PDA

View Full Version : சுய தொழில்கள்-9 காளான் வளர்ப்புer_sulthan
02-04-2012, 02:07 PM
சுய தொழில்கள்-9 காளான் வளர்ப்பு
சுய தொழில்கள் வரிசையில் அடுத்து் பார்க்கப் போவது காளான் வளர்ப்புப் பற்றியது. இதை சிறிய முதலீட்டில் குடிசை தொழிலாகவும் செய்யலாம். ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுத்துள்ள முகவரிகளில் தொடர்பு கொள்ளவும்.
Engr.Sulthan


காளான் வளர்ப்பு தொழில் தொடங்க முழு விவரம்

https://encrypted-tbn3.google.com/images?q=tbn:ANd9GcTk9zIitL9brvoWkY3O4SnQQhpuwmbEwQ0X-TDe9kGwOk8Ws59N
குறைந்த இடவசதியே போதும்.
ஒரு படுகையில் இருந்து ஒன்றரை கிலோ.
மாதம் ரூ.10 ஆயிரம் வருமானம்.

''விவசாயம்தான் எங்க பரம்பரைத் தொழில். ஆனாலும், அதுல தொடர் நஷ்டம் ஏற்படவே, விவசாயத்தை உதறிட்டு வேற வேலைக்குப் போயிட்டேன். அதுக்குப் பிறகு, ஒரு யோசனையோட நண்பர் மோகன்தாஸோட சேர்ந்து மறுபடியும் விவசாயத்துல கால் வெச்சேன்... இன்னிக்கு நல்ல வருமானம் பாக்குறேன். இதுக்கெல்லாம் காரணம்... பசுமை விகடன் கொடுத்த நம்பிக்கையும், வழிகாட்டுதலும், தைரியமும்தான்'' என்று நெகிழ்ந்து போய்ச் சொல்கிறார் திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகேயுள்ள கன்னியாபுரத்தைச் சேர்ந்த ராமசாமி.நண்பர் மோகன்தாஸோடு, தோட்டத்திலிருக்கும் காளான் பண்ணையை நமக்குச் சுற்றிக் காட்டியபடியே பேச்சைத் தொடர்ந்த ராமசாமி, ''விவசாயத்தைக் கை விட்டதும், துபாய்ல டிரைவர் வேலைக்குப் போயிட்டேன். இருந்தாலும் அவ்வளவு லேசுல விவசாய அனுபவத்தையும், அதன் மூலமா கிடைச்ச மனநிம்மதியையும் மறக்க முடியல. துபாய்ல இருந்து ஊருக்குத் திரும்பின சமயத்துல, 'பசுமை விகடன்' படிக்கறதுக்கு வாய்ப்பு கிடைச்சுது. அதைப் படிக்க, படிக்க எனக்குள்ள ஏகப்பட்ட நம்பிக்கை ஏற்பட்டுச்சி. திரும்பவும் துபாய் போற முயற்சியைக் கைவிட்டுட்டு, விவசாயத்துலயே மறுபடியும் இறங்கிட்டேன்.இணைந்த கைகள்!


என்னோட ரெண்டரை ஏக்கர் நிலத்துல, அரை ஏக்கர்ல மட்டும் ஜீவாமிர்தம் கொடுத்து கத்திரிக்காய் போட்டேன். காரல் இல்லாத, பசுமை மாறாத காயா விளைஞ்சு வந்ததால, மார்க்கெட்டுல என் தோட்டத்துக் காய்களுக்கு நல்ல மவுசு. கொண்டு போனதுமே மொத்தமும் வித்துத் தீர்ந்து போற அளவுக்கு எனக்கு பேரு கிடைச்சுது. அதைத் தொடர்ந்து, விவசாயத்துல தீவிரமா கவனத்தைத் திருப்பினேன்.

