PDA

View Full Version : எய்ட்ஸும் ( AIDS ) அதைத்தடுப்பதும்.. எப்படி..?கலைவேந்தன்
02-04-2012, 02:48 PM
http://1.bp.blogspot.com/_4x4_OzFhwuw/R-fxL_sQuDI/AAAAAAAAAck/_pV4MQpPhMQ/s320/aids1.jpg

"எய்ட்ஸ்"ன்னா என்ன?

அக்வைர்ட் இம்யோனோ டிஃபிஷியென்ஸி ஸிண்ட்ரோம் [Acquired Immuno Deficiciency Syndrome]] இதுதாங்க எய்ட்ஸ்[AIDS] அப்பிடீன்னு சொல்லப் படுவது! அதாவது, 'தானே வரவழைத்துக் கொண்ட தன்னெதிர்ப்புக் குறைவை விளைவிக்கும் அறிகுறிகளைக் கொண்ட ஒரு நோய்' என தமிழில் விளக்கலாம்!
இந்தப் பெயர், ஒரு மருத்துவரால் ஒரு சில அறிகுறிகளாலுமோ, அல்லது சில பரிசோதனைகள் மூலமோ அறியப்படுவதுன்னு மட்டும் இப்போதைக்குப் புரிஞ்சுக்கோங்க.. இன்னும் விவரம் சொல்றேன்..

கலைவேந்தன்
02-04-2012, 02:49 PM
'இது எப்படித்தான் வருது?'

ஹெச்.ஐ.வி. வைரஸ்[HIV Virus], அதாவது, ஹ்யூமோஇம்யூனோ டிஃபிஷியென்ஸி வைரஸ் [Human Immuno Deficiency Virus] என்னும் ஒன்றால் இந்த நோய் வருகிறது.

கலைவேந்தன்
02-04-2012, 02:50 PM
இது எப்படி பரவுகிறது..?

இதனால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த நோயை, ரத்தமும் ரத்தமும் கலப்பதின் மூலமாகவோ, அல்லது பாலியல் மூலமாகவோ.... அதாவது, உடலுறவின் மூலமாகவோதான் பெறுகிறார்கள்! ஒரு தாய் தனது குழந்தைக்கும் இதைத் தர முடியும்.... கருவுற்றிருக்கும் போதோ அல்லது தாய்ப்பாலைத் தரும்போதோ! இந்த நோயைப் பெற்றவர்கள் சிறிது காலத்தில் எய்ட்ஸ் என்னு நிலையை அடைகிறார்கள் என்பதே நடப்பு!'

கலைவேந்தன்
02-04-2012, 02:51 PM
ரத்தம், இல்லாட்டி உடலுறவு, இப்படித்தான் இது பரவுமா?

பொதுவா, இதுதான் சரின்னாலும், ரத்தம், விந்து[sperm], பெண்வழியில் சுரக்கும் நீர்[vaginal fluids], மார்பில் சுரக்கும் பால், மற்றைய உடலில் இருந்து ரத்தத்துடன் கலந்த நீர்[bodily fluids] இவற்றின் வழியே இந்த நோய் பரவலாம்.

கலைவேந்தன்
02-04-2012, 02:52 PM
சரி! இந்த -ஹெச்.ஐ.வி. எப்படி 'எய்ட்ஸ்' ஆக மாறுகிறது?

இந்த வைரஸ் நம் உடலில் ஒரு தடுப்புச் சக்தியாக இருந்து, வரும் நோய்களை எதிர்க்கும் CD4 என்கின்ற 'உதவி செய்யும் செல்களை [Helper Cells] நேரடியாகத் தாக்கத் தொடங்குகிறது! இந்த செல்களின் அளவு குறைந்து வருவதை வைத்து, இந்த எய்ட்ஸ் என்னும் நோய் வந்து கொண்டிருக்கிறது என நாம் அறிய முடியும்.
இந்த வைரஸ் உடலில் கலந்து, பல ஆண்டுகளுக்குப் பின்னே இது நிகழத் தொடங்குகிறது. எனவே, இந்த வைரஸ்களின் அளவைக் குறைப்பதன் மூலம், எய்ட்ஸ் வருவதை தள்ளிப் போட முடியும்... அதற்குத்தான் மருந்துகள் உதவுகின்றன!

.

கலைவேந்தன்
02-04-2012, 02:53 PM
இந்த ஹெச்.ஐ.வி எப்போத்தான் ஆரம்பிச்சுது..?

எப்போ வந்துது, எப்படி வந்துதுன்னு யாருக்கும் தெரியாது! ஆனா, 1959ல காங்கோ நாட்டுல கின்ஷாஸா நகரில் கொடுக்கப்பட்ட ஒரு ரத்தத்தில் இந்த வைரஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை இன்னும் பரிசோதித்த போது, இந்த வைரஸ் 1950-களில் தொடங்கியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.
இருப்பினும், 1979-1981-ல் அமெரிக்காவில் ஒரு சில நோயாளிகள் எந்தவொரு காரணமுமில்லாமல், எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் செல்களின் அளவுகள் குறைந்திருப்பதைக் கண்டபோது, இதை ஆராயத் தொடங்கியதின் விளைவாக இந்த எய்ட்ஸ் என்னும் நோய் இருப்பது ஒப்புக் கொள்ளப் பட்டது!

1983-ல் தான் ஹெச்.ஐ.வி. வைரஸுக்கும் எய்ட்ஸ் என்னும் நோய்க்கும் இருக்கும் தொடர்பு உறுதிப்படுத்தப் பட்டது

கலைவேந்தன்
02-04-2012, 02:54 PM
அப்படீன்னா, ஹெச்.ஐ.வி. வந்தா நிச்சயம் எய்ட்ஸ் வந்தேதான் தீருமா?

