PDA

View Full Version : காதல் காதல் .. காதலைத்தவிர வேறில்லை..

கலைவேந்தன்
31-03-2012, 02:00 PM
1.

நீ போட்டுக்கொண்டதால்
பெருமை வந்ததாம்..
காற்றுடன் படபடத்து
பெருமை கூறியது..
உன் சட்டை..!

கலைவேந்தன்
31-03-2012, 02:01 PM
2.

ஒற்றைச்செடியில்
இரண்டு மலர்களாம்..
ஒன்றை நீ சூடிக்கொண்டதால்
இன்னொன்று
தற்கொலை செய்ததாம்..

கலைவேந்தன்
31-03-2012, 02:02 PM
3.

அசைந்து நடந்து நீ
கல்லூரி செல்லுகையில்
உன் கைகளுக்கும்
மார்புகளுக்கும் இடையில்
சிக்கிக்கொண்டதால்
உண்டான மகிழ்ச்சியில்
மூச்சடைத்துச் செத்தன
நீ சுமந்த புத்தகங்கள்..

Dr.சுந்தரராஜ் தயாளன்
31-03-2012, 02:05 PM
காதலுக்கு என்றே தனியாக ஒரு திரி துவங்கியுள்ளீர்கள் கலைவேந்தன் அவர்களே. என் வாழ்த்துக்கள். :)

கலைவேந்தன்
31-03-2012, 02:17 PM
4.

என்னைப்பார்த்து
எக்களித்தது..
உன் உதட்டில்
உட்கார்ந்து இருப்பதால்
கர்வம் கொண்ட
உன்
உதட்டுச்சாயம்..

கலைவேந்தன்
31-03-2012, 02:18 PM
5.

உன்னைத்தொட்டுத்
தடவிய தென்றல்
இனியாரையும்
தொடுவதில்லை என்று
கற்பு விரதம் பூண்டுள்ளதாம்..
அதனிடம் சொல்லேன்
நான் உன் காதலன் தானென்று.

கலைவேந்தன்
31-03-2012, 02:19 PM
6.

சேமித்த நிமிடங்களும்
நேசித்த நொடிகளும்
யாசித்த கணங்களும்
இனியொரு யுகத்தில்
உன்னைக் காணும்போது
என் பரிசுகளாய்
உன்
கைகளில் தவழும்..
அப்போதாவது உணர்வாயா
பிரிவின் வலி இன்னதென்று..?

கலைவேந்தன்
31-03-2012, 02:20 PM
7.

உன்
ஒற்றை முத்தத்தால்
உடைந்து போன
என்
பிரம்மச்சரிய பிரதிக்ஞை
எந்த தவத்தால்
மீண்டும் பிறப்பெடுக்கும்...?

இப்படிக்கு
உன்னில் தொலைந்து போன
சன்னியாசி.

கலைவேந்தன்
31-03-2012, 02:25 PM
மிக்க நன்றி தயாளன்.. கவிதைகளை வாசித்து கருத்து கூறுங்கள்.

Hega
31-03-2012, 03:11 PM
காதலின் உணர்வு, உரிமை, புரிதல் பொறாமை, சுபாவம் என காதல் குறித்த வேறுபட்ட பார்வைகளில் எழுதபட்டிருக்கும் கவிதைகள் சொல்லும் கருத்துக்கள் அருமை.

காதல் என்றாலே பிரிவும், வலியும் சேர்ந்து வரும் போலும். காதல் என்றாலே பொறாமை அங்கே சிம்மாசனமிட்டு உட்கார்ந்து கொள்ளும் என்பதினை உதட்டுசாயத்தின் மூலம் உணர்த்திய விதம் அழகு.

பாராட்டுக்கள் கலை அண்ணா.

கௌதமன்
01-04-2012, 08:02 AM
இன்னொரு தபூ சங்கர்....

கீதம்
02-04-2012, 12:54 AM
குறுங்கவிதை ஒவ்வொன்றும் மனதுக்குள் குறுகுறுக்கும் கவிதைகள்.

குறும்பூ, தவிப்பூ, வியர்ப்பூ, விதிர்ப்பூ, களிப்பூ, மலைப்பூ என அத்தனையும் காதல் பூக்கள். பாராட்டுகள்.

