PDA

View Full Version : சுய தொழில்கள்-8.1 ஸ்பைருலினா பாசி வளர்ப்புer_sulthan
01-04-2012, 05:17 AM
சுய தொழில்கள்-8.1 ஸ்பைருலினா பாசி வளர்ப்பு
சுய தொழில்கள் வரிசையில் அடுத்து நாம் பார்க்க இருப்பது ஸ்பைருலினா என்ற சுருள் பாசி தயாரிப்பு பற்றி. பொதுவான சில தகவல்களைத் தந்திருக்கிறேன். இதில் விருப்பமுள்ளவர்கள் கீழே நான் கொடுத்திருக்கும் முகவரியைத் தொடர்பு கொண்டால் மேலதிக விவரங்கள், தயாரிப்பு முறைகள், சந்தை படுத்துதல், இதற்கான பயிற்சி வகுப்புகள் பற்றிய தகவல்கள்,போன்றவற்றை பெறலாம்.இன்று சென்னையை சுற்றிலும், மற்றும் தமிழகத்தின் பல இடங்களிலும் ஸ்பைருலினா எனும் சுருள் பாசி வளர்ப்பு தொழில் பலரால் போட்டிப் போட்டுக் கொண்டு செய்து வருவது ஒரு முக்கிய செய்தி.
http://www.google.co.in/url?source=imglanding&ct=img&q=http://www.wisechoices.com.au/images/P/morspipowder.jpg&sa=X&ei=UeZET8yEB8isrAeN6bW6Dw&ved=0CAsQ8wc4Sw&usg=AFQjCNH2X88Qi6pSATWFXi4xbhb5AFCARw

http://img.dinamalar.com/data/uploads/E_1322565164.jpeg


ஸ்பைருலினா பாசி வளர்ப்பு வேகமாக பரவி வரக் காரணம் அதில் உள்ள சத்துக்கள் தான். வைட்டமின் பி12 என்ற சத்து இதில் உள்ளது.ரத்தசோகையை நீக்கும். மாத்திரை உள்ளிட்ட பல வடிவங்களில் இப்பாசி விற்பனை செய்யப்படுகிறது. இந்த பாசியைத் தூள் செய்து எலுமிச்சை பழச்சாறுடன் கலந்து குளிர்பானம் போலவும் குடிக்கலாம். இந்த பாசியைச் சேர்த்துக்கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்புத்திறன் கூடும். மனிதர்களுக்கு மட்டுமல்ல, கால்நடைகளுக்கும் சிறந்த உணவாக இந்தப்பாசி பயன்படுகிறது. மாட்டுத்தீவனம் தயாரிக்கும்போது இந்தபாசியைக் கலந்து தயாரித்தால் மாடுகள் ஆரோக்கியமாக இருக்கும்.
விரைவில் பருவத்துக்கு வரும். பால் கொடுக்கும் திறனும் அதிகரிக்கும். மீன்களுக்கு கொடுக்கப்படும் தீவனத்தில் ஸ்பைருலினா பாசியைக் கலந்தால் அதன் வளர்ச்சி வேகமாக இருக்கும். அலங்கார மீன்களுக்கு கொடுத்தால் அவை பளபளவென இருக்கும். 60 முதல் 65 சதம் புரதச்சத்து உள்ள பாசி. கிலோ ஒன்றுக்கு ரூ.700 முதல் ரூ.800 வரை விலைபோகும்.
சமீபகாலம் வரை கால்நடைத் தீவனம் தயாரிப்பவர்கள் சீனாவில் இருந்துதான் இந்த பாசியை இறக்குமதி செய்துவந்தார்கள். தற்சமயம் அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்திய உற்பத்திக்கு மதிப்பு கூடி இருக்கிறது. ஸ்பைருலினா பாசி விற்பனை குறித்து மேலும் தகவல்பெற தொடர்பு முகவரி:
டாக்டர் கி.ராவணேஸ்வரன், உதவி பேராசிரியர் மற்றும் "பேராசிரியர் மற்றும் தலைவர், மீன்வள ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம் பால்பண்ணை காலனி, சென்னை-5. தொலைபேசி: 044-2555 6750'.