இல்லை! இந்த வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிப் பேர்தான் இந்த நிலைக்குச் செல்கிறார்கள். அதற்கும் ஒரு 10 வருஷம் பிடிக்கும். வாழ்க்கை முறைகள், உடல்நலக் கோளாறுகள் இந்த கால அளவைக் கூட்டவோ குறைக்கவோ செய்யும்.
இன்று இருக்கும் மருத்துவக் கண்டுபிடிப்புகளால், இதன் தீவிரத்தை வெகுவாகக் குறைக்க முடியும் என்பது ஒரு நல்ல சேதி.

கலைவேந்தன்
02-04-2012, 02:55 PM
சரி! இது எனக்கு இருக்கா இல்லியான்னு எப்படி தெரிஞ்சுக்கறது..?

ஒரு எளிய ரத்தப் பரிசோதனை மூலம் மட்டுமே இதை உறுதிப் படுத்த முடியும்! ஒரு சில அறிகுறிகள் இந்த நோய்க்கென இருந்தாலும், அவற்றை மட்டும் வைத்தே இதுதான்னு சொல்ல முடியாது. அப்படி என்ன அறிகுறிகள்..?

காரணமில்லாத திடீர் எடைக் குறைவு

வறட்டு இருமல்

அடிக்கடி வரும் காய்ச்சலும், இரவில் வரும் அதிகப்படியான வியர்வையும்

அதீதமான உடல் சோர்வு

அக்குள், தொடை, கழுத்து இவைகளில் நெறி கட்டுதல்,

தொடர்ந்து ஒரு வாரத்துக்கும் மேல் இருக்கும் வயிற்றுப்போக்கு

வாய், நாக்கு, தொண்டை போன்ற இடங்களில் வரும் வெள்ளைத் திட்டுகள்

ந்யுமோனியா போன்ற நுரையீரல் காய்ச்சல்

உடலின் பல இடங்களில் திடீரெனத் தெரியும் சிவப்பு, பழுப்பு திட்டுகள்

நினைவாற்றல் குறைவு, மனவழுத்தம், மற்றும் சில நரம்பு சம்பந்தமான நோய்கள்.

ஆனால், முன்னரே சொன்னது போல, இவற்றில் ஏதாவது இருந்தாலே, தனக்கு இந்த நோய் என எவரும் பயப்படத் தேவையில்லை. ரத்தப் பரிசோதனை ஒன்று மட்டுமே இதை உறுதிப்படுத்தும் ஒரே வழி!

இந்த அறிகுறிகள் வர வேறு பல மருத்துவக் காரணங்களும் இருக்கின்றன.

கலைவேந்தன்
02-04-2012, 02:56 PM
http://2.bp.blogspot.com/_4x4_OzFhwuw/R-62SfsQuHI/AAAAAAAAAdE/gaObti7bvy0/s320/aids_front_big.jpg

அப்போ, இந்த AIDS எப்படித்தான் ஒருத்தருக்கு வருது..?

முறைப்படி பாதுகாப்பில்லாத உடலுறவின் மூலமே இது பெரிதும் பரவுகிறது.
அடுத்து, ஒரே ஊசியை பலர் உபயோகிப்பதின் மூலம்[இதில் எவருக்காவது முன்னமேயே இந்த நோய் இருந்தால் மட்டுமே],
அல்லது நோய்க்கிருமி உள்ள ரத்தப் பரிமாற்றத்தால்[HIV infected blood transfusion] இது நிகழலாம்.
இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒரு தாய் கருவிலிருக்கும் தன் குழந்தைக்கோ, அல்லது தாய்ப்பால் மூலமாகவோ இந்த நோயைக் கொடுக்க முடியும். மற்றபடி, சாதாரணமாக அடுத்தவருடன் பழகுவதின் மூலம் இந்த நோய் பரவ வாய்ப்பில்லை!

கலைவேந்தன்
02-04-2012, 02:57 PM
அப்போ,...... முத்தம் கொடுத்தா எய்ட்ஸ் வராதா?

ஒரு எய்ட்ஸ் நோயாளி உன்னைக் கன்னத்தில் முத்தமிடுவதால் உனக்கு எய்ட்ஸ் வராது.... உன் கன்னத்தில் ஏதும் வெளிக்காயங்கள் இல்லாத பட்சத்தில்! அவருடன் கை குலுக்குவதாலோ, உன்னைக் கட்டிப் பிடிப்பதாலோ இது வரவே வராது! தாராளமா இதெல்லாம் நீ அவரோட செய்யலாம்!


வாய்க்கும் வாய்க்குமான முத்தம்... அதுவும் ஆழ்ந்த முத்தம்[deep kiss] ... இந்த, நாக்கெல்லாம் ஒட்டிகிட்டு செய்வாங்களே அதுமாரி கொடுத்தா..??

பொதுவாக இதன் மூலமும் பரவாது என்றாலும், இது போன்ற முத்தங்களில், உதடுகளோ, அல்லது வாயின் உட்பகுதியோ சற்று காயப்படும் வாய்ப்புகள் இருப்பதால், கிருமிகள் கலக்கும் வாய்ப்பு இருப்பதால், இதைத் தவிர்ப்பது நலம்..... அவரோடு மட்டும்!!

கலைவேந்தன்
02-04-2012, 02:58 PM
இந்தக் கிருமி, கிருமின்னு சொல்லியே பயமுறுத்துறிங்களே.. இது எவ்ளோ நேரம் உயிரோட இருக்கும்னு சொல்லுங்க..

இதுவரைக்கும் சொன்ன எது மூலமா வெளியே வந்தாலும், இந்த நுண்கிருமி [வைரஸ்] ஒரு 20 நிமிஷத்துக்குத்தான் உயிரோட இருக்கும்! அதுக்குள்ள இது அடுத்தவரோட ரத்தத்துல கலக்கலைன்னா, செத்திரும்! உன்னோட கையில ஒரு கீறலும் இல்லைன்னா உள்ளங்கையில இதை 20 நிமிஷம் வைச்சுக்கிட்டு இருந்தேன்னாக்கூட ஒண்ணும் ஆகாது! கிருமி செத்துப் போயிரும்!