கலைவேந்தன்
02-04-2012, 02:35 PM
உங்கள் அனைவரின்,
ஹேகாவின்,
கௌதமனின்,
கீதமின்,

பாராட்டுகளுக்கு நன்றி..!

கலைவேந்தன்
02-04-2012, 02:40 PM
8.

உன்முந்தானை நுனி
லேசாகப்பட்டு
என் கண்கள் கலங்கின..
உடனே பரிதவித்தாய்
அன்று நீ.

உன் சொற்கணைகள்
தோண்டிஎடுத்தன
என் விழிகளை
இன்று.

காலம்தான் எத்தனை
மானங்கெட்டது..
மாறிக்கொண்டே இருக்கிறதே.

muthuvel
05-04-2012, 08:19 AM
நண்பரே ,அருமை , பின்னி எடுதீடீங்க

வெங்கி
05-04-2012, 08:30 AM
மிகவும் அருமையாக் இருந்தது நண்பரே... வாழ்த்துக்கள்

கலைவேந்தன்
05-04-2012, 01:56 PM
மிக்க நன்றி முத்துவேல்.. மற்றும் வெங்கி..!

இன்னும் மனதில் தோன்றும்போதெல்லாம் எழுதுகிறேன்.

அமரன்
06-04-2012, 08:48 PM
1.

நீ போட்டுக்கொண்டதால்
பெருமை வந்ததாம்..
காற்றுடன் படபடத்து
பெருமை கூறியது..
உன் சட்டை..!

அப்படியா சங்கதி?

தீண்டத் தகாதவளாக்கிய ஆத்திரத்தில்
திட்டுகிறது காற்று
என்றல்லவா நினைத்திருந்தேன் இதுவரை..

அமரன்
06-04-2012, 08:50 PM
5.

உன்னைத்தொட்டுத்
தடவிய தென்றல்
இனியாரையும்
தொடுவதில்லை என்று
கற்பு விரதம் பூண்டுள்ளதாம்..
அதனிடம் சொல்லேன்
நான் உன் காதலன் தானென்று.

என்ன புழுக்கம்... என்ன புழுக்கம்...

கதவைத் திறவுங்கள்
காற்று வரட்டும்:)

காதல் சொட்டும் கவிப்பூக்கள் இன்னும் மலரட்டும்.

கலைவேந்தன்
07-04-2012, 01:59 PM
அழகான உங்கள் பின்னூட்டத்திற்காகவே இன்னும் எழுதவேண்டும் என கைகள் பரபரக்கிறது அமரன்.. இதுபோன்ற பின்னூட்டங்களைப் பார்த்து எத்தனை நாளாயிற்று..!

நன்றி அமரன்.

கலைவேந்தன்
07-04-2012, 02:03 PM
9.

திருநாளுக்காய் புத்தாடை அணிந்து
முதன் முதலாய் எனக்குக் காட்டிட
ஓடிவந்தாய்..
புத்தாடையின் புதுமணமும்
முத்தாடும் உன் புன்னகையும்
என்னைத் தள்ளாடவைத்தது..
கிறங்கிப்போய் அணைக்கப்போனேன்
குரங்கே தள்ளுடா என்றாய்..
மதுவுண்ட குரங்காய்
மாறிப் போனேன்..!

கலைவேந்தன்
07-04-2012, 04:24 PM
10.

உனக்கான கருவொன்றைச்
சுமப்பேன் என வந்தேன்..
உன் பிரிவுக்கான
கருவைத் தந்து
சோகக்குழந்தையைப்
பெற்றெடுக்கவைத்தாயே..
நீ என்ன..
இந்திரனா..?

M.Jagadeesan
15-04-2012, 03:59 AM
உங்கள் அனைவரின்,
ஹேகாவின்,
கௌதமனின்,
கீதமின்,

பாராட்டுகளுக்கு நன்றி..!

கீதமின் என்பது சரியா? கீதத்தின் என்பது சரியா?

" மரம் " என்ற சொல்லை எடுத்துக் கொள்ளுங்கள்.
" மரத்தின் வேர் " என்று தானே சொல்கிறோம். " மரமின் " வேர் என்று சொல்வதில்லையே?

" கீதம் " என்ற சொல் " அத்து " சாரியை பெற்று " கீதத்தின் " என்று வருவதே சரி என்று நினைக்கிறேன்.

கலைவேந்தன்
15-04-2012, 04:43 AM
நீங்கள் சொன்னது சரியே ஜகதீசன்.

ஆயினும் அத்து சாரியை உயர்திணைக்குக் கொள்வது சரியில்லை. கீதம் என்பது அஃறிணைப் பெயரைக் குறிக்கும். அதை வைத்துக்கொண்ட ஓரு உயர்திணை நபரைக்குறிக்கும் போது கீதத்தின் என்பதை கீதம்மின் என்பது மிகப்பொருத்தமாக இருக்கும் என எனக்குப் படுகிறது.

இன் சாரியை உயர்திணைக்கும் அத்து சாரியை அஃறிணைக்கும் வருவது மரபு.

என்னைக்கேட்டால் கீதம் தனது பெயரை சற்றே மாற்றிக் கொண்டால் இப்பிரச்சினை வராது. :)

நன்றி ஜகதீசன்..!

கீதம்
15-04-2012, 10:10 AM

என்னது? என் பெயரை மாற்றவேண்டுமா? இது நல்லாயிருக்கே. :)

எனக்கு இலக்கண அறிவு போதாது என்றாலும், இந்த விஷயத்தில் ஜெகதீசன் ஐயா சொல்வதே சரியென்று தோன்றுகிறது.

மங்களம், ராஜரத்தினம், சம்பந்தம், வேலாயுதம், ராஜம், அருணாசலம், பன்னீர்செல்வம் போன்று ம் இல் முடியும் பெயர்ச் சொற்களுடன் வேற்றுமை உருபுகள் சேரும்போது கீழ்க்காணும்படிதானே மாறுகின்றன?

பன்னீர்செல்வத்தின் மகன், அம்புஜத்தின் வீடு, ராஜத்தை அழை, பரிமளத்துக்கும் கொடு என்பன போன்று.

என் ஐயத்தைத் தீர்ப்பீர்கள் என்று நம்புகிறேன்.

ஓவியா
16-04-2012, 12:20 PM
6.

சேமித்த நிமிடங்களும்
நேசித்த நொடிகளும்
யாசித்த கணங்களும்
இனியொரு யுகத்தில்
உன்னைக் காணும்போது
என் பரிசுகளாய்
உன்
கைகளில் தவழும்..
அப்போதாவது உணர்வாயா
பிரிவின் வலி இன்னதென்று..?

பிரமாதம். :icon_b: நன்றி.

கலைவேந்தன்
16-04-2012, 01:51 PM
சரிங்க கீதம்.. இனி கீதத்தின் என்றே குறிக்கின்றேன்.. எனக்கென்ன போச்சு .. :lachen001:

விவாதங்களை நான் வெறுக்கின்றேன். எனவே ஒத்துக்கொண்டேன். நன்றி..!

கலைவேந்தன்
16-04-2012, 01:52 PM
உங்கள் பாராட்டுக்கு நன்றி ஓவியா.. நலம்தானே..?

கீதம்
16-04-2012, 09:46 PM
கீதமின் என்பது சரியா? கீதத்தின் என்பது சரியா?

" மரம் " என்ற சொல்லை எடுத்துக் கொள்ளுங்கள்.
" மரத்தின் வேர் " என்று தானே சொல்கிறோம். " மரமின் " வேர் என்று சொல்வதில்லையே?

" கீதம் " என்ற சொல் " அத்து " சாரியை பெற்று " கீதத்தின் " என்று வருவதே சரி என்று நினைக்கிறேன்.

நீங்கள் சொன்னது சரியே ஜகதீசன்.

ஆயினும் அத்து சாரியை உயர்திணைக்குக் கொள்வது சரியில்லை. கீதம் என்பது அஃறிணைப் பெயரைக் குறிக்கும். அதை வைத்துக்கொண்ட ஓரு உயர்திணை நபரைக்குறிக்கும் போது கீதத்தின் என்பதை கீதம்மின் என்பது மிகப்பொருத்தமாக இருக்கும் என எனக்குப் படுகிறது.

