PDA

View Full Version : ஜெயமோகன் எழுதிய நவீன இலக்கியம் ஏன் புரிவதில்லை?

ஆதி
28-03-2012, 11:35 AM
நவீன இலக்கியத்திற்கும் மரபிலக்கியத்திற்கும் என்ன வேறுபாடு? பழைய ஒரு நகைச்சுவை உண்டு. ஓட்டலில் சாப்பிடச்சென்றவர் கேட்கிறார் ‘தோசைக்கு தொட்டுக்கொள்ள என்ன இருக்கிறது?’ பரிமாறுபவர் பதில் சொல்கிறார், ‘கெட்டிச்சட்னி இருக்கிறது, துவையல் இருக்கிறது’

கேட்பவருக்கு கொஞ்சம் குழப்பம். ‘இரண்டுக்கும் நடுவே என்ன வேறுபாடு?’ பரிமாறுபவர் யதார்த்தமாகப் பதில் சொல்கிறார் ‘இரண்டு நாள் வேறுபாடு’

ஆம், நவீன இலக்கியத்திற்கும் மரபிலக்கியத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு இரண்டாயிரம் வருடம்தான். நவீன இலக்கியத்தின் தலை இந்த நூற்றாண்டில் உள்ளது. வால் மரபிலக்கியத்தில் விழுந்து கிடக்கிறது. மரபிலக்கியத்தின் தலை ஈராயிரம் வருடம் முன்பு நம் வரலாற்றின் தொடக்கப்புள்ளியில் கிடக்கிறது. வால் இந்தக்காலத்தில் விழுந்து அசைந்துகொண்டிருக்கிறது. இரு பாம்புகளும் ஒன்றை ஒன்று விழுங்க முயல்கின்றன. ஒயாத ஒரு சுழல் உருவாகிறது.

வழக்கமாக நான் சந்திக்கும் ஒரு கொந்தளிப்பான குரல் ஒன்றுண்டு. ஒரு தேவதேவன் கவிதையை வாசித்துவிட்டு ஒரு பெரியவர் கேட்டார். ‘ஐயா நான் நாற்பதாண்டுக்காலமாக தமிழிலக்கியம் வாசிக்கிறேன். நற்றிணை முதல் பாரதிவரை கற்றிருக்கிறேன். எனக்கே இந்த கவிதை புரியவில்லை. அப்படியானால் இவை யாருக்காக எழுதப்படுகின்றன?’

இப்படி கேட்ட பெரியவரிடம் நான் சொன்னேன்,’ஐயா நற்றிணையோ பாரதியோ படித்தால் புரிந்துகொள்ள முடியாத, தமிழே படிக்காத இந்த இளைஞருக்கு இந்தக்கவிதை எளிதாகப் புரிகிறதே, எப்படி என்று யோசித்தீர்களா? யோசித்தால் எது நவீன இலக்கியம் என்று எளிதில் புரிந்துகொள்ள முடியும்’

ஆனால் பெரியவர் அந்தக் கேள்வியைச் சந்திக்க தயாராக இருக்கவில்லை. மீண்டும் ‘எனக்கே புரியவில்லையே’ என்ற குரலை எழுப்பினார். நான் சொன்னேன், ‘ஐயா இப்போது சிக்கல் நவீன இலக்கியத்தை புரிந்துகொள்வதல்ல, உங்களைப் புரிந்துகொள்வதுதான்’

இலக்கியம் மொழியில் எழுதப்படுவதில்லை என்று சொன்னால் ஆச்சரியப்பட மாட்டீர்கள்தானே? தமிழ்க்கவிதை தமிழில் மட்டும் அமைந்திருந்தால் தமிழ் தெரிந்த அனைவருக்கும் அது புரிந்துவிடும் அல்லவா? ஓர் அகராதியை வைத்துக்கொண்டு அதை எவரும் புரிந்துகொள்ள முடியும் அல்லவா?

அப்படியானால் தமிழ்க்கவிதை எதில் அமைந்திருக்கிறது? தமிழ் மொழிக்குள் நுண்மையாக அமைந்துள்ள இன்னொரு குறியீட்டு மொழியில் அமைந்துள்ளது. அதை மீமொழி [meta language] என்று நவீன மொழியியலில் சொல்கிறார்கள். அது மொழியின் இரண்டாவது அடுக்கு. இப்படி பல அடுக்குகளை உருவாக்கிக்கொண்டுதான் எந்தமொழியும் செயல்பட முடியும். நம்மை அறியாமலேயே இப்படி பல அடுக்குகள் நம் மொழியில் உள்ளன.

மொழியையே குறியீட்டுஒழுங்கு [symbolic order] என்று மொழியியலாளர்கள் சொல்கிறார்கள். ஒர் ஒலிக்குறிப்பு ஒரு பொருளை அல்லது நிகழ்ச்சியை அல்லது உணர்ச்சியை சுட்டிக்காட்டுவதுதான் மொழியின் ஒழுங்கு இல்லையா? படி என்றதுமே உங்களுக்கு ஒரு பொருள் நினைவுக்கு வருகிறது. படி என்ற ஒலி அந்த பொருளுக்கான ஒலி அடையாளம். இறங்குதல் என்ற ஒலி ஒரு செயலுக்கான ஒலிக்குறியீடு.

இரண்டையும் இணைத்து படி இறங்குதல் என்று சொன்னால் ஒரு நிகழ்ச்சி குறிப்பிடப்படுகிறது. இதுதான் மொழியின் செயல்பாட்டுக்கான அடிப்படை. இவ்வாறு நாம் மொழிக்குறியீடுகளை இணைத்து இணைத்து மொழி என்ற அமைப்பை விரிவாக்கிக்கொண்டே செல்கிறோம். இதைத்தான் பேச்சு என்றும் எழுத்து என்றும் சொல்கிறோம். இதையே மொழியின் முதல் குறியீட்டு ஒழுங்கு என்கிறோம்.

மொழிக்குள் இன்னொரு குறியீட்டு ஒழுங்கு இருக்க முடியும். படி என்ற பொருளையே இன்னொன்றுக்கு குறியீடாக ஆக்க முடியும் அல்லவா? அப்போது படி என்னும்போது அது அந்தபொருளைச் சுட்டிக்காட்டி கூடவே அந்தப்பொருள் எதற்கு குறியீடோ அதையும் சுட்டிக்காட்டுகிறது அல்லவா?

ஒரு கவிதையில் ‘படி இறங்குதல்’ என்று வந்தால் அது ஒரு வீழ்ச்சியை குறிக்கலாம். ஒரு தரம் இறங்குவதை குறிக்கலாம். இதற்கு இரண்டாம் கட்ட குறியீட்டு ஒழுங்கு என்று பெயர் [secondary symbolic order]. அது மொழிக்குள் செயல்படும் இன்னொரு மொழி. அதில்தான் இலக்கியம் எழுதப்படுகிறது. உங்களுக்கு தமிழ் மட்டும் தெரிந்தால் இலக்கியத்தை புரிந்துகொள்ள முடியாது. தமிழுக்குள் செயல்படும் அந்த இரண்டாவது தமிழை அறிந்திருந்தால் மட்டுமே இலக்கியம் புரிய ஆரம்பிக்கும்.

இது இன்றுள்ள இலக்கியத்திற்கு உள்ள விதி அல்ல, எப்போதும் இலக்கியத்தின் செயல்முறை இதுவே. இலக்கியத்துக்கான இந்த இரண்டாவது மொழியை இலக்கிய ஆசிரியர்களும் இலக்கியவாசகர்களும் சேர்ந்து உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள். அது ஒரு தொடர்ச்சியான செயல்பாடு. அந்த இரண்டாவது மொழி அனைவருக்கும் பொதுவாக ஓரு பண்பாட்டுச்சூழலில் திரண்டு வந்தபடியே இருக்கிறது.

என் கண்களில்
இன்று இல்லை
வாள்

என்ற புதுக்கவிதை வரி உங்களுக்கு புரிகிறதா? சிலர் புரியவில்லை என்று சொல்லக்கூடும். புதுக்கவிதை என்ற பேரில் சிலர் இப்படித்தான் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள் என்று வசைபாடக்கூடும். மன்னிக்கவும் இது புதுக்கவிதை அல்ல. இது வெள்ளிவீதியாரின் குறுந்ததொகைப் பாடல்

கண்ணே நோக்கி நோக்கி வாள் இழந்தனவே

என்கிறார் அவர். இங்கே வாள் என்பது கூர்மை, ஒளி என்பதற்கான அடையாளமாக நிற்கிறது. கண்கள் நோக்கி நோக்கி வாளை இழந்தன என்றால் உடனே அந்த அனுபவம் நமக்குக் கிடைக்கிறது.

ஏன் கூர்மை ஒளி என்று நேரடியாகச் சொன்னால் என்ன? சொல்லலாம்தான். ஆனால் வாள் என்னும்போது சட்டென்று அவ்விரண்டும் ஒரு திட்டவட்டமான காட்சி அனுபவமாக கிடைக்கிறது. இதுதான் இலக்கியத்தின் வழி. அது சொல்லி தெரியவைக்க முயல்வது இல்லை. அனுபவமாக ஆக்க முயல்கிறது.

இதே போல சங்க காலத்தில் மழை என்ற சொல் குளிர்ச்சி என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். தொடி என்றாள் தொடுக்கப்பட்ட முறையில் அமைந்த நகை என்று பெயர். இழை என்றால் இழையும் தன்மை கொண்ட நகை என்று பெயர். ஆனால் இச்சொற்கள் எல்லாமே நகையணிந்த பெண்ணையும் குறிக்கும். தொடீ , இழாய் என்று அழைத்தால் பெண்ணைத்தான் அழைக்கிறார்கள்.

இது சங்ககாலத்து இரண்டாவது குறியீட்டு ஒழுங்கு அல்லது மீமொழி. சங்காப்பாடல்களை வாசிக்கிறவர்கள் இவற்றை எவ்வாறு புரிந்துகொள்கிறார்கள்? வேறு ஒன்றும் இல்லை, இவற்றுக்கான அர்த்தம் ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது இந்த மீமொழிக்கும் ஓர் அகராதி உள்ளது. அதை உ.வே.சாமிநாதய்யர், அவ்வை துரைசாமிப்பிள்ளை, புலியூர் கேசிகன் என யாராவது எழுதியிருப்பார்கள். அதைக்கொண்டுதான் அந்தக் கவிதையை புரிந்துகொள்கிறார்கள்

அதேபோல நவீனக்கவிதைக்கும் ஓரு பொழிப்புரை இல்லையே என்றுதான் கேட்கிறார்கள். சங்கப்பாடல்களை ஒருவர் பொழிப்புரை இல்லாமல் உள்வாங்கிக்கொள்ள முடியும் என்றால், கம்பனை புரிந்துகொள்ள முடியும் என்றால், புதுக்கவிதை ஒரு பொருட்டே அல்ல. அவற்றுடன் ஒப்பிட்டால் இது மிகமிக எளிமையானது.

ஒரு பண்பாட்டில் உள்ள இந்த மீமொழியை பொழிப்புரை அல்லது அகராதியைக் கொண்டு புரிந்துகொள்ளலாம்தான். தமிழ்ப்புதுக்கவிதையில் பறவை என்று சொன்னால் அது விடுதலை, வானுடன் உள்ள தொடர்பு என்ற பொருளையே அளிக்கிறது என்று சொல்லலாம்தான். ஆனால் அந்த வழியைக் கொண்டு இன்று வரும் ஒரு புதிய கவிதையை புரிந்துகொள்ள முடியாது. இலக்கணம் பின்னால் ஊர்ந்து ஊர்ந்து வரும், இலக்கியம் முன்னால் பறந்து சென்றுகொண்டிருக்கும்.

ஆகவே இந்த மீமொழி எவ்வாறு உருவாகிறது என்று தெரிந்துகொள்வதே சரியான வழி. இந்த மீமொழிக்கு ஒரு உருவாக்கமுறை உள்ளது. ஓர் தொடர்புறுத்தல் முறை உள்ளது. அந்த முறை என்ன என்று தெரிந்துகொண்டால் இயல்பாக அந்த மொழி நமக்கு தெரிந்துவிடும். அந்த மொழியில் எது சொல்லப்பட்டாலும் நமக்கு புரியும்.

அந்த மீமொழியை கற்றுக்கொள்வது மிக எளிது . ஒரே ஒரு வருடம் கவிதைகளை கூர்ந்து வாசித்தாலே போதும் அது அந்தரங்கமாக நமக்கு பிடிபடும். ஏன், ஒரு நல்ல விவாத அரங்கை உருவாக்கி தேர்ந்த கவிஞர்களுடன் அமர்ந்து ஒரு இரண்டுநாள் பேசினாலே போதும். ஊட்டியில் அவ்வாறு நான் அமைத்த அரங்குகளில் வந்து பங்கெடுத்த எளிய வாசகர்கள் ஒரேநாளில் புதுக்கவிதையின் ரகசிய மொழி கிடைத்துவிட்டது என்றார்கள்.

அதை நான் விளக்கப்போவதில்லை. ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்கிறேன். பெரும்பாலும் இந்த மீமொழி என்பது இயற்கையை ஆழ்ந்து கவனித்து அதில் உள்ள காட்சி நுட்பங்களை குறியீடுகளாக ஆக்கி அக உணர்ச்சிகளை சொல்லுவதன் மூலம் உருவாகி வருகிறது

பறவையில் சிறகாக இருப்பது
மனிதனில் கை

இது கல்பற்றா நாராயணன் எழுதிய ஒரு கவிதைவரி. ஒரு குழந்தை போல இயற்கையை கவனிப்பதில் இருந்து இந்தவரி வருகிறது. எந்த விஷயம் பறவையில் சிறகாக இருக்கிரதோ அதுவே மனிதனில் கை. சிறகொடிந்த பறவை பறவையே அல்ல. அதேபோலத்தான் கையில்லாத மனிதன். கைகளுக்கு விலங்கு போடுதலைப்பற்றி பேசும் கவிதை இது.

கைவிலங்கிடப்பட்டவன் அளவுக்கு
சுதந்திரமிழந்தவன் வேறு யார்?

என முடிகிறது. மனிதனின் கைகளை ஒரு கணம் அவன் சிறகாக கற்பனைசெய்ய முடிந்தால் அதன்பின் இக்கவிதை முழுமையாகவே நம் கைக்கு வந்துவிடும்.

மீண்டும் முதல் கேள்விக்கு வருகிறேன். நவீன இலக்கியம் என்பது என்ன? இப்போது ஒரு பதிலை நான் சொல்ல முடியும். நவீன கவிதை இன்றைய நவீன மீமொழியில் எழுதப்பட்டது. மரபுக்கவிதை மரபான மீமொழியில் எழுதப்பட்டது.

என்ன வேறுபாடு? மிக எளிமையான வரலாற்று சித்திரமே இதற்கான பதில். மரபான மீமொழி தமிழுக்குள் ,நம் சூழலுக்குள் மட்டும் இருந்து பல ஆயிரம் வருடங்களாக மெல்ல மெல்ல உருவாகி வந்தது. ஆனால் பதினெட்டாம் நூற்றாண்டில் இருந்து உலகம் மாற ஆரம்பித்தது. ஐரோப்பியர்கள் உலகம் முழுக்கச் சென்று காலனியாதிக்கத்தை உருவாக்கினார்கள். உலகம் முழுக்க இருந்து இலக்கியங்களை தங்கள் மொழிக்கு மொழியாக்கம் செய்தார்கள். அவ்வாறாக உலக இலக்கியம் என்ற ஒன்று உருவானது.

அந்த உலக இலக்கியத்தை ஆங்கிலம் பிரெஞ்சு போன்ற மொழிகள் வழியாக உலகமெங்கும் கொண்டுசென்றார்கள் ஐரோப்பியர்கள். அந்த மொழிகளைக் கற்றவர்கள் உலக இலக்கியத்தை பற்றிய எண்ணத்தை அடைந்தார்கள். தமிழில் பாரதி அந்த பிரக்ஞையை அடைந்த முதல் கவிஞன். ஆகவே அவன் நவீனக் கவிஞன். அவன் தமிழில் எழுதினாலும் தமிழுக்குள் அவன் பிரக்ஞை நிலைகொள்ளவில்லை. உலக இலக்கியத்தின் பரந்தவெளியில் நின்றுகொண்டு அவன் எழுதினான்.

இங்கே என்ன நடக்கிறது என்றால் தமிழுக்குள் உள்ள இந்த இரண்டாவது குறியீட்டு ஒழுங்கு, அதாவது மீமொழி, உலகம்தழுவியதாக ஆகிவிடுகிறது. இலக்கியத்துக்கு உலகம் முழுக்க ஒரே குறியீட்டு மொழி ஒன்று உருவாகி வந்தது. அதனால்தான் நமக்கு பாப்லோ நெரூதாவும் மயகோவ்ஸ்கியும் புரிகிறார்கள். இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் சாதனை என்றால் இப்படி உலகம் முழுமைக்குமாக ஒரு இலக்கிய மீமொழி உருவானதேயாகும்

இங்கே ஒன்றை கவனிக்க வேண்டும். பாரதி உலக இலக்கியப்பிரக்ஞையுடன் அந்த பரப்பில் நின்று எழுதினார். அவருக்குப்பின் வந்த பாரதிதாசனுக்கு அந்த பிரக்ஞை இல்லை. பாரதிதாசனின் மரபில்வந்த கவிஞர்களுக்கும் அந்த பிரக்ஞை இல்லை. அவர்கள் தமிழ் கவிராயர் மரபிலேயே நிற்கிறார்கள். ஆகவேதான் பாரதியின் வசனகவிதைகள் போன்றவை புரியவில்லை என்பவர்கள் பாரதிதாசனை நன்றாக புரிகிறது என்கிறார்கள்.

என் கிண்ணத்தின்
தேநீர்
இந்தக்காலையின் தழல்.
எரிகிறது இந்தமேஜை
என் வீடு
இந்நகரம்

என்ற ஜப்பானியக் கவிதையின் அழகியல் நமக்கு உடனே புரிகிறது. ஒரு பெரும் தாபத்தை இந்தக்கவிதை சொல்கிறது. சிவப்புநிறமான தேநீர் காலை ஒளியில் தீச்சுடர் போல ஆவது ஒரு ஜப்பானிய அனுபவம். ஆனால் நமக்கு அது உடனே பிடி கிடைக்கிறது. அந்த தழலில் எரியும் துயரத்தை நம்மால் உடனே உள்வாங்க முடிகிறது.

இங்கிருந்துதான் நவீன இலக்கியம் மரபிலக்கியத்தில் இருந்து துண்டுபட்டு தனியாக ஆகிறது. மரபிலக்கியத்துக்குள் உள்ள மீமொழி இங்கேயே உருவாகி இந்த எல்லைக்குள் நிற்பது. நவீன இலக்கியத்துக்கான மீமொழி உலகளாவிய மீமொழியின் ஒரு பகுதியாகச் செயல்படுகிறது.

ஏன் அந்தப்பெரியவருக்கு மரபான கவிதை புரிகிறது? அவர் உரைகள் மூலம் ஆசிரியர்கள் மூலம் மரபுக்கவிதையின் மீமொழியை கற்றிருக்கிறார். நவீனக் கவிதையின் மீமொழியை அவர் கற்கவில்லை. அதை அவர் பொருட்படுத்தவில்லை. எனக்கு பாட்டு தெரியுமே ஆகவே நான் ஏன் பரதம் ஆடமுடியாது என்று கேட்கிரார். நண்பர்களே, அவை இரண்டும் வேறு வேறு.

மரபுஇலக்கிய வாசிப்புக்கும் நவீன இலக்கிய வாசிப்புக்கும் இடையே முக்கியமான ஒரு வேறுபாடு உள்ளது, அதையும் இங்கே குறிப்பிட வேண்டும். எப்போதுமே நம் மரபு இலக்கிய வாசகர்கள் சொல்லும் சில வரிகள் உண்டு. ‘இந்தப் படைப்பில் சொல்லவந்ததை தெள்ளத்தெளிவாக வெள்ளிடைமலையாக சொல்லியிருக்கிறார் ஆசிரியர்’

இதே நோக்கில்தான் நம் கல்வித்துறை இலக்கியம் கற்றுக்கொடுக்கிறது. ‘இந்தக்கவிதையின் திரண்ட பொருள் யாது, நான்கு பக்கங்களுக்கு மிகாமல் விளக்குக’

இந்த மனநிலை கவிதையை, இலக்கியத்தை அறிவதற்கு மிகமிக எதிரானது. ஒரு ஆக்கத்தில் ஆசிரியர் ‘சொல்லவந்த கருத்து’ என்ன என்று தேடுவதும் அதை அவர் ‘ஐயம்திரிபற’ சொல்லியிருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதும்தான் உண்மையில் நவீன இலக்கியத்தில் இருந்தே மரபான வாசகர்களை பிரிக்கிறது.

ஒரு படைப்பில் உள்ளது ஓர் அனுபவம். அது ஒர் அக அனுபவம். அந்த அக அனுபவத்தை நாம் கருத்துக்களாக ஆக்கிக்கொள்ளலாம். அக்கருத்துக்கள் அந்த ஆசிரியர் சொன்னவை அல்ல, நாம் அடைந்தவை. நமக்கு ஒரு வாழ்க்கை அனுபவம் கிடைக்கிறது, அதில் இருந்து நாம் சில சிந்தனைகளை அடைகிறோம். அச்சிந்தனைகள் அந்த அனுபவத்துக்குள் உள்ளனவா என்ன? அதே அனுபவத்தை அடைந்த இன்னொருவர் இன்னொரு கருத்தைத்தானே அடைகிறார்? அதேபோன்றதே இலக்கிய அனுபவம். அது நிஜ வாழ்க்கை அனுபவம்போன்ற ஒன்றை நம் கற்பனையில் நிகழ்த்துகிற்து

நம்முடைய கற்பனையை தூண்டி விடக்கூடிய இயல்பே இலக்கிய படைப்பை ஆழம் மிக்கதாக ஆக்குகிறது. இதையும் நாம் நம் அனுபவத்தில் இருந்தே உணரலாம். ஓர் அனுபவத்தில் நம்மால் புரிந்துகொள்ளமுடியாத ஒரு புதிர் இருந்தால், அதை நாம் வகுத்துக்கொள்ள முடியவில்லை என்றால், நாம் அதைப்பற்றியே சிந்திப்போம் இல்லையா? நம் மனம் அதைநோக்கியே சுழன்றுகொண்டிருக்கிறது இல்லையா?

ஆகவேதான் முக்கியமான இலக்கிய ஆக்கங்கள் முழுமையாக எல்லாவற்றையும் சொல்வதில்லை. எவ்வளவு குறைவாகச் சொல்ல முடியுமோ அவ்வளவு குறைவாகச் சொல்லி மிச்சத்தை வாசகக் கற்பனைக்கே விட்டுவிடுகின்ரன. அதிகமாக கற்பனைசெய்ய வைக்கும் இலக்கியம் அதிகநேரம் நம்முடன் இருக்கிறது. நம்மை அதிகமாக பயணம் செய்ய வைக்கிறது.

ஆகவே பொருள்மயக்கம் என்பது இலக்கியத்தின் முக்கியமான அழகியல் உத்தி. தெள்ளத்தெளிவாக இருப்பது இலக்கியத்தின் பலவீனம். நீதிநூல்கள் தெளிவாக இருக்கலாம். ஆனால் அதை இலக்கியத்தில் எதிர்பார்க்கக் கூடாது. கொன்றை வேந்தன் வாசிப்பது போல பிரமிள் புதுக்கவிதையை வாசித்தால் ‘என்ன இது ஒண்ணுமே புரியலை, என்னதான் சொல்லவரார்?’ என்ற குழப்பமே எஞ்சும்

வில்லியம் எம்ப்சன் என்ற விமர்சகர் ஏழுவகை பொருள்மயக்கங்களைப் பற்றி எழுதியிருக்கிறார். அந்த பொருள்மயக்கங்கள் இலக்கியத்துக்கு ஆழத்தையும் அழகையும் அளிப்பவை. இன்றுவரை பாடத்திட்டத்தில் உள்ள நூல் அது.

பொருள்மயக்கம் என்பது இன்றுள்ல ஓர் இயல்பு அல்ல, எல்லா காலத்திலும் இலக்கியத்தின் அழகியலாகவே உள்ளது. குறுந்தொகை நற்றிணை பாடல்கள் குறள்பாடல்கள் பல அற்புதமான பொருள்மயக்கங்களுடன் உள்ளன. பல நூறு ஆண்டுகளாக அவற்றுக்கு மீண்டும் மீண்டும் உரைகள் எழுதப்படுகின்றன. எவ்வளவு உரைகள் எழுதப்பட்டபின்னரும் அவற்றின் பொருள்மயக்கம் புதிய சிந்தனைகளை உருவாக்கியபடி நீடிக்கத்தான் செய்கிறது

அறத்தாறிதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு
ஊர்ந்தான் இடை

இந்த ஒரு குறளுக்கு மட்டும் எத்தனை வகையாக பொருள் கொள்ளப்பட்டுள்ளது என்று நோக்கினால் எம்ப்சன் என்ன சொல்கிரார் என்று புரியும். ‘பல்லக்கில் செல்பவன் சுமப்பவன் இருவரையும் வைத்து அறத்தின் வழி இதுவே என நினைக்கவேண்டாம்’ இவ்வளவுதான் குறள். இது முற்பிறப்பின் வினைப்பயனைச் சொல்வது என்பது பரிமேலழகர் கூற்று. சமண ஊழ்வினையைச் சொல்கிறது என்பது நச்சினார்க்கினியர் உரை

இப்போதுள்ள இதுவே அறத்தின் எப்போதுமுள்ள வழி என்று நினைக்காதே வண்டியும் ஓர்நாள் ஓடத்தில் ஏறும் என்றுதான் வள்ளுவர் சொல்கிறார் என்றே நான் வாசிக்கிறேன். இன்னும் பல வாசிப்புகளுக்கு இதிலே இடமுள்ளது. இன்னும் இன்னும் சிந்திக்கச் செய்கிரது இந்தக்குறள்.

ஆகவே பொருள்மயக்கம் எப்போதும் இலக்கியத்தில் உள்ளது. அதுவே அதன் வழி. ஆனால் மரபிலக்கியம் உரைகள் உரைகள்மீது உரைகள் என எழுதப்பட்டு விளக்கப்பட்டுள்ளது. ஆகவே பலர் பொருள்மயக்கம் பற்றி யோசிக்காமலேயே மரபிலக்கியத்தை வாசித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நவீன இலக்கியம் சிக்கலாக இருக்கிரது, காரணம் இங்கே உரை இல்லை. பொருள்மயக்கம் முகத்தில் அறைகிறது.