ஸ்பின்னிங் மில்லுல வேலை பார்த்துட்டிருந்த நண்பர் மோகன்தாஸ், அடிக்கடி என் தோட்டத்துக்கு வருவார். அவருக்கும் என்னைப் போலவே விவசாயத்துல ஆர்வம் அதிகம். அவரும் 'பசுமை விகடன்' இதழை தொடர்ந்து படிச்சுட்டே இருப்பார். அதுல இருக்கற விஷயங்களையெல்லாம் ரெண்டு பேரும் விவாதிப்போம். அதையெல்லாம் வெச்சு, மேற்கொண்டு ஏதாவது செய்யலாமானு பேசிட்டே இருப்போம். ஒரு தடவை காளான் வளர்ப்புப் பற்றி கட்டுரை வந்துது. அதிக முதலீடு இல்லாம, குறைஞ்ச இடத்துலயே நல்ல வருமானம் பாக்கலாம்னு படிச்சதும்... எங்களுக்கு ஆச்சர்யமா போச்சு. அந்த நிமிஷமே காளான் பண்ணை வைக்கலாம்னு முடிவெடுத்தோம்.காளான் பண்ணை வெச்சிருக்கற விவசாயிகளோட பண்ணைகளுக்குப் போயி பாத்துட்டு வந்தோம். எங்களுக்கு நம்பிக்கை வந்ததும்... 'இதுதான் நமக்கான தொழில்’னு முடிவு செஞ்சு சிப்பிக்காளான் வளர்ப்புல இறங்கிட்டோம். முதல்ல என்னோட தோட்டத்துல சின்னதா ஒரு குடிசை போட்டு உற்பத்தி செஞ்சிப் பாத்தோம். அக்கம்பக்கத்துல இருக்குறவங்களே தேடி வந்து வாங்கிட்டு போகவே... நம்ம முயற்சி வெற்றிதான்னு ரெண்டு பேருக்கும் ஒரே சந்தோஷம்'’ என்று ராமசாமி குஷியோடு சொல்லி நிறுத்தினார்.

கிடைத்த இடைவெளியில் பேச ஆரம்பித்த மோகன்தாஸ், ''இதன் மூலமா, நம்மளால காளானை நல்லபடியா வளர்த்து லாபம் பார்க்க முடியும்னு எங்களுக்கு நம்பிக்கை வந்துச்சு. உடனே வேலையை விட்டுட்டு, நானும் ராமசாமியோட கைகோத்தேன். எங்க வீடு இருக்கறது திண்டுக்கல், உழவர் சந்தைக்கு பின்னாலதான். வீட்டுக்கு முன்ன கொஞ்சம் காலி இடம் உண்டு. அதுல ஒரு குடிசையைப் போட்டு காளான் வளர்க்க ஆரம்பிச்சோம். அக்கம்பக்கம் இருக்குறவங்களுக்கு அதைக் கொடுத்து பழக்கினோம். இப்ப மூணு குடிசை போட்டு வளர்க்கிறோம். அப்படியிருந்தும்கூட சப்ளை செய்ய முடியல. அந்தளவுக்கு கிராக்கி இருக்கு'' என்று தானும் சந்தோஷம் பொங்கினார்.

அடுத்து, நண்பர்கள் இருவரும் காளான் வளர்ப்பு முறை பற்றி பாடமே நடத்த, அதற்கு செவிமடுத்தோம்...

குளுகுளுனு இருக்கணும் குடிசை!

'சிப்பிக்காளான் வளர்க்க 10 அடி அகலம், 20 அடி நீளம், 6 அடி உயரத்தில் தென்னை ஓலை கொண்டு குடிசை அமைக்கவேண்டும். தரைப்பகுதியில் சிமென்ட் மூலம் தளம் அமைத்து, அதற்கு மேல் ஒரு அடி உயரத்துக்கு ஆற்று மணலைப் பரப்ப வேண்டும். இதன்மூலம் அறையின் ஈரப்பதம் ஒரே அளவில் இருப்பதோடு, தண்ணீரும் குறைவாகச் செலவாகும். குடிசைக்குள் 20 முதல் 28 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும், காற்றின் ஈரப்பதம் 85 சதவிகித அளவுக்குக்குக் குறையாமலும் இருப்பது போல் பராமரிக்க வேண்டும். இதற்காக அடிக்கடி தண்ணீர் தெளித்துக் கொண்டே இருக்க வேண்டும். நூல் சாக்குகளை கட்டித் தொங்கவிட்டு, அதை அடிக்கடி ஈரமாக்கிக் கொண்டிருப்பதும் நல்ல பலன் தரும். காற்றோட்டத்தை நன்கு பராமரிப்பதும் முக்கியம். அது இல்லாவிட்டால், அறைக்குள் கரியமில வாயுவின் அடர்த்தி அதிகமாகி காளானின் வளர்ச்சி பாதிக்கப்படும்.

200 கிராம் விதை...3 கிலோ வைக்கோல்!