இன் சாரியை உயர்திணைக்கும் அத்து சாரியை அஃறிணைக்கும் வருவது மரபு.

என்னைக்கேட்டால் கீதம் தனது பெயரை சற்றே மாற்றிக் கொண்டால் இப்பிரச்சினை வராது. :)

நன்றி ஜகதீசன்..!

என்னது? என் பெயரை மாற்றவேண்டுமா? இது நல்லாயிருக்கே. :)

எனக்கு இலக்கண அறிவு போதாது என்றாலும், இந்த விஷயத்தில் ஜெகதீசன் ஐயா சொல்வதே சரியென்று தோன்றுகிறது.

மங்களம், ராஜரத்தினம், சம்பந்தம், வேலாயுதம், ராஜம், அருணாசலம், பன்னீர்செல்வம் போன்று ம் இல் முடியும் பெயர்ச் சொற்களுடன் வேற்றுமை உருபுகள் சேரும்போது கீழ்க்காணும்படிதானே மாறுகின்றன?

பன்னீர்செல்வத்தின் மகன், அம்புஜத்தின் வீடு, ராஜத்தை அழை, பரிமளத்துக்கும் கொடு என்பன போன்று.

என் ஐயத்தைத் தீர்ப்பீர்கள் என்று நம்புகிறேன்.

சரிங்க கீதம்.. இனி கீதத்தின் என்றே குறிக்கின்றேன்.. எனக்கென்ன போச்சு .. :lachen001:

விவாதங்களை நான் வெறுக்கின்றேன். எனவே ஒத்துக்கொண்டேன். நன்றி..!

ஐயா, நான் என் ஐயத்தையே தெரிவித்தேன். தாங்கள் முறையாகத் தமிழ்ப் பயின்றவர் என்பதால் தங்களிடமிருந்து தெளிவான விளக்கம் கிடைக்கும் என்ற எண்ணத்தில். நான் தங்களுடன் விவாதம் செய்வதாகத் தாங்கள் கருதுவது மிகவும் வருத்தமளிக்கிறது.

மன்னிக்கவேண்டும். இனி இது போன்று தமிழ் சார்ந்த மற்றும் தங்கள் கருத்து சார்ந்த விஷயங்களில் தங்களிடம் விளக்கங்கள் கேட்டு சிரமப் படுத்தமாட்டேன். முதன்முறையாய் தமிழ் மன்றத்தில் தமிழ் அறிந்த ஒருவரிடம் தமிழ் இலக்கணம் பற்றிய என் ஐயத்துக்கு விளக்கம் மறுக்கப்பட்டு ஏமாற்றத்துடன் திரும்புகிறேன்.

தங்கள் கருத்தினை அறியச் செய்ததற்கு மிகவும் நன்றி.

கலைவேந்தன்
17-04-2012, 03:24 AM
அடடா .. கீதம்.. என் கருத்தை தவறாகப் புரிந்துகொண்டீர்கள்.

அத்து சாரியை பற்றி ஜகதீசர் சொன்னதும் மிகச்சரிதான். உயர்திணைப் பெயர்களில் அத்து சாரியை வரலாம் என்பதும் சரியே. கீதம் என்பது சிறப்புப் பெயர்ச்சொல்லாக அமைதல் மிக மிக அரிது. பங்கஜம் செல்வம் பரிமளம் போன்றவைகள் பெரும்பாலும் சிறப்புப்பெயர்களாக அங்கீகரிக்கப்பட்டுவிட்டன. ஆயினும் கீதம் என்பது எல்லோருமே வைத்துக்கொள்ளும் பெய அல்ல என்பதை அறியவேண்டும்.

கீதம் என்னும் சொல்லை பாட்டு என்னும் அஃறிணைப்பெயராக பயன்படுத்தும் போது அத்து சாரியை குறித்து ஒன்றும் சொல்லவில்லையே..

ஆக கீதத்தின் என்பதும் சரியே. கீதம்மின் என்பதும் தவறல்ல.

எடுத்துக்கொள்வது நம்கையில் உள்ளது.