ஒரு கதை. ஓரு ரோமாபுரி இளவரசியை அடிமை காதலித்தான். மன்னர் அதை அறிந்துவிட்டார். மன்னர் ஒரு குரூர நகைச்சுவைக்கு ஏற்பாடு செய்தார். கொலோசியத்திலே அந்த அடிமையை விட்டார். அவன் முன்னால் இரு வாசல்கள். ஒன்றுக்குள் பசித்த புலி. அதைத்திறந்தால் மரணம். இன்னொன்றுக்குள் ஒரு பேரழகி. அதை தேர்வுசெய்தால் விடுதலையும் இன்பவாழ்வும். அதில் எதை வேண்டுமானாலும் அந்த அடிமை திறக்கச் சொல்லலாம். அவன் விதி அவனாலேயே தீர்மானிக்கப்படும்.

அடிமை ஓரக்கண்ணால் இளவரசியை பார்த்தான். அவளுக்கு உண்மை தெரியும். அவள் உதவுவாள் என நினைத்தான். அவள் கண்களால் சுட்டிக்காட்டினாள். அவன் தேர்வுசெய்தான்- அவ்வளவுதான், கதை முடிந்தது.

கடைசிவரை இளவரசி என்ன சொன்னாள் என ஆசிரியர் சொல்ல முன்வரவில்லை. இன்றுவரை முடிவிலாது விவாதிக்கப்படுகிரது இக்கதை. ஒரு பெண்ணுள் ஓங்கியுள்ளது தாய்மையே என நீங்கள் எண்ணினால் அவள் அந்த பெண் இருந்த அறையைச் சுட்டிக்காட்டியிருப்பாள் என்பீர்கள். பெண்ணுக்குள் இருப்பது காதலிதான் காமம்தான் என்றீர்கள் என்றால் அவள் ஒருபோதும் தன் காதலனை இன்னொரு பேரழகிக்கு விட்டுக்கொடுக்கம்மாட்டாள்.

இந்த பொருள்மயக்கம் மூலமே இந்தக்கதை முடிவிலாத கற்பனைச்சாத்தியங்களை திறந்து வைக்கிறது. அடுக்கடுக்கான சிந்தனைகளை உருவாக்குகிறது. நவீன இலக்கியங்கள் அனைத்தும் இந்த வழியையே தேர்வுசெய்கின்றன.

ஆகவே நவீன இலக்கியத்தை அறிந்துகொள்ள இரு அடிப்படை புரிதல் தேவை என்று சொல்லிக்கொள்கிறேன். ஒன்று, நவீன இலக்கியம் உலகளாவிய ஒரு மீமொழியில் உள்ளது. அந்த மீமொழியை பயிலவேண்டும். இரண்டு, நவீன இலக்கியம் தெளிவுபடுத்துவதன் மூலம் நம்மிடம் தொடர்புகொள்ளவில்லை. மாறாக பொருள்மயக்கங்கள் மூலம் நம் கற்பனையை விரியச்செய்து நம்மை சிந்திக்க வைக்கிரது. அது எதைச் சொல்லவருகிறது என்று பார்க்க கூடாது. அந்தப் படைப்பு அளிக்கும் அனுபவத்தை நம் சொந்த கற்பனைமூலம் விரியச்செய்யவேண்டும்

இவ்விரு அடிப்படைத்தெளிவும் இருந்தால் நவீன இலக்கியத்துக்குள் நுழைவது மிக எளிது. நவீன இலக்கியம் என்பது நவீன சிந்தனைகளின் அழகியல் வடிவம். நவீன உலகின் ஆன்மீக உலகம். நவீன இலக்கியம் மூலமே ஒருவர் நவீன உலகின் அழகியலையும் ஆன்மீகத்தையும் உணர முடியும். அதற்கு மரபிலக்கியம் போதாது.

ஆனால் இலக்கியம் ஒரு பொது நோக்கில் ஒன்றுதான். கம்பனுக்கும் தேவதேவனுக்கும் பெரிய தூரம் ஒன்றும் இல்லை. தூரம் என்பது நாம் நம்முடைய காலகட்டத்தின் சில இயல்புகளால் உருவாக்கிக்கொள்வதே. இந்த புரிதலும் நமக்கு தேவை. இது இருந்தால்தான் நம்மால் இலக்கியத்தின் மூலம் அடையக்கூடிய உச்சத்தை அறிய முடியும்.

மரபிலக்கியம் மட்டுமே அறிந்த ஒருவர் நவீன உலகை இழக்கிறார். நவீன இலக்கியம் மட்டும் அறிந்த ஒருவர் முழுமைநோக்கை இழக்கிறார். இரண்டும் ஒன்றே. இரண்டும் வேறு வேறாக கற்கப்பட்டு ஒன்றாக உணரப்படவேண்டும்

நவீன இலக்கியத்துக்கும் மரபிலக்கியத்திற்கும் என்ன தூரம்? தேவதேவன் கவிதை வரி இது

அசையும்போதே தோணி அசையாதபோதோ தீவு
தோணிக்கும் தீவுக்கும் நடுவே
மின்னற்பொழுதே தூரம்

நவீன இலக்கியம் அசையும் தோணி. மரபிலக்கியம் அசையாத தீவு. தூரம் மின்னற்பொழுதுதான். கணநேரம். ஆனால் பல்லாயிரம் காதம். ஆம், பல்லாயிரம் காதம்தான் ஆனால் ஒரே ஒரு கணம்.

ஆதி
28-03-2012, 11:42 AM
இங்கு மன்ற உறுப்பினர்கள் அல்லாத* மற்ற பிற கவிஞர்களின் கவிதைகள் விவாதிக்கப்படும்..

கலையரசி
28-03-2012, 01:07 PM
நம்முடைய கற்பனையை தூண்டி விடக்கூடிய இயல்பே இலக்கிய படைப்பை ஆழம் மிக்கதாக ஆக்குகிறது. இதையும் நாம் நம் அனுபவத்தில் இருந்தே உணரலாம். ஓர் அனுபவத்தில் நம்மால் புரிந்துகொள்ளமுடியாத ஒரு புதிர் இருந்தால், அதை நாம் வகுத்துக்கொள்ள முடியவில்லை என்றால், நாம் அதைப்பற்றியே சிந்திப்போம் இல்லையா? நம் மனம் அதைநோக்கியே சுழன்றுகொண்டிருக்கிறது இல்லையா?

இலக்கிய படைப்புக்களின் ஆழம் குறித்தும் வாசகரின் புரிதல் குறித்தும் நல்லதொரு பதிவு. கவிதைகள் குறித்து உங்களது அலசல்களைத் துவக்குங்கள். பாராட்டுக்கள் ஆதன்!

ஆதவா
28-03-2012, 01:45 PM
இலக்கிய படைப்புக்களின் ஆழம் குறித்தும் வாசகரின் புரிதல் குறித்தும் நல்லதொரு பதிவு. கவிதைகள் குறித்து உங்களது அலசல்களைத் துவக்குங்கள். பாராட்டுக்கள் ஆதன்!

நல்லதொரு திரி..

இதன்மூலம் நிறைய “கிடைக்க” வாய்ப்பிருக்கிறது!

முதல் புள்ளி வெச்சுட்டீங்க ஆதன், நீங்களே அடுத்த புள்ளியும் வையுங்க, அடுத்தடுத்து நான் வரேன்.

சிவா.ஜி
28-03-2012, 03:18 PM
”இப்படி கேட்ட பெரியவரிடம் நான் சொன்னேன்,’ஐயா நற்றிணையோ பாரதியோ படித்தால் புரிந்துகொள்ள முடியாத, தமிழே படிக்காத இந்த இளைஞருக்கு இந்தக்கவிதை எளிதாகப் புரிகிறதே, எப்படி என்று யோசித்தீர்களா? யோசித்தால் எது நவீன இலக்கியம் என்று எளிதில் புரிந்துகொள்ள முடியும்’”

இந்த ஒரு உதாரணம் போதும் ஜெயமோகன் ஒரு அரைவேக்காடு என்பதை நிரூபிக்க. தமிழே படிக்காதவன் நவீனக் கவிதையை புரிந்துகொள்கிறானாம்...

நவீன இலக்கியம் என்ற பெயரில் தமிழ் உலகில் வீசப்படும் குப்பைகளை...இலக்கியம் எனச் சொல்வதே மிகப் பெரிய தவறு.

jayanth
28-03-2012, 03:30 PM
நல்லதொரு திரி..

இதன்மூலம் நிறைய “கிடைக்க” வாய்ப்பிருக்கிறது!

முதல் புள்ளி வெச்சுட்டீங்க ஆதன், நீங்களே அடுத்த புள்ளியும் வையுங்க, அடுத்தடுத்து நான் வரேன்.

”இப்படி கேட்ட பெரியவரிடம் ....................இந்த ஒரு உதாரணம் போதும் ஜெயமோகன் ஒரு அரைவேக்காடு என்பதை நிரூபிக்க. தமிழே படிக்காதவன் நவீனக் கவிதையை புரிந்துகொள்கிறானாம்...

நவீன இலக்கியம் என்ற பெயரில் தமிழ் உலகில் வீசப்படும் குப்பைகளை...இலக்கியம் எனச் சொல்வதே மிகப் பெரிய தவறு.

நீங்க "கிடைக்க" என்று சொன்னது இதுதானோ... !?!?!?:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001:

ஆதவா
29-03-2012, 04:22 AM
”இப்படி கேட்ட பெரியவரிடம் நான் சொன்னேன்,’ஐயா நற்றிணையோ பாரதியோ படித்தால் புரிந்துகொள்ள முடியாத, தமிழே படிக்காத இந்த இளைஞருக்கு இந்தக்கவிதை எளிதாகப் புரிகிறதே, எப்படி என்று யோசித்தீர்களா? யோசித்தால் எது நவீன இலக்கியம் என்று எளிதில் புரிந்துகொள்ள முடியும்’”

இந்த ஒரு உதாரணம் போதும் ஜெயமோகன் ஒரு அரைவேக்காடு என்பதை நிரூபிக்க. தமிழே படிக்காதவன் நவீனக் கவிதையை புரிந்துகொள்கிறானாம்...

நவீன இலக்கியம் என்ற பெயரில் தமிழ் உலகில் வீசப்படும் குப்பைகளை...இலக்கியம் எனச் சொல்வதே மிகப் பெரிய தவறு.

அண்ணா, உங்களிடமிருந்து இந்த கருத்தை நான் எதிர்பார்க்கவேயில்லை.

அந்த நவீன இலக்கியத்திற்காகத்தான் நாமனைவருமே முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். நீங்கள் எழுதுவதும் நவீன இலக்கியம்தானே?

//மரபிலக்கியம் மட்டுமே அறிந்த ஒருவர் நவீன உலகை இழக்கிறார். நவீன இலக்கியம் மட்டும் அறிந்த ஒருவர் முழுமைநோக்கை இழக்கிறார். இரண்டும் ஒன்றே. இரண்டும் வேறு வேறாக கற்கப்பட்டு ஒன்றாக உணரப்படவேண்டும்///

இதை நீங்கள் வாசிக்கவில்லையா? மரபு இல்லையேல் நவீனமில்லை என்பது உண்மையே..

உங்கள் கருத்தை நீங்கள் பின்வாங்கிக் கொள்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.!

ஆதி
29-03-2012, 05:01 AM
”இப்படி கேட்ட பெரியவரிடம் நான் சொன்னேன்,’ஐயா நற்றிணையோ பாரதியோ படித்தால் புரிந்துகொள்ள முடியாத, தமிழே படிக்காத இந்த இளைஞருக்கு இந்தக்கவிதை எளிதாகப் புரிகிறதே, எப்படி என்று யோசித்தீர்களா? யோசித்தால் எது நவீன இலக்கியம் என்று எளிதில் புரிந்துகொள்ள முடியும்’”

இந்த ஒரு உதாரணம் போதும் ஜெயமோகன் ஒரு அரைவேக்காடு என்பதை நிரூபிக்க. தமிழே படிக்காதவன் நவீனக் கவிதையை புரிந்துகொள்கிறானாம்...

நவீன இலக்கியம் என்ற பெயரில் தமிழ் உலகில் வீசப்படும் குப்பைகளை...இலக்கியம் எனச் சொல்வதே மிகப் பெரிய தவறு.

அப்படி நம்புவது உங்கள் உரிமை சிவா அண்ணா, அப்புறம் எந்த கவிதை உங்களை இவ்வளவு பேசவைத்து மாதிரி கவிதை எல்லாம் எழுத வைச்சுதோ, அந்த குப்பை எழுதியவனும் அடியேன் தான், அது போல குப்பைகள் தமிழ் மன்றத்திலும் எழுதியிருக்கிறேன்..

அந்த குப்பைகளில் தான் பாரதி கவிதைகளும் இருக்கின்றன என்பதை உங்களுக்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்..

கலைவேந்தன்
29-03-2012, 05:16 AM
மிக நல்ல விடயம்.. பிற கவிதைகளை அலசுவதில் நிறைய கற்கக் கிடைக்கும். தொடருங்கள் ஆதன்..!

நண்பர் சிவா சற்றே உணர்ச்சிவசப்பட்டு விட்டார். ஆர அமர சிந்தித்தால் ஜெயமோகனின் ஆழ்ந்த கருத்துகள் புரியவரும்.

அமைதியாக மீண்டும் வாசியுங்கள் சிவா..!

கலைவேந்தன்
29-03-2012, 05:17 AM
அங்கே ஆக்டிவேட் செய்துவிட்டேன் ஆதன்..:D

சொ.ஞானசம்பந்தன்
29-03-2012, 06:27 AM
கவிதை பற்றிய அரிய , சுவையான விளக்கம் . பாராட்டுகிறேன் .

ஆதி
29-03-2012, 06:39 AM
அங்கே ஆக்டிவேட் செய்துவிட்டேன் ஆதன்..:D

நன்றி ஐயா

தாமரை
29-03-2012, 11:12 AM
நவீன இலக்கியம்.

இந்த வார்த்தைதான் என்ன பாடுபடுத்துகிறது மனிதனை. ஆதன் இதுவரை நவீன இலக்கியத்தில் இது புதிது என்ற வாதத்தை எடுத்து வைத்தபொழுதெல்லாம் அந்த நுட்பம் சங்க இலக்கியத்தில் எங்கு இருக்கிறது என்பதை நான் உதாரணங்கள் கொடுத்துள்ளேன்.

உதாரணத்திற்கு இப்போ சொன்னீங்களே மீமொழி.. இதுன்னா அதைக் குறிக்கும் அதுன்னு இதைக் குறிக்கும்னு.. அகத்திணையை நாம் பிரிச்சு அடையாளங்கள் குறித்து எழுதி இலக்கணமாக ஆக்கி வச்சமே அதானே இது..

நவீன இலக்கியம் என்பது பரிணாம வளர்ச்சியாய் இருந்திருந்தால் இவ்வளவு எதிர்ப்புகள் இருந்திருக்காது. ஆனால் அது புலியை பார்த்து போட்டுக் கொண்ட சூடு மாதிரி ஆகிப் போவதால்தான் அது பலரோட எதிர்ப்புக்கும் ஆளாகி விடுகிறது.

ஒரு காலம் வரப்போகிறது. யாராவது ஒருவன் ஒரு பிறமொழிப் புத்தகத்தை அது தமிழில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது என அறியாமலேயே இதற்கு ஈடாய் தமிழில் ஒரு புத்தகம் இருக்கிறதா என மேடையிட்டு பாடப்போகிறான். அதற்கும் ரொம்ப காலம் இல்லை. (அது நீயாக இருக்கக் கூடாது என வேண்டிக் கொள்கிறேன்).

"பொருள்" மயக்கம் இந்தக்காலத்தில் ரொம்பவே அதிகம்தான். பொருள் என்பதற்கு அர்த்தம் என்பது பண்டைய காலம். செல்வம் என்பது இந்தக் காலம். திருக்குறளின் பொருட்பால் - சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் இரண்டுமே ஒரே வகையைச் சார்ந்தவை.

தர்ம - அர்த்த - காம - மோட்சம் என்பது இந்திய மதங்களில் பொதுவானது.. திருக்குறளில்

தர்ம - அறத்துப் பால்
அர்த்த - பொருட்பால்
காம - காமத்துப்பால்

இதைக் காணும் பொழுது மோட்ச என்னும் தத்துவ (தத்துவம் என்றால் உண்மைப் பொருள் என்று அர்த்தம்) விளக்கங்கள் மறைக்கப்பட்டனவா இல்லை மறைந்து விட்டனவா என்ற கேள்வி உண்டாகும்.

திருக்குறள்

அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தான் இடை

அர்த்தமுள்ள அரட்டையில் பாகவதத்தில் வரும் ஜடபரதன் கதையைச் சொல்லி இருப்பேன்.

மானைப்பத்தி நினைச்சுகிட்டே இருக்கிறப்ப உயிர் பிரிஞ்சதால அது மேல பற்று வைச்சு இருந்ததால அடுத்து ஜன்மமும் வாய்ச்சது; மானா பிறந்தார். போன ஜன்மத்திலே அவர் செஞ்ச தவத்தால அந்த பிறப்பு சமாசாரங்கள் நினைவு இருந்தது. இப்படி ஒரு தவவலிமை இருந்தும் மோட்சம் பெறுகிற வாய்ப்பை வீணாக்கிட்டோமேன்னு வருத்தப்பட்டது. இந்த ஜன்மத்திலே அதே தப்பை செய்யக்கூடாதுன்னு கவனமா இருந்து இறை நினைவோடேயே இருந்து அடுத்த ஜன்மத்திலே ஒரு அந்தணருக்கு மகனா பிறந்தது. அவரே ஜட பரதர்.

முற்பிறவி ஞாபகங்கள் இப்பிறவியிலும் வாய்க்கப் பெற்ற பரதன், எதுக்குமே எந்த ரியாக்ஷனுமே செய்யாம வாழ்ந்தார். அதனால மக்கள் அவரை ஜடம் என அழைத்தனர்.

அப்பா பூணூல் போட்டு வேதம் சொல்லிக் கொடுக்க முயற்சி பண்ணி பிரயோசனமின்றி செத்தார். அண்ணன்மார்கள் கைகழுவினர். யாராவது எதாவது கொடுத்தா சாப்பிடுவார். எதாவது செய்யச் சொன்னா செய்வார். எந்த முயற்சியும் இல்லாம இப்படி அவதூதனா சுத்திகிட்டு இருக்கும் பொழுது ஒரு முறை கொள்ளையர்கள் கையில் மாட்டிக் கொண்டார். அவர்கள் செய்த எந்த துன்பத்திற்கும் இவர்கிட்ட இருந்து ரியாக்ஷனே இல்லை. அம்மனே பொறுக்காம வந்து அவர்களை அழிக்க அதுக்கும் இவர் ரியாக்ஷன் காட்டலை.

ஒருமுறை இவர் பாதையில் போய்கிட்டு இருக்கறப்போ, சௌவிய மன்னன் ரகுகுணன் . மகாமுனிவர் கபிலரைப் பார்த்து ஆசிர்வாதம் வாங்க பல்லாக்கில் புறப்பட்டுகிட்டு இருந்தான் பல்லாக்கு தூக்க ஆள் பத்தலைன்னு பாதையில போய்கிட்டு இருந்த பரதனை புடிச்சி இழுத்து தூக்க வச்சாங்க. பரதனுக்கு பல்லாக்கு தூக்கி பழக்கமே இல்லை. அதுவுமில்லாம அவர் தரையில் புழு பூச்சி எதாவது இருந்தா மிதிச்சிடக் கூடாது என்ற ஜாக்கிரதையின் காரணமா குனிஞ்சு கிட்டே மெதுவா போனாரு. மன்னருக்கு இது ரொம்ப அசௌகரியமா போயிருச்சி..

பல்லாக்கு ஏன் இப்படிப் போகுது பல்லாக்குத் தூக்கிகளைக் கேட்க, பல்லாக்குத் தூக்கிகள் இவன் தான்.. ஒழுங்கா தூங்க மாட்டேங்கறான் என ஜடபரதனைக் கைகாட்டறாங்க.

ஏண்டா, பாக்க வாட்டசாட்டமாத்தானே இருக்க, இப்பதானே தூக்க ஆரம்பிச்ச, அதுக்குள்ள என்ன களைப்பு? குசும்பா? பொளந்துருவேன் பொளந்துன்னு ராஜா கத்துறார், பரதன் ஜடமா நிக்கிறார்..

டேய் யார்டா நீ? அப்படின்னு ராஜா கேட்க,

பரதன் முதன் முறையா வாயைத் திறந்து பதில் சொல்றார்..

நான் யார்? அப்படின்னுதான் தேடிகிட்டு இருக்கேன், இதோ இருக்கே இந்த உடல் இது நானல்ல. எதிரிலே நிற்கிறதே இன்னொரு உடல் அது நீயல்ல. இவை வெறும் உடல்கள்.. மாயைகள். இதிலிருக்கும் ஆன்மாக்கள் இருக்கே அதுதான் நிஜம். அந்த ஆன்மாவுக்குன்னு எந்த உணர்வும் தனியே கிடையாது, இப்போ பார்த்தியே அதே மாதிரியான உணர்வுகள் இல்லாத ஜடங்கள் அந்த ஆன்மாக்கள். ஆன்மாக்கள், உடல்கள், மாயை, ஜீவாத்மா, பரமாத்மா அப்படின்னு பெரிய லெக்சர் அடிக்க ஆரம்பிக்கிறார். அனைத்து பற்றுகளையும் துறந்து இந்த மாய உலகில் இருந்து விடுவித்துக் கொள்வதே மோடசம் பெறும் வழி என உபதேசம் செய்கிறார்.

இதில இன்னொரு சூட்சுமம் என்னன்னா நான் வெகுநாட்களாக சொல்லிக் கொண்டிருக்கும் ஒரு தத்துவத்தை இவர் சொல்லி இருக்கிறார். (யார் சொன்னது? படிக்காம எனக்கு எப்படித் தெரிஞ்சது என்றெல்லாம் கேட்கப்படாது. அதற்கு காரண காரியங்கள் இருக்கலாம்)

பிரம்மம் - அதனுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் இரண்டு சித்து - அசித்து.

சித்து அறிவுள்ளது. அசித்து அறிவில்லாதது.பருமனானது. சித்து பருமனில்லாதது. நுட்பமானது.

அசித்திலிருந்து உண்டான பஞ்ச பூதங்களினால் ஜடப்பொருள்கள் உண்டாயின. சித்திலிருந்து உண்டான நுட்பமான ஆன்மாக்கள் ஜடப் பொருளை உயிருள்ளதாக்குகின்றன.

அதாவது உடலில் உயிராக ஆன்மா.

இதில் பிரம்மம் இரு வகையாக விரவிக் கிடக்கிறது.

1. உடலில் உயிர் எப்படி நுட்பமாக அமைந்ததோ அப்படி ஆன்மாவில் பிரம்மம் நுட்பமாக உள்ளது (இது உள்நோக்கிய பயணம்)

2. உயிர் எப்படி உடலில் எப்படி பரந்து விரிந்ததோ அப்படி அனைத்தும் தன்னுள் அடங்கம் பிரம்மம் மிகப் பெரிய உயிரியாக திகழ்கிறது. நம் உடல் அவருக்குள் ஒரு அணு. எப்படி மின்னோட்டம் எலக்ட்ரான் பாய்ச்சலால் உண்டாகிறதோ அப்படி ஆன்மாக்களின் பாய்ச்சலினால் படைப்புகள் தோன்றி வாழ்ந்து மடிகின்றன. (இது வெளி நோக்கிய பயணம்).

மனத்தை பழக்க முடியும் உடல் வேறு ஆன்மா வேறு என்பதை மனம் பழகிக் கொள்ளுமானால் உடலின் உபாதைகள் துன்புறுத்தாது. மனதை உள்நோக்கித் திருப்பி உயிரில் உயிராய் கலந்திருக்கும் பிரம்மத்தை நோக்கி பயணிப்பதே எளிதான முக்தி வழியாகும். அதற்கு படிகள் உண்டு

பக்தியாளருடன் கலந்திருத்தல்
ஆன்மாவை உணர்தல்..
ஆன்மாவிற்குள் உயிராய் இருக்கும் பிரம்மத்தை உணர்தல்
பிரம்மத்திடம் தன்னை ஒப்படைத்தால்.

இப்படி எல்லாம் சொல்றார்,

ஐயோ இவர் மிகப் பெரிய ஞானி அப்படின்னு அரசன் அவரை வணங்கி தன் குருவா ஏத்துக்கிறான்.

பல்லாக்கு ஏறியவன் அறியாமையில் இருந்தான்.
முதலில் அரசன் என்றான், தண்டிப்பேன் என்றான். பின்னர் பயந்தான். பின்னர் பணிந்தான்.. பின்னர் தெளிந்தான்.

பல்லாக்கு தூக்கியவனோ எப்பொழுதும் ஒரே மாதிரியே இருந்தான் ஏனென்றால் அவன் எதையும் இலட்சியம் செய்யலை,
ஆனால் அவரோ அதே ஜடமாக வாழ்ந்து மறைகிறார். மோட்சமடைந்தார் அப்படின்னு கதையில சொல்றாங்க.

இப்பொழுது திருக்குறளை இதனுடன் பார்க்க,,,

பல்லாக்கில் ஏறிய அரசன் - உயர்ந்தவனும் இல்லை
பல்லாக்கை தூக்கிய பரதன் - தாழ்ந்தவனும் இல்லை.

அறியாமையில் இருந்ததால் அரசன் தாழ்ந்தவனும் இல்லை
அறிந்து கொண்டிருந்ததால் பரதன் உயர்ந்தவனும் இல்லை.

பல்லாக்கு தூக்கியதோ அல்லது பல்லாக்கில் இருந்ததுவோ அதெல்லாம் அறத்தின்பாற்பட்டது அல்ல. அது வினைபயன் அது இது என்றாலும் அதில் அர்த்தம் இல்லை. ஏனென்றால்

பல்லாக்கைத் தூக்கிய பரதனும் மோட்சமடைந்தான்
பல்லாக்கில் வந்த அரசனும் மோட்சமடைந்தான்.

ஆகவே தர்மத்தின் வழி இன்னதுதான் என்ற ஒரு கருத்திற்கு அவசரப்பட்டு வந்து விட வேண்டியது இல்லை. ஒருவன் துன்பப்படுகிறானோ இல்லை இன்பப்படுகிறானோ அதற்கு தர்மம் காரணம் இல்லை. பல்லாக்கில் போவதும் பல்லாக்கு தூக்குவதும் இரு நிலைகள் அவ்வளவே.

இப்போ திருக்குறளை கவனியுங்க..

சிவிகை பொருத்தானொடு ஊர்ந்தான் இடை..

பல்லாக்கை தூக்குபவனோடு பல்லாக்கில் செல்லுபவனும் அவரது நிலைகள் இடையில் வந்து செல்லுபவை. இவை காலத்தால் மாறலாம். அறிவால் மாறலாம்.. ஞானத்தால் மாறலாம் இன்னும் எத்தனை வழிகளிலும் மாறலாம்.

