆச்சரியமா இருக்கே... :rolleyes:

நம்ம செல்வா மாதிரியா... ;)

அன்புரசிகன்
27-01-2009, 04:39 PM
கட்டுக்களை நட்டுவைத்தால்
கட்டைகளும் கரும்பாகும்

யாழ்ப்பாணத்தில் கண்டதாய் ஞாபகம்...

இதை விட பொதுவாக யாழில் காணக்கூடியது இறைவனின் துதிகளை.

அன்புரசிகன்
27-01-2009, 04:41 PM
பிரசவத்திற்கு இலவசம்.
(ஆட்டோவில் பயணம் செய்தால் குழந்தை ஆட்டோவிலேயே பிறந்துவிடும் என்பதை சிம்பாலிக்காக சொல்கிறார்கள்)
அட... அந்தக்காலத்திலேயே சொல்லிவைத்துவிட்டீர்கள்...

நடிகர் விவேக் மன்றப்பக்கம் வாறவரா??? இல்லை நீங்கள் விவேக்குக்கு எழுதிக்கொடுப்பவரா???

சண்டை படத்தில் இதை வைத்தே ஒரு நகைச்சுவைக்காட்சி வந்ததே..........

தென்னாட்டு சிங்கம்
27-01-2009, 05:16 PM
நாம ஆட்டோவுல பார்த்த வாசகம் இதுதானுங்கோ..

TN 01-4715

அடிக்க வராதிங்க.. நா பார்த்ததை ஏற்கன்வே எல்லாரும் தந்ததாலதான் இது..:icon_ush:

arun
02-02-2009, 04:59 PM
ஆட்டோ வாசகங்கள் சூப்பர் பெரும்பாலும் நடிர்களின் படங்கள் ஆட்டோவில் கண்டிப்பாக இருக்கும்

umakarthick
21-10-2009, 02:49 PM
எதேச்சையாக படிக்க நேரிடும் சில வாசகங்கள் தமிழின் அருமையை உணர்த்தும் விதமாக இருக்கும்...


எங்களூரில் ஒரு புரோட்டாக் கடையில் இப்படி எழுதியிருந்தார்கள்..

'நிறை இருந்தால் நண்பர்களிடம் சொல்லுங்கள்
குறை இருந்தால் எங்களிடம் சொல்லுங்கள்'

கோவையில் டாடா பாத் சாலையில்

'சாலையை பார்த்தால் சமத்து
சேலையை பார்த்தால் விபத்து'


நேற்று இரவு தாம்பரம் பக்கத்தில் ஒரு போர்டில் பார்த்த வாசகம்

'சாகசம் செய்யுமிடம் சாலையல்ல
மெதுவாய் செல்பவன் கோழையல்ல'


எப்படி தான் யோசிக்காறாங்களோ!!!..

இப்படி நீங்களும் படித்த வித்தியாசமான வாசங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...கொஞ்சம் தமிழ் பருகலாம்.

ps: ஆட்டோ பின்னாடி போடுற வாசங்கள் சில இன்னும் நல்லா இருக்கும்.

அறிஞர்
21-10-2009, 03:18 PM
ஒவ்வொன்றும் அருமை.... நண்பர்கள் பல தருவார்கள் என நம்புகிறேன்.

இணையத்தில் சுட்ட சில ஆட்டோ வாசங்கள்
நன்றி (http://niranjanmuthu.wordpress.com/2009/03/01/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/)
ஒலி கொடுத்தால்
வழி கிடைக்கும்
விழி கொடுத்தால்
ஒளி கிடைக்கும்
--------
நன்றி (http://aruvadai.blogspot.com/2008/12/blog-post_3593.html)
தெருவில் கண்டவளை நேசிப்பதை விட,
கருவில் சுமந்தவளை நேசி.