அறை தயாரானதும், காளான் படுகைகளை தயார் செய்ய வேண்டும். அதற்கு முன்பாக, காளான் உற்பத்தியாளர்களிடம் இருந்து விதைப்புட்டிகளை (தாய்விதை) வாங்கவேண்டும். காய்ந்த வைக்கோலைத் துண்டுகளாக்கி வேகவைத்து உலரவைக்க வேண்டும். இதை பிளாஸ்டிக் பைகளில் (காளான் வளர்ப்புக்கென்றே பிளாஸ்டிக் பைகள் கடைகளில் கிடைக்கின்றன) ஒரு சுற்று வைக்கோல், அதற்கு மேல் காளான் விதை, மறுபடியும் வைக்கோல், மறுபடியும் விதை என மாற்றி மாற்றி போட்டு உருளைவடிவப் படுகைகளாகத் தயாரிக்க வேண்டும். ஒரு படுகை தயாரிக்க,

200 கிராம் விதைப்புட்டி, மூன்று கிலோ வைக்கோல் ஆகியவை தேவைப்படும். மேலே சொன்ன அளவுள்ள அறையில் 450 படுகைகள் வரை தொங்க விடலாம், அதாவது ஒரு குடிசையில். அனைத்துப் படுகைகளையும் மொத்தமாகத் தயாரிக்கக் கூடாது. தினமும் பத்து, பத்து படுகைகளாகத்தான் தயாரிக்க வேண்டும். அப்போதுதான் சுழற்சி முறையில் தினமும் காளான் மகசூல் கிடைக்கும்.

25 நாளில் அறுவடை!
https://encrypted-tbn1.google.com/images?q=tbn:ANd9GcRS7BuCIbdePYfhdS5hTn2MVzMMAfiKGCji2OH4CGTh8QG1yDJ0
படுகை தயாரித்து முடித்ததும் விதைகளுக்கு நேராக பென்சில் அளவில் ஓட்டை போட வேண்டும். ஒரு படுகையில் அதிகபட்சம் 12 ஓட்டைக்கு மேல் போடக்கூடாது. படுகைகளை உறி மாதிரி கட்டித் தொங்கவிட வேண்டும். ஒரு கயிற்றில் நான்கு படுகை தொங்கவிடலாம். பூஞ்சண இழைகள் படுகையில் பரவ பதினைந்து நாட்களாகும். அது பரவியதும், படுகை முழுக்க வெள்ளை நிறமாக மாறிவிடும். மேல்பக்கம் நனையும்படி தினமும் தண்ணீர் தெளித்து வந்தால், 18 முதல் 20-ம் நாளில் மொட்டு வரும். அதிலிருந்து நான்காவது நாளில் காளான் நன்றாக மலர்ந்து முழுவளர்ச்சி அடைந்துவிடும். இதைப் பறித்து சுத்தம் செய்து விற்பனை செய்யலாம்.முதல் அறுவடைக்கு 22 முதல் 25 நாட்களாகும். ஒரு அறுவடை முடிந்த பிறகு, தொடர்ந்து தண்ணீர் தெளித்து வந்தால், அடுத்த பத்து நாளில் இரண்டாவது அறுவடை செய்யலாம். இதுபோல ஒரு படுகையிலிருந்து மூன்று முதல் நான்கு தடவை அறுவடை செய்யலாம். ஒரு படுகையின் ஆயுள் அதிகபட்சம் 60 நாட்கள்தான். இந்த 60 நாட்களில் ஒரு படுகையிலிருந்து ஒன்றரை கிலோ காளான் வரை கிடைக்கும். ஒரு படுகை தயார் செய்ய 50 ரூபாய் செலவாகும். 150 ரூபாய்க்கு காளான் கிடைக்கும். கிட்டத்தட்ட 100 ரூபாய் லாபம் கிடைக்கும். பெரிய அளவில் இடவசதி இல்லாதவர்கள்கூட இதைச் செய்யலாம். கணக்குப் போட்டுப் பார்த்தால், ஒரு குடிசையில் இருக்கும் 450 படுகைகள் மூலம் ஒரு மாதத்துக்கு குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாய் லாபம் பார்க்க முடியும்.