அறத்தா றிதுவென வேண்டா

அவை தர்மத்தின் விளைவுகள் அல்ல. தர்மம் இப்படிப்பட்ட தற்காலிக இன்ப துன்பங்களிற்கு காரணமாக அமைவதில்லை.

தர்மம் என்பது தினசரி இன்ப துன்பங்களுக்குக் காரணமில்லை.

பின்னர் வேறென்ன?

தர்மத்தின் வழி என்னவென்றால் நிலைத்த பயனைத் தருவதாகும்.

அதையெல்லாம் அப்புறம் பார்ப்போம்..

இப்ப முக்கியப் பகுதிக்கு வருவோம்.

ஒரு படைப்பில் உள்ளது ஓர் அனுபவம். அது ஒர் அக அனுபவம். அந்த அக அனுபவத்தை நாம் கருத்துக்களாக ஆக்கிக்கொள்ளலாம். அக்கருத்துக்கள் அந்த ஆசிரியர் சொன்னவை அல்ல, நாம் அடைந்தவை. நமக்கு ஒரு வாழ்க்கை அனுபவம் கிடைக்கிறது, அதில் இருந்து நாம் சில சிந்தனைகளை அடைகிறோம். அச்சிந்தனைகள் அந்த அனுபவத்துக்குள் உள்ளனவா என்ன? அதே அனுபவத்தை அடைந்த இன்னொருவர் இன்னொரு கருத்தைத்தானே அடைகிறார்? அதேபோன்றதே இலக்கிய அனுபவம். அது நிஜ வாழ்க்கை அனுபவம்போன்ற ஒன்றை நம் கற்பனையில் நிகழ்த்துகிற்து

நம்ம ஊரில் இதனால்தான் போலிச்சாமியார்கள் அதிகரித்து விட்டார்கள். அவரோ புரியாம எதையோ சொல்லி வைக்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு அர்த்தம் சொல்லி வளர்த்து விட்ட குப்பைகள் எவ்வளவு தெரியுமா?

ஒரு படைப்பு புகழப் படவேண்டியது அதைப் படைத்தவனின் அறிவுக்கா? இல்லைப் படிப்பவனின் அறிவுக்கா? இங்கயே ஜெயமோகனின் இந்த இலக்கியத்தைப் பற்றிய கருத்து செத்துப் போய்விடுகிறது, மன்றத்தில் பல படைப்புகளைப் படித்தவர்களுக்குத் தெரியும். பல நேரங்களில் பின்னூட்டங்கள் படைப்பை தூக்கிச் சாப்பிட்டு இருக்கின்றன. அப்படியானால் அந்தப் படைப்பு இலக்கியமல்ல. பின்னூட்டம்தான் இலக்கியம்.

இயற்கையில் பலப் பல விஷயங்கள் இருக்கின்றன. எதைப் பார்த்தாலும் நமக்கு கருத்துகள் தோன்றுகின்றன. அனுபவிக்கிறோம். போற்றுகிறோம். அதற்கும் இலக்கியத்திற்கும் வித்தியாசம் இல்லையா என்ன?

தன் அனுபவங்களை தன் போக்கில் எழுதுவது இலக்கியம் அல்ல. தயவு செய்து அதை ஏற்றுக் கொண்டு விடாதீர்கள். அப்புறம் நித்யானந்தா மிகப் பெரிய இலக்கியவாதி (200 க்கும் மேல புத்தகம் எழுதி இருக்காராம்) என ஒப்புக் கொள்ள வேண்டி இருக்கும். படிப்பவனுக்கு அவன் அனுபவத்தால் கற்பனை ஏற்படுவது இயல்பான ஒன்று. அப்படி அனுபவம் இல்லாதவனுக்கும் அதை கற்பனையாக அனுபவிக்க வைப்பதே இலக்கியம் ஆகும்.

இன்னொரு வேடிக்கை.. இதை விட வேடிக்கையான ஒன்று இல்லை.

நம்முடைய கற்பனையை தூண்டி விடக்கூடிய இயல்பே இலக்கிய படைப்பை ஆழம் மிக்கதாக ஆக்குகிறது. இதையும் நாம் நம் அனுபவத்தில் இருந்தே உணரலாம். ஓர் அனுபவத்தில் நம்மால் புரிந்துகொள்ளமுடியாத ஒரு புதிர் இருந்தால், அதை நாம் வகுத்துக்கொள்ள முடியவில்லை என்றால், நாம் அதைப்பற்றியே சிந்திப்போம் இல்லையா? நம் மனம் அதைநோக்கியே சுழன்றுகொண்டிருக்கிறது இல்லையா?

ஆகவேதான் முக்கியமான இலக்கிய ஆக்கங்கள் முழுமையாக எல்லாவற்றையும் சொல்வதில்லை. எவ்வளவு குறைவாகச் சொல்ல முடியுமோ அவ்வளவு குறைவாகச் சொல்லி மிச்சத்தை வாசகக் கற்பனைக்கே விட்டுவிடுகின்ரன. அதிகமாக கற்பனைசெய்ய வைக்கும் இலக்கியம் அதிகநேரம் நம்முடன் இருக்கிறது. நம்மை அதிகமாக பயணம் செய்ய வைக்கிறது.

இதன்படிப் பார்த்தால் மிகச் சிறந்த இலக்கியம் ஒண்ணுமே புரியாமல் எழுதப்பட்டது ஆகும். இலக்கியம் என்பது அதி புத்திசாலிகளுக்காக எழுதப்படுவது அல்ல. இதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.

இன்றுவரை நீண்ட நாட்களாக இருக்கும் எல்லா இலக்கியங்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றில் எல்லோருக்கும் எதாவது இருக்கும். குழந்தைக்கு சொல்லும் தாலாட்டில் இருந்து சங்கங்களில் விவாதிப்போர் வரை அவரவர் தேவைக்கேற்ப அது விரியும். குவியும். ஆனால் ஒவ்வொருவருக்கும் எதாவது இருக்கும். இலக்கை இயம்புவதே இலக்கியம். இலக்கே இல்லாமல் பயணிப்பது அல்ல.

இலக்கியம் என்பது மேதாவிகளுக்கே என்ற அந்த போலித்தனம், நவீன இலக்கியத்தின் வறட்டு கௌரவமாக இருக்கிறது. அதை வயலில் களை பறிக்கும் போது வாழ்க்கைத் துணையாய் பாட்டுக்களைக் கொண்ட தமிழன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதும் சரியான வாதமில்லை.

புதிது புதிதாய் கற்று கொள்ள வேண்டியது படைப்பாளியின் கடன். அப்படிக் கற்றதை படிப்பாளிக்கு புடைத்துக் கொடுப்பதும் படைப்பாளியின் கடனே.

அப்படி அல்லாமல் படிப்பவரே புடைக்கணும் என்பது படைப்புத் தொழிலல்ல. தரகு வேலை. (ஒருவர் பொருளை இன்னொருவருக்கு விற்பது)

யாருக்காக படைக்கிறோம் என்ற கேள்வி எழும் பொழுது மக்களுக்காக என்ற பதில் உண்மையாக ஒலிக்குமானால் அதுதான் இலக்கியம்.

ஆதவா
29-03-2012, 01:50 PM
///ஒரு படைப்பில் உள்ளது ஓர் அனுபவம். அது ஒர் அக அனுபவம். அந்த அக அனுபவத்தை நாம் கருத்துக்களாக ஆக்கிக்கொள்ளலாம். அக்கருத்துக்கள் அந்த ஆசிரியர் சொன்னவை அல்ல, நாம் அடைந்தவை. நமக்கு ஒரு வாழ்க்கை அனுபவம் கிடைக்கிறது, அதில் இருந்து நாம் சில சிந்தனைகளை அடைகிறோம். அச்சிந்தனைகள் அந்த அனுபவத்துக்குள் உள்ளனவா என்ன? அதே அனுபவத்தை அடைந்த இன்னொருவர் இன்னொரு கருத்தைத்தானே அடைகிறார்? அதேபோன்றதே இலக்கிய அனுபவம். அது நிஜ வாழ்க்கை அனுபவம்போன்ற ஒன்றை நம் கற்பனையில் நிகழ்த்துகிற்து

நம்ம ஊரில் இதனால்தான் போலிச்சாமியார்கள் அதிகரித்து விட்டார்கள். அவரோ புரியாம எதையோ சொல்லி வைக்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு அர்த்தம் சொல்லி வளர்த்து விட்ட குப்பைகள் எவ்வளவு தெரியுமா?

ஒரு படைப்பு புகழப் படவேண்டியது அதைப் படைத்தவனின் அறிவுக்கா? இல்லைப் படிப்பவனின் அறிவுக்கா? இங்கயே ஜெயமோகனின் இந்த இலக்கியத்தைப் பற்றிய கருத்து செத்துப் போய்விடுகிறது, மன்றத்தில் பல படைப்புகளைப் படித்தவர்களுக்குத் தெரியும். பல நேரங்களில் பின்னூட்டங்கள் படைப்பை தூக்கிச் சாப்பிட்டு இருக்கின்றன. அப்படியானால் அந்தப் படைப்பு இலக்கியமல்ல. பின்னூட்டம்தான் இலக்கியம்.

அண்ணே.. எனக்குப் புரியவில்லை. ஜெயமோகன் கூறியதன்படி நீங்களும் ஒப்புக் கொள்கிறீர்கள்

இயற்கையில் பலப் பல விஷயங்கள் இருக்கின்றன. எதைப் பார்த்தாலும் நமக்கு கருத்துகள் தோன்றுகின்றன. அனுபவிக்கிறோம். போற்றுகிறோம். அதற்கும் இலக்கியத்திற்கும் வித்தியாசம் இல்லையா என்ன?

தன் அனுபவங்களை தன் போக்கில் எழுதுவது இலக்கியம் அல்ல. தயவு செய்து அதை ஏற்றுக் கொண்டு விடாதீர்கள். அப்புறம் நித்யானந்தா மிகப் பெரிய இலக்கியவாதி (200 க்கும் மேல புத்தகம் எழுதி இருக்காராம்) என ஒப்புக் கொள்ள வேண்டி இருக்கும். படிப்பவனுக்கு அவன் அனுபவத்தால் கற்பனை ஏற்படுவது இயல்பான ஒன்று. அப்படி அனுபவம் இல்லாதவனுக்கும் அதை கற்பனையாக அனுபவிக்க வைப்பதே இலக்கியம் ஆகும்.

பின் எப்படி இலக்கியம் பற்றிய அவரது கருத்து செத்துப் போய்விடுகிறது என்கிறீர்கள்?
ஒரு படைப்பு அது அடக்கியிருக்கும் அனுபவத்தை வாசகன் தனது அறிவின் மூலம் இன்னொரு அனுபவமாக ஆக்க முயலுகிறான். இது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக இருக்கிறது. ஏதோ ஒன்றை எழுதிவிட்டு அதுதான் இலக்கியம் என்று சொல்லவில்லை, இலக்கியம் சிந்தனைகளை அடைய வைக்கவேண்டும்,

ஆகவேதான் முக்கியமான இலக்கிய ஆக்கங்கள் முழுமையாக எல்லாவற்றையும் சொல்வதில்லை. எவ்வளவு குறைவாகச் சொல்ல முடியுமோ அவ்வளவு குறைவாகச் சொல்லி மிச்சத்தை வாசகக் கற்பனைக்கே விட்டுவிடுகின்ரன. அதிகமாக கற்பனைசெய்ய வைக்கும் இலக்கியம் அதிகநேரம் நம்முடன் இருக்கிறது. நம்மை அதிகமாக பயணம் செய்ய வைக்கிறது.

இதன்படிப் பார்த்தால் மிகச் சிறந்த இலக்கியம் ஒண்ணுமே புரியாமல் எழுதப்பட்டது ஆகும்.

அப்படியல்ல, ஒரு இலக்கியம் நம்மை எவ்வளவு தூரம் சிந்திக்க வைக்கிறதோ அவ்வளவுதூரம் அது சிறந்ததாக இருக்கிறது. கவிதைகள் முழுவதும் இதற்கு உதாரணங்களே. சொல்லவருவதை மறைத்து குறைத்து சொல்லுவது மரபு இலக்கியங்களிலும் உண்டுதானே? அதனால்தான் ஒரு பாடல் பல அர்த்தங்களுக்கு விரிகிறது.எல்லா அர்த்த விளக்கங்களையும் சொல்லிவிட்டால் பிறகு சிந்தனை எங்கிருந்து வரும்?

புதிது புதிதாய் கற்று கொள்ள வேண்டியது படைப்பாளியின் கடன். அப்படிக் கற்றதை படிப்பாளிக்கு புடைத்துக் கொடுப்பதும் படைப்பாளியின் கடனே.

அப்படி அல்லாமல் படிப்பவரே புடைக்கணும் என்பது படைப்புத் தொழிலல்ல. தரகு வேலை. (ஒருவர் பொருளை இன்னொருவருக்கு விற்பது)

அதாவது என்ன எழுதினாலும் எழுதினவர்களே விளக்கவேண்டுமா? படிப்பவருக்கு என்று எந்த வேலையுமில்லையா?
வாசகத்தகுதி என்று ஒன்று உள்ளது. குமுதம் வாசிப்பவர்களை காலச்சுவடு வாசித்து புரிந்து கொள்ளுங்கள் என்று சொல்வது அர்த்தமற்றது. ஏனெனில் அவர் குமுதல் “லெவலில்”தான் இருப்பார்.. வாசகர்களுக்கும் இலக்கிய பயிற்சி வேண்டும். சொல்வதையெல்லாம் தேமேயென தெரிந்து கொண்டால் வாசகத்தகுதி என்ற ஒன்றே இருக்காது.
உதாரணத்திற்கு
சொற்சிலம்பத்திற்குள் நுழைய ஒரு வாசகருக்கு வாசகத்தகுதி வேண்டும். அதாவது பயிற்சி வேண்டும். பயிற்சி இருந்தால்தான் அங்கு விலாசப்படுவது விவரமாகப் புரியும்,

முக்கண்ணன் என்று சொன்னால் பயிற்சி இல்லாதவர்கள் மூன்று கண்களை உடையவன் என்று புரிந்து அதோடு நின்றுவிடுவார்கள், சற்றே பயிற்சி உடையவர்கள் அது சிவனைக் குறிக்கிறது என்று பொருள் கொள்ளுவார்கள், நன்கு பயிற்சி உள்ளவர்கள், அது தேங்காயையும் குறிக்கிறது என்று புரிந்து கொள்வார்கள்,

படிப்பாளிக்குப் புடைத்துக் கொடுப்பதற்காகத்தான் படைப்பே படைக்கப்படுகிறது... ஒவ்வொன்றையும் விளக்கிக் கொண்டிருந்தால் படைப்புகளே வராது!!

தாமரை
29-03-2012, 04:27 PM
///ஒரு படைப்பில் உள்ளது ஓர் அனுபவம். அது ஒர் அக அனுபவம். அந்த அக அனுபவத்தை நாம் கருத்துக்களாக ஆக்கிக்கொள்ளலாம். அக்கருத்துக்கள் அந்த ஆசிரியர் சொன்னவை அல்ல, நாம் அடைந்தவை. நமக்கு ஒரு வாழ்க்கை அனுபவம் கிடைக்கிறது, அதில் இருந்து நாம் சில சிந்தனைகளை அடைகிறோம். அச்சிந்தனைகள் அந்த அனுபவத்துக்குள் உள்ளனவா என்ன? அதே அனுபவத்தை அடைந்த இன்னொருவர் இன்னொரு கருத்தைத்தானே அடைகிறார்? அதேபோன்றதே இலக்கிய அனுபவம். அது நிஜ வாழ்க்கை அனுபவம்போன்ற ஒன்றை நம் கற்பனையில் நிகழ்த்துகிற்து

நம்ம ஊரில் இதனால்தான் போலிச்சாமியார்கள் அதிகரித்து விட்டார்கள். அவரோ புரியாம எதையோ சொல்லி வைக்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு அர்த்தம் சொல்லி வளர்த்து விட்ட குப்பைகள் எவ்வளவு தெரியுமா?

ஒரு படைப்பு புகழப் படவேண்டியது அதைப் படைத்தவனின் அறிவுக்கா? இல்லைப் படிப்பவனின் அறிவுக்கா? இங்கயே ஜெயமோகனின் இந்த இலக்கியத்தைப் பற்றிய கருத்து செத்துப் போய்விடுகிறது, மன்றத்தில் பல படைப்புகளைப் படித்தவர்களுக்குத் தெரியும். பல நேரங்களில் பின்னூட்டங்கள் படைப்பை தூக்கிச் சாப்பிட்டு இருக்கின்றன. அப்படியானால் அந்தப் படைப்பு இலக்கியமல்ல. பின்னூட்டம்தான் இலக்கியம்.

அண்ணே.. எனக்குப் புரியவில்லை. ஜெயமோகன் கூறியதன்படி நீங்களும் ஒப்புக் கொள்கிறீர்கள்

புரியவில்லை என்று சொல்லி விட்டு அப்புறம் எப்படி நான் ஒத்துக்கொள்கிறேன் என்று முடிவு கட்டினீர்கள்?

இயற்கையில் பலப் பல விஷயங்கள் இருக்கின்றன. எதைப் பார்த்தாலும் நமக்கு கருத்துகள் தோன்றுகின்றன. அனுபவிக்கிறோம். போற்றுகிறோம். அதற்கும் இலக்கியத்திற்கும் வித்தியாசம் இல்லையா என்ன?

தன் அனுபவங்களை தன் போக்கில் எழுதுவது இலக்கியம் அல்ல. தயவு செய்து அதை ஏற்றுக் கொண்டு விடாதீர்கள். அப்புறம் நித்யானந்தா மிகப் பெரிய இலக்கியவாதி (200 க்கும் மேல புத்தகம் எழுதி இருக்காராம்) என ஒப்புக் கொள்ள வேண்டி இருக்கும். படிப்பவனுக்கு அவன் அனுபவத்தால் கற்பனை ஏற்படுவது இயல்பான ஒன்று. அப்படி அனுபவம் இல்லாதவனுக்கும் அதை கற்பனையாக அனுபவிக்க வைப்பதே இலக்கியம் ஆகும்

பின் எப்படி இலக்கியம் பற்றிய அவரது கருத்து செத்துப் போய்விடுகிறது என்கிறீர்கள்?
ஒரு படைப்பு அது அடக்கியிருக்கும் அனுபவத்தை வாசகன் தனது அறிவின் மூலம் இன்னொரு அனுபவமாக ஆக்க முயலுகிறான். இது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக இருக்கிறது. ஏதோ ஒன்றை எழுதிவிட்டு அதுதான் இலக்கியம் என்று சொல்லவில்லை, இலக்கியம் சிந்தனைகளை அடைய வைக்கவேண்டும்,

கருத்தை முழுதாகப் படிக்கவேண்டும். ஒரு படைப்பு புகழப் படவேண்டியது அதைப் படைத்தவனின் அறிவுக்கா? இல்லைப் படிப்பவனின் அறிவுக்கா? இங்கயே ஜெயமோகனின் இந்த இலக்கியத்தைப் பற்றிய கருத்து செத்துப் போய்விடுகிறது,

ஜெயமோகன் வாசகனின் தகுதியைப் பற்றி பேசுகிறார். நீங்க கடைசியில் பேசி இருப்பது போல. அவரின் வார்த்தைகளைக் கவனியுங்கள்.

ஒரு படைப்பில் உள்ளது ஓர் அனுபவம். அது ஒர் அக அனுபவம். அந்த அக அனுபவத்தை நாம் கருத்துக்களாக ஆக்கிக்கொள்ளலாம். அக்கருத்துக்கள் அந்த ஆசிரியர் சொன்னவை அல்ல, நாம் அடைந்தவை. நமக்கு ஒரு வாழ்க்கை அனுபவம் கிடைக்கிறது, அதில் இருந்து நாம் சில சிந்தனைகளை அடைகிறோம். அச்சிந்தனைகள் அந்த அனுபவத்துக்குள் உள்ளனவா என்ன? அதே அனுபவத்தை அடைந்த இன்னொருவர் இன்னொரு கருத்தைத்தானே அடைகிறார்? அதேபோன்றதே இலக்கிய அனுபவம். அது நிஜ வாழ்க்கை அனுபவம்போன்ற ஒன்றை நம் கற்பனையில் நிகழ்த்துகிற்து

இது இலக்கியத்திற்கு மட்டுமல்ல எல்லாவற்றிற்கும் பொருந்தும் என்பது என்கூற்று. ஒரு குப்பையைப் பார்த்தால் கூட எனக்கு ஒரு சிந்தனை தோன்றும் உங்களுக்கு ஒரு சிந்தனை தோன்றும் ஆதனுக்கு ஒரு சிந்தனை தோன்றும். அங்கே காட்சி.. இங்கே சொல் அவ்வளவுதான் வித்தியாசம். அதற்காக அதை இலக்கியம் என்று கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை. என் உணர்வை நீ உணரும்படி நான் சொல்வதே படைப்பின் அடையாளம். நீ என்ன வேணும்னாலும் கற்பனை செய்துகொள்ளலாம் என்பதற்கு படைப்பாளி தேவையில்லை. படைப்பாளியிடம் இருந்து படிப்பவன் எதையாவது பெறுகிறான் என்றால் அது படைப்பாளியின் நோக்கமாக இருந்தாலே அவன் படைப்பாளி.

ஜெயமோகனின் கருத்துப்படி உனக்குத் தோன்றியதை நீ எழுது. அதுதான் இலக்கியம் என்று ஆகி விடுகிறது.

உதாரணமாக

சீனா தும்மி சா துமி சாச்சா தும்மி சாச்சாச்சா!!! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=23494)

இப்போ என்னைச் சிந்திக்க வைத்ததால் இந்த வரிகள் மிகச் சிறந்த இலக்கியம் என்கிறார் ஜெயமோகன். அதனால்தான் அவருடைய கருத்து அப்பவே செத்துப் போச்சு என்கிறேன். நீங்க இந்த வரிகளை இலக்கியம் என்கிறீர்களா?

அப்படியல்ல, ஒரு இலக்கியம் நம்மை எவ்வளவு தூரம் சிந்திக்க வைக்கிறதோ அவ்வளவுதூரம் அது சிறந்ததாக இருக்கிறது. கவிதைகள் முழுவதும் இதற்கு உதாரணங்களே. சொல்லவருவதை மறைத்து குறைத்து சொல்லுவது மரபு இலக்கியங்களிலும் உண்டுதானே? அதனால்தான் ஒரு பாடல் பல அர்த்தங்களுக்கு விரிகிறது.எல்லா அர்த்த விளக்கங்களையும் சொல்லிவிட்டால் பிறகு சிந்தனை எங்கிருந்து வரும்?

சிந்திக்க வைக்க இலக்கியமே தேவையில்லை என்பது என் அடிப்படைக் கருத்து. எந்த ஒரு நிகழ்வும், எந்த ஒரு காட்சியும் எந்த ஒரு ஓசையும் எந்த ஒரு சுவையும் எந்த ஒரு ஸ்பரிசமும் நம்மைச் சிந்திக்க வைக்கத்தான் செய்கின்றன. எது நம்மை அதிகம் சிந்திக்க வைக்கிறது என்றால் எதையெல்லாம் நாம் அடைய முடிவதில்லையோ, புரிந்து கொள்ள இயலவில்லையோ அல்லது வெல்ல முடியவில்லையோ அவையெல்லாம் நம்மை அதிகம் சிந்திக்க வைக்கின்றன. இது இயற்கையான மனிதனின் உள்ளுணர்வு. இதை இலக்கியம்தான் தூண்டுகிறது என்பது கட்டுக்கதை.. அவர்கள் மனித மனதையே புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

அதாவது என்ன எழுதினாலும் எழுதினவர்களே விளக்கவேண்டுமா? படிப்பவருக்கு என்று எந்த வேலையுமில்லையா?
வாசகத்தகுதி என்று ஒன்று உள்ளது. குமுதம் வாசிப்பவர்களை காலச்சுவடு வாசித்து புரிந்து கொள்ளுங்கள் என்று சொல்வது அர்த்தமற்றது. ஏனெனில் அவர் குமுதல் “லெவலில்”தான் இருப்பார்.. வாசகர்களுக்கும் இலக்கிய பயிற்சி வேண்டும். சொல்வதையெல்லாம் தேமேயென தெரிந்து கொண்டால் வாசகத்தகுதி என்ற ஒன்றே இருக்காது.
உதாரணத்திற்கு
சொற்சிலம்பத்திற்குள் நுழைய ஒரு வாசகருக்கு வாசகத்தகுதி வேண்டும். அதாவது பயிற்சி வேண்டும். பயிற்சி இருந்தால்தான் அங்கு விலாசப்படுவது விவரமாகப் புரியும்,

முக்கண்ணன் என்று சொன்னால் பயிற்சி இல்லாதவர்கள் மூன்று கண்களை உடையவன் என்று புரிந்து அதோடு நின்றுவிடுவார்கள், சற்றே பயிற்சி உடையவர்கள் அது சிவனைக் குறிக்கிறது என்று பொருள் கொள்ளுவார்கள், நன்கு பயிற்சி உள்ளவர்கள், அது தேங்காயையும் குறிக்கிறது என்று புரிந்து கொள்வார்கள்,

படிப்பாளிக்குப் புடைத்துக் கொடுப்பதற்காகத்தான் படைப்பே படைக்கப்படுகிறது... ஒவ்வொன்றையும் விளக்கிக் கொண்டிருந்தால் படைப்புகளே வராது!!

வாசகர் தகுதி - இந்த வார்த்தைதான் இன்றைய நவீன இலக்கியத்தில் மிக அதிகமாக துர் உபயோகப்படுத்தப்படும் வார்த்தை ஆகும். நீங்கள் சொல்வதற்கு முழுதான எதிர்ப்பு சொல்லப் போவது இல்லை. காரணம் படிப்பதில் பல படிகள் உள்ளன. அதை நாம் ஒவ்வொன்றாகத் தான் கடக்கிறோம். சிறு சிறு பாட்டுகளுக்காகத்தான் நம் வாசிப்பு ஆரம்பித்தது. பின்னர் சின்னச் சின்ன கதைகள். பின்னர் சற்றே பெரிய கதைகள். நெடுங்கதைகள் என்று வளர்ந்து கடைசியாகவே இலக்கியம் என்னும் உலகிற்குள் நுழைகிறோம்.

ஆனால் நன்கு கவனித்தால் வெகுஜனங்களில் பலர் நெடுங்கதைகளுக்கு மேலே போவதே இல்லை.

கந்த புராணமும் சரி, கம்ப இராமாயணமும் சரி இன்னும் எந்த பெரிய படைப்பாக இருந்தாலும் சரி.. எழுதிய கம்பரோ, கச்சியப்பரோ அதை வருடக்கணக்கில் விளக்கி அரங்கேற்றி இருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறியாதிருக்கலாம்.

