PDA

View Full Version : விஷக்காற்று

Dr.சுந்தரராஜ் தயாளன்
30-03-2012, 01:33 PM
விஷக்காற்று
[அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்]

மார்கழி மாதம் ஓர்நாள் மனங்கவர் மாநகர் போபால்
ஊர்மிக வடங்க மக்கள் உண்டபின் உறக்கம் கொண்டார்
வார்முகில் சேர்ந்து வந்தே வதைகுளிர் கூடும் வேளை
கார்பைடு தொழில்சா லையிலே கடுங்கொதி கலனு டைய
வந்தது சயனைட் வாயு வளர்ந்தது காற்றில் கலந்து
தந்தது எரிச்சல் புகைச்சல் தவித்திட மக்கள் அலறி
நொந்திட துடித்து வீழ்ந்து நொடிந்தனர் பல்லா யிரம்பேர்
சிந்தையே செய்முன் கர்ப்பச் சிசுவையும் அழித்த தன்றோ .
அண்மையில் சென்னைக் அருகில் அமைந்த வோரிடந் தன்னில்
வண்மையாய் விசவாய் வென்ற வதந்தியே விரைந்து பரவ
உண்மையில் போபால் போலென உணர்ந்ததால் மக்கள் ஓட
திண்மையாய் அல்ல வென்றதால் திரும்பியே மீண்டும் வந்தார்
காட்டினில் தெளிக்கும் கொல்லி கனிம ரசங்கள் எல்லாம்
நாட்டினில் காற்றில் கலந்து நலமதைக் கெடுக்கும் கூறாம்
வீட்டினில் அடிக்கும் நிறங்கள் வீரிய வோர்னிஷ் எல்லாம்
கேட்டினைத் தரும் பென்சீன் கெளோரைட் விடங்கள் தானாம்
தொழில்கள் பெருகப் பெருகத் தொல்லையே கூடல் கண்டோம்
கழிவுகள் அதிகம் ஆவதால் காற்றினில் மாசுகள் கலந்து
அழிந்திடும் ஓசோன் படலம் ஆதலால் வெட்பம் ஏறியே
இழிநிலை வருமிங் கொருநாள், இன்றே மாசினைத் தடுப்போம்

----- Dr. சுந்தரராஜ் தயாளன்

jayanth
30-03-2012, 03:09 PM
சிந்திக்க வைத்த விருத்தம்.

M.Jagadeesan
30-03-2012, 03:44 PM
கவிதை மிகவும் நன்று!

Dr.சுந்தரராஜ் தயாளன்
01-04-2012, 04:28 PM
சிந்திக்க வைத்த விருத்தம்.
மிகவும் நன்றி...விருத்தம் உங்களுக்கு வருத்தம் தரவில்லை என்பதால் எழுதியதில் ஒரு அர்த்தம் இருப்பதாக உணர்கிறேன் ...ஜெயந்த் அவர்களே :)

கீதம்
02-04-2012, 12:43 AM
வேதிவினை செய்யும் வினைகளையும் விபரீதங்களையும் அழகுத்தமிழில் தந்து வியக்கவைக்கிறீர்கள்.

மாசு தடுக்கும் எண்ணத்தை மனங்களில் தூண்டும் முயற்சிக்கும், அழகானக் கவிதைக்கும் பாராட்டுகள் ஐயா.

கலைவேந்தன்
02-04-2012, 02:29 PM
சொன்னகருத்து வலிமையானது பாராட்டுகள்.

சிலவிடங்களில் சீர் கொஞ்சம் தள்ளாடுகிறது. கவனியுங்கள்.

பாராட்டுகள் தயாளன்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
02-04-2012, 06:24 PM
கவிதை மிகவும் நன்று!

மிகவும் நன்றி ஐயா :)

Dr.சுந்தரராஜ் தயாளன்
05-04-2012, 05:09 PM
வேதிவினை செய்யும் வினைகளையும் விபரீதங்களையும் அழகுத்தமிழில் தந்து வியக்கவைக்கிறீர்கள்.

மாசு தடுக்கும் எண்ணத்தை மனங்களில் தூண்டும் முயற்சிக்கும், அழகானக் கவிதைக்கும் பாராட்டுகள் ஐயா.

மிகவும் நன்றி கீதம் அவர்களே ....வணக்கம் :)

சிவா.ஜி
05-04-2012, 08:49 PM
ஆம்....தொழிற்புரட்சியென......உயிர்வாங்கும் தொழிற்சாலைகளுக்கு அனுமதி கொடுத்து அரசாங்கம்...மக்கள்தொகைக் குறைக்க நினைக்கிறது...மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும்...

அவசியத்தை உணர்த்திய அழகான வரிகள். வாழ்த்துக்கள் ஐயா.

கலையரசி
06-04-2012, 06:10 AM
சுற்றுப்புறம் மாசடைந்து வரும் இவ்வேளையில், விழிப்புணர்வு ஏற்படுத்தும் நல்லதொரு கவிதையைப் படைத்தமைக்குப் பாராட்டுக்கள் ஐயா!

Dr.சுந்தரராஜ் தயாளன்
06-04-2012, 03:38 PM
சொன்னகருத்து வலிமையானது பாராட்டுகள்.

சிலவிடங்களில் சீர் கொஞ்சம் தள்ளாடுகிறது. கவனியுங்கள்.

பாராட்டுகள் தயாளன்.

நன்றி கலைவேந்தன்...சீர் தள்ளாடுமிடத்தை சுட்டியிருந்தால் தள்ளாடுவதைத் தவிர்த்து மெல்லாடவைக்கலாமே:):lachen001:

அமரன்
06-04-2012, 08:58 PM
பகட்டும், பலவும் கலந்து கண்ணைக் கவரும் பொழுதில், புயலெனக் கிளம்பி, புழுதி பரப்பி, விழி மூட வைத்து, உணர்வைத் தூண்டும் பாதகத்தைக் கவிதைகள் கமுக்கமாகச் செய்திடும். அவ்வகை கவி முயற்சி.. பாராட்டுகள் தயாளன்.

ஸ்ரீசரண்
07-04-2012, 12:26 AM
கவிதை மிக மிக அருமை.........

vasikaran.g
08-04-2012, 10:38 AM
விருத்தம் பிறந்தது நல்ல முகூர்த்தம் ,தமிழ் பருக தந்தது வெல்ல தீர்த்தம் ..நன்று

Dr.சுந்தரராஜ் தயாளன்
09-04-2012, 02:30 PM
பகட்டும், பலவும் கலந்து கண்ணைக் கவரும் பொழுதில், புயலெனக் கிளம்பி, புழுதி பரப்பி, விழி மூட வைத்து, உணர்வைத் தூண்டும் பாதகத்தைக் கவிதைகள் கமுக்கமாகச் செய்திடும். அவ்வகை கவி முயற்சி.. பாராட்டுகள் தயாளன்.

மிக மிக நன்றி அமரன் அவர்களே :)

Dr.சுந்தரராஜ் தயாளன்
10-04-2012, 04:22 AM
ஆம்....தொழிற்புரட்சியென......உயிர்வாங்கும் தொழிற்சாலைகளுக்கு அனுமதி கொடுத்து அரசாங்கம்...மக்கள்தொகைக் குறைக்க நினைக்கிறது...மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும்...

அவசியத்தை உணர்த்திய அழகான வரிகள். வாழ்த்துக்கள் ஐயா.

மிகவும் நன்றி சிவா.ஜி அவர்களே:)

Dr.சுந்தரராஜ் தயாளன்
22-04-2012, 03:11 PM
சுற்றுப்புறம் மாசடைந்து வரும் இவ்வேளையில், விழிப்புணர்வு ஏற்படுத்தும் நல்லதொரு கவிதையைப் படைத்தமைக்குப் பாராட்டுக்கள் ஐயா!

மிகவும் நன்றி கலையரசி அவர்களே :)

கலைவேந்தன்
22-04-2012, 04:24 PM
எனது தனிமடலைப்பாருங்கள் ஐயா..

Dr.சுந்தரராஜ் தயாளன்
26-04-2012, 01:12 PM
கவிதை மிக மிக அருமை.........

மிகவும் நன்றி ஸ்ரீசரண் அவர்களே :aktion033:

நாகரா
05-05-2012, 07:27 AM
அமிழ்தத் தமிழ் விருத்தம்
விஷக் காற்றால் வந்த வருத்தம்
நினைவூட்டி அறிவுறுத்தும்

அருமையான கவிதைக்கு வாழ்த்துக்கள் திரு. தயாளன்

Dr.சுந்தரராஜ் தயாளன்
16-05-2012, 03:16 PM
விருத்தம் பிறந்தது நல்ல முகூர்த்தம் ,தமிழ் பருக தந்தது வெல்ல தீர்த்தம் ..நன்று
மிகவும் நன்றி வசிகரன் :)