நிறைவாக பேசிய ராமசாமி மற்றும் மோகன்தாஸ், 'இன்னிக்கு இறைச்சியோட விலை அதிகமாயிருக்குறதால, காளான் பக்கம் மக்களோட கவனம் அதிகமா திரும்பியிருக்கு. முன்னைவிட நல்ல வரவேற்பு இருக்கு. நகரம், கிராமம்னு கணக்கில்லாம எங்கயும் காளான் பண்ணை ஆரம்பிக்கலாம். அடுத்ததா காளான் சூப் தயாரிச்சு விக்கலாம்னு இருக்கோம். அதோட, ஜீவாமிர்தம் கொடுத்து காய்கறிகளையும் தயார் செஞ்சிகிட்டு இருக்கோம். 40 சென்ட்ல கோ-4 தீவனப் புல் சாகுபடி செஞ்சிருக்கோம். அடுத்ததா பால் மாடுகளை வாங்கி பால் உற்பத்தி செஞ்சி, நேரடியா மக்கள்கிட்ட விற்பனை பண்ணலாம்னும் முடிவு செஞ்சுருக்கோம்'' என்றவர்கள்,
https://encrypted-tbn0.google.com/images?q=tbn:ANd9GcT5vogrAIwdVlOsCHhOEIeutRx6iR6mHsh2N8LgyglEwsvH3sas
''எங்களோட இந்த எல்லா முயற்சிக்கும், வெற்றிக்கும் அடிப்படையா இருந்த பசுமை விகடனுக்கு ரொம்ப, ரொம்ப நன்றி'' என்று கைகூப்பினார்கள்!
Thnxs
தொடர்புக்கு : ராமசாமி: 96882-16058,
மோகன்தாஸ்: 97889-44907
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சென்னை நகர்ப்புறத் தோட்டக்கலை வளர்ச்சி மையத்தில் “காளான் வளர்ப்பு” பற்றிய ஒரு நாள் பயிற்சி டிசம்பர் மாதம் 15ம்நாள் (புதன் கிழமை) 15.12.2010 அன்று நடைபெறவுள்ளது.இப்பயிற்சியானது வீட்டிலிருப்போர், மாணவர்கள், தொழில் முனைவோர், வியாபாரிகள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும். பயிற்சி நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை. பயிற்சி பற்றிய குறிப்பேடு, கையேடு, மதிய உணவு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
பயிற்சியில் கலந்துக் கொள்ள விருப்பமுள்ளவர்கள், பயிற்சி பற்றிய தகவல்கள் மற்றும் பயிற்சி கட்டணத்தை கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளவும்.
For contact:
The Professor and Head,
Urban Horticulture Development Centre,
Tamil Nadu Agricultural University,
New No. P-44, (Old No. P-37), 6th Avenue, (Behind K- 4 police station),
Anna Nagar, Chennai-40.
Phone: 044 -2626 3484 / 044 – 42170506.


காளான் வளர்ப்பு ..
http://3.bp.blogspot.com/-dl41pSmuqhM/TeG8Abqm-GI/AAAAAAAAApE/rIdC45eFKiA/s400/1.jpg
சைவ பிரியர்களுக்கு மட்டுமல்ல, இப்போ தெல்லாம் அசைவ பிரியர்களுக்கும் பிடித்த உணவாகிவிட்டது காளான். நாக்கிற்கு நல்ல சுவை, உடலுக்கு நல்ல சத்து தரும் உணவாக இருக்கும் இதில், வைட்டமின் சி மற்றும் டி அதிகளவிலும் மற்றும் தாது வகைகளான இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பேட், காப்பர் மற்றும் பொட்டாசியம் சத்துகளும் இருக்கின்றன. பல்வேறு சத்துக்களும் சரியான விகிதத்தில் இதில் கலந்திருப்பதால் ஒரு பர்ஃபெக்ட்டான சரிவிகித உணவாகவும் சிபாரிசு செய்கிறார்கள் டயட்டீஸியன்கள்.

காளானில் பட்டன் காளான், பால் காளான் மற்றும் சிப்பி காளான் என பலவகை இருக்கிறது. இதில் சிப்பி காளான் வளர்ப்பது சுலபமானது.