தமிழ்ச் சங்கங்களிலும் அரச சபைகளிலும் தங்கள் படைப்புகளை அரங்கேற்றம் செய்தவர்கள் அவற்றை விளக்கியே சாதித்தார்கள். நமது புராணங்கள் கூட எழுதியவர்களாலே விளக்கப்பட்டதாக கதைகள் உண்டு. மிகச் சில படைப்புகளுக்கு மட்டுமே கற்றல் என்பது அவசியமானது. அவை கலை படைப்புகள் அல்ல. நுட்பங்களை அடக்கிய அறிவியல் / தொழில் / நுட்பங்கள் சம்பந்தப்பட்டவை.

அந்தக் கடமை தமிழ் இலக்கியவாதிகளுக்கு இருக்கவே செய்தது. அந்தக் கடமையில் இருந்து நழுவ வேண்டிய அவசியம் இல்லை. சொற்சிலம்பத்தில் கூட புரியவில்லை என்றால் விளக்க வேண்டிய கடமையை நாங்கள் மறுத்ததில்லை என்பதையும் நீங்களே அறிவீர்கள். வாசகர்கள் விளக்கம் கேட்க கூச்சப்பட்டாலும், கேட்டவர்களை தகுதி குறைவானவர்களாக யாரும் இந்த மன்றத்தில் கருதியதும் இல்லை.

காரணம் இன்றைய கூகுள் ட்ரான்ஸ்லேட்டருக்கும் நம்முடைய நவீன இலக்கியவாதிக்கும் வித்தியாசம் குறைந்து கொண்டே வருகிறது, தான் படிப்பதை சரியா தவறா என்று ஆலோசிக்கக் கூடச் செய்யாமல் அப்படியே மொழிமாற்றிப் போட்டு விடுகிறார்கள். அதைப் பற்றி அவர்கள் செய்யும் விளம்பரங்களில் ஈர்க்கப்பட்டு விட்டில் பூச்சிகளாக பல வளரும் படைப்பாளிகள் அதுதான் சரியென்று தங்களுக்குப் பட்டதையெல்லாம் அதற்குக் கற்பித்து ஒன்றை வேறுவிதமாக்கி விடுகிறார்கள். கடைசியில் மனதில் நிற்பவை சில பல உண்மையான மனக்குமுறல்களின் வெளிப்பாடாக நிற்கும் சில பல துண்டுகளான கவிதைகளும் சிற்றிலக்கியங்களும். அதற்குக் காரணம் நவீன இலக்கிய பாணி அல்ல. அந்த உணர்வுகளின் அழுத்தமான ஆழமான மனப்பதிவு.

இலக்கியம் எப்படி நம் வாழ்க்கைக்குள் நுழைகிறது என்று சொன்னேன் அல்லவா? ஒரே இலக்கியம் சின்னக் குழந்தையின் பாடலாகவும் சிறுகதையாகவும் பல வடிவங்களில் நம்மைச் சேரக் கூடியதாக இருக்கிறது. ஆனால் ஜெயமோகன் கூறும் இலக்கியம் அப்படிப்பட்டது அல்ல என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். அது மக்களின் வாழ்க்கையில் கலக்காது.

வாசகத் தகுதி இலக்கியங்களின் தன்மையால் வளர்வதாகும். அது கொய்யா மரத்திலோ மாங்காய் மரத்திலோ காய்ப்பது அல்ல. அதை வளர்ப்பதும் இலக்கியவாதிகளின் கடமை ஆகும். ஆனால் அந்த வாசகர்களையே திட்டுபவர்களை இலக்கியவாதிகள் என்று ஏற்றுக் கொள்ள இயல்வதில்லை.

தாமரை
29-03-2012, 04:39 PM
ஆதன்

நீங்க திரியின் தலைப்பை தெரிஞ்சு வச்சீங்களா? தெரியாம வச்சீங்களா?

ஜெயமோகன் எழுதிய நவீன இலக்கியம் ஏன் புரிவதில்லை?

கௌதமன்
29-03-2012, 05:07 PM
மகா ஞானசபையில் தருக்கம் நடக்கும் காட்சி கண்ணுக்குள் விரிகிறது. ஜோதிஸ்தம்பம் ஒவ்வொன்றாய் சுடர் விட்டு எரிவதும் கண்ணுக்குள் தெரிகிறது. அண்ணாந்து பார்த்தால் ஆகா கிருஷ்ண பருந்து....

ஓம்...

சிவா.ஜி
29-03-2012, 06:34 PM
ஆதன்....ஒரு கவிதையை...இத்தனைப் பாடுபட்டுதான் புரிந்துகொள்ள வேண்டுமென்றால்....அந்த நவீன இலக்கியத்தின் சமூகப் பங்கு என்ன? யாருக்காக அந்த வரிகள்....உனக்குப் புரியவில்லையா, பிடிக்கவில்லையா விலகிவிடு என்றால்...சமூகத்தைவிட்டு அந்தக் கவிதை விலகிவிடுவது தெரியவில்லையா.

மேலிருந்து இரண்டு கோடுகள்...குறுக்கு வாட்டில் ஏழுகோடுகள் போட்டு....இது இறுதி யாத்திரை என என்னாலும் நவீன ஓவியம் வரைய முடியும். ஆனால்...விளக்கிச் சொல்லுமளவுக்கு ஒரு கவிதை இருக்கிறதென்றால்....பரிதாபம் அந்தக் கவிதைக்கும்...கவிஞனுக்கும்தான்.

ஜெயமோகன் ஒரு அதிகப் பிரசங்கி...அரை வேக்காடு. அரைவேக்காட்டின் வார்த்தைகளை நான் கருத்தில் கொள்வதில்லை. சொல்ல வந்தக் கருத்து...நேரிடையாய் சொல்லப்பட வேண்டியவர்களிடம் சேராத வரை அது...குப்பைதான். எத்தனைதான் அலங்கரித்தாலும் குப்பை குப்பைதான். நவீன கவிதைகள் என்னைப் பொருத்தவரைக் குப்பைகளே.

தன்னை தனிப்பட்டவராய்க் காண்பிக்க மட்டுமே உதவும் அந்த குழப்ப வரிகளால்...எந்தப் பயனும் இல்லை.

மன்னிக்கவும்.....காலம் மாறலாம்...காட்சி மாறலாம்...ஆனால்...கருத்து மாறக்கூடாது....மாறினால்....கருத்து....கருத்தாய் இருக்காது.

உங்கள் தமிழின்பால் எனக்கு மிகுந்த மோகமுண்டு...அதை இப்படியான வெற்றுக் கவிதைகளுக்கு வக்காலத்து வாங்கி இல்லாமல் செய்துவிடாதீர்கள்.

(ஜெயமோகன் என்ற இரண்டுங்கெட்டானின்(அவர் தமிழருமில்லை...மலையாளியுமில்லை.....ஒரு பச்சோந்தி) வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்.....தமிழரைப் பற்றி அந்த இரண்டுங்கெட்டானுக்கு என்ன தெரியும்?)

தாமரை
30-03-2012, 02:03 AM
”இப்படி கேட்ட பெரியவரிடம் நான் சொன்னேன்,’ஐயா நற்றிணையோ பாரதியோ படித்தால் புரிந்துகொள்ள முடியாத, தமிழே படிக்காத இந்த இளைஞருக்கு இந்தக்கவிதை எளிதாகப் புரிகிறதே, எப்படி என்று யோசித்தீர்களா? யோசித்தால் எது நவீன இலக்கியம் என்று எளிதில் புரிந்துகொள்ள முடியும்’”

.

இதற்குப் பொருள் அந்தத் தமிழே தெரியாதவனின் மொழியில் இருந்துதான் அந்த இலக்கியம் காப்பி அடிக்கப்பட்டுள்ளது என்பது.

நவீ"ண" இலக்கியங்களில் இப்படியும் சில உண்டு.

நமது இலக்கியம் என்பது நமது பண்பாட்டை, உயர்வை உலகிற்கு எடுத்துச் செல்வதாக இருக்க வேண்டும். நம் பண்பாட்டை பிற பண்பாட்டுக் கழிவுகள் மூலம் சிதைப்பதாக இருத்தல் கூடாது. மற்றவரின் பண்பாட்டை அவர்களின் இலக்கியம் மூலம் நாம் அறியலாம். நீ எந்த மொழியில் எழுதினாலும் யாருடைய பண்பாட்டை எழுதுகிறாயோ அந்த சமூகத்தையே அந்த இலக்கியம் சாரும்.

கம்பர் கூட மொழிமாற்றம் செய்தார்.. வால்மீகி இராமாயணத்தை. ஆனால் அதில் இழையோடி இருப்பது தமிழ் பண்பாடு. தேவைக்குத் தகுந்தார்போல் மாற்றி இருப்பார்.

சமூக மாற்றம் வேண்டும் என்னும் எழுத்தாளர்களும் இலக்கியம் படைக்கிறார்கள். அவர்களின் முதற்கடமை சமூகத்திற்கு புரியும்படி சொல்வது.

சமூகத்தை வையும் இலக்கியம் உண்டாக்கும் தாக்கம் என்ன?

புரிந்து கொள்ள வேண்டுமானால் பழைய பாடம்தான் மீண்டும் ஒரு முறை படிப்பதில் தப்பில்லை.

சும்மா திட்டாதீங்க! நான் சொல்லும் படி வைக்காதீங்க!! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=17452)

தாமரை
30-03-2012, 03:29 AM
இங்கு மன்ற உறுப்பினர்கள் அல்லாத* மற்ற பிற கவிஞர்களின் கவிதைகள் விவாதிக்கப்படும்..

இதுவரைக்கும் ஜெயமோகனின் கட்டுரையைப் பற்றி மட்டும் கருத்து சொன்னேன்.

பிற கவிஞர்களின் கவிதைகளை விமர்சிக்க தனித் திரி இருந்தால் நல்லது என நினைக்கிறேன். இந்தத் திரியில் அது சரியாக வராது.:rolleyes::rolleyes::rolleyes:

ஆதி
30-03-2012, 04:41 AM
ஆதன்....ஒரு கவிதையை...இத்தனைப் பாடுபட்டுதான் புரிந்துகொள்ள வேண்டுமென்றால்....அந்த நவீன இலக்கியத்தின் சமூகப் பங்கு என்ன? யாருக்காக அந்த வரிகள்....உனக்குப் புரியவில்லையா, பிடிக்கவில்லையா விலகிவிடு என்றால்...சமூகத்தைவிட்டு அந்தக் கவிதை விலகிவிடுவது தெரியவில்லையா.

மேலிருந்து இரண்டு கோடுகள்...குறுக்கு வாட்டில் ஏழுகோடுகள் போட்டு....இது இறுதி யாத்திரை என என்னாலும் நவீன ஓவியம் வரைய முடியும். ஆனால்...விளக்கிச் சொல்லுமளவுக்கு ஒரு கவிதை இருக்கிறதென்றால்....பரிதாபம் அந்தக் கவிதைக்கும்...கவிஞனுக்கும்தான்.

ஜெயமோகன் ஒரு அதிகப் பிரசங்கி...அரை வேக்காடு. அரைவேக்காட்டின் வார்த்தைகளை நான் கருத்தில் கொள்வதில்லை. சொல்ல வந்தக் கருத்து...நேரிடையாய் சொல்லப்பட வேண்டியவர்களிடம் சேராத வரை அது...குப்பைதான். எத்தனைதான் அலங்கரித்தாலும் குப்பை குப்பைதான். நவீன கவிதைகள் என்னைப் பொருத்தவரைக் குப்பைகளே.

தன்னை தனிப்பட்டவராய்க் காண்பிக்க மட்டுமே உதவும் அந்த குழப்ப வரிகளால்...எந்தப் பயனும் இல்லை.

மன்னிக்கவும்.....காலம் மாறலாம்...காட்சி மாறலாம்...ஆனால்...கருத்து மாறக்கூடாது....மாறினால்....கருத்து....கருத்தாய் இருக்காது.

உங்கள் தமிழின்பால் எனக்கு மிகுந்த மோகமுண்டு...அதை இப்படியான வெற்றுக் கவிதைகளுக்கு வக்காலத்து வாங்கி இல்லாமல் செய்துவிடாதீர்கள்.

(ஜெயமோகன் என்ற இரண்டுங்கெட்டானின்(அவர் தமிழருமில்லை...மலையாளியுமில்லை.....ஒரு பச்சோந்தி) வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்.....தமிழரைப் பற்றி அந்த இரண்டுங்கெட்டானுக்கு என்ன தெரியும்?)

சிவா அண்ணா,

நான் யாரையும் புறக்கணிப்பதில்லை, யாரையும் சுலபத்தில் தூக்கி கொண்டாடுவததில்லை

சிவா அண்ணா எனக்கு பிடிக்கும், சிவா அண்ணாவின் படைப்புக்கள் எனக்கு பிடிக்கும், ஆனால் சிவா அண்ணாவை பிடிக்கும் என்ப*தால் சிவா அண்ணாவின் படைப்புக்களை எனக்கு பிடிக்கும் என்று நான் சொல்வதில்லை. சிவா அண்ணாவின் இந்த விமர்சன கருத்தின் மீதான என் கருத்து இந்த திரியோடு முடிந்துவிடுகிறது, இதனை நான் சிவா அண்ணாவின் படைப்பு திரிகளில் நுழைப்பதில்லை, இதனை சுமந்து கொண்டு வந்து சிவா அண்ணாவின் படைப்புக்களை படித்து பின்னூட்டமில்லை. கொள்கைகள் வேறு அனுபவம் வேறு கருத்துக்கள் வேறு என இருந்தாலும் வேராய் இருப்பது ரசனையும், படைப்புத்தரும் அனுபவமும், சிந்தனையும் தான்.

எப்படி சிவா அண்ணாவை வாசிக்கும் போது அவரின் மீதான என் தனிப்பட்ட அன்பை, நட்பை, மரியாதையை, அவரின் முந்தைய படைப்புக்களை கொண்டு வாசிப்பதில்லையோ, அப்படித்தான் ஜெயமோகனின் பின்புலத்தை கொண்டு ஜெயமோகனை வாசிப்பதில்லை.

நம் மன்றத்தில் கீதமக்கா, யவனிக்கா, ஆதவா, அமர், செல்வா, மூர்த்தியின் சில கதைகள், நான், இன்னும் சிலர் நவீன இல*க்கிய*ங்க*ளைத்தான் எழுதி கொண்டிருக்கிறோம்

இந்த கட்டுரை நவீன இலக்கியம் ஏன் புரியவில்லை என்பதை பற்றிய விளக்கம், நவீன இலக்கியத்தின் கூறுகள், கூருகள் பற்றியெல்லாம் இதில் விவாதிக்கப்படவில்லை, விவாதிக்கப்படும் போது உங்கள் புரிதல்கள் மேலோங்களாம்.
அப்படிப்பட்ட விவாதங்கள் இங்கே நிகழும் எனும் ஆவலிலேயே இந்த கட்டுரையை புதிற்பதிவாக கொண்டு துவங்கினேன்.

இந்த திரியில் தமிழ் நவீன இலக்கியத்தின் மீதான என் மனக்குறைகள், அவை மக்களிடம் சென்று சேர நிகழாத மெனக்கெடல், படிமம், குறியீடு பற்றி படைப்பாளிகளிடம் இருக்கும் தெளிவற்ற புரிதல், அதனால் நிகழும்/நிகழ்ந்த குழப்படிகளென பலவற்றையும் விவாதிக்கவே இந்த திரியை துவங்கினேன்.

என்ன அதிஸ்டமோ தாமரையண்ணாவே பிள்ளையார் சுழி போட்டுவிட்டார், நிச்சயம் விவாதம் கலைக்கட்டும் எனும் நம்பிக்கை வந்துவிட்டது. சிவா அண்ணா, யார் என்ன சொல்றாங்கனு கேட்காமலே ஒரு தீர்மானத்துக்கு வருவது மிக பெரியத்தப்பு. விவாதிப்போம், நவீனத்தை புரிந்து கொள்ள மட்டுமல்ல அதன் கொள்கைகளையும் புரிந்து கொள்ள, எதுவுமே தப்பில்லை அண்ணா, சூழ்லைக்கு ஏற்ப நியாய தர்மங்கள் வேண்டுமானால் மாறுபடலாம்.

ஆதி
30-03-2012, 04:42 AM
ஆதன்

நீங்க திரியின் தலைப்பை தெரிஞ்சு வச்சீங்களா? தெரியாம வச்சீங்களா?

ஜெயமோகன் எழுதிய நவீன இலக்கியம் ஏன் புரிவதில்லை?

எப்படி படிக்கிறோமோ அப்படி புரியும் அண்ணா :D

தாமரை
30-03-2012, 07:28 AM
ஆதன்

நீங்க திரியின் தலைப்பை தெரிஞ்சு வச்சீங்களா? தெரியாம வச்சீங்களா?

ஜெயமோகன் எழுதிய நவீன இலக்கியம் ஏன் புரிவதில்லை?

எப்படி படிக்கிறோமோ அப்படி புரியும் அண்ணா :D

புரிவதைப் பற்றிக் கேட்கலை தம்பி. தெரியுமான்னுதான் கேட்டேன்.

உதாரணமாக

ஒரு கவிதையில் ‘படி இறங்குதல்’ என்று வந்தால் அது ஒரு வீழ்ச்சியை குறிக்கலாம். ஒரு தரம் இறங்குவதை குறிக்கலாம். இதற்கு இரண்டாம் கட்ட குறியீட்டு ஒழுங்கு என்று பெயர் [secondary symbolic order]. அது மொழிக்குள் செயல்படும் இன்னொரு மொழி. அதில்தான் இலக்கியம் எழுதப்படுகிறது. உங்களுக்கு தமிழ் மட்டும் தெரிந்தால் இலக்கியத்தை புரிந்துகொள்ள முடியாது. தமிழுக்குள் செயல்படும் அந்த இரண்டாவது தமிழை அறிந்திருந்தால் மட்டுமே இலக்கியம் புரிய ஆரம்பிக்கும்.

இது சரியான தமிழே அல்ல. படி இறங்குதல் என்றால் பணிந்து தன் நிலையிலிருந்து மாறி நெருங்கி வருதல் ஆகும். அங்கே தரம் குறைவதில்லை. தரம் குறைதல் இறங்குதல் என்ற சொல்லாலே குறிப்பிடப்படுகிறது.

படி என்பது தளங்களையும் - மாடிகளையும் இணைக்கும் ஒன்று என்ற மயக்கமே அவரை அப்படிப் பொருள்கொள்ள வைத்தது. ஆனால் படி என்பது வீட்டையும் நாட்டையும் இணைப்பது என்பதும் உண்மைதானே.. படி இறங்கினான் என்றால் சமூகத்துடன் இணைந்தான் என்றும் பொருள்படும்.

ஒரு கல்லை ஒருவன் தெருவில் வீசுகிறான். எவனோ ஒருவன் அதில் சிலை வடித்தால் சிலை வைத்தவன் கல்லை வீசினவன் இல்லை அல்லவா. நான் கல் வீசியதால்தான் இங்கு சிலை வந்தது என்பது சரியா?

உங்களுக்குத் தமிழ் மட்டும் தெரிந்தால் இலக்கியம் புரியாது. இது சரியான வாதம். ஆனால் அதன் பின்னே வருகின்ற தமிழுக்குள் செயல்படும் அந்த இரண்டாவது தமிழை அறிந்திருந்தால் மட்டுமே இலக்கியம் புரிய ஆரம்பிக்கும் என்பது தவறான வாதம்.

உதாரணமாக அவரே சொல்கிறார்

ஒரு பண்பாட்டில் உள்ள இந்த மீமொழியை பொழிப்புரை அல்லது அகராதியைக் கொண்டு புரிந்துகொள்ளலாம்தான். தமிழ்ப்புதுக்கவிதையில் பறவை என்று சொன்னால் அது விடுதலை, வானுடன் உள்ள தொடர்பு என்ற பொருளையே அளிக்கிறது என்று சொல்லலாம்தான்.

அந்த இரண்டாவது மொழியை உண்டாக்குவது பண்பாடு. ஒரு சொல்லிற்கு சரியான அர்த்தம் தருவது மொழியும் பண்பாடும். அது உள்ளிருந்து வருவது. வெளியிலிருந்து அல்ல. அந்தப் பண்பாடு எங்கிருந்து வருகிறது? அது சமூகத்தில் இருந்து வருகிறது.

கழுகு என்றால் கூர்மையான பார்வை,
புறா என்றால் அமைதி,
சிட்டுக் குருவி என்றால் எளிமையான சுதந்திரமான
காகம் என்றால் கூடி இருக்கிற
வல்லூறு என்றால் பிறர் துன்பத்தில் இன்பம் காணுகிற
குயில் என்றால் கவலையில்லாத
மயில் என்றால் ஆர்ப்பாட்டமான அழகான

இதெல்லாம் அவற்றின் குணங்களில் இருந்து பிறந்தவை. பண்பாட்டினால் பிறந்தவை.

இது இரண்டாவது மொழி அல்ல. பண்பை சித்தரிப்பவை. இவை இன்றல்ல தொல்காப்பியத்திலேயே உள்ளன,

அதாவது ஒரு குறியீடாக நிற்கும் சொல்லிற்கு நேரடிப் பொருளோ அல்லது அதன் பண்போ தான் உபயோகப்படுத்தப்படுமே தவிர புதிதாய் ஒன்றும் முளைத்து விடுவதில்லை. இது மொழி அறிந்தவனுக்கு எளிதில் புரியும்.

ஜெயமோகன் சொல்லும் இந்தக் குறீயீட்டு மொழி நவீன இலக்கியத்திற்குச் சொந்தமானதல்ல. மறை பொருள் கூறும் சித்தர்களின் இலக்கியத்திற்குச் சொந்தமானது. மருத்துவக் குறிப்புகள் போன்ற பலருக்கும் புரியாமல் சரியான வழியில் கற்கும் தகுதி உள்ளோருக்கு மட்டுமே போய்ச் சேர வேண்டும் என அக்காலத்தில் உண்டாக்கப்பட்ட குறியீட்டு மொழியைச் சேர்ந்தது.

உதாரணம் :

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=520767&postcount=97

இது எங்கிருந்து புறப்பட்டு எங்கு சென்று இப்பொழுது ஏதோ மேலை நாட்டு தத்துவமாக நம்மிடம் திணிக்கப்படுகிறது.

இப்பொழுதைய நவீன மீமொழி என்று சொல்வதைப் பற்றி ஜெயமோகன் சொல்வதென்ன?

இங்கே என்ன நடக்கிறது என்றால் தமிழுக்குள் உள்ள இந்த இரண்டாவது குறியீட்டு ஒழுங்கு, அதாவது மீமொழி, உலகம்தழுவியதாக ஆகிவிடுகிறது. இலக்கியத்துக்கு உலகம் முழுக்க ஒரே குறியீட்டு மொழி ஒன்று உருவாகி வந்தது. அதனால்தான் நமக்கு பாப்லோ நெரூதாவும் மயகோவ்ஸ்கியும் புரிகிறார்கள். இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் சாதனை என்றால் இப்படி உலகம் முழுமைக்குமாக ஒரு இலக்கிய மீமொழி உருவானதேயாகும்

பல்வேறு பண்பாடுகளுக்குமான பொதுவான மீமொழி.. இது இயலுமா என்றால் இது வெறும் போலித் தோற்றம்தான். அவரவர் பண்பாட்டை துறந்தால்தான் இதை உருவாக்க முடியும். ஆனால் பண்பாடின்றி இலக்கியம் ஏது?

ஆக தமிழ் படித்த தமிழ் பண்பாட்டில் வாழ்கின்ற ஒருவனுக்கு புரியாத, தமிழ் பண்பாட்டை பிரதிபலிக்காத ஒன்றை ஏன் நவீன தமிழ் இலக்கியம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்?

இப்பொழுது உன் தலைப்பில் உள்ள கேள்விக்கு இங்கே பதில் கிடைத்திருக்கும்.

ஜெயமோகன் எழுதிய நவீன இலக்கியம் ஏன் புரிவதில்லை?[/QUOTE]

காரணம் அது சமூகத்தினை அதன் பண்பாட்டினை பிரதிபலிக்காமல் உலக இலக்கியம் என்று வர்ணம் பூசிக் கொண்டு இருக்கிறது.

சிவா.ஜி
30-03-2012, 11:57 AM
சிவா அண்ணா,
இந்த திரியில் தமிழ் நவீன இலக்கியத்தின் மீதான என் மனக்குறைகள், அவை மக்களிடம் சென்று சேர நிகழாத மெனக்கெடல், படிமம், குறியீடு பற்றி படைப்பாளிகளிடம் இருக்கும் தெளிவற்ற புரிதல், அதனால் நிகழும்/நிகழ்ந்த குழப்படிகளென பலவற்றையும் விவாதிக்கவே இந்த திரியை துவங்கினேன்.

சிவா அண்ணா, யார் என்ன சொல்றாங்கனு கேட்காமலே ஒரு தீர்மானத்துக்கு வருவது மிக பெரியத்தப்பு. விவாதிப்போம், நவீனத்தை புரிந்து கொள்ள மட்டுமல்ல அதன் கொள்கைகளையும் புரிந்து கொள்ள, எதுவுமே தப்பில்லை அண்ணா, சூழ்லைக்கு ஏற்ப நியாய தர்மங்கள் வேண்டுமானால் மாறுபடலாம்.

உணர்ந்துகொண்டேன் ஆதன். என் பிழை என்ன என்பது தெரிகிறது. விவாதிப்போம் தெளிவடைவோம்.