கலைவேந்தன்
02-04-2012, 02:59 PM
இந்த....ஆசனவழியில் சிலர் உறவு கொள்வதாகப்[anal sex] படித்திருக்கிறேன். இதன் மூலமும் இந்த நோய் பரவுமா?

மற்ற எல்லா வழிகளையும் விட எளிதில் ஜவ்வுத்தோல் கிழிந்துபோகக்கூடிய அபாயம் இந்த இடத்தில் அதிகமாக இருப்பதால், இதன் மூலம் இந்த நோய் பரவும் வாய்ப்பும் மிகவுமே அதிகமாகிறது. செலுத்துபவரை விட, வா[தா]ங்கிக் கொள்பவர்க்கே இது அதிகமாகப் பரவும் என இதுவரையில் கிடைத்திருக்கிற கணக்கைக் கொண்டு சொல்லலாம்.

இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னன்னா,
இந்த முறையில், ஆண், பெண் இரு பாலருமே ஓரினமாகவோ, அல்லது மாற்றினத்தோடோ ஈடுபடுகிறார்கள்.

இருவரில் யாராவது ஒருவருக்காவது இந்த நோய்க் கிருமிகள் உடலில் இருக்க வேண்டும், இது பரவ.

இந்த முறை, அந்த முறை என்றில்லாமல், எந்த முறையில் செய்யப்படுகிறது என்பதை விட, இந்த நோய் ஏற்கெனவே இருப்பவரால் மட்டுமே இது அடுத்தவருக்குக் கொடுக்கப்பட முடியும் என்பதை முக்கியமாக மனதில் கொள்ள வேண்டும்.

கலைவேந்தன்
02-04-2012, 03:00 PM
சரி! இப்போ ஒரு முக்கியமான கேள்வி !இந்த ஓரினச்சேர்க்கையாளர்கள்..' ஹோமோ'ன்னு சொல்றோமே, அவங்கதான்.... இவங்களாலதான் இந்த நோய் அதிகமா பரவுதுன்னு சொல்றாங்களே, அதைப் பத்தி உங்க மருத்துவத்துறை என்ன சொல்லுது?


"இதைப் பத்தி சொல்லியே ஆகணும்! மிக மிகத் தவறான கருத்து இது!
ஓரினச் சேர்க்கையாளர்கள் தான் இந்த நோய் பரவ வெகுவான காரணம் என்ற தவறான ஒரு குற்றச்சாட்டு பொதுவாக இருந்து வருகிறது.
இது துளிக்கூட உண்மையல்ல!

இவர்களில் பலர், தவறான உடலுறவு, போதை மருந்துக்கு அடிமையாதல், ஒன்றுக்கும் மேற்பட்டவரோடு உறவு கொள்ளுதல் போன்ற செயல்களின் மூலம், இந்த நோயால் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட யாரவது ஒருவரிடமிருந்து, ஹெச்.ஐ.வி. கிருமியைப் பெற அதிக வாய்ப்பிருக்கிறது என்பது தான் உண்மை.

ஆனால், இதையே இருபாலர் உறவு கொள்வோருக்கும் கூடச் சொல்ல முடியும்! அவர்களுக்கும் இந்தக் குற்றசாட்டு பொருந்தும்.... அவர்களும் இது போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமையானால், நிச்சயம் இந்த நோயால் தாக்கப்படக் கூடும்!

எது எப்படி இருப்பினும், பாதுகாப்பான உடலுறவின் மூலம், பெற வேண்டிய இன்பத்தைப் பெறலாம்;

பெற வேண்டாத நோய்களைத் தவிர்க்கலாம்.

இதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்!

ஆணுறை, காண்டம் போன்றவை சீக்கிரமே கிழிந்து போகும் சாத்தியக்கூறுகள் இந்த ஆசனவழி உறவில் மிக அதிகம். இதையும் கவனத்தில் கொள்ளவும்.
பொதுவாக, இந்த ஆசனவழி உறவு, உடலுறவு கொள்ள ஏற்றதொரு வழி அல்ல! ஆபத்துகள் அதிகம்! கவனம்! கவனம்!!

கலைவேந்தன்
02-04-2012, 03:01 PM
பாதுகாப்பு உறை அணிந்து உடலுறவு கொண்டால் இது வரவே வராது எனச் சொல்லலாமா?

இல்லை! இதுவும் ஒரு தவறான கருத்து. இது முழுக்க முழுக்க 100% பாதுகாப்பானது எனச் சொல்ல முடியாது. கிழிந்து போதல், கசிவு, சரியான முறையில் பயன்படுத்தாமல் போதல் போன்ற பல காரணங்களால், இது கொடுக்க வேண்டிய பாதுகாப்பைக் கொடுக்காமல் போக வாய்ப்பிருக்கிறது. பொதுவாக 98% பாதுகாப்பை இதை முறையாக, சரியாகப் பயன்படுத்துவதன் மூலம், பெறலாம். உணர்ச்சி வேகத்தில், சில சமயம் இது கிழிந்து போனது கூட தெரியாமல், அல்லது அலட்சியம் காரணமாக, உடலுறவு தொடர்ந்து, இந்த நோயைப் பெற வாய்ப்பிருக்கிறது.

ஆணுறுப்பும், பெண்ணுறுப்பும் இணைந்து செய்கின்ற முறையான உடலுறவை, பாதுகாப்பு சாதனங்கள் துணையுடன், இந்த நோய் இல்லாத இருவர் தங்களுக்குள் மட்டுமே, வேறெந்த முறையற்ற வழிகளின் மூலம் அல்லாது, உடலுறவு கொள்வதே, இந்த நோய் வராமல் தடுக்கக் கூடிய ஒரே வழி என்பதைப் புரிந்து கொள்ளு!

