PDA

View Full Version : வசந்தத்தை எதிர்ப்பார்த்து....



sivani
27-03-2012, 04:20 PM
வாழ்க்கையின் எல்லையா?
வாழவே இல்லையா?!
வசந்தமும் வந்திடாதோ - என்
வாழ்க்கையில் ! - இனி
வாழ்வதும் இறப்பதும்
விதி விட்ட வழியென
வேதனை ஒன்றையே
விழி காட்டுதோ !

வதைகளைத் தாங்கினேன்
வலைகளில் சிக்கினேன் !
விதைகளைப் போட்டிங்கு,
விரட்டுதே சதி என்னை !
விரயமாய் என் வாழ்க்கை
விரைந்தோடி விட்டதே !
வேண்டுமோ இன்னும் நான் வாழ்ந்திட - இனி
வேண்டுமோ இன்னும் நான் வாழ்ந்திட !

வாழ்க்கை என்னை மிரட்டினாலும்
வாசல் விட்டுத் துரத்தினாலும் !
வேதனைகள் மறைக்கிறேன் - என்றும்
வெறிகொண்டு உழைக்கிறேன்!
வெற்றி என்னும் பாதையில் - நான்
வெகுண்டெழுந்து நடக்கிறேன் !!



-- தமிழோடு வாழ்வோம்!
தமிழோடு உயர்வோம்! –

சிவா.ஜி
27-03-2012, 08:04 PM
கவிதையில் கவிதை குறைவாக இருந்தாலும்....சொல்லும் கருத்தும், விழையும் நோக்கமும் கூட்டல் எண்னங்களை கூறிச்செல்கிறது.

வாழ்த்துக்கள் சிவானி.

கீதம்
28-03-2012, 04:30 AM
வாழ்க்கையின் எல்லையா?
வாழவே இல்லையா?!
வசந்தமும் வந்திடாதோ - என்
வாழ்க்கையில் ! - இனி
வாழ்வதும் இறப்பதும்
விதி விட்ட வழியென
வேதனை ஒன்றையே
விழி காட்டுதோ !

வதைகளைத் தாங்கினேன்
வலைகளில் சிக்கினேன் !
விதைகளைப் போட்டிங்கு,
விரட்டுதே சதி என்னை !
விரயமாய் என் வாழ்க்கை
விரைந்தோடி விட்டதே !
வேண்டுமோ இன்னும் நான் வாழ்ந்திட - இனி
வேண்டுமோ இன்னும் நான் வாழ்ந்திட !

வாழ்க்கை என்னை மிரட்டினாலும்
வாசல் விட்டுத் துரத்தினாலும் !
வேதனைகள் மறைக்கிறேன் - என்றும்
வெறிகொண்டு உழைக்கிறேன்!
வெற்றி என்னும் பாதையில் - நான்
வெகுண்டெழுந்து நடக்கிறேன் !!



எதிர்காலக் கவலையெண்ணி ஏக்கம்வழியும் முதல் பத்தி!

இறந்தகாலத் துயரை எடுத்துரைக்கும் இரண்டாம் பத்தி!

நிகழ்கால நம்பிக்கையில் வைராக்கியம் காட்டும் மூன்றாம் பத்தி!

தேடல்களை, தேவைகளை, தேறுதல்களை அழகாய் உரைக்கும் முக்காலத்தில் மிகவும் பிடித்தது மூன்றாம் பத்தி! பாராட்டுகள். இனிதே தொடருங்கள்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
29-03-2012, 02:18 PM
கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் நினைத்து வருந்தாமல், வரப்போகும் எதிர்காலம் வசந்தமாய் மாறும் என்ற நல்ல நம்பிக்கையோடு இருப்பதுதான் மிகவும் நன்று என்பதை மிகத்தெளிவாக சொல்கிறது உங்களின் கவிதை. பாராட்டுகள்.:)