ஆதி
30-03-2012, 12:07 PM
//காரணம் அது சமூகத்தினை அதன் பண்பாட்டினை பிரதிபலிக்காமல் உலக இலக்கியம் என்று வர்ணம் பூசிக் கொண்டு இருக்கிறது//

இப்படி முழுமுற்றாக சொல்லி ஒதுக்கிவிட முடியாது அண்ணா

உலக இலக்கியத்தோடு இயந்தை இயங்க வேண்டும் எனும் நோக்கமாக இது இருக்கலாம், ஆனால் அந்த நோக்கத்தை நிரைவேற்றிக் கொள்ள கூட, நம் பண்பாட்டில் இருந்துத்தான் கருவையும் பொருளையும் எடுக்க வேண்டி இருக்கிறது

அது வேளையில் குறியீட்டு மொழி என்பது நவீனத்துக்கு சொந்தமானதில்லை என்பதனை நான் ஏற்கிறேன், குறீயீட்டு பொருட்டுத்தான் ஐந்திணை வந்தது, அதன் பொருட்டுத்தான் குறிப்பேற்றங்கள் நிகழ்ந்தன*

ஆனால் இந்த குறிய்யீட்டு மொழி காலத்துக்கு ஏற்றார் மாறி வந்திருகிறது, அந்த மாற்றத்தோடு இணைந்து நவீன இலக்கியம் பயணித்து, சகேதம், குறியீடு, படிமங்களை உருவாக்கி கொள்ள* வேண்டும்

தற்போதைய பிரச்சனை என்ன வென்றால், இந்த புது குறீயீட்டு, படிம, சங்கேத மொழியை உருவாக்குவதுதான்

சங்க இலக்கியத்தில் ஐந்திணை வகுத்து, இது இது இதன் பொருட்டு மாறுபாடும் என்று தெளிவாய் பகுத்து வைத்து, குறிப்பேற்றம் செய்ததால், வாசகனுக்கு அது எளிதில் எட்டிவிட்டது

மயவாதங்கள் வந்தவிட்ட இத்தருணத்தில், அதன் முழு இயமும் புரியாதவர்களிடம் அதன் சாரம் கொண்ட குறியீட்டு, படிம, சங்கேதம் கொண்ட மொழியை கொண்டு இலக்கியம் படைத்து அளிக்கும் போது, அது அவர்களுக்கு அயன்மையானதாகவே தோன்றுகிறது

இந்த அயன்மை இடைவெளியை நிரப்ப வேண்டிய கடமையை இலக்கியவாதிகளும், இதழ்களும் தவறிவிட்டன அல்லது திராவிட இயங்கள் மக்களின் இலக்கிய சிந்தனா ஆற்றலை சந்தத்திலும், திரைப்படத்திலும் கூர்மழுங்க செய்துவிட்டன

மேலை நாடுகளில் ஒவ்வொரு தத்துவம் பிறந்த போதும் அதன் அடிப்படை கொண்ட பல புத்தகங்களும், அது தொடர்ப்பான தொலைக்கட்சி விவாதங்களும், கட்டுரைகளும் கல்லூரிகளில் கருத்தரங்குகளும், திரைப்படமெடுத்தலும் நிகழ்ந்தன. இது தமிழில் இல்லாமல் போனதும் ஒரு பலவீனமே.

ஆதி
30-03-2012, 12:22 PM
இந்த குறியீட்டு மொழி இலக்கியத்துக்கு மட்டும் சொந்தமானது அல்ல, பேச்சு வழக்கிலும் இந்த குறியீட்டு மொழி உண்டு

தமிழை பொருத்தம்மட்டில் பகுதிக்கு பகுதி குறியீட்டு, சங்கேத* பேச்சு மொழி மாறுகிறது

காவலளரை குச்சி என்றும் தடி என்றும் மாமா என்றும் வசூல்ராஜா என்றும் இன்ன பல வார்த்தை சங்கேதம் கொண்ட பேச்சு மொழி நமது

உயரமானவரை நெட்டை என்றும் பனைமரம் என்றும் நெட்டக்குச்சி என்றும் குறிப்பேற்றும் பேச்சு நமது

இப்படி பகுதிக்கு பகுதி மாறுபாடு உள்லதால் தான் நவீனத்தால் ஒருமித்த ஒரு இலக்கிய மொழியை உருவாக்க இயலவில்லையோ என்று கூட தோன்றுகிறது

ஆதவா
30-03-2012, 01:01 PM
ஒரு படைப்பில் உள்ளது ஒரு அக அனுபவம். அது நமக்கு கிடைக்கிறது. அதிலிருந்து நாம் சிந்தனை செய்கிறோம், அதே அனுபவம் இன்னொருவருக்கு இன்னொரு வடிவில் இன்னொரு கருத்தில் கிடைக்கிறது..

அதைப் போன்றது இலக்கிய அனுபவம், அது நிஜ வாழ்க்கை அனுபவம்போன்ற ஒன்றை நம் கற்பனையில் நிகழ்த்துகிறது.

. ஒரு படைப்பு புகழப் படவேண்டியது அதைப் படைத்தவனின் அறிவுக்கா? இல்லைப் படிப்பவனின் அறிவுக்கா?

படைப்பு என்பது புகழுவதற்காக படைக்கப்படுவதில்லை. இங்கேயே நீங்கள் சொல்லும் கருத்து ஜெயமோகன் சொல்வதற்கு எதிராக அமைந்துவிடுகிறது, அது நிகழ்வை ஒரு கருத்தை, தத்துவத்தை அனுபவத்தை இப்படி ஏதாவது ஒன்றை அதன்போக்கில் சொல்லிவிடுகிறது. அது என்றென்றைக்கும் தன்னை தூக்கி நிறுத்துவதில் உடன்படுவதில்லை. தன்னை அறிவித்துவிட்டு தன்னை எடுத்துக் கொண்டு உபயோகம் செய்துகொள்ள அனுமதிக்கிறது. இங்கே யாரும் யாரையும் யாருடைய படைப்புகளையும் தூக்கி நிறுத்தத் தேவையில்லை.

அடுத்து, தோன்றியதை எழுது இலக்கியமாகும் என்று ஜெயமோகன் சொல்லவில்லை, நீங்கள் ”அச்” என்று தும்மிவிட்டு அதன் அர்த்தத்தை பலவிதங்களில் விளக்கினால் அது இலக்கியம் என்று நாங்கள் கொண்டாடிவிட முடியுமா? ஒரு இலக்கியப் படைப்பு அதன் உருவாக்கத்திற்கான முறையான தர்க்கம், முறையான படைப்பலங்காரம் அதுசார்ந்த அல்லது அதற்கு வெளியிலான சமூகத்திற்கு ஒட்டிய, மாற்றமுடிந்த அல்லது நிகழ்வு சொல்லும் கருத்தினாலான ஒன்றை கொண்டிருக்கவேண்டும். சீனா தும்மிசா சாச்சா வை விளக்கினால் சிரிக்கலாம், இலக்கியமாக்க முடியாது.

என் உணர்வை நீ உணரும்படி சொல்வது படைப்பின் அடையாளம்.. ஆமாம் இல்லையென்று சொல்லவில்லை. நவீன இலக்கியங்களின் படிமங்களும் குறியீடுகளும் அதையும் சொல்லுகின்றன அதைத்தாண்டியும் செல்லுகின்றன. அவ்வாறு தாண்டும்பொழுதுதான் நமக்குப் புரியவில்லையே என்று முழிக்கிறோம். படைப்பாளியின் மொத்த உணர்வும் அடங்கிய அல்லது அவனது உணர்வை மட்டும் புரிந்து கொள்ளமுடிகிற படைப்பை நிராகரிக்கவில்லை, மாறாக அது மட்டும் அவனது கடமையல்ல, தனது உணர்வின் வழி இல்லாத இன்னொன்றை வாசகனுக்கு அளிக்கிறான். வாசகனை படைப்பாளியாக்குகிறான்.. உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா என்னுடைய “என்றாள் ஜெஸிகா” கவிதையை நீங்கள் பார்த்த கோணம்... வெறும் ஓவியத்தின் விளக்கமாக எனது உணர்வை அடக்கி எழுதியிருந்ததை நீங்கள் பார்த்த கோணம் வேறு. ஆக எனது உணர்வை உள்வாங்குவதோடு நில்லாமல் நீங்கள் மேலும் உங்களுக்கான கருத்தையும் அனுபவத்தையும் உருவாக்குகிறீர்கள். இந்த சந்தர்ப்பத்தைதான் நவீன இலக்கியங்கள் வழங்குகின்றன. (மரபு இலக்கியங்களும் தான், ஆனால் அதைப்பற்றி இங்கே பேச்சில்லை.)

///எது நம்மை அதிகம் சிந்திக்க வைக்கிறது என்றால் எதையெல்லாம் நாம் அடைய முடிவதில்லையோ, புரிந்து கொள்ள இயலவில்லையோ அல்லது வெல்ல முடியவில்லையோ அவையெல்லாம் நம்மை அதிகம் சிந்திக்க வைக்கின்றன.///

எல்லா பொருள்களும் சிந்திக்க வைக்கின்றனதான். அதது அதனதன் அளவில் கலைகள் ஆகின்றன. ஒரு ஓவியம், ஒரு சினிமா, ஒரு நாடகம், ஒரு செய்தி, ஒரு வரி, ஒரு காட்சி, இவையெல்லாமும் நவீன படைப்புகள் ஆகின்றன. இவற்றில் எழுத்துவழி படைப்பு இலக்கியம் ஆகிறது. எழுத்துவழி தூண்டுதல் இலக்கியங்களில் இருக்கின்றன. சிந்திக்கும் ஒரே வழி இலக்கியம்தான் என்று சொல்லவரவில்லை, மாறாக நம்மை பலவழிகளிலும் சிந்திக்கவைக்கும் வழியை இலக்கியம் காண்பிக்கிறது.

அடுத்து, படைப்புகளை விளக்குவது குறித்து,

நானும் நிறைய கவிதைகளை விளக்கியிருக்கிறேன். ஆனால் எனது கவிதைகளுக்குள் விளக்கத்தைத் திணீக்க என்னை நான் சமரசம் செய்து கொண்டது கிடையாது. கந்தபுராணம் எழுதிய கச்சியப்பரும் கம்பராமாயணத்தை எழுதிய கம்பரும் வருடக்கணக்கில் விளக்கிக் கொண்டிருந்தார்கள் என்பது நான் அறியாமல் இருந்திருக்கலாம், ஆனால் நவீன படைப்புகளை எழுதிய எழுத்தாளர்கள், அல்லது நவீன படைப்புகளைக் குறித்த விவாதங்கள் தமிழகமெங்கும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொண்டிருப்பீர்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன். உங்களது விளக்கங்களை நீங்கள் அங்கே பெறலாம் (தெரியாதவர்கள்). ஆனால் ஒன்றை கவனிக்கவேண்டும், இன்றைய யுகத்தில் எழுதப்படும் இலக்கிய படைப்புகள் ஏராளம். மிக எளிமையான அனைவரும் புரியும்படியான படைப்புகள் அதிகம், ஒரு வாசக பயிற்சியின் மூலம் நாமே எல்லாமும் புரிந்து கொள்ளமுடியும். அதற்குத்தேவை நாம் அதிகம் படிக்கவேண்டும். அத்தனை புத்தகங்களுக்கும் விளக்கவுரை எதிர்பார்க்குமளவுக்கு நாம் நம்மை இறக்கிக் கொள்ளவேண்டாம், படைப்பாளியின் நெருக்கத்திற்கு அவன் அழைக்கும் பொழுது நாம் ஏன் நம்மைவிட்டு ஏறாமல் இருக்கிறோம் என்பதுதான் கேள்வி.

சொற்சிலம்பத்தை எடுத்துக் கொள்ளுவோம். புராணங்களைப் பற்றிய பல தகவல்கள் அதில் கொடுக்கப்பட்டிருக்கிறது. நவீன இலக்கியத்திற்கு அது ஒரு நல்ல எடுத்துக்காட்டு. நவீன் இலக்கியம் என்றால் குறீயீடுகளாக படிமங்களாக எழுதப்படுவது மட்டும் என்று பலர் தவறாகவே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது அவ்வாறில்லை, நவீன உலகில் எழுதப்படும் அனைத்துமே நவீன இலக்கியம்தான். புதிய இலக்கியம் என்று தமிழில் அழகாகச் சொல்லலாம். சொற்சிலம்பத்தில் சொல்லப்படும் கருத்துக்களை நான் புரிந்து கொள்ள எனக்கு புராண அறிவு கொஞ்சமாவது வேண்டும். அதுதான் வாசக தகுதி. எந்த புராண அறிவும் இல்லாமல் நான் அங்கே போய் ஆடமுடியாது. அதனால்தான் அங்கே என்னால் எதுவும் பதிவு செய்யமுடியவில்லை, மட்டுமல்ல வேறு யாராலும்!

நவீன இலக்கியங்களும் அப்படித்தான், தொடர்ந்த வாசிப்பு, புரியாத இலக்கியம் என்று சொல்லப்படும் படைப்புகளை கைவசம் கொண்டுவருகிறது. இதற்குமுன்னர் எனக்குப் புரியாத பல கவிதைகள் இன்று ஓரளவுக்குப் புரிகிறது. காரணம் வாசிப்பு...

ஆதவா
30-03-2012, 02:26 PM
சமூக மாற்றம் வேண்டும் என்னும் எழுத்தாளர்களும் இலக்கியம் படைக்கிறார்கள். அவர்களின் முதற்கடமை சமூகத்திற்கு புரியும்படி சொல்வது.

என்னைப் பொறுத்தவரையிலும் இலக்கியத்தின் மூலம் எந்தவொரு சமூக மாற்றத்தையும் தமிழில் கொண்டுவந்துவிட முடியாது. திராவிட இலக்கியங்கள் செய்த மாற்றங்கள்தான் இறுதியாக இருக்கும்!! அதைத்தாண்டி நம்மால் செல்லவியலாமல் அல்லது செல்ல முடியாமல் அதே திராவிட இலக்கியங்கள்தான் அடைத்துக் கொண்டு நிற்கின்றன.

சமூகத்தில் நிகழுவதை நிகழ்வாக காட்டிவிட்டு போய்விடவேண்டும், அதற்கான தீர்வை வாசகனும் தீர்மானிக்கலாம். அந்த சுதந்திரத்தை இலக்கியம் தருகிறது. மாற்றுகருத்தைக் கூட நம்மால் வைக்க முடிகிறது. சமூகத்திற்குப் புரியும்படி எழுதவேண்டும் என்றால் எனக்கான மொழியில் செறிவாக எதுவும் எழுதமுடியாது. படைப்பாளி அவனது மொழியின் திறத்தில் மேலோங்கி சென்று கொண்டேயிருக்கும் பொழுது அவனை கீழிறங்கச் சொல்வது நியாயமில்லை. அவன் செய்யும் வேலையை வாசிப்பவன் ஏன் செய்யக்கூடாது? வாசிப்பவனும் அந்நிலையை அடையவெண்டும் என்பது படைப்பாளிகளின் பரவலான கருத்து

தாமரை
31-03-2012, 02:02 AM

நீங்கள் சொல்லும் அந்த திராவிட இலக்கியங்கள் எப்படி மக்களிடம் சென்றன? திராவிட இயக்கத் தலைவர்கள் அதனை மேடைக்கு மேடை விளக்கோ விளக்கு என விளக்கியதால்தானே? நீ செறிவாக எழுது. அதில் தவறே இல்லை. ஆனால் அதை மக்களிடம் சேர்ப்பதும் உன்னுடைய கடமைதான். அந்தக் கடமையை ஒரு பொழுதும் தட்டிக் கழித்துவிட முடியாது.

பல தரப்பட்ட எழுத்தாளர்களும், புத்தகங்களும், பத்திரிக்கைகளும், தொலைகாட்சி மற்றும் இன்னபிற ஊடகங்களும் நிறைந்திருக்கின்ற காலகட்டத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்து விடக் கூடாது. படைப்பாளிக்கு படைப்புச் சுதந்திரம் உள்ளது போல் இரசிகனுக்கு ரசிப்புச் சுதந்திரம் இருக்கிறது.

ஒரு மீண்டும் வாழ்க்கையில் வெற்றி தோல்வி உண்டா? இருந்தால் அதற்குக் காரணம் தானா? அல்லது சூழலா என்ற பட்டி மன்றத்தில் உள்ள கண்மணியின் வாதங்களை ஊன்றிப் படிக்கவும்.

http://www.tamilmantram.com/vb/showthread.php?p=434370#post434370

எது சமூகத்தில் சென்று சேரவில்லையோ அது அழிந்து விடும்.

வாசிப்பவனின் கடமை என்ன என்று சொல்லி இதைத் தட்டிக் கழித்து விட முடியாது. வாசிப்பவனுக்கு ஆர்வத்தை உண்டாக்கும் செயலை நவீன இலக்கியவாதிகள் செய்வதில்லை. அவர்களால் ஊடகங்களின் வலிமையை உபயோகித்துக் கொள்ள இயலவில்லை. காரணம் அவர்கள் சமூகத்திலிருந்து விலகி இருக்கிறார்கள்.

தாமரை
31-03-2012, 02:28 AM
ஒரு படைப்பில் உள்ளது ஒரு அக அனுபவம். அது நமக்கு கிடைக்கிறது. அதிலிருந்து நாம் சிந்தனை செய்கிறோம், அதே அனுபவம் இன்னொருவருக்கு இன்னொரு வடிவில் இன்னொரு கருத்தில் கிடைக்கிறது..

அதைப் போன்றது இலக்கிய அனுபவம், அது நிஜ வாழ்க்கை அனுபவம்போன்ற ஒன்றை நம் கற்பனையில் நிகழ்த்துகிறது.

. ஒரு படைப்பு புகழப் படவேண்டியது அதைப் படைத்தவனின் அறிவுக்கா? இல்லைப் படிப்பவனின் அறிவுக்கா?

படைப்பு என்பது புகழுவதற்காக படைக்கப்படுவதில்லை. இங்கேயே நீங்கள் சொல்லும் கருத்து ஜெயமோகன் சொல்வதற்கு எதிராக அமைந்துவிடுகிறது, அது நிகழ்வை ஒரு கருத்தை, தத்துவத்தை அனுபவத்தை இப்படி ஏதாவது ஒன்றை அதன்போக்கில் சொல்லிவிடுகிறது. அது என்றென்றைக்கும் தன்னை தூக்கி நிறுத்துவதில் உடன்படுவதில்லை. தன்னை அறிவித்துவிட்டு தன்னை எடுத்துக் கொண்டு உபயோகம் செய்துகொள்ள அனுமதிக்கிறது. இங்கே யாரும் யாரையும் யாருடைய படைப்புகளையும் தூக்கி நிறுத்தத் தேவையில்லை.

அடுத்து, தோன்றியதை எழுது இலக்கியமாகும் என்று ஜெயமோகன் சொல்லவில்லை, நீங்கள் ”அச்” என்று தும்மிவிட்டு அதன் அர்த்தத்தை பலவிதங்களில் விளக்கினால் அது இலக்கியம் என்று நாங்கள் கொண்டாடிவிட முடியுமா? ஒரு இலக்கியப் படைப்பு அதன் உருவாக்கத்திற்கான முறையான தர்க்கம், முறையான படைப்பலங்காரம் அதுசார்ந்த அல்லது அதற்கு வெளியிலான சமூகத்திற்கு ஒட்டிய, மாற்றமுடிந்த அல்லது நிகழ்வு சொல்லும் கருத்தினாலான ஒன்றை கொண்டிருக்கவேண்டும். சீனா தும்மிசா சாச்சா வை விளக்கினால் சிரிக்கலாம், இலக்கியமாக்க முடியாது.

என் உணர்வை நீ உணரும்படி சொல்வது படைப்பின் அடையாளம்.. ஆமாம் இல்லையென்று சொல்லவில்லை. நவீன இலக்கியங்களின் படிமங்களும் குறியீடுகளும் அதையும் சொல்லுகின்றன அதைத்தாண்டியும் செல்லுகின்றன. அவ்வாறு தாண்டும்பொழுதுதான் நமக்குப் புரியவில்லையே என்று முழிக்கிறோம். படைப்பாளியின் மொத்த உணர்வும் அடங்கிய அல்லது அவனது உணர்வை மட்டும் புரிந்து கொள்ளமுடிகிற படைப்பை நிராகரிக்கவில்லை, மாறாக அது மட்டும் அவனது கடமையல்ல, தனது உணர்வின் வழி இல்லாத இன்னொன்றை வாசகனுக்கு அளிக்கிறான். வாசகனை படைப்பாளியாக்குகிறான்.. உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா என்னுடைய “என்றாள் ஜெஸிகா” கவிதையை நீங்கள் பார்த்த கோணம்... வெறும் ஓவியத்தின் விளக்கமாக எனது உணர்வை அடக்கி எழுதியிருந்ததை நீங்கள் பார்த்த கோணம் வேறு. ஆக எனது உணர்வை உள்வாங்குவதோடு நில்லாமல் நீங்கள் மேலும் உங்களுக்கான கருத்தையும் அனுபவத்தையும் உருவாக்குகிறீர்கள். இந்த சந்தர்ப்பத்தைதான் நவீன இலக்கியங்கள் வழங்குகின்றன. (மரபு இலக்கியங்களும் தான், ஆனால் அதைப்பற்றி இங்கே பேச்சில்லை.)

///எது நம்மை அதிகம் சிந்திக்க வைக்கிறது என்றால் எதையெல்லாம் நாம் அடைய முடிவதில்லையோ, புரிந்து கொள்ள இயலவில்லையோ அல்லது வெல்ல முடியவில்லையோ அவையெல்லாம் நம்மை அதிகம் சிந்திக்க வைக்கின்றன.///

எல்லா பொருள்களும் சிந்திக்க வைக்கின்றனதான். அதது அதனதன் அளவில் கலைகள் ஆகின்றன. ஒரு ஓவியம், ஒரு சினிமா, ஒரு நாடகம், ஒரு செய்தி, ஒரு வரி, ஒரு காட்சி, இவையெல்லாமும் நவீன படைப்புகள் ஆகின்றன. இவற்றில் எழுத்துவழி படைப்பு இலக்கியம் ஆகிறது. எழுத்துவழி தூண்டுதல் இலக்கியங்களில் இருக்கின்றன. சிந்திக்கும் ஒரே வழி இலக்கியம்தான் என்று சொல்லவரவில்லை, மாறாக நம்மை பலவழிகளிலும் சிந்திக்கவைக்கும் வழியை இலக்கியம் காண்பிக்கிறது.

அடுத்து, படைப்புகளை விளக்குவது குறித்து,

நானும் நிறைய கவிதைகளை விளக்கியிருக்கிறேன். ஆனால் எனது கவிதைகளுக்குள் விளக்கத்தைத் திணீக்க என்னை நான் சமரசம் செய்து கொண்டது கிடையாது. கந்தபுராணம் எழுதிய கச்சியப்பரும் கம்பராமாயணத்தை எழுதிய கம்பரும் வருடக்கணக்கில் விளக்கிக் கொண்டிருந்தார்கள் என்பது நான் அறியாமல் இருந்திருக்கலாம், ஆனால் நவீன படைப்புகளை எழுதிய எழுத்தாளர்கள், அல்லது நவீன படைப்புகளைக் குறித்த விவாதங்கள் தமிழகமெங்கும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொண்டிருப்பீர்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன். உங்களது விளக்கங்களை நீங்கள் அங்கே பெறலாம் (தெரியாதவர்கள்). ஆனால் ஒன்றை கவனிக்கவேண்டும், இன்றைய யுகத்தில் எழுதப்படும் இலக்கிய படைப்புகள் ஏராளம். மிக எளிமையான அனைவரும் புரியும்படியான படைப்புகள் அதிகம், ஒரு வாசக பயிற்சியின் மூலம் நாமே எல்லாமும் புரிந்து கொள்ளமுடியும். அதற்குத்தேவை நாம் அதிகம் படிக்கவேண்டும். அத்தனை புத்தகங்களுக்கும் விளக்கவுரை எதிர்பார்க்குமளவுக்கு நாம் நம்மை இறக்கிக் கொள்ளவேண்டாம், படைப்பாளியின் நெருக்கத்திற்கு அவன் அழைக்கும் பொழுது நாம் ஏன் நம்மைவிட்டு ஏறாமல் இருக்கிறோம் என்பதுதான் கேள்வி.

சொற்சிலம்பத்தை எடுத்துக் கொள்ளுவோம். புராணங்களைப் பற்றிய பல தகவல்கள் அதில் கொடுக்கப்பட்டிருக்கிறது. நவீன இலக்கியத்திற்கு அது ஒரு நல்ல எடுத்துக்காட்டு. நவீன் இலக்கியம் என்றால் குறீயீடுகளாக படிமங்களாக எழுதப்படுவது மட்டும் என்று பலர் தவறாகவே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது அவ்வாறில்லை, நவீன உலகில் எழுதப்படும் அனைத்துமே நவீன இலக்கியம்தான். புதிய இலக்கியம் என்று தமிழில் அழகாகச் சொல்லலாம். சொற்சிலம்பத்தில் சொல்லப்படும் கருத்துக்களை நான் புரிந்து கொள்ள எனக்கு புராண அறிவு கொஞ்சமாவது வேண்டும். அதுதான் வாசக தகுதி. எந்த புராண அறிவும் இல்லாமல் நான் அங்கே போய் ஆடமுடியாது. அதனால்தான் அங்கே என்னால் எதுவும் பதிவு செய்யமுடியவில்லை, மட்டுமல்ல வேறு யாராலும்!

நவீன இலக்கியங்களும் அப்படித்தான், தொடர்ந்த வாசிப்பு, புரியாத இலக்கியம் என்று சொல்லப்படும் படைப்புகளை கைவசம் கொண்டுவருகிறது. இதற்குமுன்னர் எனக்குப் புரியாத பல கவிதைகள் இன்று ஓரளவுக்குப் புரிகிறது. காரணம் வாசிப்பு...

1. படைப்பு என்பது புகழப்படுவதற்காக எழுதப்படவில்லை.

அப்படியானால் நவீன இலக்கியவாதிகள் ஏன் வாசகர்களை திட்ட வேண்டும்?

2. சீனா தும்மிசா சாச்சா வை விளக்கினால் சிரிக்கலாம், இலக்கியமாக்க முடியாது.

நகைச்சுவையும் ஒரு இலக்கியமே ஆதவா. கிரேக்க அரிஸ்டோஃபனீஸ் லிருந்து தமிழில் பாக்கியம் இராமசாமி வரை பலர் நகைச்சுவை இலக்கியங்களைப் படைத்திருக்கிறார்கள். வீரமாமுனிவரின் பரம்மார்த்த குருவும் முட்டாள் சீடர்களும் கூட இலக்கியம்தான். வெறுமனே தமிழ் மன்றத்தில் பொழுது போக்காக எழுதிவிட்டு மறந்து விட்டதால் சீனா தும்மிச்சா இலக்கியமில்லை. ஆனால் அதை மக்களுக்குச் சரியான வகையில் கொண்டு சேர்த்திருந்தால் அது இலக்கியம் ஆகி இருக்கலாம்.

3. என்னுடைய “என்றாள் ஜெஸிகா” கவிதையை நீங்கள் பார்த்த கோணம்... வெறும் ஓவியத்தின் விளக்கமாக எனது உணர்வை அடக்கி எழுதியிருந்ததை நீங்கள் பார்த்த கோணம் வேறு. ஆக எனது உணர்வை உள்வாங்குவதோடு நில்லாமல் நீங்கள் மேலும் உங்களுக்கான கருத்தையும் அனுபவத்தையும் உருவாக்குகிறீர்கள். இந்த சந்தர்ப்பத்தைதான் நவீன இலக்கியங்கள் வழங்குகின்றன. (மரபு இலக்கியங்களும் தான், ஆனால் அதைப்பற்றி இங்கே பேச்சில்லை.)

