PDA

View Full Version : அடியனைக் காப்பாய்!



M.Jagadeesan
02-04-2012, 04:55 PM
கலகல வெனநீ சிரித்திடும் வேளையில்
பொலபொல வெனஎன் மனமுதிர்ந் ததடீ!
தளதள வெனஉன் உடலழ கதனில்
மளமள வெனஎன் மனங்கரைந் ததடீ!

ஜல்ஜல் ஜல்லென கொலுசெழும் ஓசையில்
ஜில்ஜில் ஜில்லென மனங்குளிர்ந் ததடீ!
வில்வில் வில்லென விளங்கிடும் புருவம்
கொல்கொல் கொல்லென கொல்லா நிற்கும்.

துறுதுறு வெனஉன் துளைத்திடும் பார்வையில்
கிறுகிறு வெனஎன் தலைசுழன் றதடீ!
கருகரு வெனஉன் கூந்தல் அழகினில்
கருமுகில் நாணித் தலைகுனிந் ததுவே!

படபட வெனஉன் இமைதுடிக் கையிலே
அடஅட இதுவோர் அதிசய வண்டென
தொடத்தொட அருகினில் நான்வரு கையிலே
விடுவிடு விடென நீவில கிடுவாய்!

கரகர கரவென சுழன்றிடும் பம்பரம்
பரபர வென்னுமுன் நடையினைக் காட்டும்
வரவர என்மனம் என்னிடம் இல்லை
அரகர சிவனே அடியனைக் காப்பாய்!

Dr.சுந்தரராஜ் தயாளன்
02-04-2012, 06:22 PM
kavithai mikavum nanru...nanri ayyaa :)

M.Jagadeesan
03-04-2012, 12:56 AM
பாராட்டுக்கு நன்றி தயாளன் அவர்களே!

கீதம்
03-04-2012, 10:04 AM
அசத்தும் இரட்டைக்கிளவியின் இனிமையோடு சொக்கவைக்கும் காதல் கிழத்தியின் வர்ணனை அழகு.

ஆள்பவளைத் தஞ்சமடையாது, ஆண்டவனைத் தஞ்சமடைவதுதான் வியப்பு! தமிழ் கொஞ்சும் அழகிய கவிதைக்குப் பாராட்டுகள் ஐயா.

jayanth
03-04-2012, 11:23 AM
கலகல வெனநீ சிரித்திடும் வேளையில்
பொலபொல வெனஎன் மனமுதிர்ந் ததடீ!
...........................................அரகர சிவனே அடியனைக் காப்பாய்!

அருமை...!!!

அமரன்
06-04-2012, 08:30 PM
அசத்தும் இரட்டைக்கிளவியின் இனிமையோடு சொக்கவைக்கும் காதல் கிழத்தியின் வர்ணனை அழகு.

ஆள்பவளைத் தஞ்சமடையாது, ஆண்டவனைத் தஞ்சமடைவதுதான் வியப்பு! தமிழ் கொஞ்சும் அழகிய கவிதைக்குப் பாராட்டுகள் ஐயா.

காதலும் கடவுளும் ஒன்றக்கா.

அதைத்தான் ஐயா கோர்த்து மாலை கட்டி இருக்கார் போல.

அமரன்
06-04-2012, 08:30 PM
சில்லென்று ஒரு காதல்..

அருமை ஐயா.

M.Jagadeesan
07-04-2012, 12:42 AM
ஜெயந்த், கீதம், அமரன் ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி!

கீதம்
07-04-2012, 01:24 AM
காதலும் கடவுளும் ஒன்றக்கா.

அதைத்தான் ஐயா கோர்த்து மாலை கட்டி இருக்கார் போல.

:icon_b::icon_b::icon_b: