PDA

View Full Version : முடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்



er_sulthan
31-03-2012, 03:55 PM
முடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்
http://photos-h.ak.fbcdn.net/hphotos-ak-ash4/185205_255254377835892_140952099266121_999764_6868726_a.jpg
வெளி நாட்டில் வாழும் பல சகோதரர்கள் முடி உதிர்வை தடுக்க மருந்து கேட்டிருந்தனர். அவர்களுக்காக இதோ முடி சம்பந்தமான மருத்துவ குறிப்புகள்:

முடி உதிர்வதை தடுக்க

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

வழுக்கையில் முடி வளர:

கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

இளநரை கருப்பாக:

நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

முடி கருப்பாக:
ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.

காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

தலை முடி கருமை மினுமினுப்பு பெற:

அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

செம்பட்டை முடி நிறம் மாற:

மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

நரை போக்க:

தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.

முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.

முடி வளர்வதற்கு:

கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

சொட்டையான இடத்தில் முடி வளர:

நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.

புழுவெட்டு மறைய:

நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.

* முட்டை வெள்ளை கருவை நன்கு அடித்து தலையில் தேய்த்து, ஊறவைத்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் பளபளக்கும் உங்கள் கூந்தல்.

* முடி உதிர்வதை தடுக்க அதிகம் ஐயன், வைட்டமின் நிறைந்த உணவு வகைகளை சாப்பிட்டு வரவேண்டும்.
இணையத்திலிருந்து
*Engr.Sulthan

Dr.சுந்தரராஜ் தயாளன்
31-03-2012, 04:11 PM
அருமையான செய்திகள்...அறியத்தந்தமைக்கு மிகவும் நன்றி சுல்தான் அவர்களே:)

ish2709
06-04-2012, 08:50 AM
கீழநெல்லி வேரை eppadi payanpadutha vendum? pachayagava or kaaya vaitha?

Dr.சுந்தரராஜ் தயாளன்
06-04-2012, 09:00 AM
இதைப்போலவே முடி நரைப்பதை தடுப்பதற்கும் ஏதாவது வழி முறைகள் உண்டோ சொல்லுங்கள். கோத்ரேஜ் டை அடித்து அடித்து மிகவும் போர் அடிக்கிறது.:)

சிவா.ஜி
06-04-2012, 11:08 AM
இது எதுவுமே வேலைக்காகாது...என்ன நிகழ்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொண்டு வாழ பழக வேண்டும்....!!!

அக்னி
06-04-2012, 01:57 PM
இவையெல்லாவற்றையும் விட மிக இலகுவான வழி..,
எப்போதும் மொட்டை போட்டபடி இருப்பது...

பானையில இருந்தாத்தானே அகப்பைல வர்றதுக்கு...
தலையில முடி இருந்தாத்தானே உதிர்வதைப்பற்றிக் கவலைப்படுவதற்கு...

என்ன நாஞ் சொல்றது சரிதானே...

M.Jagadeesan
06-04-2012, 02:01 PM
அக்னி சொன்னது அருமையான வழி! ஆனால் தினமும் மொட்டை போட வேண்டுமென்றால் செலவு அதிகம் ஆகுமே!

அக்னி
06-04-2012, 02:25 PM
தினமும் மொட்டை போட்டு உழைப்பவர்களும் இருக்கின்றார்கள் தானே...

அதுக்குத்தான் self service பண்ணிக்குங்கறேன்.

போற போக்கில hair cutter க்குத் தேவை இல்லாமல் போயிடும் போல இருக்கு.
நான் என்னையச் சொல்லுறன்...

அமரன்
06-04-2012, 08:17 PM
இது எதுவுமே வேலைக்காகாது...என்ன நிகழ்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொண்டு வாழ பழக வேண்டும்....!!!

அது..!!:)

சிவா.ஜி
06-04-2012, 08:27 PM
அது..!!:)

வேற வழி....????

sarcharan
12-04-2012, 02:39 PM
எனக்கும், பென்சுக்கு இந்த தகவல்கள் மிகவும் பயன்படும்...

meera
13-04-2012, 08:09 AM
இவையெல்லாவற்றையும் விட மிக இலகுவான வழி..,
எப்போதும் மொட்டை போட்டபடி இருப்பது...


என்ன நாஞ் சொல்றது சரிதானே...

அட இது தாங்க எங்க வீட்டுலயும் நடக்குது. வாரத்துக்கு ஒரு முறை மொட்டை தான்.
முடி வெட்ட கொடுக்கற காசு மிச்சமாகுதில்ல..................:icon_b::icon_b:

M.Jagadeesan
13-04-2012, 09:42 AM
நமக்கு நாமே மொட்டை அடித்துக்கொள்வதில் தவறில்லை. மற்றவர்களுக்குத்தான் நாம் மொட்டை அடிக்கக் கூடாது.