இதை சரியாக நீங்கள் புரிந்து கொண்டால் இன்றைய நவீன இலக்கியவாதிகளின் பிரச்சனை என்ன என்று உங்களுக்குச் சட்டென்று புரிந்து விடும். இலக்கியங்கள் தனி மனிதனால் படைக்கப்பட்டாலும், அது சரியான விவாதங்களுக்கு ஆளாகி மெருகேற்றப்பட்டு மக்களின் மத்தியில் வைக்கப்படும் வரை அவை வெறும் எழுத்துக்களே. தமிழ்ச்சங்கம் இதைச் செய்தது. பல காலங்களிலும் படைப்புகள் பிற படைப்பாளிகளினால் திறனாய்வு செய்யப்பட்டு வெளிப்பட்டன. நமது மன்றத்தில் அப்படி பட்டை தீட்டும் விமர்சனங்களும், ஒரு படைப்பை இரசிகனுக்குச் சரியான கோணத்தில் சேர்க்கும் அமைப்பும் இருந்தன. அப்படி இன்று எத்தனை தளங்கள் உள்ளன. இங்கே படைப்பாளிகளே முதற்கட்ட வாசகர்களாக இருந்து படைப்பை இரசிக்கக் கற்றுத்தரவேண்டும் என்பது புரிகிறதல்லவா?

இன்றைய நவீன இலக்கியவாதிகளுக்கு விமர்சனத்தைத் தாங்கும் சக்தி இருக்கிறதா? தன் படைப்பு மீதான விவாதங்களுக்கு அவர்கள் தயாராக இருக்கிறார்களா?

ஒரு வார்த்தை கடுமையான விமர்சனம் வந்து விட்டால் வசைமொழிகள் தாண்டவமாடத் தொடங்கிவிடுகின்றன. படைப்புகளை விட்டு விட்டு தனிமனிதத் தாக்குதல்களில் தரக்குறைவான வார்த்தைகளுடன் இறங்கிவிடுகிறார்கள். இவர்கள் வாசகனுக்கு இன்ன தகுதிகள் இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பது என்ன விதத்தில் ஞாயம். இவர்களே சக படைப்பாளியின் படைப்பை திறந்த மனதுடன் இரசிப்பதில்லை. வாசகனாக இருக்க விருப்பப்படாத படைப்பாளிகள் அல்லவா இவர்கள். (எங்கிருந்தோ எழுதும் யாரோ ஒருவனின் படைப்பை அரைகுறையாகப் புரிந்தாலும் தூக்கிக் கொண்டாடி விட்டு சக படைப்பாளியைத் திட்டுவதே நோக்கம் என்றாகி விட்டபின் அங்கே இலக்கியம் எங்கே இருக்கும் ஆதவா?)

5. சொற்சிலம்பம் ஒரு இலக்கியமல்ல. அது ஒரு இலக்கியப்பயிற்சி. அதைச் சரியான முறையில் கட்டி தர்க்க சாத்திரக் கட்டமைப்பில் ஒரு நூலில் கோர்க்கப்பட்ட மாலை போல் கருத்துக்களை கட்டி அதில் சமூகத்திற்கென எதையாவது நுழைத்து, தகுந்த ஊடகம் மூலம் அதை எப்படிப் படிப்பது என விளக்கி மக்களிடம் சேர்த்திருந்தால் இலக்கியம். இலக்கியங்கள் இப்படிப்பட்ட தர ஆய்வுகளுக்கும் விவாதங்களுக்கும் தயாராக இருக்க வேண்டும்.

6. நவீன உலகில் எழுதப்படும் அனைத்துமே நவீன இலக்கியம்தான். - இதை நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் நவீன இலக்கியவாதிகள் ஒத்துக் கொள்கிறார்களா?

தாமரை
31-03-2012, 02:46 AM
//காரணம் அது சமூகத்தினை அதன் பண்பாட்டினை பிரதிபலிக்காமல் உலக இலக்கியம் என்று வர்ணம் பூசிக் கொண்டு இருக்கிறது//

இப்படி முழுமுற்றாக சொல்லி ஒதுக்கிவிட முடியாது அண்ணா

உலக இலக்கியத்தோடு இயந்தை இயங்க வேண்டும் எனும் நோக்கமாக இது இருக்கலாம், ஆனால் அந்த நோக்கத்தை நிரைவேற்றிக் கொள்ள கூட, நம் பண்பாட்டில் இருந்துத்தான் கருவையும் பொருளையும் எடுக்க வேண்டி இருக்கிறது

அது வேளையில் குறியீட்டு மொழி என்பது நவீனத்துக்கு சொந்தமானதில்லை என்பதனை நான் ஏற்கிறேன், குறீயீட்டு பொருட்டுத்தான் ஐந்திணை வந்தது, அதன் பொருட்டுத்தான் குறிப்பேற்றங்கள் நிகழ்ந்தன*

ஆனால் இந்த குறிய்யீட்டு மொழி காலத்துக்கு ஏற்றார் மாறி வந்திருகிறது, அந்த மாற்றத்தோடு இணைந்து நவீன இலக்கியம் பயணித்து, சகேதம், குறியீடு, படிமங்களை உருவாக்கி கொள்ள* வேண்டும்

தற்போதைய பிரச்சனை என்ன வென்றால், இந்த புது குறீயீட்டு, படிம, சங்கேத மொழியை உருவாக்குவதுதான்

சங்க இலக்கியத்தில் ஐந்திணை வகுத்து, இது இது இதன் பொருட்டு மாறுபாடும் என்று தெளிவாய் பகுத்து வைத்து, குறிப்பேற்றம் செய்ததால், வாசகனுக்கு அது எளிதில் எட்டிவிட்டது

மயவாதங்கள் வந்தவிட்ட இத்தருணத்தில், அதன் முழு இயமும் புரியாதவர்களிடம் அதன் சாரம் கொண்ட குறியீட்டு, படிம, சங்கேதம் கொண்ட மொழியை கொண்டு இலக்கியம் படைத்து அளிக்கும் போது, அது அவர்களுக்கு அயன்மையானதாகவே தோன்றுகிறது

இந்த அயன்மை இடைவெளியை நிரப்ப வேண்டிய கடமையை இலக்கியவாதிகளும், இதழ்களும் தவறிவிட்டன அல்லது திராவிட இயங்கள் மக்களின் இலக்கிய சிந்தனா ஆற்றலை சந்தத்திலும், திரைப்படத்திலும் கூர்மழுங்க செய்துவிட்டன

மேலை நாடுகளில் ஒவ்வொரு தத்துவம் பிறந்த போதும் அதன் அடிப்படை கொண்ட பல புத்தகங்களும், அது தொடர்ப்பான தொலைக்கட்சி விவாதங்களும், கட்டுரைகளும் கல்லூரிகளில் கருத்தரங்குகளும், திரைப்படமெடுத்தலும் நிகழ்ந்தன. இது தமிழில் இல்லாமல் போனதும் ஒரு பலவீனமே.

1. தற்போதைய பிரச்சனை என்ன வென்றால், இந்த புது குறீயீட்டு, படிம, சங்கேத மொழியை உருவாக்குவதுதான்

அது உருவாக்கப்படுவதில்லை உருவாவது. பறவை என்றால் சுதந்திரம் என யாரோ சொன்னது இல்லை.. புலி கூட சுதந்திரம்தான். ஆனால் அதன் பாதையில் மரங்கள், பாறைகள்,, நீர்நிலைகள் என எவ்வளவோ தடைகள். அவற்றை சுற்றித்தான் போகவேண்டும். ஆனால் பறவைக்கு? வானில் பறக்கையில் எந்ததிசையில்லும் தடைகள் இல்லை. எனவோ யாரோ உருவாக்கிய குறியீடு இல்லை. அந்தக் குறியீடும் பலருக்கு விளக்கவும் படவில்லை. அந்தக் குறியீடு எப்படி நிலைக்க் முடியும்? யோசித்துப் பாருங்கள்.

2. மேலை நாடுகளில் ஒவ்வொரு தத்துவம் பிறந்த போதும் அதன் அடிப்படை கொண்ட பல புத்தகங்களும், அது தொடர்ப்பான தொலைக்கட்சி விவாதங்களும், கட்டுரைகளும் கல்லூரிகளில் கருத்தரங்குகளும், திரைப்படமெடுத்தலும் நிகழ்ந்தன. இது தமிழில் இல்லாமல் போனதும் ஒரு பலவீனமே

இதை ஆதவாவிற்குச் சொன்ன பதிலில் விளக்கி இருக்கிறேன்.

கலைவேந்தன்
31-03-2012, 02:41 PM
நவீன இலக்கியத்திற்கு வரையறைகளும் இலக்கணங்களும் குறியீட்டு முறைகளும் ஏன் இதுவரை எவராலும் எழுதப்படவில்லை..?

இதனைக் கற்றறிந்து தெளிந்தவர் எழுதலாமே..? வரும் தலைமுறைக்கும் பழைய ஆட்களான என்னைப்போன்றோருக்கும் பயன் தருமே..

ஆதி போன்ற நவீன இலக்கியம் அறிந்தோர் இதுகுறித்து புதுக்காப்பியம் எழுதலாமே .. ( தொல் காப்பியம் போல் )

இதனைப்பற்றி அறிய விழைவோரில் நானும் ஒருவன். உதவினால் நன்றியுடன் இருப்பேன்.

விவாதம் தொடரட்டும்.

ஆதவா
01-04-2012, 06:29 AM
1. நீ செறிவாக எழுது. அதில் தவறே இல்லை. ஆனால் அதை மக்களிடம் சேர்ப்பதும் உன்னுடைய கடமைதான்.

பெரும்பாலான படைப்பாளிகள் அதைச் செய்கிறார்கள் அண்ணா. அங்கங்கே இலக்கிய கூட்டங்கள், விவாத அரங்கங்கள், கவிதை விளக்கக் கூட்டங்கள், விமர்சன கூட்டங்கள் என நடந்து கொண்டேயிருக்கிறது. அவ்வளவு ஏன், நாங்களே (திருப்பூரிலிருந்து எழுதும் வலைப்பதிவர்கள்- சேர்தளம்) அவ்வப்போது கூட்டங்களை நடத்தியிருக்கிறோம். கவிஞர் மகுடேஸ்வரன், (http://aadav.blogspot.in/2010/07/blog-post.html) எழுத்தாளர் எஸ்.ரா போன்றவர்களை அழைத்து கூட்டங்கள் நடத்தி எங்களது சந்தேகங்களைக் கேட்டிருக்கிறோம். குறிப்பாக எஸ்.ரா எப்படி எங்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார் என்றால் ஒரு விமர்சனத்தின் மூலமாக, எனது நண்பர் முரளி நெடுங்குருதி எனும் எஸ்ராவின் நாவல் ஒரு வெளிநாட்டு நாவலிலிருந்து பிரதியெடுக்கப்பட்டது என்று எஸ்ராவிடம் வாதிட, அவரோ, உங்களை நான் நேரடியாக சந்திக்கிறேன், உங்களுக்கு இசைவான நாளைச் சொல்லுங்கள் என்றார்.. அதாவது அவர் எங்களை சந்திக்க எங்களிடம் அனுமதி கேட்டார்.. அவருடைய குணாதிசத்தில் இதுவும் ஒன்று, “உங்களை சந்திக்கவேண்டும்” என்று அவரிடம் சொன்னால் “ உங்கள் ஊருக்கே வருகிறேன்” என்பார். நண்பர் கார்த்திகைப் பாண்டியன் அவரை சந்திக்க அனுமதி கேட்டபொழுது அப்படித்தான் சொன்னார். நேரில் எதிர்வினைகளை எந்தவித முக சுழிவுமின்றி கையாளுவார்.

இதை எதற்காக சொல்லுகிறேன் என்றால் அவர் வாசகர்களோடு எவ்வளவு நெருக்கத்தில் பயணிக்க விரும்புகிறார் என்பதால்தான். எங்களோடு கோவிலில் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் அங்கு வந்தவர்கள் கூட அவர் பேச்சைக் கேட்டார்கள், யாரென்று தெரியாமலேயே அதுமட்டுமல்ல, அவரது தொலைபேசி எண்ணையும் கொடுத்து, எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளுங்கள் என்று சொன்னதுதான் ஆச்சரியமே!!

ஆக, அவர்கள் இறங்கி வருகிறார்கள். நாம் ஏறிச்செல்ல தயாராக இருக்கிறோமா என்றால் இல்லை என்றுதான் சொல்லுவேன்.

2. பல தரப்பட்ட எழுத்தாளர்களும், புத்தகங்களும், பத்திரிக்கைகளும், தொலைகாட்சி மற்றும் இன்னபிற ஊடகங்களும் நிறைந்திருக்கின்ற காலகட்டத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்து விடக் கூடாது. படைப்பாளிக்கு படைப்புச் சுதந்திரம் உள்ளது போல் இரசிகனுக்கு ரசிப்புச் சுதந்திரம் இருக்கிறது.

முதலில் ஒரு ரசிகன் ஒரு படைப்பாளியை எப்படி அணுகுகிறான் என்பதில்தான் இருக்கிறது... நம் மன்றத்தில் தாமரை அண்ணா எழுதிய ஒரு வரியைக் கூட படிக்காமல் “நீங்கள் என்னத்த எழுதுவிட்டீர்கள்” என்று கேட்பது எப்படி இருக்கும்? ஜெயமோகன் எழுதிய பெரிய நாவலான விஷ்ணுபுரத்தைப் படிக்காமலேயே ஒருவர் “இந்த நாவலின் மையக்கருத்து என்ன “ என்று கேட்கிறார். அதற்கு ஜெயமோகன், “இப்படி ஓரிரு வரிகளில் சொல்லமுடிந்தால் நான் எதற்காக இவ்வளவு பெரிய நாவலை எழுதப்போகிறேன்” என்கிறார்.. இன்று நாம் மிக சுருக்கமான கடமைகளை, படைப்புகளை எதிர்பார்க்கிறோம்.. கிரிக்கெட்டில் கூட நமக்கு 20-20தான் பிடிக்கிறது. உலகம் சுருங்கிவிட்டது. அதற்காக ஒரு நாவலை பாக்கெட் சைஸுக்கு இருந்தால்தான் தெரிந்து கொள்வோம் என்பதா? இன்னுமொரு கேள்வி படைப்பாளர்களை கோபம் கொள்ளச் செய்வது “ உங்கள் நாவல் எங்கே கிடைக்கிறது?, உங்கள் நாவலிலேயே சிறந்தது எது?” போன்ற்வை... அதாவது (நுழையும்) யாரும் நாவலை முழுதாகப் படித்து பிறகு விவாதம் செய்யத்தயாராக இல்லை. புரியவில்லை என்ற ஒற்றை பதிலோடு ஒதுக்கிவிடுகிறார்கள். அல்லது “புரியாத நாவலை எழுதின இவனெல்லாம் ஒரு படைப்பாளியா” என்று கோபமுறுகிறார்கள்.

இன்றைய சூழ்நிலையில் வாசகர் தொடர்புக்காக கிட்டத்தட்ட எல்லா எழுத்தாளர்களும் வலைத்தளமும், சமூக தளங்களிலும் இயங்குகிறார்கள். உங்கள் கேள்விக்கு உடனே பதிலும் கிடைக்கும், ஆனால் கேள்வி படைப்பை பற்றியதாக இருக்கவேண்டும், படைப்பாளியைப் பற்றியதாக இருக்கக் கூடாது...

3. எது சமூகத்தில் சென்று சேரவில்லையோ அது அழிந்து விடும்.

மொழியில் ஒழுங்கான படைப்புகளைத் தரமுடியாவிட்டால் மொழியின் இலக்கியத் தரம் வெகுவாக குறைந்துவிடும். தமிழர்களுக்கு பொழுதுபோக்கில் நாட்டம் அதிகம். அவர்களை இலக்கியத்தின் பக்கம் திருப்புவது காங்க்ரீட்டை கையால் உடைப்பது போன்றது. நமக்கு எதிலும் உள்வாங்கும் திறனே கிடையாது. இலக்கியம் மட்டுமல்ல, சினிமாவிலும் கூட. என்னுடைய விசிட்டிங் கார்டை ஒருவருக்குக் கொடுத்தேன், அவர் இப்படி அப்படி திருப்பிவிட்டு “என்னங்க உங்க பேரையே காணோமே” என்றார்... அவரிடம் சொன்னேன் “ சார், விசிட்டிங் கார்டை சரியா உள்வாங்குங்க, நல்லா பாருங்க” என்றேன். என்னுடைய பெயர் அதில் இருந்தது. அவர் பார்த்த விசிட்டிங் கார்ட்களிலேல்லாம் பெயரை கொட்டை எழுத்தில் போட்டு பளிச்சென்று இருந்திருக்கும், என்னுடையதில் அப்படியல்ல. அதாவது நான் மோலோட்டமாக புரிந்து கொள்ள விரும்புகிறேன் என்று நினைக்கிறார்கள், யாரும் ஊடுறுவ விரும்புவதில்லை///

பக்கத்து நாடான கேரளத்தை உதாரணமாகக் கொண்டால், அங்கே எவ்வளவு தீவிரமாக, ஆர்வமாக இலக்கியங்களைக் குறித்து விவாதம் நடக்கிறது!! நமது நாட்டில் ஏன் இல்லை என்று யோசித்தோமானால் விடை கிடைக்கும்!!

4. படைப்பு என்பது புகழப்படுவதற்காக எழுதப்படவில்லை. - அப்படியானால் நவீன இலக்கியவாதிகள் ஏன் வாசகர்களை திட்ட வேண்டும்?

படைப்பை உள்வாங்காமல் படைப்பாளிகளைத் திட்டுபவர்களையே இலக்கியவாதிகள் திட்டுகிறார்கள். இதில் சில விதிவிலக்குகள் இருக்கலாம், எல்லாருமே ஒழுக்கமானவர்கள் என்று என்னால் உத்திரவாதம் தரவியலாது. எஸ்ராவிடம் “உறுபசி நாவலில் சில இடங்களில் தடுமாறியிருக்கிறீர்கள்” என்றதும் “நீ என்னொடயதை எத்தனை படித்திருக்கிறாய், உனக்கு முதலில் இலக்கிய பயிற்சி இருக்கிறதா என்றெல்லாம் திட்டவில்லை... மாறாக அதனை விளக்கினார். சாருவின் கவிதைகளுக்கு ஆதி கொடுத்த விமர்சனமும் அதற்கு சாருவின் பதிலையும் நீங்கள் ஆதியிடமிருந்து பெறலாம். படைப்பாளிகள் நிறைய கேள்விகளை எதிர்நோக்குகிறார்கள், அதில் அவர்களுக்கு பதில் சொல்ல ஏதுவானதை விரும்பி சொல்லுகிறார்கள், சில்லித்தனமான கேள்விகளுக்கும் அவர்கள் திட்டாமல் பதில்சொல்லியே ஆகவேண்டும் என்று கட்டாயமில்லை.. படைப்பாளிகளுக்கும் இந்த சுதந்திரம் இருக்கிறதல்லவா?

5. நகைச்சுவையும் ஒரு இலக்கியமே ஆதவா, சீனா தும்மிச்சா இலக்கியமில்லை ஆனால் அதை மக்களுக்குச் சரியான வகையில் கொண்டு சேர்த்திருந்தால் அது இலக்கியம் ஆகி இருக்கலாம்.

நகைச்சுவை இலக்கியமில்லை என்று நான் சொல்லவரவில்லை, மற்றபடி நீங்கள் சொன்னதேதான் எனக்கும், அதை சரியாக கொண்டு சேர்தால் அது இலக்கியமே, அதற்காக எதையாவது எழுதி, அதற்கு ஒரு அர்த்தம் கொடுத்து மக்களிடம் சேர்த்து இலக்கியம் என்று பெயர் வாங்கிவிட முடியுமா? இங்கே நடந்து கொண்டிருப்பது அதுதான். மிக எளிமையாக மக்களிடம் கொண்டுசேர்க்கிறேன் என்ற பெயரில் எழுதப்படும் எழுத்துக்கள் எல்லாவற்றையும் இலக்கியம் என்று எடுத்துக் கொள்ளவியலாது. அதாவது அடுக்கி எழுதினால் கவிதை என்ற முறையை மட்டுமே கையாண்டு எழுதப்படும் கவிதைகளை எப்படி கவிதைகள் என்று எடுத்துக் கொள்வது??

6. இலக்கியங்கள் தனி மனிதனால் படைக்கப்பட்டாலும், அது சரியான விவாதங்களுக்கு ஆளாகி மெருகேற்றப்பட்டு மக்களின் மத்தியில் வைக்கப்படும் வரை அவை வெறும் எழுத்துக்களே. தமிழ்ச்சங்கம் இதைச் செய்தது. பல காலங்களிலும் படைப்புகள் பிற படைப்பாளிகளினால் திறனாய்வு செய்யப்பட்டு வெளிப்பட்டன. நமது மன்றத்தில் அப்படி பட்டை தீட்டும் விமர்சனங்களும், ஒரு படைப்பை இரசிகனுக்குச் சரியான கோணத்தில் சேர்க்கும் அமைப்பும் இருந்தன. அப்படி இன்று எத்தனை தளங்கள் உள்ளன. இங்கே படைப்பாளிகளே முதற்கட்ட வாசகர்களாக இருந்து படைப்பை இரசிக்கக் கற்றுத்தரவேண்டும் என்பது புரிகிறதல்லவா

இன்றும் எல்லா படைப்புகளும் விவாதத்திற்கு உட்படவேண்டுமென்றுதான் எல்லாரும் நினைக்கிறோம். தமிழ்ச்சங்க புலவர்கள் மக்களிடம் விளக்க செய்தார்களென்றே வைத்துக் கொள்வோம். இன்று ஒரு படைப்பாளி தனது கவிதைத் தொகுப்பை வெளியிட்டு அதை விளக்க முற்படுவதில்லை என்றும் கொள்வோம். தொலைத்தொடர்பு அற்ற அன்று அவர்களே சென்று மக்களிடம் விளக்கினார்கள், இன்று அப்படி தன்னை நிலைநிறுத்திவிட படைப்பாளிகளால் முடியாது. பொருளாதார சூழ்நிலை இடங்கொடுக்காது. அதற்குப் பதிலாக பெரும்பாலானோர் தொகுப்பில் முகவரிகளைத் தருகிறார்கள். அழைத்து பேசலாம், அல்லது அவர்களத் தொடர்புகொள்ள பல வழிகள் உண்டு... ஒருவேளை அதற்கும் அவர்கள் வரத் தயாராக இல்லை என்றால் ஓகே, சரிதான் நீங்கள் சொல்வது என்று ஒத்துக் கொள்ளலாம்... அடுத்து,

ஒரு படைப்பை படைப்பாளி பார்ப்பது வேறு, வாசகன் பார்ப்பது வேறு. படைப்பாளி ஒருமுறை விளக்கிவிட்டால் பெரும்பாலான வாசகர்கள் அந்த கருத்தோடு மட்டும் நின்றுவிடுவார்கள்< உதாரணத்திற்கு கவிதையைப் பிரித்து முற்றிடுமா திரியில் தாமரை அண்ணா கவிதையின் விளக்கம் ஒன்றே ஒன்று மட்டும்தான் என்று சொல்லியிருந்தால் அதற்குப் பிறகு யாரும் அடுத்த விளக்கத்தை யோசித்திருக்கவே மாட்டார்கள், ஒவ்வொரு பதிவின் கடைசியில் இதுமட்டுமே விளக்கமல்ல, மேலும் இருக்கிறது என்று சொன்னதால் நாங்கள் தேடினோம்.. (எங்களது அறிவுக்கு கிடைக்கவில்லை என்பது வேறு.) ஆக படைப்பாளி தனது படைப்பை விளக்குவதிலும் பிரச்சனை உள்ளது... ஒரு தொகுப்பு நூறு கவிதைகளை விளக்கிக் கொண்டிருந்தால் அடுத்த படைப்பை எழுதமுடியாது. அவர்களிடமிருந்து அதனைப் பறிப்பது போலாகிவிடாதா?

7. ஒரு வார்த்தை கடுமையான விமர்சனம் வந்து விட்டால் வசைமொழிகள் தாண்டவமாடத் தொடங்கிவிடுகின்றன.

கடுமையான விமர்சனம் படைப்பைப் பற்றியது என்றால் பிரச்சனை இல்லை. மிகச்சரியான தர்க்கத்தை ஒரு படைப்பின் மீது செய்யும் பொழுது படைப்பாளிகள் ஏற்கவே செய்வார்கள். தர்க்கரீதியில் இல்லாதது என்றால் திட்டவே செய்வார்கள்..

8. நவீன உலகில் எழுதப்படும் அனைத்துமே நவீன இலக்கியம்தான். - இதை நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் நவீன இலக்கியவாதிகள் ஒத்துக் கொள்கிறார்களா?

நவீன உலகில் எழுதப்படும் அனைத்துமே நவீன இலக்கியம்தான். இதைச் சொன்னதே இந்த திரியில் பேசப்படும் ஜெயமோகன் தான்!!

@ கலை அண்ணா

நவீன இலக்கியத்திற்கு வரையறைகளும் இலக்கணங்களும் குறியீட்டு முறைகளும் ஏன் இதுவரை எவராலும் எழுதப்படவில்லை..?

இது குறித்து நானும் ஆதியும் பேசியிருக்கிறோம். இன்றைய வேகமான யுகம் அதற்குத் தடையாக இருக்கலாம், மேலும் ஒரு வரையறைக்குள் சுருக்கி அடக்க இன்றைய இலக்கியமுறை இடங்கொடுக்காமல் இருக்கலாம்.. மேலும் இவ்விரண்டையையும் முழுமுற்றாக அறிந்த ஒருவர் இனிமேல் முயற்சிக்கலாம்.. நவீன இலக்கியம் பிறந்து ஒரு நூறு வருடம் தான் ஆகியிருக்கிறது... !!!

தாமரை
01-04-2012, 07:07 AM
ஒரு திரைப்படம் வெளியானால் அதைப்பற்றி தொலைகாட்சிகளில் எத்தனை நிகழ்ச்சிகள். அதில் பங்குபெற்ற கலைஞர்களின் நேர்முகங்கள்...

ஏன் எழுத்தாளர்கள் வருடத்தில் சிறந்த 10 படைப்புகளை அப்படி தொலைகாட்சிகளில் திறனாய்வு செய்யக் கூடாது?

ஆதவா
01-04-2012, 10:41 AM

முதலில் திரைப்படங்களே வணிக நோக்கத்திற்காக மட்டும்தான் படைக்கப்படுகின்றன.
அடுத்து அது பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த மக்கள் கொண்டாடப்படும் கலை என்பதால் மக்களை சுலபமாக கண்டடைய முடியும்,
நேர்த்தியான சினிமாக்கள் ஓடுவதேயில்லை என்பதையும் நினைவில் கொள்ளலாம்.