கலைவேந்தன்
17-04-2012, 03:29 AM
நான் விவாதத்தை விரும்புவதில்லை என்று சொன்னதன் காரணம் எனக்கு பலமுறை ஏற்பட்டிருக்கும் கசப்பான அனுபவங்கள்தான் காரணம்.
பெரும்பாலான களங்களில் விவாதிக்கப்படும் பொருள் பற்றி கவலைப்படுவதில்லை. விவாதிப்பவன் யார் அவன் பின்னணி என்ன என்றெல்லாம் பார்த்து வேண்டுவோர் வேண்டாதோர் என்னும் பாகுபாட்டினை உள்வைத்தே விவாதங்கள் செய்யப்பட்டிருக்கின்றன என்பதால் நான் விவாதங்களை வெறுப்பதாகச் சொன்னேன்.
ஐயம் என்று கேட்டால் எனக்குத்தெரிந்தவரை விளக்கம் சொல்ல நான் என்றும் தயங்கியதில்லை. வருந்தற்க.

நீங்கள் வருந்தும்படி என் சொற்கள் பட்டிருப்பின் அதற்கு என் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் உற்சாகம் குறையவேண்டாம்.
சரியா கீதம்..? சியர் அப்..!

கீதம்
17-04-2012, 06:19 AM

தங்கள் பதிலால் மகிழ்ந்தேன். என் கருத்துக்கு மதிப்பளித்து விரிவான விளக்கம் அளித்தமைக்கும், உற்சாகம் தரும் வகையில் உடனடியாகப் பின்னூட்டமிட்டுத் தக்கத் தேறுதல் வழங்கியமைக்கும் மிகவும் நன்றி. ஐயம் தெளிந்தேன். தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

கலைவேந்தன்
17-04-2012, 01:57 PM
புரிதலுக்கு நன்றி கீதம்..!! உண்மையில் நான் வருந்தினேன். எல்லோரையும் ஒரே போல் கருதுவதும் தவறன்றோ என்னும் பாடம் கற்றேன். அதற்கு வாய்ப்பளித்த உங்களுக்கு மிக்க நன்றி..!!

Hega
29-04-2012, 11:12 PM
கவிதையை தொடர்ந்த கீதம் குறித்த ஆய்வில் பல புதிய வை கற்றேன்.

வார்த்தைகளை சட்டென போட்டுடைக்கும் இக்காலத்தில் தளம்பாத நிறைகுடமாய் கீதம் அக்காவை புரிந்திட எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்ததையிட்டு மகிழ்கிறேன்.

கலைவேந்தன்
30-06-2012, 03:43 AM
நன்றி ஹேகா அக்கா..!

கலைவேந்தன்
03-08-2012, 01:59 PM
11.

என்காலில் நெருஞ்சிமுள் குத்தியதற்காய்
கலவரப்பட்டாய் நீ..
மிக மகிழ்ந்தேன் அன்று..

என் நெஞ்சில் முள்ளாய்க் குத்தினாய்
மிக அழுதேன் இன்று..
நெருப்பாய்ப் பொரிந்தாய் நீ..

நீ என்ன
அரசியல்வாதியா..?
நான் என்ன
இலங்கைத்தமிழனா..?

கீதம்
04-08-2012, 12:29 AM
காதலின் அரவணைப்புக்கும் புறக்கணிப்புக்கும் இதைவிடவும் நல்ல உதாரணம் சொல்ல முடியாது. மனரணம் காட்டுகின்றன வரிகள். அருமை கலைவேந்தன். தொடரட்டும் காதல்....

கலைவேந்தன்
16-08-2012, 05:54 AM
மிக்க நன்றி கீதம்... இன்னும் சில குறுங்கருக்கள் மனதில் சுழல்கின்றன. தக்க சொற்களுக்காய் தவமிருக்கின்றன.. விரைவில் தொடர்கிறேன்..

அனுராகவன்
16-11-2012, 03:12 PM
காதல் சொல்ல வந்தேன்....
காதல் வெற்றியடைய வாழ்த்துக்கள்,..

nandagopal.d
20-11-2012, 05:13 PM
வரிகள் அருமை நண்பரே