அதிக விளைச்சலுக்கு புதிய பயிர் ஊக்கிகள்: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் குறைந்த செலவில் அதிக பலன் அளிக்கும் விதத்தில் "தென்னை டானிக்' என்ற தொழில்நுட்பத்தை 2003ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. கடந்த 8 ஆண்டுகளாக உழவர்கள் பயனடைந்து வருகிறார்கள். மேலும் பயிர் வினையியல் துறையினரால் கடந்த 2009-2010, 2010-2011ஆம் ஆண்டுகளில் 5 பயிர் மேலாண்மைத்தொழில் நுட்பங்கள் வெளியிடப் பட்டது. இதில் முறையே பயறுவகைப் பயிர்களான பாசிப்பயறு, உளுந்து, துவரைக்கு "த.வே.ப.க. பயறு ஒண்டர்', நிலக்கடலைக்கு "த.வே.ப.க. நிலக்கடலை ரிச்'; பருத்திக்கு "த.வே.ப.க.பருத்தி பிளஸ்'; கரும்பிற்கு த.வே.ப.க. கரும்பு பூஸ்டர்', மக்காச் சோளத்திற்கு "த.வே.ப.க. மக்காச்சோள மேக்சிம்' ஆகிய பயிர் பூஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இத்தகைய தொழில் நுட்பங்கள் அனைத்தும் குறிப்பிடப்பட்ட பயிர்களில் பல்வேறு பருவங்களில் உருவாகும் அல்லது உருவாக்கப்படும் வினையியல் குறைபாடுகளை கண்டறிந்து அவைகளின் பங்களிப்பினால் ஏற்படும் விளைச்சல் இழப்பை ஈடுகட்டி நிலைநிறுத்துவதற்காக கண்டறியப்பட்டதாகும்.
விவசாயிகள் பல்வேறு பயிர் ஊக்கிகளைப் பயிர் வினையியல் துறை மூலமாகவோ அல்லது மாவட்டம்தோறும் உள்ள வேளாண் அறிவியல் நிலையங்கள் மூலமாகவோ பெற்று பயன்படுத்தி அதிக விளைச்சலைப் பெறலாம் என தமிழ்நாடு வே.ப.கழக துணைவேந்தர் ப.முருகேசபூபதி கேட்டுக் கொள்கிறார்.

அமிர்த்த கரைசல்: தயாரிப்பு முறை: மாடு ஒருமுறை போட்ட சாணம், (எந்த மாடாக இருந்தாலும் பயன்படுத்தலாம்) ஒருமுறை பெய்த மூத்திரம்?இவற்றை ஒரு பிளாஸ்டிக் வாளியில் எடுத்துக் கொண்டுஅதில் ஒருகைப்பிடிவெல்லம், ஒருகுடம் தண்ணீர் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். 24 மணி நேரம் நிழற்பாங்கான இடத்தில் வைக்க வேண்டும். அமிர்த கரைசல் தயார். ஒரு பங்கு கரைசலுடன் 10 பங்கு தண்ணீர் சேர்த்து பயிர்களுக்கு தெளிக்கலாம். ஒரு ஏக்கருக்கு பத்து தெளிப்பான் (டேங்க்) அளவுக்கு தெளிக்கலாம். வாய்க்கால் நீரிலும் கலந்துவிடலாம்.
அமிர்தகரைசலை நிலத்தில் தெளித்த 24 மணி நேரத்தில் நுண்ணுயிர்கள் பெருகும். பயிர்கள் நோய்நொடி இல்லாமல் வளர உதவும். பொதுவாக 15 நாட்களுக்கு ஒருமுறை இந்த கரைசலைத் தெளிக்கலாம். பயிர்கள் மிகவும் வளமாகக் காணப்பட்டால் வாரம் ஒருமுறை கூடத் தெளிக்கலாம். வசதி இருந்தால் தண்ணீர் பாய்ச்சும்போதெல்லாம் அதனுடன் கலந்துவிடலாம். (தகவல்: இயற்கை வேளாண்மை, அ முதல் ஃ வரை, பொன்.செந்தில்குமார்)
-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.
கிராமத்தில் தயாராகும் உணவுக்கு ஈடான "ஸ்பைருலினா' மாத்திரைகள்