பொது இடங்களில் கிடைக்கும் அறிமுகமில்லாதவரிடம் உடலுறவு கொள்வதையும், பாலியல் தொழிலாளரிடம் செல்வதையும் தவிர்க்கவும். அப்படிச் செல்வதாயிருந்தால், கண்டிப்பாக ஆணுறை,அல்லது காண்டம் அணியாமல் உடலுறவு கொள்ளக் கூடாது!

போதை மருந்துக்கு அடிமையானவர்கள், அடுத்தவர் உபயோகித்த ஒரே ஊசியைப் பயன் படுத்தக் கூடாது. இதில் எவருக்கு இந்த நோய் இருக்கிறது எனத் தெரியாத நிலையில்! ஒரு சில போலிகள், ஏற்கெனவே மற்றவர் உபயோகித்த ஊசிகளையே புதிது போல விற்றுவிடுவார்கள். எனவே நம்பிக்கையான கடையில் இருந்து ஊசியைப் பெறுதல் மிகவும் அவசியம். ஒரு முறைக்கு மேல் ஒரு ஊசியை உபயோகிக்க வேண்டாம்! முனையை வளைச்சு தூர எறிஞ்சிடணும்!

கலைவேந்தன்
02-04-2012, 03:02 PM
இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரைத் தொடுவதாலோ, அவருடன் கை குலுக்குவதாலோ, அவர் உபயோகிக்கும் கழிப்பறையைத் தானும் பயன்படுத்துவதாலோ, அவர் எச்சில் பண்ணி குடித்த கோப்பையை உபயோகிப்பதாலோ, அவரது தும்மல், இருமல் நம் மீது படுவதாலோ இது வரலாம் தானே..?

முற்றிலும் தவறு! மேலே சொல்லியிருக்கும் எந்த முறையாலும் ஹெச்.ஐ.வி பரவாது! காற்று மூலமாகவோ, உணவின் மூலமாகவோ பரவும் நோயல்ல இது. இது போன்ற சந்தர்ப்பங்களில், அவரது ரத்தம், உனது ரத்தத்தோடு எந்த வகையிலாவது கலந்தால் மட்டுமே இது தொற்றிக் கொள்ளும்! என்னடா, திருப்பித் திருப்பி இதையே சொல்கிறேனே என எண்ண வேண்டாம்.

கலைவேந்தன்
02-04-2012, 03:05 PM
http://1.bp.blogspot.com/_4x4_OzFhwuw/R_mVofsQuNI/AAAAAAAAAd0/CgAB5fp8z3s/s320/01aids_slide1.jpg

ரத்தம் மூலமா, விந்து மூலமா இது பரவுது.. எவ்ளோ ரத்தம் அல்லது விந்து இன்னொருத்தர் உடல்ல கலக்கணும், இந்த நோய் வர்றதுக்கு? அப்படிக் கலந்தது எவ்ளோ நேரம் இது உயிரோட இருக்கும் ஒரு நோயா ஆகறதுக்கு..?

இந்த ஹெச்-ஐ.வி. நுண்கிருமி ஒரு துளி ரத்தத்தில் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன! இவை ரத்தத்தில் கலக்க ஒரு சில நொடிகளே போதும்! அப்படிக் கலந்த இந்தக் கிருமி ஒரு எதிர்ப்புகளைத் தடுக்கும் 'செல்'லை உடனே சென்றடையுது! அந்த நொடியில் இருந்தே இது தன்னைப் பல மடங்காக்கும் ஒரு தொழிற்சாலையாக இந்த 'செல்'லை மாற்ற ஆரம்பிக்கிறது. இதைத்தவிர, இன்னொரு பயமுறுத்தும் செய்தையையும் சொல்லிடறேன்! இந்தக் நுண்கிருமி 20 நிமிடங்களுக்கு மட்டுமே உயிரோடிருக்கும்! அதறகுள், இது அடுத்தவர் ரத்தத்துடன் கலக்க வேண்டும்! 20 நிமிடம் என்பது அதிக நேரம்... அதே சமயம் குறைந்த நேரமும் கூட!


கதி கலங்க வைக்கிதே! இன்னும் கொஞ்சம் விளக்கமாச் சொல்லுங்க..

பயப்பட ஒண்ணும் தேவையே இல்லை, உன் உடம்புல ஒரு கீறலும் இல்லேன்னா! ஒரு நோயாலியின் ரத்தம் உன் உடம்பில் பட்டுவிட்டதென்றால், உன் உடலில் ஒரு கீறலோடும் அது சம்பந்தப் படவில்லை என்றால், உடனே கழுவி விட்டால்.... ஒரு 20 நிமிடத்துக்குள் ... உனக்கு இந்த நோய் வரவே வராது! ஆனால், இதையே விந்து பற்றிச் சொல்ல முடியாது..... பாதுகாப்புச் சாதனக்கள் உபயோகிக்க வில்லைன்னா! அதனால, முறையான தடுப்பு சாதனங்கள் உபயோகிக்கலைன்னா, இதைத் த்டுப்பது ரொம்பவே கஷ்டம்னு மீண்டும் சொல்லிக்கறேன்! இதைப் புரிஞ்சு நடந்துகிட்டா எல்லாருக்கும் நல்லது!


பச்சை குத்திக்கறதால கூட ஹெச்.ஐ.வி. வருமா ?

ஊசி மருந்துக்குச் சொன்ன அதே பதில்தான் இதுக்கும்! சரியாக சுத்திகரிக்கப்படாத, அல்லது முந்தைய ரத்தத்தில் தோய்க்கப்பட்ட உச்சிமுனைகளால் பச்சை குத்திக் கொண்டால், அப்படிப்பட்ட ஊசி இந்த நோய் இருந்த எவருக்காவது உபயோகப்படப்பட்டிருந்தால், ஹெச்.ஐ.வி. பரவ வாய்ப்பு இருக்கிறது. இதில் கவனமாயிருந்தால், பயப்படத் தேவையில்லை!


