PDA

View Full Version : பாராட்டப்படும் போது..



கலைவேந்தன்
29-03-2012, 04:56 PM
பாராட்டப்படும் போது..

பாராட்டப்படும்போது
ஒருகுழந்தை
வெட்கப்படுகிறது..

ஒரு காதலி
கால் மண் துழாவுகிறாள்..

ஒரு மாணவன்
உறுதி எடுக்கிறான்
இன்னும் உழைப்பேனென்று..

ஒரு மனைவி
இன்னும் சுவையாக சமைக்கிறாள்.

ஒரு நண்பன்
வசமிழக்கிறான்..

ஒரு எதிரி
அடிமை ஆகிறான்..

ஒரு ஞானி
துறவு இழக்கிறான்..

ஒரு கவிஞன்
கர்வமடைகிறான்
இன்னும் அதிகமாய்
கர்ப்பமடைகிறான்..

பாராட்டப்படும் போது
பூக்கள் கூட மேலும்
மணக்கின்றன..

ஒரு பசு இன்னும்
அதிகமாய்ச்
சுரந்து பீய்ச்சுகிறது..

ஒரு கைதி
உணரத் தொடங்குகிறான்..

ஒரு கணவன்
பாராட்டப்படும்போது
மேலும்
காமுறுகிறான்..

பாராட்டப்படுகையில்
ஒரு தாய்
புன்னகைக்கிறாள்..

பாராட்டுவதால்
பலவித பயன்களுண்டு..

பாராட்டுங்கள்..
பாசம் கிடைக்கும்..

பாராட்டுங்கள்..
உலகம் உங்கள் வசம்..!!

சிவா.ஜி
29-03-2012, 06:47 PM
ஆஹா....அருமை. பாராட்டப்படுதலின் அத்தனை விளைவுகளையும் அடுக்கிய கவிதை...ஆழமாய் மனதைத் தைத்தது. உண்மைதான் கலை....பாராட்டு....எந்த உயிரையும் இன்னும் மேன்மையாக்கும்.

பாராட்டுக்கள் கலை.

Dr.சுந்தரராஜ் தயாளன்
30-03-2012, 04:24 AM
பாராட்டு என்தொழிலாம் பாராட்டால் நற்தெளிந்த
நீரோட்டம் போல்நல் உறவு


மிகவும் நன்று கலைவேந்தன் அவர்களே :)

jayanth
30-03-2012, 10:53 AM
பாராட்டப்படும் போது..

பாராட்டப்படும்போது
ஒருகுழந்தை
வெட்கப்படுகிறது..

ஒரு காதலி
கால் மண் துழாவுகிறாள்..

........
........
........

பாராட்டுங்கள்..
உலகம் உங்கள் வசம்..!!

பாராட்டுகளால் இத்தனை விஷயங்கள் நடக்குமா?
அட .....யாரையாவது பாராட்ட வேண்டும் போல் இருகிறதே....!!!
அருமை...!!!அருமை ...!!!

sarcharan
30-03-2012, 11:04 AM
பாராட்டுக்கள்... உங்களுக்கும் உங்களது இந்த "பாராட்டிய" கவிதைக்கும்

M.Jagadeesan
30-03-2012, 11:40 AM
பாராட்டுக் கவிதைக்கு ஒரு பாராட்டு!

கலைவேந்தன்
02-04-2012, 02:20 PM
பாராட்டிய
சிவா ,
தயாளன்,
ஜெயந்த்,
சர்சரண்,
ஜகதீசன்

ஆகியோருக்கு
நன்றி..!

கீதம்
07-04-2012, 02:46 AM
மனந்திறந்த பாராட்டு இறுகிய மனங்களையும் இரும்புக் கடப்பாரையெனப் பெயர்க்கும். பாராட்டின் பயன்களை உரைக்கும் அழகானக் கவிதைக்குப் பாராட்டுகள்.

ஆனால் பாராட்டுக்கும் புகழ்ச்சிக்கும் வேறுபாடு உணராதவர்களோ, எளிதில் ஏமாற்றப்படுகிறார்கள். எதிர்மறை விளைவுகளை ஏற்கிறார்கள். காரியம் முடிந்தபின் கழட்டிவிடப்படுகிறார்கள். :)

அமரன்
07-04-2012, 06:07 AM
நல்லதை கண்டால் உடனடியாகப் பாராட்ட வேண்டும். ஒற்றை சொல் கொண்டேனும், சிறு புன்னகை கலந்து சைகை செய்தேனும் பாராட்டுதலைப் பகிந்திட வேண்டும்.

அதே போல் கூடாதை சுட்டிக் காட்டவும் வேண்டும். எல்லாத்தையும் விட முக்கியம் இரண்டையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அடைய வேண்டும்.*

பாராட்டுகள் கலை.

கீதாக்கா...

பாராட்டு, புகழ்ச்சி வேறுபாடு ஆழம்..

கலைவேந்தன்
07-04-2012, 01:32 PM
உண்மைதான் கீதம்.. புகழ்ச்சிக்கும் பாராட்டுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. அதனை உணர்ந்தவர்கள் புகழ்ச்சிக்கு மயங்கமாட்டார்கள்.

நீ செய்த நல்லவை மிக அருமை - இது பாராட்டு.

உன்னைப்போல் நல்லவை செய்பவன உலகத்திலேயே இல்லை - இது புகழ்ச்சி.

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி கீதம்.

கலைவேந்தன்
07-04-2012, 01:34 PM
பாராட்டுக்கும் விமர்சனத்திற்கும் வேறுபாட்டைக் கூறியமை மிக அருமை அமரன்..

பாராட்டினைத் தோளில் போடும் துண்டாகவும் விமர்சனத்தை இடுப்பில் கட்டும் வேட்டியாகவும் கருதவேண்டும். துண்டு இல்லையேல் வாழலாம்.. நல்ல வேட்டி இல்லையேல்..?

நன்றி அமரன்..!

vasikaran.g
08-04-2012, 10:32 AM
உண்மை ,உலகம் அறிந்தும் அவசரத்தில் அவசியத்தை மறந்து மறந்த ஒன்று தான் பாராட்டுவது ..

கலைவேந்தன்
08-04-2012, 03:18 PM
நன்றி வசிகரன்..!