விருதுநகர்:விருதுநகர் அருகே தாதம்பட்டி கிராமத்தை சேர்ந்த சிவக்குமார், விண்வெளிக்கு செல்வோர், சாப்பாட்டிற்கு பதிலாக பயன்படுத்தும் "ஸ்பைருலினா' மாத்திரைகளை தயாரித்து வருகிறார்.தாதம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் எஸ்.சிவகுமார். டிப்ளமோ எல்க்ட்ரானிக்ஸ் படித்த இவர், இயற்கை விஞ்ஞானியாக மாறி வருகிறார். அறிவியல் தொழில் நுட்ப முறையில், நுண்ணுயிர் உரங்களை தயாரித்து வருகிறார். அசோஸ்பைரில்லம், ரைசோபியம், அசட்டோ பேக்டர், நீலப்பச்சைப்பாசி, அசோலா போன்ற இயற்கை உரங்கள் தயாரித்து வருகிறார்.இதில் கிருமி நீக்கம் செய்ய, "ஏர் பிளோ சேம்பர், பெர்மண்டார் ஆட்டோ டைமர்' இணைப்புடன், ஆட்டோகிளேவ் இயந்திரங்களை நிறுவி இருக்கிறார். இதில் விவசாய பல்கலைகளிடமிருந்து பெற்றுள்ள, நுண்ணுயிர்களை ஊடகக்கரைசலை பயன்படுத்தி, நொதிக்க வைத்து இயற்கை உரம் தயாரிக்கிறார். ரசாயன கலப்பு உரங்கள் பயன்படுத்தாமல், இயற்கை விவசாய முறையால் உணவு பொருள்களை உற்பத்தி செய்து வருகிறார்.

ஸ்பைருலினா கேப்சூல்: விண்வெளிக்கு செல்லும் விஞ்ஞானிகள், பல நாட்கள் அங்கு தங்கி ஆய்வு பணியில் ஈடுபடும் போது, சாப்பாட்டிற்கு பதிலாக, "ஸ்பைருலினா கேப்சூல்'கள் தான் உட்கொள்கின்றனர். இந்த "ஸ்பைருலினா' கண்டுபிடிக்கப்பட்டதற்கான காரணம், தென் ஆப்ரிக்காவில் கடும் பஞ்சம் ஏற்பட்ட போது, மடகாஸ்கர் பகுதியில் உள்ளவர்கள், தண்ணீரை மட்டும் குடித்து உயிர் வாழ்ந்தனர். இதை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், தண்ணீரில், ஸ்பைருலினா என்ற பச்சைய பொருள் இருப்பதை கண்டனர்.
இதில் தாது உப்பு, வைட்டமின், உணவு, புரதம், மருந்து ஆகிய சத்துக்கள் உள்ளன என கண்டறியப்பட்டது. இதில் புற்று நோய், பார்வைக்கோளாறு, ரத்தக்கொதிப்பு, உடல் பருமன், தோல் நோய்கள், எலும்புருக்கி, நீரிழிவு, ரத்தசோகை, ரணம் ஆகிய அனைத்துக்கும் மருந்தாக பயன்படுகிறது.
சிவகுமார் கூறியதாவது: நான் படித்ததற்கும், தேர்வு செய்துள்ள துறைக்கும் சம்பந்தமே இல்லை. இயற்கை விவசாயத்தில் ஈடுபாடு கொண்டு விவசாய பல்கலை வழங்கும் அனைத்து பயிற்சிகளிலும் பங்கேற்பேன். அதை செயல்படுத்தும் விதமாக, நுண்ணுயிர் உரம் தயாரிப்பு ஆய்வகத்தை உருவாக்கியுள்ளேன். அனைத்து சத்துக்களும் நிறைந்த, "ஸ்பைருலினா' கேப்சூல் விலை 3 ரூபாய் தான், என்றார்.இவரை தொடர்பு கொள்ள 95850 89677ல் ஹலோ சொல்லலாம்.