இலக்கியவாதிகளின் நேர்காணல்களை ஒளிபரப்ப தூர்தர்ஷன் மட்டுமே இப்பொழுது இருக்கிறது. தூர்தர்ஷனில் நான் பார்த்திருக்கிறேன். ஆனால் தூர்தர்ஷனை எத்தனை பேர் பார்க்கிறார்கள்?

எந்த தொலைக்காட்சி முதலில் முன்வருகிறது?
அவ்வளவு வேண்டாம்,
ஆ.வி போன்ற பத்திரிக்கைகள் கூட சினிமாவுக்குத்தானே முன்னுரிமை தருகின்றன...

மலையாளத்தில் இவ்வளவு இல்லை, அங்கே இலக்கியவாதிகள் கொண்டாடப்படுகின்றனர். தொ.கா விலும் தோன்றுகின்றனர். காரணம் வாசிப்புநிலைக்கு மலையாளிகள் முன்னே சென்றுகொண்டிருப்பதுதான்..

ஆதி
02-04-2012, 07:07 AM
ஏன் எழுத்தாளர்கள் வருடத்தில் சிறந்த 10 படைப்புகளை அப்படி தொலைகாட்சிகளில் திறனாய்வு செய்யக் கூடாது?

இது போன்றதொரு நிகழ்ச்சி பொதிகையில் நிகழ்கிறது

ஆனால் பொதிகையின் பார்வையாளர்கள் எண்ணிக்கை மிக குறைவு

இதுவே சன் தொலைகாட்சியில் நிகழ்ந்தால் பலருக்கும் போய் சேரும், ஆனால் அவர்கள் வெறும் வர்த்தநீதியான நிகழ்சியையே ஒளிப்பரப்புகிறார்கள்

இது போன்ற ஒரு நிகழ்ச்சிக்கு எழுத்தாளர்கள் வர* தயாராக இல்லை என்றும் சொல்ல இயலாது

ஆதி
02-04-2012, 11:57 AM
வரிசையாய் நட்டுவைத்த
பிளாஸ்டிக் செடிகளினூடே
எப்படி(யோ)நுழைந்துவிட்டது
நிஜச்செடி

என் நண்பர் ஒருவர் எழுதிய கவிதை இது, மிக எளிமையான கவிதைத்தான், ஆனால் இது பார்க்கப்படும் விதம் வாசகனுக்கு வாசகன் மாறு படும் இல்லையா

இது இல்யூஸனை பேசுகிறது, பொய்மெயெதனத் தோன்றும் மாயத்தருணத்தை படம் பிடிக்கிறது, ஆனால் இல்யூஸனை உணர்ந்து கொள்ள வாசகனுக்கு வாசிப்பானுபவம் தேவைப்படுகிறது இல்லையா ?

தாமரை
02-04-2012, 01:42 PM
இக்கவிதையை முதலாக எடுத்ததற்கு நன்றி. ஏனென்றால் இலக்கியங்களில் எழுதி வெளியிடுவது என்பது முதல் கட்டம் என்றால் விளக்குதல் என்னும் இரண்டாம் கட்டம் ஏன் தேவைப்படுகிறது என்பதற்கு இது சரியான உதாரணமாகும்.

இக்கவிதையை இல்யூஷன் - மாயத்தோற்றம் என்று சொல்லக் கூடாது(இயலாது முடியாது என்ற ஊகம் கலந்த வார்த்தைகளை விட, கூடாது என்பது உறுதியான மறுப்பென நினைக்கிறேன்). இது நிஜத்தின் தரிசனம்.

வாசகனுக்கு வாசகன் கோணமும் சுவையும் மாறலாம். ஆனால் கவிஞர் சொல்ல வரும் மூலக்கருத்து சரியாகச் சென்றடைதல் மிகமிக முக்கியம். அது முதல் வரிசை ரசிகனுக்கே தடுமாறுகிறது என்பது கவிதையின் பிரச்சனை அல்ல. ஏனென்றால் கவிதை மிக எளிமையானது. மிக வெளிப்படையானது. ஒரு வேளை சரியான தலைப்பு இருந்திருந்தால் (இந்தக் கவிஞருக்கு, தன் கவிதைக்குத் தலைப்பு வைப்பதில் தடுமாற்றம் உண்டோ??:D:D:D) மாய வலைகளில் சிக்கித் தவிக்கும் முதல் வரிசை ரசிகருக்குப் புரிந்திருக்கலாம்.

அல்லது கவிஞரே கூட இக்கவிதையை வேறு நோக்கில் எழுத நினைத்து மொழிவளப் பிரச்சனைகளினால் கவிதை மாறி இருக்கலாம்.

முதலில் கவிஞனின் விளக்கமின்றி கவிதையின் பொருளாய்வதால் கவிஞனின் திறம் அறிய இயலாது. இதை நான் விளக்கினால் என் திறமைதான் வெளிப்படும். கவிஞன் உண்மையிலேயே சிறந்தவனா என்ற அவன் திறம் எப்படி வெளிப்படும்?

எனவே கவிஞனின் - விளக்கம் முதலில். பின்னர் வாசக விமர்சனம்.

தாமரை
02-04-2012, 01:43 PM

02-04-2012, 02:13 PM
நன்றி ஆதவா.. இத்திரியைத் தொடர்ந்து வாசிப்பதன் மூலம் நவீன இலக்கியத்தைப்பற்றிய தெளிவு ஓரளவுக்குக் கிடைக்கும் என்பதாக அறிகிறேன்.

இது தொடர்பான வாதத்தில் நான் எழுதிய பகுதி ஒன்றை இங்கே பகிர்ந்து கொள்ளட்டுமா..?

கௌதமன்
02-04-2012, 03:37 PM
நவீன இலக்கியத்திற்கு வரையறைகளும் இலக்கணங்களும் குறியீட்டு முறைகளும் ஏன் இதுவரை எவராலும் எழுதப்படவில்லை..?

.

ஏனில்லாமல் ஜெயமோகனே இது குறித்து ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். புத்தகத்தின் பெயர் "நவீனத்தமிழிலக்கிய அறிமுகம்". ஆனால் ஒரு குறை இந்த புத்தகத்துக்கு கோனார் கைடு இதுவரை வரவில்லை ;)

தாமரை
02-04-2012, 03:42 PM
ஏனில்லாமல் ஜெயமோகனே இது குறித்து ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். புத்தகத்தின் பெயர் "நவீனத்தமிழிலக்கிய அறிமுகம்". ஆனால் ஒரு குறை இந்த புத்தகத்துக்கு கோனார் கைடு இதுவரை வரவில்லை ;)

யாரும் கோணாமல் எழுதணுமே.. அதனால லேட்..

கலைவேந்தன்
02-04-2012, 03:59 PM
நன்றி கௌதமன். அந்நூல் பெற்றிட முயல்வேன். உங்களிடம் இருப்பினும் பகிருங்கள்.

தாமரை
02-04-2012, 04:20 PM
இதுவும் உதவலாம்

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=448613&postcount=468

ஆதி
03-04-2012, 12:16 PM
வேறொரு களத்தில் நடந்த விவாதத்தில் பதிலளித்தது இங்கேயும் பொருந்தும் என்பதால் பதிக்கிறேன்

இசங்கள் எந்த அளவுக்கு ருசியானவையோ அந்த அளவுக்கு அயர்ச்சிக்கு உள்ளாக்குபவை..

என்றும் எனக்கொரு ஆதங்கம் உண்டு, நாம் மேலை நாட்டுத்தத்துவங்களை எடுத்துக் கையாண்டு இலக்கியம் படைக்கிறோமே ஒழிய ஏன் நம்முடைய ஒரு தத்துவங்களை கூட மேலை நாடுகளுக்கு எடுத்து செல்லும் நோக்கில் இலக்கியம் படைக்க மாட்டேன் என்கிறோம்..

தாகூருக்கு இருந்த சாபம் என்று வரை எல்லாருக்கும் இருக்கிறது..

தாகூர் கீதாஞ்சலியை வங்காலத்தில் எழுதிய போது ஒருத்தரும் கண்டு கொள்ளவில்லை, பின் வருடம் கழித்து அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார், நோபில் பரிசு கூட கிட்டியது..

தாகூரின் கீதாஞ்சலி எந்த இசம் என்ன தத்துவத்தால் ஆனது, இப்படி ஒரு ஆராய்ச்சி செய்து ஒரு கட்டுரை எழுதினால் கூட நம் தத்துவங்கள் மேலை நாட்டுவர்களுக்கு அறிமுகமாகும்...

நம்மிடம் முன்பே இருக்கிற ஒன்றை மேலை நாட்டு தத்துவங்களின் பெயரால் இன்று எழுதி கொண்டிருக்கிறோம் என்பதே என் கருத்து..

த்துவங்கள் மனிதனிடம் இருந்து மனிதனை பிரித்தன என்பதை என்னால் ஏற்க இயலவில்லை ?

சர்ரியலிசம் மனசின் கோரங்களை வெளிக்காட்ட பிறந்தவையே..

அது ஒரு மனத்தொழுநோயை வெளி காட்டும் ஒரு கருவியாக இலக்கியத்தை பயன்படுத்தியது

நம் குரூரங்களையும் கோரங்களையும் விகாரங்களையும் அழுக்குகளையும் நாம் கண்டு கொள்ளாமல் சர்ரியலிச மொழியை ஐயரவாக பார்த்தோம் என்றே சொல்ல தோன்றுகிறது..

நிலவு எவ்வளவு அழகானது..

ஆனால் பாருங்கள் அதனை ஒரு ரத்தம் சொட்ட தொங்கவிடப்பட்ட மொட்டை தலையாக பார்க்கிறது மனது

மனதுக்குள் எவ்வளவு குரூரமும் வனமும் இருந்தால் விண்மீன்கள் மின்னும் வானத்தை பல்லிளிப்பாதாக சொல்லும் மனது

இது ஆழ்மனதில் அசிங்கங்களை அப்பட்டமாய் அம்பலப்படுத்தும் முயற்சியே, யாரையும் யாரிடமும் தாழ்த்திக் காட்டவோ, உயர்த்தி காட்டவோ செய்யப்பட்டவை அல்ல...

கலைவேந்தன்
04-04-2012, 04:55 AM
இதுவும் உதவலாம்

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=448613&postcount=468

வாசித்தேன். நன்றி தாமரை.இன்னும் தெளிவுபெற விழைகிறேன். கண்டிப்பாக முடியும் என்றே நினைக்கிறேன்.

கற்பதற்கு வயதில்லை அல்லவா..? ( எனக்கு 50 )

தாமரை
04-04-2012, 10:03 AM
வரிசையாய் நட்டுவைத்த
பிளாஸ்டிக் செடிகளினூடே
எப்படி(யோ)நுழைந்துவிட்டது
நிஜச்செடி

என் நண்பர் ஒருவர் எழுதிய கவிதை இது, மிக எளிமையான கவிதைத்தான், ஆனால் இது பார்க்கப்படும் விதம் வாசகனுக்கு வாசகன் மாறு படும் இல்லையா

இது இல்யூஸனை பேசுகிறது, பொய்மெயெதனத் தோன்றும் மாயத்தருணத்தை படம் பிடிக்கிறது, ஆனால் இல்யூஸனை உணர்ந்து கொள்ள வாசகனுக்கு வாசிப்பானுபவம் தேவைப்படுகிறது இல்லையா ?

ஒரு விஷயம் நல்லதோ கெட்டதோ..சிறியதோ பெரியதோ

அதை முற்றிலுமாய் ஒழித்து விட முடியாது. உலகத்தில் ஒவ்வொன்றிற்கும் அதற்குரிய இடம் உண்டு. பல நேரங்களில் முற்றிலுமாக அழிந்துவிட்டது என்று பல தலைமுறைகளாக நாம் எண்ணிக்கொண்டிருப்பது உலகின் எந்த மூலையிலோ தன் வடிவம் வெளிப்படாமல் போனாலும் இருக்கிறது. அதற்குரிய சமயம் வரும்பொழுது அது வெளிப்படுகிறது.

இது சில ஆண்டுகளுக்கு முன் இதே மன்றத்தில் நான் சொன்ன கருத்து ஆகும்.

அதே கருத்துதான் இந்த பிளாஸ்டிக் செடிகளின் மத்தியில் வெளிப்பட்ட நிஜச் செடியில் பொதிந்து உள்ளது.

இதில் இல்யூஷன் - அதாவது மாயத் தோற்றம் தோன்ற வேண்டுமானால்..

நுழைந்து விட்டது என்ற பிரயோகத்தை மாற்ற வேண்டும். கவிஞன் சொல்லும் வார்த்தைகளே தோற்றத்தை நம் முன் உண்டாக்குகின்றன. நுழைந்துவிட்டது என்ற வார்த்தையை நுழைந்ததோ, நுழையுமோ, இப்படி சிந்தனையாக மாற்றுவதால் நீங்கள் சொல்லும்..

எல்லாம் பிளாஸ்டிக்தான் என்று தெரிந்தாலும் மனம் நம்ப மறுக்கிறது. அவற்றில் ஒன்று நிஜமோ என்று மனம் அடிக்கடிச் சந்தேகத்தில் விழுகிறது என்று சொல்லலாம்.

கவிஞனின் வார்த்தைகளில் வந்திருப்பது எப்படி(யோ) நுழைந்துவிட்டது
நிஜச்செடி என்பது.

நிஜச்செடி நுழைந்தது செடிவரிசையில் அல்ல. மனதில் அல்லவா? அதுதானே ஆதன் நீங்கள் சொல்லும் இல்யூஷன்.

அந்த இல்யூஷனை உண்டாக்க வேண்டுமெனில் நிஜச்செடி எங்கிருக்கிறது என்றுக் குறியிடும் வார்த்தைகளை கவிஞர் சொல்லாமல் விடலாம். அதாவது செடிகளுனூடே என்பதில் ஊடே என்பதை சொல்லாமல் விடலாம்.

பிளாஷ்டிக் செடிகள் என்பவை மெடீரியலிஸ்டிக் வேல்யூஸ் அதாவது பொருள்சார்ந்த மதிப்புகள், நிஜச்செடி என்பதை உணர்வுசார்ந்த மதிப்புகள் என்று அதே இடத்தில் பார்க்க..

அங்கும் இல்யூஷன் இல்லை.

இதைத்தான் இந்துமதம் யுகம்யுகமாக சொல்லிக் கொண்டிருக்கிறது. எதனால் மனதை நிரப்பினாலும் மனதில் இறைவனின் வாசம் இருந்து கொண்டேதான் இருக்கிறது. அது ஒரு தருணத்தில் வெளிப்படுகிறது. இதுவும் இல்யூஷன் இல்லை.

அறிவுக்கும் மனதிற்கும் இருப்பிற்கும் முரண்கள் வெளிப்படுவதை இல்யூஷன் எனலாம்.

அப்படிப்பார்க்கப் போனால் இல்யூஷன் இருக்கிறது. கவிதையில் அல்ல. உங்களில்.

ஆதவா
04-04-2012, 10:14 AM
இது தொடர்பான வாதத்தில் நான் எழுதிய பகுதி ஒன்றை இங்கே பகிர்ந்து கொள்ளட்டுமா..?

தாராளமாகத் தாருங்கள்,

ஏனில்லாமல் ஜெயமோகனே இது குறித்து ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். புத்தகத்தின் பெயர் "நவீனத்தமிழிலக்கிய அறிமுகம்". ஆனால் ஒரு குறை இந்த புத்தகத்துக்கு கோனார் கைடு இதுவரை வரவில்லை ;)

அந்த புத்தகத்திற்கே கோனார் கைடு கேட்கிறீர்களே? எப்படிங்க சார் இப்படி?

ஜான்
13-05-2012, 12:20 PM
நன்றி ஆதன் !

அது என்னுடைய கவிதை(?)தான் !!

மற்ற தளத்தில் இது போன்று ஒரு சில வரிகளைப் பதிந்திருந்தேன் !அதிலிருந்து எடுத்துக் காட்டியிருக்கிறார் தம்பி ஆதன்...

இது போன்றவற்றுக்கு தலைப்பு கொடுக்க வேண்டும் என்று தோன்றவில்லை !

நாம் எல்லோருமே கவிதை மன உணர்வுடன் எழுதுகிறவர்கள்தான் !அழகியல் சேரும்போது அது கவிதையாகிவிடுகிறது !

நான் சொல்ல நினைத்தது என்று சொல்வதைவிட---எனக்குத் தோன்றியது ௧) "நிஜச் செடி "என்கிற வார்த்தை !உயிரற்ற பிளாஸ்டிக் செடிகளேயானாலும் நிஜம் போல் தோன்றுகின்றன ..போய் உண்மையாகத் தோற்றமளிக்கிறது

௨)எப்படி நுழைந்து விட்டது -----எப்படியோ நுழைந்து விட்டது ---எப்படி(யோ) நுழைந்துவிட்டது ------வரிகள் சொல்ல வந்தது நிஜச் செடி பற்றி அல்ல !!!உயிரற்ற பொருளில் எப்படியோ நுழைந்து விட்டது உயிர்த்தன்மை என்ற பொருளில் "நிஜ செடி "என்ற பதம் உபயோகிக்கப் பட்டிருக்கிறது !!!

விளக்கமளிப்பது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது !

ஆதி
14-05-2012, 06:02 AM
விளக்கத்துக்கு நன்றி ஜான் அண்ணா, மிக சரியான சொனீங்க*

//நாம் எல்லோருமே கவிதை மன உணர்வுடன் எழுதுகிறவர்கள்தான் !அழகியல் சேரும்போது அது கவிதையாகிவிடுகிறது !
//

ஆதி
29-05-2012, 07:50 AM
மட்சுஸ்ஹிமா
ஆ!மட்சுஸ்ஹிமா
மட்சுஸ்ஹிமா
* பாஸோ

1689ல் ஜென் துறவி பாஸோ, மட்சுஸ்ஹிமா மலைக்கு பயணம் செய்த போது எழுதிய ஹைகூவே மேல் உள்ளது

மூன்று முறை ஒரு மலையின் பெயரை சொல்லி இருக்கிறார் இது எப்படி கவிதையாகும் என்று பலருக்கும் கேள்வி எழுலாம்

இது கவிதைதான் ஹைகூ எனும் வடைவதுக்கு உட்பட்ட கவிதை

இந்த கவிதையை வாசிக்கும் முன்னர் ஒரு குறிப்பை மட்டும் நினைவில் வைக்க வேண்டும்

ஹைகூ ஜென் அனுபவத்தை பதிவு செய்யும் கவிதை

இந்த குறிப்பு நினைவில் இருந்தால் இந்த கவிதையை திறக்கும் சாவி கிடைத்துவிடும்

முதல் முறை மட்சுஸ்ஹிமா எனும் போது அந்த மலையை அறிமுகப்படுத்துகிறார், அந்த* ம*லையை பார்க்கிறார்

இர*ண்டாம் முறை "ஆ!" விய*ப்பு ஒலியோடு ம*லைப்பெய*ரை சொல்லும் போது அந்த* ம*லையின் பிர*மாண்ட*த்தில் த*ன்னை அவ*ர் இழ*த்த*லையும், அந்த* பிர*மாண்ட*ம் உண்டாக்கிய* ஆட்ச*ய*ர்த்தையும், அத*ன் முன் தான் ஒரு துரும்பென்ப*தையும் ப*திவு செய்கிறார்

மூன்றாம் முறை சொல்லும் போது, அந்த* ம*லையோடு ம*லையாய் தானும் மாறி, இப்போது ம*லையும் இல்லாம*ல் பாஸோவும் இல்லாம*ல் எதுவும் இல்லாம*ல் எல்லாம் ஒன்றாய் ஆன* நிலை

க*ட*ற்க*ரையையோ, அருவியையோ, சாயுங்கால* வான*த்தையோ, வெடித்த*ப்ப*ருத்திய*யென* த*லையுருண்ட* நெறிந்த* மேக*த்தில் த*ன்னை இழ*க்கும் போது ப*ல*ருக்கு ஏற்ப*டும் அனுப*வ*ம்தான், ஆனால் பாஸோ அந்த* அனுப*வ*த்தை உண*ர்ந்து, தான் உண*ர்ந்த* நிலையில் அப்ப*டியே ப*திவு செய்திருக்கிறார்

நேர்த்தியாய்பாதிப்பிட்ட* அப்ப*ள*ம் போன்றிருக்கும் மாலைநிலாவை ர*சிக்கும் போது இந்த* அனுப*வ*த்தை உண*ர*முடிகிற*தா என்று பாருங்க*ள்

நவீனக்கவிதைகளும் ஹைகூவின் சாயல்களோடு எழுதப்படுவதால்தான் இதனை இங்கே பதிக்கிறேன்

ஆதி
28-08-2012, 07:06 AM
எந்த மொழியின் படைப்பிலக்கிய கர்த்தாவிடமும் போய், உன் மொழியின் செழுமையை அறிந்து கொள்ளும் இலக்கிய வடிவம் எது என்று வினவினாலும், அவன் கவிதையைத்தான் குறிப்பிடுவான்..

இலக்கியத்தில் இருக்கும் எந்த வடிவத்திற்கும் இல்லாத சிறப்பு கவிதைக்கு உண்டு, கவிதை என்பது ஒரு கதையாகவோ, ஒரு கோட்பாடாகவோ, ஒரு கட்டுரையாகவோ, ஒரு தத்துவமாகவோ, ஒரு மருத்துவக் குறிப்பாகவோ, ஒரு கணித வாய்ப்பாடாகவோ, ஒரு நாடகமாகவோ, ஒரு வர்ணனையாகவோ, ஒரு உரையாகவோ, ஒரு பதிலாகவோ, ஒரு கேள்வியாகவோ இருக்கலாம். ஒரு மொழியின் செழுமையை, வளமையை, வலிமையை, செறிவை கவிதையால் மட்டுமே எடுதியம்ப இயலும். ஒரு பெண்ணை கூட கவிதை மாதிரி அழகாய் இருக்கிறாள் என்று வர்ணிக்கலாம், இதுவே ஒரு கதை மாதிரி அழகாய் இருக்கிறாள் என்று சொல்ல முடியுமா ? கவிதை அத்தகையது..

இத்தனை சிறப்புக்குரிய இந்த வடிவத்தில், புது வடிவங்கள், புது பாணிகள், புது சொல்முறைகள், புது புனைவுகள், புது நுட்பங்கள் என்று புது புது முயற்சிகள் நாளும் நிகழ்கின்றன*

பதினெண்கீழ்கணக்கு காலம் தொடங்கி நவீனம் நுழைத்து இசங்களில் வியாபிக்க ஆரம்பித்திருக்கிறது தமிழ் கவிதை

ஒவ்வொரு காலத்திலும் தனக்கான மொழி சொல்முறை வடிவம் கொண்டு தன்னை செறிவோடு வளப்படுத்திக் கொண்டு செழித்திருக்கிறது

இருண்ட காலத்தில் பக்தியிலக்கியங்கள் படிவில் மொழியை அடர்த்தியை பாதுகாத்ததும் கவிதைதான்

யாப்பென்னும் வேரை அகண்டு ஆழமாய் இறக்கி தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டு புதுக்கவிதை நவீனம் இஸங்கள் என்னும் பல புது கிளைகளை மேல் நோக்கி பரப்பி விஸாலமாகவும் விரித்திருக்கிறது தமிழ் கவிதை

இத்தனை செழுமை வளமை செறிவு அடர்த்தி அடல்மை(இளமை) உள்ள தமிழ் கவிதை இன்னும் இன்னும் போக வேண்டிய தூரம் நெடியது உண்டு, அதனை புரிந்து கொண்டு பழைய வடிவங்களிலேயே கவிதை புனையாமல் புது புது சோதனைகளை முயன்று கவிதையை அடுத்த நகர்வுக்கு கொண்டு செல்ல வேண்டும்

கவிதை விஸாலமாக விரிந்திருந்தாலும், அதன் வடிவம் எப்போதும் ஒரு பெண்ணில் இடையை போல மெலிந்ததாகவே இருத்தல் கவின்மிக்கதாகவும், அகலம் ஆழம் விரிவு கொண்டதாகவும் இருக்கும்

கவிதையை பொருத்த மட்டில் அதன் தளங்கள் மூன்றாக இருக்கின்றன, முதல் தளம் கருத்தோடு எழுதப்படும் ஆரம்ப காலக்கவிதைகள், இரண்டாம் தளம் நடை, பாணி, புதுமை, உவமை, உருவகம், படிமம், குறியீடு, வடிவம் என்று கச்சிதமாய் வடிக்கப்பட்ட கவிதைகள், மூன்றாம் தளம் இதைத்தான் சொல்கின்றன, இன்ன கருத்து/கரு மீதுதான் எழுதப்பட்டது என்று ஒரு புள்ளியில் குற்றி நிறுத்த முடியாத படிக்கு பல திசைகளில் விரிவு கொள்ளும் கவிதைகள், என்ன சொல்ல போகிறோம் என்று தெளிவே இல்லாமல் எழுதப்படும் லெவல் ஸீரோ கவிதைகளும் அதிகம் இருக்கத்தான் செய்கின்றன*

இந்த திரியில் எப்படி கவிதை எழுதுவது என்று பேசபோவதில்லை, எப்படி கவிதைகளை பகுத்தாராய்ந்து எப்படி கவிதைக்குள் இருக்கும் பல திசைகளை கண்டறிவது, எப்படி ஒரு புரியாத கவிதையை அணுகுவது, எப்படி ஒரு கவிதையில் ஒளிந்திருக்கும் அபத்ததை கண்டறிவது, என்பதனை பற்றித்தான் இங்கே பேசப்போகிறோம்

அதுமட்டுமல்லாது இடையிடையே பல இஸங்களை பற்றியும், ஹைகூ பற்றியும் பேசபோகிறோம்

முதலில் நவீன இலக்கியம் குறித்து ஒரு சிறு அறிமுகம்..

நவீனம் என்பது நம் அன்றாட வாழ்வில் ஆக்ரமிக்காத இடமே இல்லை, அது போல் அரசியல், தத்துவம், உளவியல், படைப்பியல், மருத்துவம், விஞ்ஞானம், கல்வி, நீதித்துறை, நிர்மாணம், தொழிற்துறை, நகர உருவாக்கம், குடும்ப அமைப்புமுறையென* அது வியாப்பிக்காத* தளமே இல்லை எனலாம்..

நம் பேச்சு வழக்கு கூட நவீனப்பட்டிருப்பது மறுக்க இயலா நிதர்சனம்..

கரிக்கொப்பான புத்தியை இன்று டியூப் லைட் என்றும், கற்பூர புத்தியை குண்டு பல்பூ என்றும் சொல்லுதல் சதார்ணமாகிவிட்டது, இந்த நவீன மொழிப் படிமங்களை கவிதையில் பேச்சுவழக்கோடு பதிவு செய்வதால் சுவைஞனானவன் படைப்பில் இருந்து தன்னை அயன்மைவுறுத்திக் கொள்ளாமல், படைப்பின் இயங்கு விசையோடு சேர்ந்து பயணிக்கத் துவங்குகிறான்..