சந்தை வாய்ப்பு!
http://1.bp.blogspot.com/-DNtHZOaTPVQ/TeG65Fyz8yI/AAAAAAAAAo8/w83BpXc-30o/s400/p31.gif

காளான் வளர்ப்பு வளர்ந்த நாடுகளில் ஏற்கெனவே வர்த்தக அந்தஸ்தை பெற்றுவிட்டது. தற்போது வளரும் நாடுகளிலும் இந்த தொழிலுக்கு நல்ல வர்த்தக வாய்ப்பு உருவாகி வருகிறது.சூப் தயாரிக்க, காய்கறிகளுடன் சேர்த்து சமைக்க, வெஜிடபிள் பிரியாணி செய்ய, ஊறுகாய் செய்ய என பல வகைகளில் உணவுப் பிரியர்களால் விரும்பப் படுகிறது. காளான் பவுடர் பால் கொதித்த நீரில் கலந்து டானிக்காக குடிக்கவும் பயன்படுகின்றது.பெரிய நகரங்களில் இப்போது அதிகளவில் காளான் பயன் படுத்தப்படுவதால் நகரங்களில் காளான் வளர்ப்பு யூனிட் அதிகளவில் வரத் துவங்கியுள்ளது. தவிர, காளான் வளர்ப்பில் இன்னமும் பலரது கவனம் அதிக அளவில் விழாததால், இத்தொழி லுக்கு இப்போது நல்ல சந்தை வாய்ப்பு இருக்கிறது.உற்பத்தி முறை

http://www.google.co.in/url?source=imglanding&ct=img&q=http://www.a2ztamilnadu.com/wp-content/uploads/2011/07/mushrum-300x141.jpg&sa=X&ei=phJHT7TgDIXIrQeblJG5Dw&ved=0CAwQ8wc&usg=AFQjCNENUXceyOiJhD4Tb_xfrURKQRonRw
http://3.bp.blogspot.com/-8ynvZcLmkR8/TeG68p9tyFI/AAAAAAAAApA/YqHk3tQfSC4/s400/p32b.gif
தரமான சிப்பி காளானை உற்பத்தி செய்ய வேண்டும் எனில், அதனை சிறந்த முறையில் வளர்க்க வேண்டும். அதாவது, சிறந்த மூலப்பொருள் மற்றும் சரியான வெப்பநிலை போன்றவை காளான் வளர்ப்புக்கு அத்தியாவசிய தேவைகள் ஆகும். 20 முதல் 25 சென்டிகிரேடு வெப்பநிலையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். சிப்பி காளான் தயாரிக்க வைக் கோலை அதற்கென இருக்கும் பிரத்யேக இயந்திரத்தில் போட்டு வேக வைக்க வேண்டும். பிறகு அதனை 50% காய வைத்து பாலித்தீன் கவரில் போட வேண்டும். இதே கவருக்குள் காளான் விதையையும் போட்டு கட்டி தொங்கவிட வேண்டும். 300 கிராம் எடை கொண்ட காளான் விதைக்கு நான்கு கிலோ வைக்கோல் போட வேண்டும். இது ஒரு பாலித்தீன் பைக்கான அளவு.

இதற்கென பிரத்யேகமாக 550 சதுர அடிக்குள் தென்னை ஓலையால் குடிசைக் கட்ட வேண்டும். கீழே தரையில் ஆற்று மணலைப் பரப்பி அதில் தண்ணீர் ஊற்றி வரவேண்டும். இந்த சூழ்நிலை காளான் வளர்ப்பிற்கு ஏற்ற தட்டவெப்ப நிலையைக் கொடுக்கும். விதைகள் போட்டிருக்கும் பாலிதீன் பைகளில் 20 ஓட்டை போட வேண்டும்.இந்நிலையில் 30-35 நாட்களுக்குப் பிறகு சிப்பி காளான் வெளியில் வர தொடங்கும். காலை இரண்டு மணிநேரம் மாலை இரண்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். முளைத்திருக்கும் காளானை மாலையில் அறுவடை செய்தால் மறுநாள் காலையில் பயன் பாட்டிற்கு கொண்டு போய் சேர்த்துவிட வேண்டும். காளான்களை அறுவடை செய்ததும் உடனடியாக சப்ளை செய்துவிட வேண்டும் என்பது முக்கியமான விஷயம்.

நிலம் மற்றும் கட்டடம்

10 கிலோ காளான் உற்பத்தி செய்ய 700 சதுர அடி நிலம் தேவைப்படும். நிலத்தில் குடிசை கட்டுவதற்கு 2.50 லட்சம் ரூபாய் வரை செலவாகும்.

இயந்திரம்

ஒரு நாளைக்கு 350 கிலோ வீதம் ஆண்டுக்கு 300 நாட்கள் வேலை செய்தால் 105 டன் காளான் தயாரிக்க முடியும். வைக்கோலை வேக வைக்கப் பயன்படுத்தப்படும் இயந்திரமான ஆட்டோகிளேவ் சென்னை, கோயம்புத்தூர் போன்ற இடங்களில் கிடைக்கிறது.