ஸ்பைருலினா பாசி வளர்ப்பு
வேகமாக பரவி வரக் காரணம் அதில் உள்ள சத்துக்கள் தான். வைட்டமின் பி12 என்ற சத்து இதில் உள்ளது.ரத்தசோகையை நீக்கும். மாத்திரை உள்ளிட்ட பல வடிவங்களில் இப்பாசி விற்பனை செய்யப்படுகிறது. இந்த பாசியைத் தூள் செய்து எலுமிச்சை பழச்சாறுடன் கலந்து குளிர்பானம் போலவும் குடிக்கலாம். இந்த பாசியைச் சேர்த்துக்கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்புத்திறன் கூடும். மனிதர்களுக்கு மட்டுமல்ல, கால்நடைகளுக்கும் சிறந்த உணவாக இந்தப்பாசி பயன்படுகிறது. மாட்டுத்தீவனம் தயாரிக்கும்போது இந்தபாசியைக் கலந்து தயாரித்தால் மாடுகள் ஆரோக்கியமாக இருக்கும்.
விரைவில் பருவத்துக்கு வரும். பால் கொடுக்கும் திறனும் அதிகரிக்கும். மீன்களுக்கு கொடுக்கப்படும் தீவனத்தில் ஸ்பைருலினா பாசியைக் கலந்தால் அதன் வளர்ச்சி வேகமாக இருக்கும். அலங்கார மீன்களுக்கு கொடுத்தால் அவை பளபளவென இருக்கும். 60 முதல் 65 சதம் புரதச்சத்து உள்ள பாசி. கிலோ ஒன்றுக்கு ரூ.700 முதல் ரூ.800 வரை விலைபோகும்.
சமீபகாலம் வரை கால்நடைத் தீவனம் தயாரிப்பவர்கள் சீனாவில் இருந்துதான் இந்த பாசியை இறக்குமதி செய்துவந்தார்கள். தற்சமயம் அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்திய உற்பத்திக்கு மதிப்பு கூடி இருக்கிறது. ஸ்பைருலினா பாசி விற்பனை குறித்து மேலும்
தகவல்பெற தொடர்பு முகவரி:
டாக்டர் கி.ராவணேஸ்வரன், உதவி பேராசிரியர் மற்றும் "பேராசிரியர் மற்றும் தலைவர், மீன்வள ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம் பால்பண்ணை காலனி, சென்னை-5. தொலைபேசி: 044-2555 6750'.