இது போன்ற எந்த தீய பழக்கங்களும் இல்லாமலே, மருத்துவத்துறையில் வேலை செய்யற சிலருக்கு இந்த நோய் வருகிறதே! என்ன காரணம்?

கவனக்குறைவுதான்! இங்கு அடிக்கடி வலியுறுத்தி வரும் ஒரே கருத்து இதுதான்! ஹெச்.ஐ.வி கிருமி பாதிக்கப்பட்டவரிடமிருந்து, ரத்தம், ஊசி, உடலில் சுரக்கும் நீர் இவற்றின் வழியாக மட்டுமே பரவும்..... எவராயிருந்தாலும்! சுத்திகரிக்கப்படாத இந்த முறைகளை ஒரு சிலர் அஜாக்கிரதையாக மருத்துவ மனைகளிலும் பயன்படுத்தும் போது, இவர்களுக்கு வரும் ஆபத்து இருக்கிறது. ஆனால், மற்றவர்களை விட, இவர்களுக்கு இது பற்றிய அறிவும், தடுப்பு முறைகளும் அதிகமாகவே இருப்பதால், இப்படி வரும் வாய்ப்பு மிகவும் அரிதே!


ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு விளையாடும் கபடி, கூடைப்பந்து போன்ற விளையாட்டில் ஈடுபடுபவர்களுக்கு?

பொதுவாக இதன் மூலம் ஹெச்-ஐ.வி- வர வாய்ப்பே இல்லை! எவருக்கவது அடிபட்டு, ரத்தம் வெளியாகும் நிலை இருந்தால், அவர் உடனடியாக அகற்றப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு, ரத்தப்போக்கு நின்றவுடன் மீண்டும் விளையாட்டில் கலந்து கொள்ளலாம். அவருக்கு ரத்தம் வருவதோடு கூட, கூட விளையாடுபவருக்கும் ஏதெனும் வெளிக்காயங்கள் இருந்து, அந்த ரத்தம் இதன் வழியே கலந்தால் மட்டுமே இது பரவலாம்! அப்படி இல்லேன்னா பயப்படத் தேவையில்லை!

கலைவேந்தன்
02-04-2012, 03:06 PM
கொசு ஒண்ணு இந்த நோய் இருக்கற ஆளைக் கடிக்குது. அப்பிடியே பறந்து போயி இன்னொரு ஆளைக் கடிக்குது. அவனுக்கு இந்த நோய் இல்லை! இப்ப ரத்தமும் ரத்தமும் கலக்குது! இந்த ஆளு ஒடம்புலியும் அது துளை போடுது. இவனுக்கும் அந்த நோய் வரும்தானே..?


கொசு கடிக்கறதால ஹெச்.ஐ.வி. வராது!

நீ சொல்ற மாதிரி, இந்த நோய் இருக்கற ஆளை ஒரு கடிச்சு, அந்தக் கிருமியை தன்னோட ரத்தத்துல எடுத்துக்குதுன்னு வைச்சுப்போம். ஹெச்.ஐ.வி. கிருமி ரொம்ப நேரம் உயிரோட இருக்கறதில்லை இங்கே! முன்னேயே சொன்ன மாதிரி ஒரு 20 நிமிஷம்தான்!

அத்தோட, கொசு உன்னைக் கடிக்கறப்ப, தன்னோட ரத்தத்தை அனுப்புறதில்லை! வாயில் இருந்து தன்னுடைய எச்சிலைத்தான் கடிக்கற இடத்துல துப்பி, ரத்தம் உறிஞ்ச ஒரு தோதான இடத்தை அமைக்குது! இதுல ஏற்கெனவே ரத்தத்தில் இருக்கிற கிருமி வர வாய்ப்பில்லை.

இன்னும் சொல்லப் போனா, ஹெச்.ஐ.வி. கிருமி, பூச்சிகளோட உடம்புல தன்னைப் பெருக்கிக் கொள்வதுமில்லை. அதிக நேரம் உயிர் வாழ்வதும் இல்லை! இதுக்கெல்லாம் மேல ஒரு பெரிய காரணம், ஒருத்தரைக் கடிச்சதும் கொசு உடனே அடுத்த ஆளை நோக்கிப் போறதில்லை! கொஞ்ச நேரம் ஒரு இடத்துல போய் உட்கார்ந்து, குடிச்ச ரத்தத்தை ஜீரணம் பண்ணிட்டு, அப்புறமாத்தான் அடுத்த ஆள்கிட்ட போகும். இதுக்கு கொஞ்ச நேரம் பிடிக்கும். அதுவரைக்கும் ஒரு கொசுவோட ரத்தத்தில் இந்தக் கிருமி உயிர் வாழாது! எனவே பயம் வேண்டாம்.... ஹெச். ஐ.வி. வருமோ என! ஆனா, மலேரியா,[MALARIA] மஞ்சள் ஜுரம்[JAUNDICE] போன்ற நோய்கள் பரவலாம்! ஏனெனில் இவை எச்சிலின் மூலம் வரும் நோய்கள்!

கலைவேந்தன்
02-04-2012, 03:06 PM
இப்ப இது வந்திருக்கா இல்லியான்னு எங்கே போய் தெரிஞ்சுக்க முடியும்!?

உங்க குடும்ப டாக்டர்கிட்ட கேட்டால் அவரே சொல்லுவார்! அவர்கிட்டேயே இதை டெஸ்ட் பண்ற வசதியும் இருக்கலாம். இல்லேன்னா எங்கே போய் பரிசோதிக்க முடியும்னு அவர் சொல்லுவார். அவர் கிட்ட போக வெக்கமா இருந்தா, எந்த ஒரு அரசு மருத்துவ மனையிலும் போய் டெஸ்ட் பண்ணிக்கலாம். ரொம்ப அவசரம்னா ஒரு 30 நிமிஷத்துலியே தெரிஞ்சுக்கலாம். நிச்சயமா தெரிஞ்சுக்கணும்னா முறையான சோதனை முடிவு தெரிய 1-2 வாரம் பிடிக்கும். "எலிசா"[ELISA], வெஸ்டெர்ன் ப்ளாட்"[WESTERN BLOT] என்கிற இரண்டு ரத்தப் பரிசோதனைகள் மூலம் இதை உறுதிப் படுத்த முடியும். இவை இரண்டையும் செய்த பின்னரே இந்த நோய் வந்திருக்கிறது எனச் சொல்ல முடியும்.