தண்ணீர்

தினமும் 15 ஹெச்.பி. மின்சாரம் மற்றும் 1,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். தண்ணீர் தொடர்ந்து கிடைக்கும்படி இருக்க வேண்டும்.

ஃபைனான்ஸ்

இந்த உற்பத்தி திறனுக்கான நிலத்திற்கு 60,000 ரூபாய்
http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQB6ENBKkOZM0EBp67o68Ro7M3bOnO60cPVish-vmcGLi8LU0tC-FN0WT8DEg
(தேர்ந்தெடுக்கப்படும் இடத்தைப் பொறுத்து விலை மாறுபடும்), கட்டடம் 2,50,000 ரூபாய் என மொத்தம் 3,10,000 ரூபாய் தேவை. இயந்திரத்திற்கான செலவு 1.98 லட்சம் ரூபாய்.ரிஸ்க்

காளான் வளர்க்கும் இடம் மிகவும் சுத்தமாக இருப்பது அவசியம். காரணம், அசுத்தமான கையுடன் வேலை செய்தால்கூட பாக்டீரியாவால் பாதிப்படைந்து காளான் ஒழுங்காக வளராமல் கெட்டுப்போக வாய்ப்புண்டு. ஒரு பாலித்தீன் கவர் கெட்டு போனால்கூட அனைத்து பாலித்தீன் கவரும் கெட்டுப் போய்விடும். கோடை காலத்தில் வெயில் அதிகமாக இருக்கும், எனவே குறைந்த அளவே காளான் உற்பத்தியாகும். இதனை சரி செய்ய மற்ற நேரங்களில் காலை, மாலை மட்டும் தெளிக்கும் தண்ணீரை வெயில் நேரங்களில் நாள் முழுவதும் தெளிக்க வேண்டும். சொட்டு நீர் பாசன முறையில் தண்ணீரை விட்டு வந்தால் காளான் வளரத் தேவையான தட்பவெப்ப நிலை கிடைக்கும். பனிக் காலத்திலும் காளான் வளர்வது குறையும்.

பிளஸ்

அசைவ உணவுகளுக்கு மாற்றாக மட்டுமின்றி சர்க்கரை நோய் உள்ளவர்களும் காளானைப் பயன்படுத்துகிறார்கள். சர்க்கரை நோயைக் குணப்படுத்த தயாரிக்கப் படும் மாத்திரைகளில் காளான் பொடிகள் பயன்படுத்தப்படுகிறது என்பது முக்கியமான விஷயம்.

நல்ல ஏற்றுமதி வாய்ப்பு உள்ள இத்தொழிலில் பெண்கள் அதிகளவில் ஈடுபட வாய்ப் புள்ளது. தற்போது அதிக எண்ணிக்கையில் காளான் உற்பத்தி யூனிட்டுகள் இல்லாத தால் இத்தொழிலுக்கு பிரகாச மான எதிர்காலம் இருப்பதை மறுக்க முடியாது!

நன்றி : ITCOT Consultancy..
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQ0WwmtV6OjEj3PbD3veFZUZn_E4IIVJRnMo1y_E7tZBZugE1AQiyYxbQ-i
காளான் வளர்ப்பு முறை

காளானில் வைட்டமின் பீ அதிகமாக இருப்பதால் இதயம் சம்பந்தமான நோய்களை குணப்படுத்துகிறது. போலிக் ஆசிட் அதில் இருப்பதால் ரத்தசோகை நோய்க்கு நல்லது. சிறந்த கண்பார்வைக்கும் எலும்புகளின் வளர்ச்சிக்கும் பற்களின் உறுதிக்கும் தேவையான தாமிர, இரும்பு சத்துகளுடன் கூடிய கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற தாதுக்களும் காளானில் உள்ளன.