SPIRULINA CULTIVATION PROCESS
http://www.google.co.in/url?source=imglanding&ct=img&q=http://1.bp.blogspot.com/_PO2WtHixjR8/TCOw5D9T6BI/AAAAAAAAAMI/HgiQ1tJlhqc/s1600/growing-spirulina-process.jpg&sa=X&ei=1u9ET-LhGIXOrQf8wJi-Dw&ved=0CAsQ8wc&usg=AFQjCNE_nBDUbUivcts06VxW-XURgzhkFg
http://www.google.co.in/url?source=imglanding&ct=img&q=http://www.spirulina-vera.com/blog/wp-content/uploads/2009/05/bassin-production-3.jpg&sa=X&ei=WfBET-aUCYS0rAe5pMWzDw&ved=0CAwQ8wc&usg=AFQjCNFUuyh9Gj8O1mWUAW9Qgf1ioIZ1IA
http://www.spirulina-vera.com/blog/wp-content/uploads/2009/05/bassin-production-1.jpg
http://www.auroville.org/health/images/spirulina_2.jpg
http://www.google.co.in/url?source=imglanding&ct=img&q=http://www.auroville.org/health/images/spirulina_4.jpg&sa=X&ei=CfFET8IzwoesB42F-awP&ved=0CAwQ8wc4EA&usg=AFQjCNE_I9hDcBP3GWc1UcchvkdUH6c73A
http://www.auroville.org/health/images/spirulina_7.jpg
http://www.google.co.in/url?source=imglanding&ct=img&q=http://www.buychiaseeds.info/assets/images/spirulina.jpg&sa=X&ei=M-VET5nECYj3rQfmtZWoDw&ved=0CAsQ8wc4DQ&usg=AFQjCNGfAmsd1oidkPK_4OubiZ6Vs7F4_w
சுருள்பாசி எனப்படும் ஸ்பைருலினா உடலுக்கு தேவையான அனைத்து
சத்துக்கள் நிறைந்தது இது இரத்த அழுத்த்ம்,சர்க்கரை, அல்சர்,
கேன்சர்,எய்ட்ஸ்,உடல் பருமன்,கொழுப்பு கரைத்து மேலும் பல
நோய்களை குணமாக்குகிறது மேலும் விண்வெளி ஆராய்ச்சி மேற்
கொள்பவர்கள் உணவு உட்கொள்ள இயலாது எனவே இதை கேப்சூலாக எடுத்துக் கொள்வார்கள் 1கிலோ காய்கறி பழங்களில் உள்ள சத்துக்கள் 1கிராம் ஸ்பைருலினாவில் உள்ளது

சுருள் பாசி(Spirulina) வளர்ப்பு, விற்பனை பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழ் உள்ள முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்
Address
5/25 61st street,sidco nagar,villivakkam, Chennai, India 600049 · Get Directions
Phone
944462283791764841619176484181
இணையத்திலிருந்து
Engr.Sulthan

Dr.சுந்தரராஜ் தயாளன்
01-04-2012, 07:23 AM
மிகவும் நன்றி...சுல்தான் அவர்களே...பெங்களூர் லும் இதுகுறித்து நிறைய பயிற்சிகள் செய்து காண்பிக்கப்படுகின்றன. அறியத்தந்தமைக்கு நன்றி :)

prabhualice
18-06-2012, 07:37 AM
தகவலுக்கு மிகவும் நன்றி.. இதை நான் ஒரு சிறு தொழிலாக செய்ய ஆசைப்படுகிறேன். யாரை தொடர்பு கொள்வது?

aren
19-06-2012, 02:11 AM
நல்ல தகவல். நம் மன்றத்தில் இருப்பவர்கள் சுய தொழில் செய்ய நினைக்கும் பட்சத்தில் இதையும் கொஞ்சம் கவனக்கலாம். லாபம் நிறையவும் கிடைக்கும் என்று தோன்றுகிறது.

கீதம்
19-06-2012, 11:09 AM
தகவலுக்கு மிகவும் நன்றி.. இதை நான் ஒரு சிறு தொழிலாக செய்ய ஆசைப்படுகிறேன். யாரை தொடர்பு கொள்வது?

இது தொடர்பான விவரங்களுக்குத் தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி, பதிவின் இறுதியில் தரப்பட்டுள்ளதே...

இராஜேஸ்வரன்
19-06-2012, 02:10 PM
மிகவும் பயன் தரக்கூடிய உபயோகமான தகவல். நன்றி.

aslam
18-09-2012, 09:41 AM
thanks for your good business information

A Thainis
25-09-2012, 12:57 PM
பாசியின் மருந்து குணங்களை இன்று அறிந்தேன், மிகவும் பயனுள்ள தகவல்.