தனக்கு இந்த நோய் இருக்கா இல்லியான்னு எத்தனை நாளுக்குள்ள இதை ஒரு ஆளு தெரிஞ்சுக்க முடியும்?

சாதாரணமா இந்தக் கிருமி ஒரு ஆளுக்குள்ள வந்தால், உடம்பு அதை எதிர்த்து போராட ஆரம்பிக்கும். இது பொதுவா எல்லா நோய்க்கு எதிராகவும் நடக்கறதுதான்!

ஹெச்.ஐ.வி.க்கு எதிரான தடுப்புசக்தி ஒன்று முதல் ஆறு மாதத்துக்குள்ள தெரிய ஆரம்பிக்கும். இந்த சமயத்துல இதை வைச்சு இந்த நோய் வந்திருக்கா இல்லையான்னு கண்டுபிடிக்க முடியும்.

கலைவேந்தன்
02-04-2012, 03:08 PM
இந்த நோய் வந்திருக்குன்னு எப்ப தெரியும்? உடனேவா?

இந்தக் கிருமி ஒரு எதிர்ப்பு அணுவைப் போய் தாக்கி சிறை பிடிக்குது. அதுலேர்ந்து தன்னை பல மடங்கா பெருக்கி இன்னும் இது மாதிரியான அணுக்களை எல்லாம் தாக்குது. இப்ப இதோட ஆதிக்கம் அதிகமாகிப் போறதால, இது தன்னை வெளிக்காட்டிக்க முடியுது! இதுக்கெல்லாம் ஒரு 3 முதல் 6 மாதம் பிடிக்கும்! இதைத்தான் 'விண்டோ பீரியட்'னு மங்கை சொன்னாங்க! இது வந்திரிச்சோன்னு ஒரு பயம் வந்ததும் போய் சோதனை பண்ணி, இது இல்லைன்னு தெரிஞ்சாலும், உடனே சந்தோஷப்படாமல், ஒரு 3 மாசம் கழிச்சு மறுபடியும் சோதனை செஞ்சுக்கணும். அப்பவும் இல்லேன்னாத்தான் கொஞ்சம் நிம்மதி ஆகலாம். கொஞ்சம்தான்!

சந்தேகத்துக்கு சாம்பார் மாதிரி ஒரு 6 மாசத்துக்கு அப்புறமும் இன்னொரு சோதனை பண்ணிக்கறது நல்லது!

இன்னொண்ணு! இந்த சமயத்துல, வேறெந்த தப்புத்தண்டாவும் பண்ணாமலும் இருக்கனும்! இது ரொம்ப முக்கியம்!

கலைவேந்தன்
02-04-2012, 03:09 PM
சரி! இது வந்திரிச்சுன்னு தெரிஞ்சிருச்சு!தெரிஞ்சதும் முதல்ல என்ன செய்யணும்?


உடனடியா இந்த நோயைப் பத்தி நல்லாத் தெரிஞ்ச, இதுலியே சிறப்புத்தகுதி பெற்ற ஒரு மருத்துவரை நாடி இதற்கான சிகிச்சையை மேற்கொள்வது மட்டுமே, 'எய்ட்ஸ்' வருவதைத் தள்ளிப்போட...ஆமாம்... தள்ளிப்போட மட்டுமே... உதவும். இது கொஞ்சம் பயமுறுத்தற மாதிரி இருந்தாலும், முறையான சிகிச்சை, தீய பழக்கங்களை [பலருடனும் முறையற்ற உறவு, புகை பிடித்தல், அதிகமாக மது அருந்துதல், போதை மருந்துகளை எடுத்துக் கொள்ளுதல்] விடுதல் போன்றவை ஒருவரது வாழ்நாளை நீட்டித்து, 'எய்ட்ஸ்' வராமலே வாழ்வை நல்லபடியா முடிக்கவும் வாய்ப்பிருக்கிறது!! எனவே, இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கலைவேந்தன்
02-04-2012, 03:10 PM
தண்ணி அடிக்கலை. புகை பிடிக்கலை. போதை மருந்தே சாப்பிட்டதில்லை. ஓரினச்சேர்க்கை இல்லாம பொண்ணுங்களோட மட்டுமே உடலுறவு, இது மாதிரி ஆளுக்கு இந்த நோய் வராதுதானே..?

எல்லாம் சரிதான்! ஆனா, ஒரு விஷயம் மட்டும் உதைக்குதே! ஒரே பொண்ணோட மட்டுமில்லாம பல பொண்ணுங்களோட உறவு வைச்ச மாதிரி இருக்கே இந்த கேஸ்! இதுல எவருக்காவது இந்த நோய் இருந்தால் இது வர வாய்ப்பு இருக்கிறது.

ஒரே பொண்ணு அல்லது ஆண் கூட மட்டுமே ஒருத்தர் உறவு வைச்சிருந்தாலும் அந்த அடுத்த ஆளு சுத்தமா இல்லேன்னா, அவருக்கு இந்த நோய் வேறு எவர் மூலமாவது வந்திருந்தால், மற்றவருக்கும் இது வரக் கூடும்! ஹெச்.ஐ.வி. இதில் பாரபட்சமே காட்டுவதில்லை! இதுதான் உண்மை!!

கலைவேந்தன்
02-04-2012, 03:11 PM
ரத்ததானம் மூலமா இது பரவும்தானே! ரத்தமும் ரத்தமும் கலக்குதே..