படைப்பாளியும் சுவைஞனுக்கும் நடுவிலான உறவை படைப்பிலக்கியம் ஏற்படுத்தி தருவதால், படைப்பாளியோடு சுவைஞன் தன்னை சமனாக்கிக் கொள்கிறான்..

படைப்பில் சுவைஞனுக்கான வெளியை உருவாக்கித் தருதலின் மூலம், சுவைஞன் படைப்பை தன்னறிவின் இயங்கு தளம், தன் சூழல்வழி அனுபவித்தவைகள், தன் மனநிலைக்கு ஏற்ப படைப்புக்கான அர்த்ததை அவனே உருவாக்கி கொள்கிறான்..

இன்னும் படிமங்கள், குறியீடுகள், இசங்கள், என்று புதுப்புது கோட்பாடுகள், வடிவங்கள் கொடுத்து கவிதையின் அடுத்தக்கட்ட நகர்வை சிந்தித்து கொண்டிருக்கிறார்க*ள் நவீனவாதிகள்..

நம்மால் சொல்லப்படுவது புரிந்து கொள்ள வேண்டும் எனும் ஆதங்கள் இன்றி, கவிதையை எதிர்திசையில் புரிந்து கொள்வதும் கவிதை உண்டாக்குகிற அனுபவம் என்பதை தீர்க்கமாய் நம்புபவன் நான்..

ஒரு கவிதை புரிவதும் புரியாமல் போவதும் நம் தப்பு இல்லை, புரியாமல் போவதால் நமக்கு உண்டாகிற கோபத்தின் வெளிப்பாடே நவீனத்துவத்தின் மீதான தூற்றல்கள்..

நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போதுதான் கணினி பற்றித் தெரியும் இன்று முதல்வகுப்பிலேயே அதை சொல்லிக் கொடுக்கிறார்கள், நாளையை தலைமுறைக்கு பள்ளி சேரும் முன்பே கணினி பற்றிய அறிமுகம் உண்டாகிவிடும்..

இன்று அலைபேசியை அழகாக இயக்க தெரிந்த குழந்தைகள் எத்தனை பேர் இருக்கிறார்கள், ஆனால் நாம் அலைபேசியை பார்த்தது http://www.friendstamilchat.com/forum/Smileys/default/huh.gif

இவை யார் குற்றம் நம் குற்றமா ? இல்லவே இல்லை இது காலத்தின் நியதி..

நவீன இலக்கியங்களில் நடக்கிற முயற்சிகளை, சோதனைகளை, அடுத்த கட்ட நகர்வுகளை புரிந்து கொள்ளாமல், பழமையை நவீனம் நிராகரித்துவிட்டது என்றெல்லாம் சொல்வது ஏற்புடையதல்ல..

அந்த காலத்திலேயே இலக்கணங்களை உடைத்து கொண்டு பிறந்தவையும் உண்டு, சிலப்பதிகாரத்தில் நிறைய இலக்கண மீறல்களை காண இயலும், அன்று இளங்கோ எழுதிய போது இது கூட நவீனமாகத்தான் பலருக்கும் தெரிந்திருக்கும் இல்லையா ? ஆனால் இளங்கோ அடிகள் அன்று அந்த முயற்சியை மேற்கொள்ளுதலை மறுதளித்திருந்தால், காப்பியங்களுக்கான பாடல் வடிவ உருபெறல் தாமதப்பட்டிருக்கலாம்.....

இளங்கோவிற்கு பிறகு வந்த திருத்தக்க தேவன் விருத்த இலக்கணங்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவன் செய்த தொண்டு அளப்பரியது, அதற்கு பின் வந்த கம்பன் விருந்தங்களை விருத்தியாக்கினான்..

அன்று காப்பியத்தில் நிகழ்ந்த சோதனை முயற்சிகள் தான் இன்று கவிதைகளில் புது புது பெயர்களில் நிகழ்கிறது, அதில் நவீன ஒரு மிக பெரிய வெளியாக இன்று ஸ்திரம் பெற்று விட்டது

நவீன இலக்கியவாதிகள் தம்மை பாரதி மரபினர் என்றும், புது கவிதைவாதிகள் தங்களை பாரதிதாசன் மரபினர் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள்

தொடரும்..

ஆதவா
28-08-2012, 07:51 AM
மீண்டும் தோண்டி நல்லதொரு துவக்கம் தந்திருக்கிறீர்கள் ஆதி.
பழமையான இலக்கியமே இன்றைய இலக்கியத்தின் அடிவேர் என்பதை உங்கள் பதிவில் காணமுடிகிறது.
தொடருங்கள்.

ஆதி
28-08-2012, 08:13 AM
நன்றி ஆதவா

புதுக்கவிதை அல்லது புத்திலக்கியத்துக்கும், நனீன இலக்கியத்துக்கும் பெரிய வேற்பாடு இல்லை

இரண்டும் ஒரு அர்த்தம் கொண்டவையே

நவீன் என்றாலும் புதிய என்றுதான் பொருள், என்ன நவீன் என்பது வட மொழி சொல் அவ்வளவுதான் வேறுபாடு

ஆதி
28-08-2012, 10:45 AM
அடுத்தது புதுக்கவிதை குறித்து சிறு அறிமுகம்

புதுக்கவிதை என்றால் என்ன ?
புதுக்கவிதை என்பது யாப்பின்(யாப்பிலக்கண*ம்) கட்டுக்குள் அடங்காமல் எழுதப்படும் கவிதைகள்

யாப்பின் கட்டுக்குள் எழுதப்படும் போது சீர் அசை தொடை நயம் பா இலக்கணம் எல்லாம் பார்த்து பார்த்து எழுத வேண்டியிருக்கும்

உதாரணமாக
*
வரியுதட்டின் வண்ணமென்னை மயக்கவில்லை - நீ
வார்த்திட்ட பார்வையால்நான் வளைய வில்லை
தரிக்கெட்டு என்னையுன்னில் தொலைக்க வில்லை - சரி
தவறுபாரா மல்காதல் உரைக்க வில்லை
விரிவான உன்னறிவை வியந்து கண்டேன் - நீ
விளக்குகிற அழகுதனில் விருப்பம் கொண்டேன்
பரிவான உன்மனதை பார்த்த பின்பே - என்
பார்வதியாய் ஆகுவாயோ என்று கேட்டேன்

மேலுள்ள இந்த கவிதை எண்சீர் விருத்தம் என்று அழைக்கப்படும், எண்சீர் விருத்த்தில் ஒவ்வொரு வரியும் எட்டு சீர்கள் கொண்டதாக இருக்கும், வரியின் நீளம் கருத்தி, ஐந்தாம் சீரை அடுத்த வரியில் எழுதுவார்கள், இப்படி எட்டு சீர்கள் கொண்ட நான்கு வரிகளால் ஆனது ஒரு பாடல் அல்லது விருத்தம்

இந்த பா வகையில் 1,2,5,6 ஆகிய சீர்கள் மூவசை கொண்ட காய் சீராகவும், 3,7 ஆகிய சீர்கள் ஈரசையாகவும், கடைசி யசை நேர் என்றும் முடியும், 4 மற்றும் 8 ஆகிய சீர்கள் ஈரசை சீராகவும் தேமா பயின்றும் வரும்

முதல் வரியை மட்டும் சீர் பிரித்து காட்டுகிறேன்

வரியுதட்டின் வண்ணமென்னை மயக்க வில்லை - நீ
வார்த்திட்ட பார்வையால்நான் வளைய வில்லை

1) வரி|யுதட்|டின் = நிரை நிரை நேர் = கருவிளங்காய்

2) வண்|ணமென்|னை = நேர் நிரை நேர் = கூவிளங்காய்

3) மயக்|க = நிரை நேர் = புரிமா

4) வில்|லை = நேர் நேர் = தேமா

நீ = தனிச்சொல்

5) வார்த்|திட்|ட = நேர் நேர் நேர் = தேமாங்காய்

6) பார்|வையால்|நான் = நேர் நிரை நேர் = கூவிளங்காய்

7) வளை|ய = நிரை நேர் = புளிமா

8) வில்|லை = நேர் நேர் = தேமா

இப்போது சிறு புரிதல் உண்டாகியிருக்கும் என்று நம்புகிறேன், புரியவில்லை என்றால் முன்பு கூறிய இலக்கணத்தை மீண்டும் வாசிக்கவும்

இப்படி வார்த்தைக்கு வார்த்தை இலக்கணம் பார்த்து கருத்தையும் பிறழாமல் சொல்வதே யாப்பின் சவால், ஆனால் இலக்கணத்துக்கான சொல்ல வந்த கருத்தை சில நேரம் சொல்ல தடையாக இருக்கிறது யாப்பு எனும் குற்றச்சாட்டோடு புதுகவிதை கவிஞர்கள் யாப்பை புறக்கணித்து உரை நடைவீச்சோடு கவிதை எழுத ஆரம்பித்தார்கள்

இந்த புதுக்கவிதை வடிவத்திற்கு முதலில் பிள்ளையார்சுழி போட்டவன் எட்டையபுரத்தான் தான், சுதேசிமித்ரன் இதழில் வசன கவிதைகள் எழுதியதோடு நில்லாமல் அவற்றை பற்றி பல கட்டுரைகளையும் எழுதினான் பாரதி

அதற்கு பின் எழுத்து இதழில் நா.பிச்சமூர்த்தி போன்றவர்கள் எழுதினார்கள் ஆனால் அவை அன்று கவிதைகளாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை, எனினும் எழுத்து இதழ் இவர்களுக்கு மிக துணையாக இருந்தது, தற்போது நா.பிச்சமூர்த்தி போன்றவர்கள் நவீன இலக்கியத்தின் முன்னோடிகளாக அழைக்கப்படுகிறார்கள், புதுகவிதையின் முன்னோடிகளாக அல்ல, அந்த கதையை பிறகு பார்ப்போம்

பின் நா.காமராசன் தான் புதுகவிதையை முன்னெடுத்து பல கவிதைகளை எழுதினான், நா.காமராசன் எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் அரசவை கவிஞராக இருந்தவர், காகித* மலர்கள், சாகாராவை தாண்டாத ஒட்டகங்கள், தாஜ்மஹாலும் சில ரொட்டித்துண்டுகளும் போன்றவை அவரின் மிக முக்கியமான கவிதை தொகுதிகள் எனினும் அவற்றில் வந்த சில கவிதைகள் கவிதைகளா என்னும் கேள்வியை எழுப்பிக் கொண்டிருந்தன, ஆனால் அன்று நா.காமராசன் தைரியமாக எடுத்துவைத்த அடிதான் பிற்காலத்தில் புதுக்கவிதை மரபின் கடைகாலாக அமைந்தது

நா.காமராசனின் காகித மலர்கள் எனும் வார்த்தையே மிக பெரிய கவிதை என்பேன் நான், திருநங்கைகளை அவன் அப்படி அழைந்த்தான் அன்று, அதுவும் எப்படி கடவுளின் கருவரையேறாத காகித மலர்கள் நான் என்று சொன்னான், என்ன ஒரு உவமை பாருங்கள்

நா.காமராசனை பின்பற்றித்தான் வைரமுத்து போன்றவர்கள் எழுதினார்கள், வைரமுத்துவுக்கு இருந்த அரசியில் பின்புலம் நா.காமராசனுக்கு இல்லாமல் போனது துரதிஸ்டமே :(

ரத்த ஓட்டமுள்ள ரோஜா, ரத்த ஓட்டமுள்ள பூ, ரத்த ஓட்டமுள்ள சிலை, ரத்த ஓட்டமுள்ள நிலா என்று வைரமுத்து அடிக்கடி கையாளும் உவமை அவருடையதே அல்ல, அது நா.காமராசனுடையது மார்க்ஸியத்தில் அவன் தீவிரமாக இயங்கி கொண்டிருந்த காலத்தில் ஒரு மாலையில் தேநீர் அருந்த அவர் செம்மண் பாதையில் நடந்து செல்லும் போது அந்த செம்மண் அவனை கவர்ந்து ஒரு கவிதை எழுத வைக்கிறது அப்போது சொல்கிறான் இரத்த ஓட்டமுள்ள மண் என்று, அதை பிற்காலத்தில் வைரமுத்து அதிகமாக பயன்படுத்திக் கொண்டார்

நா.காமராசனுக்கு பின் புதுகவிதையை முன்னெடுத்து சென்றவர்கள் தான் வானம்பாடிகள் என்று தம்மை அழைத்துக் கொண்ட சில கவிஞர்கள், அப்துல் ரஹூமான், மு.மேத்தா, மீரா, ஈரோடு தமிழன்பன், இன்குலாப், சிற்பி போன்றவர்கள் எல்லாம் வானம்பாடி இயக்கத்தை சேர்ந்தவர்கள் தான்

திராவிட மேடைகளும் பெரும் துணையாய் அந்த காலத்தில் இருந்ததால், சாமானியர்களிடமும் கவிதையை கொண்டு சேர்ப்பது இவர்களுக்கு எளிமையாய் இருந்தது, எனினும் கவிதைக்கான மொழி கூரிழந்து மழுங்கடிக்கப்பட்டது இந்த காலக்கட்டத்தில் தான், திராவிட மேடைகள் இவர்களை அரசியலுக்காக பயன்படுத்திக் கொண்டன, இவர்களும் அதற்கேற்ப கவிதை மொழிகளை மாற்றி அதனை மொண்ணையாக்கிவிட்டார்கள்

இந்த காலக்கட்டத்தில் தான் வைரமுத்துவும் இவர்களோடு சேர்ந்து புதுகவிதை தளத்தில் இயங்க ஆரம்பித்தார், எனினும் அவர் இன்றுவரை தீவிரமாய் திரைத்துறையில் இயங்கிவருவதால், தமிழிலக்கிய வரலாறு வைரமுத்துவை கவிஞராக ஏற்றுக் கொள்ளவே இல்லை அவரை வெறும் பாடலாசிரியராகத்தான் கூறுகிறது

பலரையும் புதுகவிதையை திரும்பி பார்க்க வைத்தவர் கவிவேந்தர் மு.மேத்தா தான், இவரின் தேச பிதாவுக்கு ஒரு தெருபாடகனின் அஞ்சலி கவிதை கவிஞர் வாலி போன்றவர்களை புதுக்கவிதைக்கு ஆதரகுரல் கொடுக்க வைத்தது என்றால் மிகையில்லை

அவரின் கவிதைகளில் இருந்து சில வரிகள்

உனது படங்கள்
ஊரெங்கும் ஊர்வலம் போகின்றன*
நீ
ஏன் நடத்தெருவில் தலைகுனித்த படி
நிற்கிறாய்

******

பேகனின் மரபில் வந்தவர்கள்
எங்கள் மேலாடையையும்
கழட்டிக் கொண்டு போகிறார்கள்

***********

போன்றவரிகள் வீச்சில் பல புதுக்கவிதையிடம் காதல் கொள்ள ஆரம்பித்தார்கள்

காதல் கவிதையை கூட
*
தேசத்தை போல*
நம் காதலும்
தெருவுக்கு வந்துவிட்டது

உன் அம்மா உன்னை அலங்கரிப்பது
அணிகலன்களாலா ?
என் அவஸ்தைகளாலா ?

போன்றவரிகள் சிறப்பானவை

இவையெல்லாம் அவரின் கண்ணீர்ப் பூக்கள் தொகுதியில் இடம்பெற்ற கவிதைகள்

அப்துல் ரஹூமானோ ஒரு படி மேலே சென்று சர்ரியலிசத்தை கையாண்டார்

வண்ணானின் நாக்கு
அழுக்காக்கிய கற்பை
நெருப்பின் நாக்கு
சுத்தமாக்கியது
போன்ற கவிதைகள் அவரின் பால்வீதியில் காண முடியும்

இப்படி வளர்த்தெடுத்த புதுக்கவிதை, தினத்தந்தியின் குடும்ப மலர்போன்ற இதழ்களின் பின்னடைக்களில் இடம் பெருகிற
*
இறைவா!
எனக்கு என்ன நோய் கொடுத்தாலும்
மனநோய்மட்டும் தந்துவிடாதே
என் காதலி அங்கே தான் வசிக்கிறாள்

போன்ற அபத்தமான குப்பைகளால் தன் வரையறைகளை கவிதை இழந்துவிட்டது

இந்த இதழ்கள் அழியாத ஒரு நினைப்பை பலரின் மனதிலும் பதிய வைத்துவிட்டது, அதாவது கவிதை என்பது புரிகிற மாதிரியிருக்க வேண்டும்

மற்ற இலக்கிய வடிவத்துக்கும் கவிதைக்கும் உள்ள சிறப்பே அது சற்று புரியா வகையில் இருப்பதுதான், புரிகிற மாதிரி எழுத வேண்டுமானால் விரிவாய் ஒரு கட்டுரையோ கதையோ எழுதிவிட்டு போய்விடலாமே ஏன் கவிதையாக* எழுத வேண்டும்

கவிதை என்பது சுருங்க சொல்லி நிரம்ப புரியவைப்பது

உதாரணமாக*

சிரிப்புக்கு விழுந்தால்
சிலப்பதிகாரம்
விழுந்ததற்கு சிரித்ததால்
மஹாபாரதம்

மாதவியின் சிரிப்புக்கு கோவலன் விழுந்ததால்தான் சிலப்பதிகாரமே இல்லையா

துரியோதனன் விழுந்ததை கண்டு திரௌபதி சிரித்ததால்தான் அவன் அவளை பழிவாங்க எண்ணி, சமயம் கிடைக்கும் போது துயிலுரிகிறான், அதனால்தான் திரௌபதி துச்சதனன் இரத்ததை என் குழலில் பூசும் வரை குழல் முடியமாட்டேன் என்று சபதம் எடுக்கிறாள், பாரதபோரும் மூள்கிறது இல்லையா

இருவரிகளில் ஒரு காப்பியத்தையே சொல்லிவிட முடிகிறது இல்லையா இதுதான் கவிதையின் பலம்

சென்றவன் உரைத்தான்
தென்னவன் அழைத்தான்
வந்தவள் நின்றாள்
வடிவழகே நீ யார் என்றான்

இது கல்லூரியில் படிக்கையில் பதிணைந்து மதிப்பெண் கேள்வியான சிலப்பதிகார கேள்விக்கு பதிலெழுத நேரமின்மையால் இப்படி எழுதினேன்

தலைவிரி கோலமாய் கண்ணகி போய் பாண்டிய மன்னனின் வாயிலில் நிற்கிறாள், என்ன வேண்டுமென கேட்கிறான் உன் மன்னனை பார்க்க வேண்டும் என்கிறாள், அவன் போய் துர்கை போலவும் காலியை போலவும் தலை குழல் முடியாத பெண் ஒருத்து உம்மை காண வந்திருக்கிறாள் என்று மன்னனிடம் சொல்கிறான், அதற்கு முன் மன்னை வேறு அவன் புகழ்பற்றியெல்லாம் பேசி புகழ வேண்டுமில்லையா, அதற்கு பின் மன்னை அவளை அழைத்துவர சொல்லுவான், அவள் வந்து அவன்முன் நின்று

தேராமன்னா செப்புவது அறியேன் என்று பேச ஆரம்பிப்பா

இதை எல்லாம் எழுத அப்ப நேரமில்லை அதனால் மேலுள்ள நான்கு வரிகளை மட்டும் எழுதினேன்

விடைத்தாள் கொடுக்கும் போது என் தமிழாசிரியை என்னை அழைத்து வகுப்பிற்கே இந்த வரிகளை வாசித்து காண்பித்தார், ஒரே கர ஒலி, பின் இது போன்ற பல கவிதைகள் இவரின் விடைத்தாளில் காண முடிகிறது என்று இன்னும் சில வற்றையும் வாசித்து காண்பித்தார், ஆனாலும் மேலுள்ள நான்கு வரிகள் தான் எனக்கு பல ரசிக நண்பர்களை பெற்றுத்தந்தது
கவிதை என்பது இப்படித்தான் சுருங்க சொல்லி நிரம்ப விளங்க வைப்பதா இருக்கனும், ஒரு விடயத்தை துல்லியமாய் சொல்ல கையாள்கிற வார்த்தைகளும் உவமைகளும் பொருந்தனும்

மனநோய் மட்டும் தந்துவிடாதே
மனதில் அவள் இருப்பதால்

என்று சொல்வதெல்லாம் கவிதையில்லை, இவை போன்றவைகள் செதுக்கப்படாத பாறைகள்

உன் பூவிதழ்
வடித்த தேனை
என் வண்டிதழ்
குடித்தது

பூவிதழ், வண்டிதழ், காதலர்களின் இதழ்களில் ஒன்று பூவாகவும் ஒன்று வண்டாகவும் இருக்கிறது, இருவரும் முத்தமிட்டு கொள்கையில் எச்சில் தேனாகிறது
இதனை கவிதை நேரடியாக சொல்லவில்லை, மறைமுகமாகவே சொல்கிறது இல்லையா

தொடரும்...

ஆதவா
28-08-2012, 11:30 AM
அடுத்தடுத்து கியர் போட்டு போய்ட்டே இருக்கீங்க ஆதி.
ரொம்ப எளிமையாக கவிதையைப் பற்றிய புரிந்துணர்வு இருக்கிறது பதிவில்..

நிறைய நண்பர்கள் (நான் உட்பட) தெரிந்துகொள்ளவேண்டியவை உங்களது பதிவில்!!

தொடர்ந்து செல்லுங்கள்.

ஆதி
28-08-2012, 11:44 AM
நன்றி ஆதவா

//ரொம்ப எளிமையாக கவிதையைப் பற்றிய புரிந்துணர்வு இருக்கிறது பதிவில்.. //

ரொம்ப மேலோட்டமா இருக்குனு சொல்றீங்களா ?

ஆதவா
28-08-2012, 12:42 PM
நன்றி ஆதவா

//ரொம்ப எளிமையாக கவிதையைப் பற்றிய புரிந்துணர்வு இருக்கிறது பதிவில்.. //

ரொம்ப மேலோட்டமா இருக்குனு சொல்றீங்களா ?

அப்படி சொல்லவரல.
சரியாக இருக்கிறது.

ஆதி
28-08-2012, 12:45 PM
அப்படி சொல்லவரல.
சரியாக இருக்கிறது.

அந்த வரில இரண்டு அர்த்தம் இருந்ந்துச்சு, ஒண்ணு நீங்க சொன்னது, இன்னொன்னு நான் சொன்னது, எது சரினு சரிப்பார்த்துகலாம்னு தான் ஒரு டவுட்

த.ஜார்ஜ்
30-08-2012, 04:44 PM
கவிதைப் பற்றிய உங்கள் சீரியசான வரலாறை படித்த பின் தற்செயலாக அதைப் பற்றிய நகைச்சுவையான வரலாறும் படிக்க நேர்ந்தது இங்கே. (http://www.jeyamohan.in/?p=290)நீங்களும் படித்திருக்கக் கூடும்.

நாஞ்சில் த.க.ஜெய்
30-08-2012, 05:00 PM
என் சிற்றறிவுக்கு எட்டியவரை கவிதை என்பது இதுதான் என்றிருந்தேன் இந்த பதிவினை காணும் போது வரையறைகளும் உண்டு கவிதைகளுக்கென விதிகளும் உண்டென்று அறிகிறேன் ..சங்க பாடல்கள் தவிர்த்து இன்றைய கவிதைகளுக்கு வரையறை கூறிய புலவன் யாரோ என்கையில் பதிவுகள் காட்டுகிறது சுட்டு விரல் நீட்டி பலரை ..மறைபொருளில் கூறும் கவிதையின் விளக்கம் போல் இன்று எங்கே காண முடிகிறது ..தொடருங்கள் ஆதன் ....

ஆதி
10-09-2012, 07:53 AM
உன் பூவிதழ்
வடித்த தேனை
என் வண்டிதழ்
குடித்தது

ஒரு காதலன் காதலி முத்தமிட்டுக் கொள்வதை பற்றிய கவிதையாக பார்த்தோமில்லையா

இதே கவிதையை
உன் பூவிதழ்
வடித்த தேவை
என் மனவண்டு
குடித்தது

என்று ஒரு வார்த்தையை மட்டும் மாற்றினால் இக்கவிதை பல்வேறு அடுக்குகளை உள்ளடக்கியதாக மாறிவிடுகிறது

பூவிதழ் வடித்த தேன் புன்னகையாகவும், அதனை அவன் மன வண்டு பருகுவதாகவும் மாறுகிறது

அந்த புன்னகை காதலியால் வழங்கப்படும் போது அது அவன் மனதை காதலின் போதையில் மிகக்கவிடுகிறது

அந்த புன்னகை ஒரு பெண்ணின் சரசபுன்னகையாக இருக்கும் போது, அது அவன் மனதை விரக ரசத்தில் தோய்கிறது

இப்படி காதலையும், காமத்தை பேசும் ஒரு வார்த்தையாகிறது

இத்தோடு மட்டும் இக்கவிதை இன்றுவிடவில்லை

பூவிதழ் வடித்த தேன்

புத்தனின், ரமணரின், ராமகிருஸ்ணரின், ஏசுவின், நபியின், கண்ணனின் உபதேசங்களாக கொள்ளப்படும்போது, மன வண்டு குடித்த தேன் ஆன்மீகமாக விடுகிறது

சூஃபிகளின் பார்வையில் படிக்கப்படுகையில்

இறைவனுக்கும் நமக்கும் உள்ள காதலை பற்றி பேசுவதாகிறது

ஜெஃ பார்வையில் பார்க்கும் போது, மன வண்டு குடித்தத்தேன் ஞானமாகிறது

ஒரு ஆசிரியன் கற்று தரும் பாடத்தை மாணவன் ருசியொடு படிப்பதாகவும் இந்த கவிதை அமைகிறது

மாற்றப்பட்டது ஒரு வார்த்தைதான் ஆனால் அது பொதித்து வைத்திருக்கும் பொருள் மிக விசாலமானது, பல்வேறு தளங்கள் கொண்டது

அதனால்தான் ஒரு படைப்பில் இடம் பெருகிற வார்த்தைகள் ஒவ்வொன்றும் மிக முக்கியமானதாகிறது

தேவையற்ற வார்த்தைகள் அழகுற இருந்தாலும் அதை படைப்பில் இருந்து நீக்கிவிடும் போது அந்த படைப்பு சிறப்பானதாக அமைகிறது

இதைத்தான் இஸ்லாதின் சட்டங்கள் கூட சொல்கிறன போலும், உன் உடலில் உள்ள உறுப்பு பிறர்க்கு கேடுள்ளதாய் இருந்தால் அதனை நீக்கி சுத்தமானவனாக நீ வாழ்தல் நலம் என்று..

தொடரும்..