அறிஞர்
21-10-2009, 03:20 PM
நன்றி (http://the-stargazer.blogspot.com/2008/03/blog-post_11.html)
காசு அளவு நேசம்
கை அளவு உள்ளம்
பொய்யான பாசம்
இதுதாண்டா உலகம் !
----------------------
நன்றி (http://www.dinasari.com/?p=124)
சென்னையில் ஓடும் ஒரு ஆட்டோவில்

‘’தொடர்ந்து வா! தொட்டு விடாதே!!”
-கண்ணா சென்னை-

திருச்செந்தூரில் ஓடும் ஒரு ஆட்டோவில்

‘’அனைத்து மொழியையும் கற்று வை…
அன்னை மொழிமேல் பற்று வை…’’
-சி. ஆழ்வாரப்பன் திருச்செந்தூர்-

சென்னையில் ஓடும் ஒரு ஆட்டோவில்

மெதுவாகப் போ றோட்டில்!
காத்திருக்கிறாள் மனைவி வீட்டில்!!
-கண்ணா சென்னை-

aren
21-10-2009, 03:28 PM
இந்த மாதிரி ஆட்டோ வாசகம் பற்றிய திரி ஒன்று முன்பே நம் மன்றத்தில் இருந்தது. அந்தத் திரியுடன் இதையும் சேர்த்துவிடலாமே.

அறிஞர்
21-10-2009, 03:30 PM
பதிவுகள் இணைக்கப்பட்டது...

aren
21-10-2009, 03:48 PM
நன்றி அறிஞரே

minbaraj
05-01-2010, 03:53 PM
பொறாமை திருப்பிப் படி

xavier_raja
08-03-2010, 10:20 AM
லஞ்சம் வாங்காதே
பிச்சை எடு

இது நான் சமீபத்தில் ஒரு வாகனத்தில் பார்த்தது. இதை பார்த்த பிறகு லஞ்சம் குறைந்தால் மகிழ்ச்சி .

govindh
08-03-2010, 08:43 PM
நான் ரசித்த வாசகம் ....
கொடுத்தால் இன்பம்..
கெடுத்தால் துன்பம்...

govindh
08-03-2010, 09:06 PM
நான் ரசித்த வாசகம் ....
அன்பை அளித்தால் ..
ஆசி பெறுவாய்..!

govindh
13-03-2010, 11:30 AM
சென்னையில் ஓடும் ஒரு லாரியில்..
என்னைத் தொட்டால்...
விண்ணைத் தொடுவாய்..

குணமதி
18-03-2010, 01:06 AM
நான் பார்த்தது :

நினைக்க மறந்தாலும்
மறக்க நினைக்காதே!

குணமதி
18-03-2010, 01:13 AM
இரட்டைப் பதிவானதால் நீக்கியுள்ளேன்.
பொறுத்துக் கொள்க.

ஜனகன்
18-03-2010, 09:14 PM
இது ஒரு லாரியின் பின்னால் எழுதி இருந்தது.

ஆடிக்குப் பின்னால் ஆவணி
என் தாடிக்குப் பின்னால் தாவணி

சரோசா
18-03-2010, 10:13 PM
அ- அவுக்கு அப்புறம் என்ன எழுத்து வருது ?
அ-- வுக்கு அப்புறம் தான் எல்லா எழுத்துமே வரும் டீச்சர்

என்னவன் விஜய்
18-03-2010, 11:44 PM
இது ஒரு லாரியின் பின்னால் எழுதி இருந்தது.

ஆடிக்குப் பின்னால் ஆவணி
என் தாடிக்குப் பின்னால் தாவணி

அஹா, நெத்தியடி வாசகம். :icon_b:

govindh
19-03-2010, 06:41 PM
ஆட்டோவில் ...வாசகம் :

மன்னிக்கப் பழகு!
மலரும் உன் அழகு!

சிவா.ஜி
20-03-2010, 07:01 AM
லாரிக்குப் பின்னால் ஒரு வாசகம்

"என்னை முத்தமிடாதே
பிறகு ரத்தம் விடாதே"

பா.ராஜேஷ்
20-03-2010, 04:31 PM
அட, முத்தத்திற்கு இப்படி ஒரு தண்டனையா !? :D