சரிதான்! முன்னெல்லாம் இது இப்படியும் வந்ததா நிகழ்வெல்லாம் இருக்கு! ஆனா, இப்ப இது பற்றிய விழிப்புணர்ச்சி வந்திருப்பதாலும், ஒவ்வொரு முறை ரத்தம் எடுக்கும் போதும், ரத்தம் கொடுக்கும் போதும் சுத்திகரிக்கப்பட்ட ஊசிகளையே பயன்படுத்துவதாலும், இந்த நோய் வர வாய்ப்பே இல்லை! மேலும், இப்போதெல்லாம், இந்த நோய் இருக்கிறதா என முறையாகப் பரிசோதிக்கப்பட்ட பின்னரே ஒருவரின் ரத்தம் மற்றவருக்கு அளிக்கப்படுவதாலும், இது பெரும்பாலும் தவிர்க்கப்படுகிறது!

கலைவேந்தன்
02-04-2012, 03:12 PM
கருத்தடை மாத்திரைகளை உபயோகிப்பதின் மூலம் இதைத் தவிர்க்கலாம் என ஒரு கருத்து இருக்கே!

தவறான கருத்து! கருத்தரிப்பதை மட்டுமே இது தவிர்க்கும்! இந்த நோய் வராமல் தடுக்க, முறையற்ற உடலுறவைத் தவிர்ப்பது, இந்த நோயால் தாக்கப்படாத ஒருவருடன் மட்டுமே உறவு கொள்வது, ஊசிகளைப் பரிமாறிக் கொள்ளாமல் இருப்பது, இவை மட்டுமே! முறையான தடுப்பு சாதனங்கள் உபயோகித்து இதைத் தவிர்க்க முடியும்! அதில் இந்த கருத்தடை மாத்திரைகள் அடங்காது!

கலைவேந்தன்
02-04-2012, 03:12 PM
http://2.bp.blogspot.com/_4x4_OzFhwuw/SA1ZaEouNfI/AAAAAAAAAfw/reBKdASBCgU/s320/aids-data-1_26.jpg

இந்த தடுப்பு சாதனம், தடுப்பு சாதனம்னு சொல்றீங்களே! அதெல்லாம் என்ன? எப்படி உபயோகிப்பது?

உடலுறவு கொள்ளும் போது, ஆணுறுப்பு விரைத்தவுடன், உடனே ஒரு ஆணுறை அணிவது அவசியம். இதை 'லேடெக்ஸ் காண்டம்'னு [Latex Condom] சொல்லுவாங்க.

பெண்ணுறுப்பு, ஆசனவாய், அல்லது வாய்வழி எந்த வழியில் உறவு கொள்ளுவதுன்னாலும் இதை அணிய வேண்டியது மிகவும் அவசியம், இந்த கிருமி பரவாமல் இருக்க வேண்டுமானால்......... அதாவது இது இருக்குமோ என சந்தேகிக்கும் ஒருவரிடம் மட்டுமே!

இந்தக் காண்டம் [ஆணுறை] கிழிந்துவிட்டது எனத் தெரிந்தால் உடனே உடலுறவைத் தொடராமல், புது ஆணுறை [காண்டம்] அணிந்த பின்னரே மீண்டும் இதில் ஈடுபட வேண்டும். இதைக் கவனத்தில் கொள்ளவும்.

விந்து வெளியேறியதும், மேற்கொண்டு தொடராமல், உடனே வெளியில் எடுத்து, சுத்தம் செய்து கொள்ளவும்..... இருவரும்!

ஒரு முறை உபயோகித்த உறையை மீண்டும் உபயோகிக்க வேண்டாம்!

கலைவேந்தன்
02-04-2012, 03:13 PM
ஒரு ஆளைப் பார்த்தவுடனேயே இவருக்கு எய்ட்ஸ் வந்திருக்குன்னு சொல்ல முடியுமா?

முடியாது! இந்தக் கிருமியால் தாக்கப்பட்டபின், சோதனை செய்து உறுதிப்படுத்திக்கொள்ளாத, சிகிச்சை எடுக்காத ஒருவருக்குக் கூட இது சில ஆண்டுகள் கழித்தே தெரியவரும். சிகிச்சையை உடனேயே தொடங்கியவர்கள் பல ஆண்டுகளுக்கு இதைத் தள்ளிப் போட முடியும்!

கலைவேந்தன்
02-04-2012, 03:14 PM
இதுக்குத் தடுப்பு ஊசில்லாம் வந்திருக்காமே?

இதுக்கான ஆராய்ச்சி எல்லாம் நடந்துகிட்டு இருக்கு. ஆனல், இது வரைக்கும் இதைத் தடுக்க எந்தவொரு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. தடுப்பு சாதனங்களை உபயோகிப்பது ஒன்றே இதைத் தடுக்கும் வழி. இதைத் தவிர இன்னும் பல வழிகளிலும் பரிசோதனைகளும், ஆராய்ச்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், இவை எதுவும் முழுமையான பலன் அளிக்குதுன்னு இன்னும் உறுதியாச் சொல்ல முடியலை என்பதே உண்மை!

கலைவேந்தன்
02-04-2012, 03:15 PM
முக்கியமான கருத்துகள்:

முறையில்லாத உறவால இது வருது.

தடுப்பு சாதனங்களை உபயோகிச்சு இதைத் தடுக்க முடியும்.

வந்துருக்கான்னு தெரிஞ்சுக்க, ஒரு ரெண்டு மூணு தடவை சோதனை பண்ணிக்கணும்.

வந்திருச்சுன்னா, முறையா மருந்து மாத்திரை சாப்பிடணும்.

போதை மருந்தால இது வர்றதுக்கான வாய்ப்பு அதிகம்.

ஓரினச் சேர்க்கையாளர்கள்தான் இதுக்குக் காரணங்கிறது ரொம்பத் தப்பு!

ஒன்றுக்கும் மேற்பட்ட உறவு வைச்சுக்கிறதுல கவனமா இருக்கணும்!


அந்த உயிர்க்கொல்லி நோய் நம்மிடம் அண்டாமல் பாதுகாப்பாய் இருப்போம்..!