இவ்வாறு பல நற்குணங்களை கொண்ட சிப்பி காளானை வளர்க்கும் முறைகளை இங்கே காணலாம்

வைக்கோல் தயாரிப்பு:
http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQf-SBOEVezDVxFxVq08Ov1xFXCkktHfpGrsnOURYT_lhlwBR-5CZSIxyQ
காளான் வளர்ப்பதற்கு நெல் வைக்கோலைக் கொண்டு உருளை படுக்கைகள் தயாரிக்க வேண்டும்.
புதிய நெல் வைக்கோலை 5 செ.மீ. நீளத்திற்கு வெட்டி, 4-5 மணி வரை நீரில் ஊறவைக்க வேண்டும்.
பிறகு வைக்கோலை நன்கு கொதிக்கும் நீரில் ஒரு மணிநேரம் வேகவிட வேண்டும்.
பின் வைக்கோலை அகற்றி உலர்த்திக் கொள்ள வேண்டும்.

காளான் படுக்கை தயாரித்தல்:

2க்கு 1 அடி அளவுக்கு 80 காஜ் கனமுள்ள பாலிதீன் பைகளில் அடுக்கு முறையில் காளான் விதையிடப்பட்ட படுக்கைகள் தயாரிக்கப் படுகிறது.
பாலிதீன் பையின் அடிப்பகுதியை சணலால் கட்டி அதை உள்பக்கமாக திருப்பிவிட வேண்டும்.
பையின் அடிப்பகுதியில் 5 செ.மீ. உயரத்திற்கு வைக்கோல் துண்டுகளை பரப்பி அதன் மேல் 30 கிராம் காளான் வித்தை தூவ வேண்டும்.
இதே போல் 4 அடுக்குகள் தயாரித்து மேல்பகுதியில் 5 எச்.மீ. வைக்கோல் பரப்பி, பையின் வாய்பகுதியை சணலால் இறுக்க கட்டவேண்டும்.
பாலிதீன் மையப்பகுதியில் பென்சில் அளவுள்ள 5-10 துளைகள் போடவேண்டும்.

காளான் வித்து பரவும் முறை:

மேற்கூறிய முறையில் தயாரிக்கப்பட்ட உருளைப் படுக்கைகளை வயரில் கட்டி தொங்கவிட வேண்டும்.
படுக்கையில் பூசண விதைகள் பரவுவதற்கு 15 நாட்கள்ஆகும். பின் படுக்கைகளைக் காளான் தோன்றும் அறைக்கு மாற்ற வேண்டும்.

காளான் அறை தயாரித்தல்:
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcTxkuRhQswU8pWtn6FIxMpSYX9rjjNtgon0xE-ei9BzEowwMZN6
காளான் பூசணம் முழுமையாக பரவி ஒரு வாரத்திற்குள் பையைக் கிழித்துக்கொண்டு வெளியே வரும்.
காளான் மொட்டு தோன்றிய மூன்று நாட்களில் பெரியதாகிவிடும். அவற்றை அறுவடை செய்த பின் பாலிதீன் பையை நீக்கிவிட வேண்டும்.
அறையின் வெப்பநிலை, ஈரப்பதத்தை தேவையான அளவு பராமரிக்க மணலில் தண்ணீர் தெளிக்கவும்.

காளான் அறுவடை:

காளான்களை அறுவடை செய்தபின் படுக்கைகள் மீது தண்ணீர் தெளிக்க வேண்டும்.
ஒரு வார இடைவெளியில் மீண்டும் காளான் அறுவடைக்கு வரும்.
இதுபோல் 3 முறை அறுவடை செய்யலாம்.

ஒரு படுக்கை தயார் செய்ய 500 கிராம் வைக்கோல் பயன்படுத்தினால் 900 கிராம் மகசூல் கிடைக்கும்.

மேற்கூறிய முறையில் காளான் வளர்ப்பு செய்து அதிக மகசூல் பெற்று விவசாயிகள் பயனடையலாம்.காளான் உற்பத்தி செய்வது என்பது ஒரு கடினமான வேலையில்லை. வருடம் முழுவதும் உற்பத்தி செய்யலாம். ஆனால் கோடை காலத்தில் 30 -40% மகசூல் குறைவாக கிடைக்கும்.

தொடர்புக்கு: பாண்டியன், அகல்யா பார்ம்ஸ், 09283252096 மற்றும் கே.சத்தியபிரபா, 09659108780.

நன்றி: தினமலர்

இணையத்திலிருந்து...


Engr.Sulthan

Dr.சுந்தரராஜ் தயாளன்
02-04-2012, 02:43 PM
அறியத்தந்தமைக்கு மிகவும் நன்றி...சுல்தான் அவர்களே...காளான் வளர்ப்பு குறித்து முழுமையாக தெரிந்துகொண்டேன் :)