PDA

View Full Version : ஒரு காதல் கடிதம்... ஒரு காதல் கடிதம்...



reena
01-04-2012, 06:12 PM
அழகாய் ஒரு காதல் கடிதம்...
இதமாய் வடிக்க நினைத்தேன்...
என்னவனுக்காக ....

கடிதம் என்பதே.....
அரிதாய் போன காலத்தில்...
அன்பான வார்த்தைகள் இட்டு ...
ஆசையாய் வரிகள் புனைந்து ...
அருமையாய் ஒரு மடல்...
என் காதலனுக்காக...

என் காதல் சொல்லி ..
நேசத்தின் ஆழம் ..
எடுத்துரைத்து..
அடி மனதில் ..
ஒளிந்திருக்கும்...
சொத்தான நேசத்தை.
மொத்தமாய் சேர்த்து ...
முத்தாய் ஒரு கடிதம்..

நேசத்தை அறிந்து...
பாசத்தை உணர்ந்தது ...
உன் மனதிடம்....
என் மனதை..
மொத்தமாய் ....சுத்தமாய் ..
தொலைத்தேன் உன்னிடம்...

உன்மேல் கொண்ட காதலை..
தடுப்பனையிட்டு தடுத்தாலும்...
அணை உடைத்து* வெம்முகிறது...
உன்பால் நான் கொண்ட அன்பு...

தடை பல வந்தாலும்..
எதிர்த்து நிற்கும்...
பெரும் படையாய்...
நம் (என்)காதல்...

என் காதலை விளக்க ..
வார்த்தை தேடி தேடி...
சோர்வடைந்தேன் நான் ..
எழுத எழுத ...
வற்றாத ஜீவநதியாய்
உனக்கான நினைவுகள்... ..
*
என்றும் உனக்காக..
உன் அன்பிற்காக ...
துடிக்கும் ...
ஒரு ஜீவன்..
சிறு ஜீவன்..

கீதம்
02-04-2012, 12:01 AM
கவிதைச் சங்கிலி இடையிடை அறுவதுபோலிருந்தாலும் காதல் சங்கிலியின் அதீதப் பிணைப்பில் அழகாகப் பயணிக்கிறது ஒரு காதல் கடிதத்தின் பயணம்.

விலாசமிடப்பட்டவிடத்து விரைவில் சேர்ந்திட வாழ்த்தும் பாராட்டும். இனிதே தொடருங்கள்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
02-04-2012, 03:22 AM
காதல் கடிதமொன்றை எழுதிட நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்...இன்னும் எழுதத் துவங்கவில்லை போல் தெரிகிறது. எழுதி முடித்து அனுப்பிவிட என் வாழ்த்துக்கள் :)

jayanth
02-04-2012, 04:22 AM
வேறு யாரும் முந்திகொள்வதற்கு முன்பு வேகமாய் வடித்திடுங்கள் உங்கள் கடிதத்தை ...!!!

அமரன்
06-04-2012, 08:36 PM
வெட்டுக் குத்து மிகுந்து, அங்கங்கள் துண்டு துண்டாகி, இரத்தம் தெறித்தாலும், மணி ரத்தினத்தின் படங்களில் காதல் இனிய இராகமாக இருக்கும்.. இந்தக் கடிதத்திலும் அப்படித்தான்..

பாராட்டு ரீனா.

aasaiajiith
25-04-2012, 02:22 AM
வணக்கம் !
தலைப்பு காதல் கடிதம் என்பதாலும் ,அதற்க்கு அனைவரும் அளித்த பதில் அழகாய் இருந்தமையாலும்
குறிப்பாய் கடைசி பதில் அமரனுடைய பதில் அமரமாய் அபாரமாய் இருந்தமையால்,என்னோடைய
காதல் கடிதம் ஒன்றை இங்கு பகிர்ந்து கொள்ள விழைகிறேன் !
"காதல் கவிதை தீட்டலாம் என்று
என் தேகம் அதையே காகிதமாய்

ஊனின் உதிரம் கொண்டுதான் கவிதை
அதை நான் தீட்டுவேன்

(பலபொழுது ) சிந்திப்பதும் (சிலபொழுது ) சந்திப்பதும் அஞ்சல்காரர்களாய்
காலவரை ஏதுமின்றி

கவிதை உனக்காய் ப(டி)தித்திடுவேன்

முத்தே உன் உத்தரவை ,பெரும் சொத்தாக மதிக்கின்றேன்
உன் மதிப்பின் நன்மதிப்பாய் இப்பதிப்பை பதிக்கின்றேன்

இப்பதிப்பின் பதிப்புகளில், பெரிதாக எதுவுமில்லை
இருந்தால், உன் பெருமை அன்றி நிச்சயமாய் வேறெதுவுமில்லை

என்ன செய்து என்னை இப்படி ஆக்கிவிட்டாய் ?
கிறுக்கவும் லாயக்கற்றவனை கத்துக்குட்டி கவிஞன் ஆக்கிவிட்டாய்

கவி யே உன் கவிதைகளில், வரியாக வாழ்வேன் நான்
பிறையே நீ உறங்கும்போதும் பிரிய மாட்டேன் நான்

கிறுக்கன் நான் கிறுக்கிதள்ளும் கிறுக்கல்கள் அத்தனையும்
ஒருத்தி யின் நினைவுகளில் பிறந்திட்ட பே(பொ)ருக்கல்களே

தப்பாய் ஏதும் இருந்தால் பொறுத்துக்கொள் கவியே
பருத்தியே , உனக்கு பொருத்தம் போல் திருத்தம் தருவேன் நான் .."

இப்பகுதியில் மற்றவர் உயர் கவிதைகள்போல் இல்லாமல் போனாலும்
இதையும் ஒரு கவிதையாய் ஒப்பு கொண்டால்

இப்பதிப்பு ..

என் யாரோ அவள், கால்களுக்கு காணிக்கை
கவிதைக்கு அர்ப்பணம்
காதலுக்கு சமர்ப்பணம் .

saguna
28-04-2012, 02:49 AM
கடிதம் வடிக்கும் முன்னே தேனாய் தித்திக்கும் வரிகள்....காதல் வயப்பட்ட மனது...அழகாய் விளக்கப்பட்டுள்ளது ..