சுபம்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
02-04-2012, 03:58 PM
மிக விரிவான விளக்கம் அளித்துள்ளீர்கள். அறியத்தந்தமைக்கு நன்றி

கலைவேந்தன்
04-04-2012, 05:05 AM
மிக்க நன்றி தயாளன்..!

கலைவேந்தன்
05-04-2012, 02:02 PM
ஒருவரைத் தவிர வேறு எவரும் கருத்து சொல்லவில்லை. அத்தனை தீண்டத்தகாத விடயமா இது..?

கலைவேந்தன்
03-08-2012, 04:23 AM
மிகவும் பயனுள்ள பகுதி என எண்ணி நான் இட்ட இக்கட்டுரை எந்த கருத்துரைக்கும் தகுதியற்றதா என்பது எனக்குப் புரியவில்லை.

இருப்பினும் வளரும் தலைமுறைகளுக்காக இத்திரியை மீண்டும் மேலெழுப்புகிறேன்.

கீதம்
03-08-2012, 05:59 AM
மன்றத்தின் பெரும்பாலானப் பதிவுகளைப் படித்துவிடும் என் கண்களில் இதுவரை படவே இல்லை இக்கட்டுரை. எய்ட்ஸ் என்னும் நோய் பற்றிய எல்லா விவரங்களையும், பொதுவாக அனைவருக்கும் உண்டாகும் சந்தேகங்களுக்கான பதில்களாகத் தொகுத்தளித்தமை பாராட்டுக்குரியது. இந்நோயைப் பொறுத்தவரை எந்தெந்த விஷயங்களில் அலட்சியம் காட்டக்கூடாது, எந்தெந்த விஷயங்களில் பயப்படக்கூடாது என்பதைத் தெளிவாக்கும் கட்டுரை. மேலெழுப்பிக் கவனத்திற்கு கொண்டுவந்தமைக்கு மிகவும் நன்றி.

jayanth
03-08-2012, 06:09 AM
மிகவும் பயனுள்ள பகுதி என எண்ணி நான் இட்ட இக்கட்டுரை எந்த கருத்துரைக்கும் தகுதியற்றதா என்பது எனக்குப் புரியவில்லை.

இருப்பினும் வளரும் தலைமுறைகளுக்காக இத்திரியை மீண்டும் மேலெழுப்புகிறேன்.

கலை, சமூக விழிப்புணர்வுப் பணிக்கு நன்றி.
இது பொதுவாக எல்லோரும் அறிந்த விடயம் என்பதால் கருத்துச் சொல்லியிருக்கமாட்டார்கள் என்பது என் எண்ணம். மாற்றுக் கருத்தும் இருக்கலாம்...

M.Jagadeesan
03-08-2012, 06:14 AM
AIDS குறித்த விழிப்புணர்வு தரும் இந்தக் கட்டுரை அனைவரும் அவசியம் படிக்கவேண்டிய கட்டுரையாகும். இந்த நோய்க்கு இன்னமும் முற்றிலுமாகத் தீர்வு கண்டுபிடிக்கப் படவில்லை என்பது வேதனையான விஷயம். கலைவேந்தனுக்குப் பாராட்டுக்கள்.

கலைவேந்தன்
03-08-2012, 02:22 PM
மன்றத்தின் பெரும்பாலானப் பதிவுகளைப் படித்துவிடும் என் கண்களில் இதுவரை படவே இல்லை இக்கட்டுரை. எய்ட்ஸ் என்னும் நோய் பற்றிய எல்லா விவரங்களையும், பொதுவாக அனைவருக்கும் உண்டாகும் சந்தேகங்களுக்கான பதில்களாகத் தொகுத்தளித்தமை பாராட்டுக்குரியது. இந்நோயைப் பொறுத்தவரை எந்தெந்த விஷயங்களில் அலட்சியம் காட்டக்கூடாது, எந்தெந்த விஷயங்களில் பயப்படக்கூடாது என்பதைத் தெளிவாக்கும் கட்டுரை. மேலெழுப்பிக் கவனத்திற்கு கொண்டுவந்தமைக்கு மிகவும் நன்றி.

மிக்க நன்றி கீதம்..!கலை, சமூக விழிப்புணர்வுப் பணிக்கு நன்றி.
இது பொதுவாக எல்லோரும் அறிந்த விடயம் என்பதால் கருத்துச் சொல்லியிருக்கமாட்டார்கள் என்பது என் எண்ணம். மாற்றுக் கருத்தும் இருக்கலாம்...

மிக்க நன்றி ஜெயந்த்..!AIDS குறித்த விழிப்புணர்வு தரும் இந்தக் கட்டுரை அனைவரும் அவசியம் படிக்கவேண்டிய கட்டுரையாகும். இந்த நோய்க்கு இன்னமும் முற்றிலுமாகத் தீர்வு கண்டுபிடிக்கப் படவில்லை என்பது வேதனையான விஷயம். கலைவேந்தனுக்குப் பாராட்டுக்கள்.

மிக்க நன்றி ஜகதீசன் ஐயா..!

அனுராகவன்
03-08-2012, 04:16 PM
உயிர்க்கொல்லி இந்த நோயிக்கு மருந்து எப்போது வரும்...
தடுத்தல் அரிது போல..

அமீனுதீன்
14-08-2012, 08:01 AM
மூத்தோர் சொற்படி,

கை பதனம், வாய் பதனம், அவயம் பதனம்,

என்றிருந்தால் AIDS வராதய்யா....

(அதுசரி AIDS-க்கு தமிழில் என்ன பெயர்)

செல்வா
14-08-2012, 09:50 AM
வயது வந்தோர் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய விசயங்கள்..
பகிர்தலுக்கு நன்றி அண்ணா.!

மதி
14-08-2012, 10:08 AM
அனைவரும் தெரிந்திருக்க வேண்டிய விஷயங்கள்.. பகிர்ந்தமைக்கு நன்றி!